Share on facebook
Share on telegram
Share on whatsapp

வாழ்வில் நிச்சய வெற்றிக்கு இருபது வழிகள்- 11

இதுவரை நாம் பேசிய வழிகள் அனைத்தும் நம்மை ஒன்பதாவது வழிக்கு கொண்டு செல்ல வேண்டும். 

அதாவது இது வரை நாம் செய்ததின் பலனை நாம் முழுவதும் அறுவடை செய்ய வேண்டும். அதன் ஆனந்தத்தை முழுமையாக  நாம் அனுபவிக்க வேண்டும். இல்லையென்றால் நாம் செய்ததற்கு பலன் இல்லை. ஒவ்வொன்றையும்  நாம் , நம் சந்தோஷத்திற்காகத்தான் செய்கிறோம் என்னும்போது அதை அனுபவிக்க வில்லையென்றால் அது முழுமை அடையாது. அது மட்டுமல்ல அது தொடரவேண்டும். முன் சொன்னது போல பணம், புகழ் , அந்தஸ்து,  அனைத்தையும் நாம் தக்க வைக்க வேண்டும். வாழ்வில் அவை நிரந்தரமாக வேண்டும்.

நம்மை சுற்றி பார்த்தாலே இது புரியும். பரம்பரை பணக்காரர் பணத்தை  இழந்த முறை, சிலர் புகழை இழந்த முறை, terror என்று இருந்தவரை , தலைமை பொறுப்பில் இருந்தவரை – பிற்காலத்தில்  போவோர் வருவோர் எல்லாம் எட்டி உதைத்த விதம் – போன்று பல உதாரணங்ளை நாம் காணமுடியும். நம்மில் கூட பலரும் திரும்பி பார்த்தால் – எப்படி இருந்த நான் எப்படி ஆயிட்டேன் என்று ஒரு படத்தில் நடிகர் விவேக் சொல்வது போல தான் இருக்கிறோம். காரணம் இதுவரை பெற்ற  வெற்றிகளுக்கான காரணத்தின் சாரம் தெரியாதது. ஒரு ஸ்தாபனத்தின் முக்கிய  பொறுப்பாளர் – நான் சொன்னது போல terror ஆக இருந்தவர் – அந்த terror ஐ – அவரை ஒரு சுண்டு விரலால் நசுக்க கூடியவர் கூட, பெரிய மனிதர்கள் கூட பொறுத்து கொண்டது – அந்த ஸ்தாபனத்தின் வலிமையால் என்ற சாரத்தை உணராமல் இருந்ததால் பிற்காலத்தில் அனைவரும் மிதிக்கும் நிலைக்கு ஆளானார்.

என்னை எடுத்து கொண்டால் 2008 இல் இருந்து 2018 வரை ஒரு வெற்றிகரமான தொழில் முனைவர் என்று சொல்லும் அளவிற்கு இருந்தேன். 2019- இல் – என் பொது புத்தி, அதுவரை பெற்ற மனித சுபாவங்களை பற்றிய ஞானம், பிறருக்கு கூறிய அறிவுரைகள், அந்த பத்தாண்டுகளில் prosperity முதல் personality வரை நான் பெற்ற வெற்றிகளின் சாரம் புரியாமல் – பெற்ற வெற்றிகளை, அதற்கான பார்முலாக்களை மீண்டும் பின்பற்றாமல் – இருந்ததால் நான் இழந்தது சுமார் ஒரு கோடி.

