Share on facebook
Share on telegram
Share on whatsapp

வாழ்வில் நிச்சய வெற்றிக்கு இருபது வழிகள்- 13

இது வரை புரிந்துக் கொண்ட வெற்றிக்கான வழிகள், அதை செயல்படுத்தும் தெளிவு ஆகியவை வந்து விட்டது என்றால், அடுத்த வழிக்குச் செல்லலாம். முன் சொன்னவற்றையெல்லாம் செய்யும் போது உங்களை அறியாமலேயே ஒரு ORGANIZATION, ஒரு POWER வந்து இருக்கும். POWER OF MENTAL ORGANIZATION என்றும் சொல்லலாம். அது தன்னைத் தானே சாதித்துக் கொள்ளும்.

உதாரணமாக, ஒரு அன்பருக்கு வியாபாரத்தில் ஏராளமான கடன் ஏற்பட்டுவிட்டது. இங்கிருந்து அங்கு, அங்கிருந்து இங்கு என்று கைமாற்றில் தான் வியாபாரம் ஓடிக் கொண்டு இருந்தது. இந்த முறைகளை பற்றி கர்மயோகி எழுதியதை படித்த பிறகு, கடன் தீர வேண்டும் என்ற நோக்கத்தை எடுத்துக் கொண்டார்.  அதற்கான தெளிவை பெற விரும்பினார். கடன் வளர்ந்த விதம், தான் செய்யத்தவறியவை, அல்லது தவறாக செய்தவை போன்றவை அவருக்குப் புரிந்தது. மேலும் தெளிவு பெற அவற்றை ஒன்றன் பின் ஒன்றாக எழுத ஆரம்பித்தார். வர வேண்டியவை, தர வேண்டியவை என்று பிரித்தார். அப்படி பார்க்கும்போது தான் அவருக்கு வராது என்று விட்டதை மற்றும் RETENTION எனப்படும் GUARANTEE தொகை ஆகியவற்றை வாங்க முயற்சிக்கவில்லை என்று தெரிந்தது.

முதலில் அதற்கான விடாமுயற்சி என்று முதலில் கூறிய வழியை எடுத்துக் கொண்டு செய்ய ஆரம்பித்தார். அதாவது, செய்த தவறுகளை திருத்தி செய்யும் முயற்சி. முதல் CUSTOMER ஏ அவருக்கு அடுத்த வேலையைக்  கொடுத்தார். அடுத்ததடுத்து சிலரும் , தொடர்பு விட்டு போய் இருந்தவர்களும் வேலை கொடுத்தார்கள். இதுவே POWER OF MENTAL ORGANISATION . அதன் ENERGY தன்னைத் தானே சாதித்துக் கொள்ளும். அது போல இங்கு, இந்த விஷயத்தில்  உங்கள் GOAL தெரிந்து விட்டது, AMBITION பற்றிய தெளிவு வந்துவிட்டது. அதை அடைய வேண்டிய முறை பற்றிய ஞானம் வந்துவிட்டது, அதற்குத் தடையாக நம்மிடம் இருக்கும் திறமைக்குறைவு, மனக்குறைவு, குணக்குறைவு, சுபாவக்குறைவு பற்றிய அறிவும் வந்துவிட்டது. அதைத் தாண்டி நம் பலம், திறமை என்னவென்றும் தெரிந்துவிட்டது. இந்த அளவு ஞானம் பெற்ற பிறகு அதற்குத், தானே ஒரு சாதிக்கும் திறமை வந்துவிடும். அது வெளிப்பட காத்திருக்கும்.

