Share on facebook
Share on telegram
Share on whatsapp

வாழ்வில் நிச்சய வெற்றிக்கு இருபது வழிகள்- 16

இது வரை விளக்கிய பதிமூன்று வழிகளும் நமக்கு நன்றாக புரிந்துவிட்டது, செயல்படுத்த தெரிந்துவிட்டது என்றால் தானாகவே நாம் அடுத்த பதினான்காவது வழிக்குச் சென்று விடுவோம். SKILL, CAPACITY, ABILITY, CAPABILITY, TALENT என்று அவை வளர்வதைக் காணலாம். இவற்றுக்கு எல்லாம் சரியான தமிழ் வார்த்தைகள் தெரியாததால் ஆங்கிலத்திலேயே தந்துள்ளேன்.  ஓரளவு புரியவைக்க முயல்கிறேன்.

SKILL என்பது நாம் திறமை என்று பொதுவாக சொல்வது.  நாம் படித்து தெரிந்து கொண்டவற்றை செய்ய முடிவது. திறமை என்பது தயக்கமில்லாமல், தெளிவுடன் செய்வது. ABILITY என்பது அதை பலமுறை செய்து பழக்கமாக மாறுவது.  CAPABILITY என்பது செயல் திறனின் தரம் உயர்வது, பலனின் தரம் உயர்வது. TALENT ஒவ்வொரு முறையும் சிறந்த நிலையிலேயே செயல்பட முடிவது. உயர்ந்த பலனையே பெறுவது என்பது பொதுவான பொருள். கர்மயோகி இவற்றையெல்லாம் அதே பொருளில் எடுத்துக் கொண்டாலும் TALENT என்பதை குறிப்பாக விளக்குகிறார். ஒரு செயலில் அதை சார்ந்த மற்ற விஷயங்களும் புரிந்து, கணித்து அதை தன் செயலில் புகுத்தி தன் செயலை, முதன்மை படுத்துவது, செம்மை படுத்துவது.  அதுவே COMPETENCE எனப்படும் அனைத்தையும் சிறப்பாக ஒருங்கிணைக்கும் நிலைக்கு கொண்டு செல்லும் என்கிறார்.

உதாரணமாக நான் FLOORING / CONSTRUCTION CHEMICAL தொழிலில் ஓரளவு பெயர் பெற்றவுடன் முன்பு சொன்ன கீர்த்தி என்னும் நிலையை ஓரிரு இடங்களில் பெற்றேன். அதனால் என் மேல் MARKET ற்கு நம்பிக்கை வந்தவுடன், என் MARKET  சூழலில் ஒரு நம்பகத்தன்மை உருவாகிறது. ஒரு பெரிய கம்பெனி, கைபேசி உதிரிபாகங்கள் தயாரிக்கும் கம்பெனி, இவ்வளவு தரத்தோடு PAINT வகைகளை செய்கிறீர்களே, நீங்கள் ஏன் எங்கள் தயாரிப்புக்கான மற்ற தேவைகளையும் செய்து தரக் கூடாது என்று கேட்டனர். அப்படி ஆரம்பித்தது தான் என்னுடைய மின்னணு பாகங்கள் தயாரிக்கும் கம்பெனி.

அதற்கான ஆரம்ப ஆலோசனைகளில், திட்டமிடுதலில், ஏராளமான தடைகள், குழப்பங்கள். முதலீட்டாளரும், CONSULTANT உம் பொறுக்க முடியாத தொந்திரவு தந்தனர். கர்மயோகிக்கு  எழுதி கேட்ட போது, “CHEERFULNESS ” குதூகலம் என்னும் கட்டுப்பாட்டை எடுத்துக் கொள்ள சொன்னார். அது பற்றி முதல் வழியாக, ஏற்கனவே குறிப்பிட்டு இருக்கிறேன். CATERING ல் இருக்கும் போது, பத்து பிரியாணி அண்டா தம்முக்கு வைக்கப்பட்டு இருந்தால், அதில் இருந்து வரும் வாசனையை வைத்தே எந்த டேசாவில் மசாலா போதவில்லை, ஏறவில்லை என்பதை என்னால் சொல்ல முடியும்.  இது ஒரு திறமை. ஒரு ஆழ்ந்த ஈடுபாடு இருந்தால் தான் இது வர முடியும். இது திறமை, திறனாகி, பழக்கமாகி, சாரமாக அறியும் இடமாக இருக்கிறது.