பொதுவாகவே அன்னையிடம் வந்த பிறகு , ஆரம்பத்தில் எல்லாம் நல்லபடியாக , அற்புதம் என்னும் அளவிற்கு நடந்து இருக்கும். அதன் பிறகு எதுவும் பெரிதாக நடக்காது. அதன் பிறகு நடப்பதாக காட்டி கொள்ளவேண்டிய கட்டாயத்திற்கு வருவோம். அன்னை அன்பர்  என்று நாம் கட்டி காத்த பிம்பம் உடையாமல் இருப்பதற்கு முயல்வோம். அன்னை அன்பராக தொடர்வதே மிகுந்த சிரமமாக மாறும். காரணம் நம் பக்தி, நம் பிரார்த்தனை போன்ற அடிப்படை  விஷயங்களின் சாரம் கூட நமக்கு புரியாதது. belief, faith , trust  வேறு படுத்தி இதை விளக்கி இருக்கிறார் கர்மயோகி. எத்தனை பேர் அதன் சாரத்தை புரிந்து கொண்டோம். அதுதான் நாம் அருளை தொடர்ந்து பெற முடியாததற்கு காரணம் என்பதை புரிந்து கொள்ள முடியுமா?

ஆரம்பத்தில் தொட்டது எல்லாம் துலங்கும் நிலையில் இருந்த நாம் இன்று கால் வைக்கும்  இடமெல்லாம் கண்ணி வெடியாக இருக்கிறதே என்ற நிலைக்கு காரணம்  என்ன. நாம் பெற்ற விவேகத்தை பயன்படுத்தி நாம் பெற்ற  வெற்றிகளை அடுத்தடுத்த  கட்டத்திற்கு எடுத்து செல்ல முடியாததே காரணம்.

அனுபவங்களின் மூலம் பெரும் விவேகம் என்பதே நம் அறிவு வளர , நம் personality வளர , நாம் பரிணாமத்தில் வளர , அதன் மூலம் ஆனந்தம் பெற – அது வாழ்வில் prosperity  யாக வர வேண்டும் என்பதற்குத்தான். அதை புரிந்து கொள்வது தான் இந்த தலைப்பு சொல்லும் அடுத்த வழி.

ஏற்கனவே ஒரு முறை எழுதியது தான்..  என்றாலும் சற்றே விளக்குகிறேன். விவேகத்தின் மூலம் personality வளர்வது என்றால் என்ன?

உதாரணமாக சில பாயிண்ட் களுக்கு முன் ஒரு சுயநலத்துடன் – சற்றே ஒரு பொது நலத்தை இணைக்க முடியுமா என்று பார்ப்பது வெற்றிக்கான ஒரு வழியாக குறிப்பிட்டு இருந்தேன். அது பொது வெளிக்காகவோ- சமுதாயத்திற்காகவோ இருக்க வேண்டும் என்னும் அவசியம் இல்லை. நம்மை  தாண்டி சிலரின் விஷயங்களுக்காகவும் இருக்கலாம். சம்பளம் வாங்கியவுடன் கள்ளு  கடைக்கு சென்று குடிப்பவன் , வீட்டிற்கு சென்று ஒரு தொகையை செலவுக்கு கொடுத்து விட்டு சென்றால்  சாரத்தை உணர்ந்த வனாகிறான் என்கிறார். அந்த உணர்வை தொடர்வது, அதை அடுத்த  கட்டத்திற்கு உயர்த்துவது முன்னேற்றத்திற்க்கான வழி. ஒரு மாதம்  செய்து பிறகு செய்ய வில்லை என்றால் அவன் பெற்றது விவேகம் அல்ல.

வருமானத்திற்காகவாவது நாம் பெற்ற  விவேகம் பயன் பட வேண்டும், அதன் மூலம் personality வளரவேண்டும் , பரிணாமத்தில் உயந்து அதன் மூலம் பெரும் ஆனந்தம்  வாழ்வில்  வளமாக எதிரொலிக்க வேண்டும் என்னும் அளவில் பார்ப்போம்.

ஏதோ ஒரு அறிவை பயன்படுத்தி  -. வருமானம் சற்றே அதிகமான பிறகு , சுயநலத்திற்கு, ஆடம்பரத்திற்கு, அந்தஸ்திற்கு , தன்  விருப்பங்களை நிறைவேற்றிக்  கொள்ள என்று சம்பாதிப்பவன் சுயநலமானவன் physical personality.