இந்த நிலையில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது ஒன்றுண்டு. இவற்றையெல்லாம் நாம் பெற்றுவிட்டொம் என்பது வேறு . பெற்று விட்டதாக நினைப்பது வேறு. காரணம், நமக்கு பிடித்த விஷயங்களில் நாம் பழக்கமாக செய்யும் கடமைகளில் நமக்கு திறமை இருப்பதாக நினைத்துக் கொள்வோம்.  பிறருக்கு அறிவுரை கூறுவதாலேயே , அல்லது  அது பற்றி படித்ததாலேயே அந்த திறமை நமக்கு இருப்பதாக நினைப்போம். உண்மையாக நாம் பெற்ற திறமைகளையும் நாம் இருப்பதாக நினைப்பவற்றையும் நாம் பிரித்து பார்க்க வேண்டும். உண்மையாக திறமை உள்ள இடங்களை கண்டறிய வேண்டும். அதை வைத்து சோதனையை ஆரம்பிக்க வேண்டும். அப்படி செய்யும் போது அது சாதனைக்குரிய செயலின் ஆரம்பமாக இருக்கும். சாதனைக்குரிய லட்சணங்களைப் பெற்று ஒரு காரியம் பூர்த்தியாகும் போது நாம் பெறும் சந்தோஷம், அதை நல்ல முறையில் நடந்ததைக் காட்டும். அப்போதுதான் – நம் எந்த திறமை இங்கு பலித்தது, இன்னும் எந்த அம்சம், குணம், திறமை இருந்தால் அடுத்த நிலையில் பலிக்கும், எது இல்லாமல் இருந்திருந்தால் இந்த அளவு பூர்த்தி ஆகி இருக்காது,  என்று அறிவது நம் திறமையின் முழுமையை அறிவது. இந்த நிலையில் கற்பனை, ஆசை, கடமை, பழக்கம், வழக்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு நம் திறமையை அளவிட மாட்டோம். அந்த தெளிவு தன்னம்பிக்கையை கொடுக்கும்.

முன்பு சொன்ன தன்னம்பிக்கை என்னும் முறையின் அடிப்படை இதையே தத்துவமாக அல்லது வாழ்வின் சட்டமாக –  முறையை ஏற்று கடமையை பூர்த்தி செய்தால், சூழல் அதை சாதனையாக்கும் என்கிறார் கர்மயோகி.

இந்த ஞானத்தைப்  பெற்ற பிறகு , அதற்கு முக்கியத்துவம் கொடுத்து அதைத்தான் முதலில் செய்ய வேண்டும்., அப்படி செய்கிறோமா என்று பார்க்க வேண்டும். அதற்கு நம்மை நாமே கேட்க வேண்டிய கேள்வி, இந்த GOAL ஐ நாம் ஏன்  எடுத்தோம், நமக்கு எவ்வளவோ தெரியும், பல விஷயங்களை பற்றிய ஞானம் இருக்கிறது, நாம் ஏன் இதை தேர்ந்து  எடுத்தோம், என்ற கேள்விக்கு விடை நம் மனதில் இருந்தால், நாம் நம் GOAL க்கான பாதையில் தான் இருக்கிறோமா, அதற்கான முன்னுரிமைகளைத் தருகிறோமா, அதற்கான விஷயங்களை மட்டும் தான் செய்கிறோமா என்று பார்க்க முடியும். நாம் எடுக்கும் GOAL எல்லாமே நம் சந்தோஷத்திற்குத்தான் என்னும்போது அதற்கானவற்றை செய்யாமல் இருப்பது அறிவீனம் என்னும் சித்தம் நம்மிடம் இருக்கண்டும்.