அடுத்தது நான் CONSTRUCTION CHEMICAL கம்பெனியில் வேலைக்கு சேர்ந்த போது CEMENT கலவையில் போடும் CHEMICAL களை வாசனையை வைத்தே – உயர்ந்த தரத்தில் போட்டார்களா, தாழ்ந்த தரத்தில் போட்டார்களா என்று சொல்லுவேன். RAW MATERIAL லில் உள்ள தவறை சொல்லுவேன். சில தயாரிப்பாளர்கள் – நாங்கள் பல லட்சம் செலவு செய்து lab வைத்து செய்வதை  வாசனைப் பார்த்து சொல்கிறீர்களே என்று கேலி செய்வார்கள். இதுவும் நான் செய்யும் வேலையின், நான் விற்கும் பொருளின் சாரத்தை புரிந்துக் கொண்டதால் வந்தது. இது போலவே, ELECTRICAL ENGINEERING , CIVIL  ENGINEERING  என்று நான் சிறிதே ஈடுபட்ட தொழிலாக இருந்தாலும், அதன் சாரத்தை நேரடியாக புரிந்துக் கொள்ளும் தன்மை வருகிறது. இது ஒரு துறையில், வேலையில், செயலில், பலனில் பெற்ற அறிவை, அது வரும் விதத்தை, அதன் சாரத்தை புரிந்துக் கொண்டு அதை வேறு இடங்களிலும் பொருத்தி பார்க்கும் திறமையை  – TALENT  என்கிறோம்.

முன்பு சொன்ன மின்னணு பொருட்கள் தயாரிப்பு ஆரம்ப ஆலோசனையின் போது ஒரு SOFTWARE PROGRAMMER, VISUAL BASIC ல் சில விஷயங்களை செய்து வளவளவென்று presentation கொடுத்துக் கொண்டு இருந்தார்.  எனக்கு SOFTWARE பற்றியோ, VB பற்றியோ எதுவும் தெரியாது.  இருந்தாலும் அவர் முழுதும் முடித்த பிறகு ஒரு குறிப்பிட்ட SLIDE க்கு போக சொல்லி, அதாவது எனக்கு எதுவும் புரியவில்லை, தெரியவில்லை என்றாலும் ஒரு LOGIC, COMMON SENSE  – ஒரு வாதத்திற்கு, பொதுபுத்தியை ஒட்டி ஒரு விளக்கம் கேட்டேன்.  அதாவது அந்த ஐந்தாவது SLIDE -ல் இருந்து நேரடியாக எட்டாவது, ஒன்பதாவது SLIDE க்கு போனால் என்ன – ஏன் மூக்கை சுற்றி தொட வேண்டும் என்று கேட்டேன். முதலில் அவர் எரிச்சல் அடைந்தாலும் பின் புரிந்துக் கொண்டு, சரி தான் PROCESS ஐ குறைக்க முடியும் என்றார். இதற்கு காரணம் என் நோக்கம், அதை அடைய வேண்டிய முறை, ஏற்கனவே நான் செய்த செயல்கள் வெளிப்பட்ட விதம், அது பலன் தந்த விதம், இவை அனைத்தின் சாரம் எனக்கு தெளிவாக பிடிபட்டுவிட்டதால், என்னால் நான் ஈடுபடும் அனைத்திலும் அந்த தெளிவை, அறிவை, ஞானத்தைக் கொண்டு வந்து நேரத்தை குறைக்க முடிகிறது. தரத்தை உயர்த்த முடிகிறது, பலனை அதிகப்படுத்த முடிகிறது. இது என் திறமைகள், திறன்கள், TALENT ஆக மாறிவிட்டதற்கான அடையாளம். இன்னுமொரு உதாரணம், நான் தற்போது எழுதும் இது போன்ற கட்டுரைகள்.