அப்படி இல்லாமல் அதில் சற்றே பொது நலம் கலந்து  வேலையை தன் திருப்திக்காக, கம்பனிக்காக , வடிக்கையாளருக்காக என்று செய்பவர், அல்லது  வாடகை வீட்டில் இருந்து சொந்த வீடு வேண்டும் என்று நினைப்பவர்,  தங்கள் குடும்பத்தினர் அனைவரும் சந்தோஷத்தை அனுபவிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் vital personality. 

பணம் சம்பாதிப்பது வாழ்வின் முன்னேற்றத்திற்கு சித்தத்தின் முன்னேற்றத்திற்கு என்று புரிந்து அதன் சாரத்தை, சட்டத்தை ,  process  ஐ  புரிந்து கொள்ள செய்பவன் mental personality. 

இறைவனின் சேவைக்காக அல்லது இறைவனின் விருப்பம் நிறைவேற என்ற செய்பவன் spiritual personality.

நாம் பெரும் இந்த விவேகம் – ஒவ்வொரு நிலைக்கான சாரத்தின் விவேகம் , அது வாழ்வில் வெளிப்படும் விதம்  ஆகியவற்றை ஒட்டியே நம்  வாழ்வில் வளர்ச்சி என்பதும்  இருக்கும்.

அதை புரிந்து கொள்வதற்காக வாழ்வில் நான்கு நிலைகளை  பார்க்க முடியும். அன்றாட வாழ்வு, வளர்ச்சி முன்னேற்றம், பரிணாமம் என்று வாழ்வின் வளர்ச்சி  அறிவு, விவேகம் அதை ஒட்டி நாம் பின்பற்றும் பின்பற்றும், பண்பு, மனநிலை  ஆகியவற்றிக்கு  ஏற்றார்போல இருப்பதை பார்க்க முடியும்.

ஒவ்வொரு நாளும் நாம் திட்டமிட வேண்டியிருக்கிறது, நாமே வேலை செய்யவேண்டியிருக்கிறது, நம் விருப்பப்படி இருக்க முடியவில்லை, செய்ய முடியவில்லை என்ற நிலையில் இருந்தால் அது survival என்னும் அன்றாட வாழ்வு நிலை. எந்த வித ஆனந்தத்தையும் அனுபவிக்க முடியாத நிலை.

நம் நிலை நம் கையில் இல்லை சுற்றமும் சூழலும் நம் வாழ்வை நிர்ணயிக்கிறது என்றாலும் சற்றே வளர்ச்சி இருக்கிறது  என்ற நிலை அடுத்த நிலை. ( உதாரணமாக வீடு கல்யாணம் குழந்தைகளின் படிப்பு ஆகியவற்றில் மற்றவர்களின் கூறிவந்த பட்ச குறுக்கீடு இருந்தாலும் ) –  ஒரு குறிக்கோளை நோக்கிய  ஒரு கொள்கையை நோக்கிய  ஒரு இலக்கை நோக்கிய பயணம் அதிகம் மாற வில்லை என்றால்  என்றால் அதை வளர்ச்சி என்று சொல்லாம். குறிக்கோளை அடைந்து விட்ட  பிறகு இங்கு ஆனந்தத்தை  அனுபவிக்கமுடியும் .

அடுத்தது கொள்கையும் குறிக்கோளும் முக்கியமாக மற்றதெல்லாம் அதன் பிறகுதான் என்று சமுதாயம், சூழல் , உறவுகள்,   வசதிகள், விருப்பு வெறுப்புகள் அபிப்பிராயங்கள்  என்று பலவற்றையும் தாண்டி வர முடியும் என்ற நிலை இருந்தால் அது முன்னேற்றம். அது வாழ்விலும், மனநிலையிலும் முன்னேற்றம் என்னும் நிலை. செய்யும் செயல் அனைத்தும் ஆனந்தம் தரும் நிலை இது.