உதாரணமாக நான் ஏன் இந்த CHEMICAL COMPANY க்கு, INDUSTRIAL FLOORING க்கு வந்தேன்? இதற்கு முன் CATERING -HOTEL களில் வேலை பார்த்து இருக்கிறேன். CONSTRUCTION னில் வேலை பார்த்து இருக்கிறேன். COLOUR PIGMENT COMPANY களில் வேலை பார்த்து இருக்கிறேன். அதன் பிறகு CONSTRUCTION CHEMICALS எனப்படும் இந்த துறைக்கு வந்தேன். அதனால் இந்த நான்கு அல்லது ஐந்து தொழில்களைப் பற்றிய அடிப்படை அறிவு, அதற்கான திறமை என்னிடம் உண்டு. ஆனால் இவற்றில் எது எனக்கு நெடுங் காலத்திற்கு அதிக ஆனந்தம் தரும் என்று நினைக்கும் போது, என் எதிர்காலம் முன்னேற்றம் இதில் இருக்கிறது என்று நினைக்கும் போது CONSTRUCTION CHEMICALS  லில் இருப்பதாகத் தோன்றுகிறது – அதனால் அதை தேர்ந்து எடுக்கிறேன். அதனால் என் கம்பெனி தோன்றுகிறது. தொழில்முனைவராக புது அவதாரம் எடுக்கிறேன். உண்மையில் இது இறைவன் மனிதனைப் படைக்கும்  முறை. அதன் மூலம் அவன் ஆனந்தத்தை அனுபவிக்கும் முறை.  இறைவனுக்குத் தெரியாதது இல்லை. அவனே ஞானத்தின் உருவம்.  ஆனால் அவன் ஆனந்தத்தை அனுபவிக்க, தனக்கு தெரிந்த பல விஷயங்களில் ஒன்றை மட்டும் எடுத்துக் கொண்டு அதன் மூலம் ஆனந்தத்தை அனுபவிக்க தன் ஒரு திறமையை வெளிப்படுத்தும் கருவியாக மனிதனைப் படைத்து  அதன் மூலம் ஆனந்தத்தை அனுபவிக்கிறான். குறிப்பாக அதில் ஒரு அறியாமையை புகுத்தி அதில் இருந்து வெளிவரும் ஆனந்தத்தை அனுபவிக்கிறான். பரிணாமத்தில், மனநிலையில், அறிவில் முன்னேறும் ஆனந்தத்தை அனுபவிக்கிறான்.

முன் சொன்ன பத்து அல்லது பதினோரு வழிகளால் நம் அறியாமையை கண்டுக் கொண்டு அதில் இருந்து வெளியே வந்து விட்டோம். எல்லோரிடமும் அறியாமை இருக்கும். என்னிடம் ஒன்று, உங்களிடம் வேறு ஒன்று, பிறரிடம் இன்னொன்று இருக்கும். இதை சுபாவம் என்று வைத்துக் கொள்ளலாம். காரணம் இதன் அடிப்படையிலேயே நாம் ஒரு வேலையை பழக்கமாக செய்துக் கொண்டு இருப்போம். அதை கண்டுபிடித்து அந்த அறியாமை சுபாவம் ஆகியவற்றில் இருந்து வெளியே வர இந்த POWER OF ORGANISATION உதவுகிறது. அதற்கான முன்னுரிமையை நாம் தருகிறோமா என்று பார்க்க உதவுகிறது. இதில் நம் GOAL ஐ நோக்கிய பயணத்தில், நம்மால் மட்டும் தான் செயய முடியும், நாம் மட்டுமே செய்ய வேண்டும் என்று சிலது இருக்கும். அதற்கு முன்னுரிமை கொடுக்கிறோமா என்று தெரிய வேண்டும். பெரும்பாலும் நம் வேலையை வேறு யாராவது செய்து அதன் பலனை நாம் அனுபவிக்க மாட்டோமா என்றே இருக்கும்.

நாம் அனைவரும் பார்க்கக் கூடிய உதாரணம். சுத்தம் முக்கியம் என்று சொல்லுவோம். ஆனாலும் செய்ய வேண்டிய குறைந்த பட்ச சுத்தத்தைக் கூட நாம் செய்ய மாட்டோம். மனைவியையோ, கணவனையோ, குழந்தைகளையோ கூப்பிட்டு செய்ய சொல்வோம் அல்லது அவர்கள் அப்படி இல்லை என்று குறை சொல்வோம். எடுத்த இடத்தில அடுத்ததுபோலவே வைக்க மாட்டோம். அதற்கான இடத்தில வைக்க மாட்டோம்.  இது போன்று நூறு இடங்களில் நாம் செய்ய வேண்டியது எதையும் செய்யமாட்டோம். திறமையை அதிகப் படுத்த மாட்டோம், அடுத்த நிலை PERFECT க்கு செல்ல மாட்டோம். அடுத்த உயர்ந்த மனநிலைக்குச் செல்ல மாட்டோம். இப்படி நம் GOAL க்கான விஷயங்களில் நாம் மட்டுமே செய்யக்கூடியது என்று சில இருக்கும். அங்கு மட்டுமே நம் சித்தம், அதன் ENERGY அதிகமாக செயல்படும். அந்த இடங்களில் முழு கவனத்தையும் கொடுத்து, முன்னுரிமை, நேர்த்தி (PERFECTION )ஆகியவற்றைக் கொடுத்து நம் சித்தம் (CONSCIOUSNESS ) நம் GOAL ஐ  விட்டு விலகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 