LIFE DIVINE கட்டுரைகள், பல ஆண்டு காலமாக, ஏறத்தாழ முப்பது ஆண்டு காலமாக பலரும் பேசுவது தான், என்றாலும் நான் எழுதுவது, பேசுவது புரிகிறது, இது வரை புரியாதது புரிகிறது, நடைமுறைப்படுத்த முடிகிறது என்று பலரும் கூறுவது நான் CATERING ல் பெற்ற TALENT ஐ LIFE DIVINE ல் பொருத்தி பார்க்கும் TALENT ஆக பெற்றது தான். விடாமுயற்சி, தெளிவு, ஆழ்ந்த ஈடுபாடு, நாம் தருவதை சிறந்ததாகத் தர வேண்டும், பெறுபவர் அதனால் பலன் பெற வேண்டும் என்று முன்பு சொன்ன வழிகளில் ஏதோ ஒன்றை என்னையறியாமலேயே முழுமையாக, உண்மையாக கடைபிடித்ததின் பலன் அது. காரணம் இதில் ASPIRATION , EXPANSIVENESS , EVOLUTION OF CONSCIOUSNESS  ஆர்வம், பரந்த மனப்பான்மை, பிறர்நிலை பார்வை, போன்ற சித்த உயர்வுகள் இருப்பதால் இறைவன் விரும்பும் நிலை அது. அதனால் உள்ளுறை ஞானம் ஏதாவது ஒரு நொடியில் வெளிப்பட்டு விடுகிறது. இதை உணர்வு பெறும் அறிவு SENSE EDUCATION  என்று கூறுகிறார். இதை வளர்த்துக் கொண்டால், GUT FEELING என்று நாம் பொதுவாக சொல்லும் முன்னேற்றத்திற்கான தைரியம், INSIGHT, INTUITION, உட்பார்வை, உள்ளுணர்வு என்பது போன்ற ஆன்மீக நிலைகளை நம்மால் எட்ட முடியும் என்கிறார்.

எனக்குத் தோன்றியது செய்தேன், வெற்றி பெற்றேன் என்று வாழ்வில் ஏதாவது நடந்து இருந்தால், அதை ஆராய்ந்து பார்த்தால், அதன் PROCESS -ஐ புரிந்துக் கொள்ள முடிந்தால், இந்த TALENT ஐ வளர்க்க முடியும்.  அது SKILL, CAPACITY, ABILITY, CAPABILITY,  TALENT,  COMPETENCE என்று வளரும் விதம் புரியும்.

BILL GATES, WARREN BUFFET, STEVE JOBS, AMBANI, TATA, ADHANI போன்றோர் ஒரு அறையில் உட்கார்ந்து உலகளாவிய சாம்ராஜ்யத்தை எப்படி கையாள்கின்றனர், ஒரு நொடியில் எப்படி முடிவு எடுக்கிறார்கள், அது எப்படி வெற்றிகரமாக இருக்கிறது என்பது பற்றியெல்லாம் சில மணி நேரம் நினைத்து பார்த்தால் இதைப் பெறும் விதம் புரியும்.  அந்த நிலைக்கு வரும் போது ஒவ்வொன்றுக்கும் அனுபவம் தேவை என்பது கிடையாது. ஒரு விஷயத்தில் கிடைத்த அறிவை, அனுபவத்தை, அது தந்த ஞானத்தை பல விஷயங்களில் பொருத்தி பார்க்க முடியும் என்பது புரியும். அப்படி பார்த்தால் நம்மால் நடக்கப் போவதை தெளிவாக யூகிக்க முடியும். அது எந்த அளவு, நேரம், முதலீடு, உழைப்பு, முயற்சி, படிப்பு என்பனவற்றை சேமித்துத் தருகிறது என்பதையும் யூகிக்க முடியும். இந்த நிலை ஒரு யோக நிலைக்கு சமம் என்கிறார் கர்மயோகி. காரணம் நாம் இங்கு முக்காலத்தையும் உணர்கிறோம். கடந்த காலத்தில் நடந்ததை, நிகழ் காலத்தில் பொருத்தி எதிர்காலத்தில் நடக்க கூடியதை நம்மால் சொல்ல முடிவதால், நாமும் ஒரு யோகியே என்கிறார்.