இந்த மூன்று நிலைகளுக்கும் மீண்டும் போக தேவையில்லாத அளவிற்கு அதனால் பாதிக்கப்படாத அளவிற்கு ஆன்மாவின் பண்புகள் மட்டுமே முக்கியம் என்னும் நிலை பரிணாம வளர்ச்சி நிலை.  அது வாழ்வில் அனைத்தும் தானே நடக்கும் நிலை. அது இறைவனுக்கு கருவியாகும் நிலை அது அவன் விரும்பும் உச்சத்திற்கு  கொண்டு செல்லும். அனந்தத்திலேயே திளைக்கும் , வாழும் நிலை. இந்த நிலையில் பொருள், புகழ், அந்தஸ்து அனைத்தையும் இறந்த  பிறகும் தொடரும்.

அடுத்த வாரம் அடுத்த வழியை பார்க்கலாம்.

Author Info
Parinaaman (Ramesh Kumar)

Parinaaman (Ramesh Kumar)

SHARE
Share on facebook
Share on telegram
Share on whatsapp

வாழ்வில் நிச்சய வெற்றிக்கு இருபது வழிகள்- 18

அடுத்தது பதினாறாவது  வழி. இது வரை சொன்னவை புரிந்த பிறகு அதற்கான வெற்றிக்கு அடித்தளம் இட்ட பிறகு, நாம் இருக்கும் தளத்திற்கான சூழல், ஆட்கள் நடுவில் இருக்கும்படி நம்மை நாம் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

Read More »

வாழ்வில் நிச்சய வெற்றிக்கு இருபது வழிகள்- 17

முன் சொன்ன பதினான்கு வழிகளிலும் வரும் தெளிவு,  அதை செயல்படுத்தும் திறன் வந்த பிறகு நாம் பதினைந்தாவது வழிக்குச் செல்வோம். நடைமுறைப்படுத்தும் சாரம் புரிவது மிகப் பெரிய முன்னேற்றம்.  காரணம் இந்த நிலையில் நமக்கு

Read More »

வாழ்வில் நிச்சய வெற்றிக்கு இருபது வழிகள்- 16

இது வரை விளக்கிய பதிமூன்று வழிகளும் நமக்கு நன்றாக புரிந்துவிட்டது, செயல்படுத்த தெரிந்துவிட்டது என்றால் தானாகவே நாம் அடுத்த பதினான்காவது வழிக்குச் சென்று விடுவோம். SKILL, CAPACITY, ABILITY, CAPABILITY, TALENT என்று அவை

Read More »

More Articles

வாழ்வில் நிச்சய வெற்றிக்கு இருபது வழிகள்- 18

அடுத்தது பதினாறாவது  வழி. இது வரை சொன்னவை புரிந்த பிறகு அதற்கான வெற்றிக்கு அடித்தளம் இட்ட பிறகு, நாம் இருக்கும் தளத்திற்கான சூழல், ஆட்கள் நடுவில் இருக்கும்படி நம்மை நாம் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

Read More »

வாழ்வில் நிச்சய வெற்றிக்கு இருபது வழிகள்- 17

முன் சொன்ன பதினான்கு வழிகளிலும் வரும் தெளிவு,  அதை செயல்படுத்தும் திறன் வந்த பிறகு நாம் பதினைந்தாவது வழிக்குச் செல்வோம். நடைமுறைப்படுத்தும் சாரம் புரிவது மிகப் பெரிய முன்னேற்றம்.  காரணம் இந்த நிலையில் நமக்கு

Read More »

வாழ்வில் நிச்சய வெற்றிக்கு இருபது வழிகள்- 16

இது வரை விளக்கிய பதிமூன்று வழிகளும் நமக்கு நன்றாக புரிந்துவிட்டது, செயல்படுத்த தெரிந்துவிட்டது என்றால் தானாகவே நாம் அடுத்த பதினான்காவது வழிக்குச் சென்று விடுவோம். SKILL, CAPACITY, ABILITY, CAPABILITY, TALENT என்று அவை

Read More »