என்னை எடுத்துக் கொண்டால் ஒரு குறிப்பிட்ட ஒரு முக்கியமான, அதிக வருமானம் தரும் PRODUCT ன் CHEMICAL MIXING இன்றும் நான் தான் செய்வேன்.  COMPANY வளர்ந்து, பல பணியாளர்கள் இருந்தாலும், அதனை செய்யும் திறமை அவர்களுக்கு இருந்தாலும், நான் நினைக்கும் 100% QUALITY AND PERFECTION வர வேண்டும், தொடர வேண்டும் என்பதற்காக அந்த ஒரு பகுதியை மட்டும் நானே தான் செய்வேன். கவனம் தரும் எதுவும் வளரும் என்பது போல நம் GOAL ன் மேல் வைக்கும் குறிப்பான கவனம் அதை எளிதில் அடைய வைக்கும்.

அடுத்த வாரம் அடுத்த வழியைப் பற்றி பேசலாம்.

Author Info
Parinaaman (Ramesh Kumar)

Parinaaman (Ramesh Kumar)

SHARE
Share on facebook
Share on telegram
Share on whatsapp

வாழ்வில் நிச்சய வெற்றிக்கு இருபது வழிகள்- 18

அடுத்தது பதினாறாவது  வழி. இது வரை சொன்னவை புரிந்த பிறகு அதற்கான வெற்றிக்கு அடித்தளம் இட்ட பிறகு, நாம் இருக்கும் தளத்திற்கான சூழல், ஆட்கள் நடுவில் இருக்கும்படி நம்மை நாம் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

Read More »

வாழ்வில் நிச்சய வெற்றிக்கு இருபது வழிகள்- 17

முன் சொன்ன பதினான்கு வழிகளிலும் வரும் தெளிவு,  அதை செயல்படுத்தும் திறன் வந்த பிறகு நாம் பதினைந்தாவது வழிக்குச் செல்வோம். நடைமுறைப்படுத்தும் சாரம் புரிவது மிகப் பெரிய முன்னேற்றம்.  காரணம் இந்த நிலையில் நமக்கு

Read More »

வாழ்வில் நிச்சய வெற்றிக்கு இருபது வழிகள்- 16

இது வரை விளக்கிய பதிமூன்று வழிகளும் நமக்கு நன்றாக புரிந்துவிட்டது, செயல்படுத்த தெரிந்துவிட்டது என்றால் தானாகவே நாம் அடுத்த பதினான்காவது வழிக்குச் சென்று விடுவோம். SKILL, CAPACITY, ABILITY, CAPABILITY, TALENT என்று அவை

Read More »

More Articles

வாழ்வில் நிச்சய வெற்றிக்கு இருபது வழிகள்- 18

அடுத்தது பதினாறாவது  வழி. இது வரை சொன்னவை புரிந்த பிறகு அதற்கான வெற்றிக்கு அடித்தளம் இட்ட பிறகு, நாம் இருக்கும் தளத்திற்கான சூழல், ஆட்கள் நடுவில் இருக்கும்படி நம்மை நாம் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

Read More »

வாழ்வில் நிச்சய வெற்றிக்கு இருபது வழிகள்- 17

முன் சொன்ன பதினான்கு வழிகளிலும் வரும் தெளிவு,  அதை செயல்படுத்தும் திறன் வந்த பிறகு நாம் பதினைந்தாவது வழிக்குச் செல்வோம். நடைமுறைப்படுத்தும் சாரம் புரிவது மிகப் பெரிய முன்னேற்றம்.  காரணம் இந்த நிலையில் நமக்கு

Read More »

வாழ்வில் நிச்சய வெற்றிக்கு இருபது வழிகள்- 16

இது வரை விளக்கிய பதிமூன்று வழிகளும் நமக்கு நன்றாக புரிந்துவிட்டது, செயல்படுத்த தெரிந்துவிட்டது என்றால் தானாகவே நாம் அடுத்த பதினான்காவது வழிக்குச் சென்று விடுவோம். SKILL, CAPACITY, ABILITY, CAPABILITY, TALENT என்று அவை

Read More »