இதை புரிந்துக் கொள்ள ஒரு பயிற்சியை செய்து பார்க்கச் சொல்கிறார். திறமை, திறன், CAPACITY போன்றவை நாம் செயல்படுத்தி பெறுவது. அதை செய்து பலன் பெற்ற பிறகு அதை ஆராய வேண்டும். அதில் நம் திறமை, அதில் செயல்பட்ட சட்டங்கள்,  எதன் பின் எது செய்ய  வேண்டும், ஏன் செய்ய வேண்டும், சந்தர்ப்பங்கள் எப்படி கூடி வந்தது, மனிதர்கள், சூழல் போன்றவற்றில், ஒத்துழைப்பு எப்படிக் கிடைத்தது, போன்றவற்றை ஆராய வேண்டும். குறிப்பாக, நம் திறமையால், செயல் திறனால், SYSTEM ஆல் பலித்தது எது, மனப்பான்மையால் பலித்தது எது, சுபாவத்தால் பலித்தது எது, பிரார்த்தனையால் பலித்தது எது என்று உடல், உணர்வு, அறிவு, ஆன்மா  என்று நம் BEING -ன் தளங்களில் நம் பலம் என்ன என்பதைப் பற்றிய தெளிவு பெற வேண்டும். அது தன் நிலை அறிதல், தன்னையறிதல் – SELF AWARENESS . கடந்த ஐந்து வருடத்தில் நாம் செய்து ஓரளவு நல்ல பலன் கண்ட இருபது அல்லது முப்பது நிகழ்வுகளை எடுத்துக் கொண்டு ஆராய்ந்து பார்க்கலாம்.  பார்த்தால் ஒரு காரியத்தைக் கூட நம் திறமையால் பூர்த்தி செய்யவில்லை என்றே இருக்கும். நம் மனநிலை, நம் சுபாவம் வெற்றிக்கு எந்த அளவுக்கு ஒத்துழைத்தது என்பது புரியும். நாம் கண்டதை ஏற்றுக் கொண்டு அடுத்த செயலில் அதை செய்தால் பல மடங்கு பலன் பெறலாம், காலத்தை சுருக்கலாம், நான்கைந்து கட்டங்கள் தாண்டி செல்ல முடியும். நம்மால் முடியாத செயல்களுக்கு எப்படி பிறர் உதவினர், நம் எந்த நடத்தை, மனநிலை சிலரை வரவைத்தது, எந்த சுபாவம் குறுக்கிட்டு பலனை தள்ளிப்போட்டது (சுயநலம், பிடிவாதம், அவசரம்) அறியாமை, அறிவீனம் எப்படி கெடுத்தது (தொலை நோக்கு பார்வை தலைகீழாக புரிந்துக் கொள்ளுதல்) போன்றவை புரியும். அந்த நிலையில் நாம் எப்படி ஆழ்ந்து பிரார்த்தனை செய்தோம், எப்படி சமர்ப்பணம் செய்தோம், மற்ற விஷயங்களில் எப்படி இருந்தோம் என்பது புரியும்.

இவை எல்லாவற்றையும் பற்றிய தெளிவு பூரண ஞானமாக மாறும் போது அது குறைந்த பட்சம் TALENT , COMPETENCE ஆகவும் மேல் நிலையில் INSIGHT , INTUITION  ஆகவும் மாறுகிறது.

ஒரு செயலை பல காரணங்களுக்காக, பல பலன்களுக்காக நாம் செய்வோம். அந்த பலனை, நோக்கத்தை, அடைந்த பிறகு குறைந்தபட்சம், நமக்கு அது நம் திறமையால்  பூர்த்தியானதா, சூழலால் நடந்ததா, மனநிலை மாற்றத்தால் நடந்ததா, நடத்தையால் வந்த மனிதர்களால் நடந்ததா, பிரார்த்தனையால் நடந்ததா என்பதை தெளிவாக புரிந்துக் கொண்டால் வாழ்வின் சட்டங்கள், அது செயல்பட்டு வாழ்வு தரும் மறுமொழிகள் நமக்குப் புரியும். அது தோல்வியில்லாத வெற்றி மட்டுமே கொண்ட ஆனந்தமயமான வாழ்வைத் தரும்.

Author Info
Parinaaman (Ramesh Kumar)

Parinaaman (Ramesh Kumar)

SHARE
Share on facebook
Share on telegram
Share on whatsapp

வாழ்வில் நிச்சய வெற்றிக்கு இருபது வழிகள்- 18

அடுத்தது பதினாறாவது  வழி. இது வரை சொன்னவை புரிந்த பிறகு அதற்கான வெற்றிக்கு அடித்தளம் இட்ட பிறகு, நாம் இருக்கும் தளத்திற்கான சூழல், ஆட்கள் நடுவில் இருக்கும்படி நம்மை நாம் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

Read More »

வாழ்வில் நிச்சய வெற்றிக்கு இருபது வழிகள்- 17

முன் சொன்ன பதினான்கு வழிகளிலும் வரும் தெளிவு,  அதை செயல்படுத்தும் திறன் வந்த பிறகு நாம் பதினைந்தாவது வழிக்குச் செல்வோம். நடைமுறைப்படுத்தும் சாரம் புரிவது மிகப் பெரிய முன்னேற்றம்.  காரணம் இந்த நிலையில் நமக்கு

Read More »

வாழ்வில் நிச்சய வெற்றிக்கு இருபது வழிகள்- 15

இது வரை படித்த அனைத்தையும் சில சமயம் செய்வோம், பல சமயம் செய்ய மாட்டோம். அதை செய்வதால் வந்த பலனைப் பார்த்தும் செய்ய மாட்டோம் . நாம் அறிந்த அத்தனையையும் ஒரு CONSISTENCY க்கு

Read More »

More Articles

வாழ்வில் நிச்சய வெற்றிக்கு இருபது வழிகள்- 18

அடுத்தது பதினாறாவது  வழி. இது வரை சொன்னவை புரிந்த பிறகு அதற்கான வெற்றிக்கு அடித்தளம் இட்ட பிறகு, நாம் இருக்கும் தளத்திற்கான சூழல், ஆட்கள் நடுவில் இருக்கும்படி நம்மை நாம் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

Read More »

வாழ்வில் நிச்சய வெற்றிக்கு இருபது வழிகள்- 17

முன் சொன்ன பதினான்கு வழிகளிலும் வரும் தெளிவு,  அதை செயல்படுத்தும் திறன் வந்த பிறகு நாம் பதினைந்தாவது வழிக்குச் செல்வோம். நடைமுறைப்படுத்தும் சாரம் புரிவது மிகப் பெரிய முன்னேற்றம்.  காரணம் இந்த நிலையில் நமக்கு

Read More »

வாழ்வில் நிச்சய வெற்றிக்கு இருபது வழிகள்- 15

இது வரை படித்த அனைத்தையும் சில சமயம் செய்வோம், பல சமயம் செய்ய மாட்டோம். அதை செய்வதால் வந்த பலனைப் பார்த்தும் செய்ய மாட்டோம் . நாம் அறிந்த அத்தனையையும் ஒரு CONSISTENCY க்கு

Read More »