Share on facebook
Share on telegram
Share on whatsapp

வாழ்வில் நிச்சய வெற்றிக்கு இருபது வழிகள்- 10

சென்ற கட்டுரைகளில்  சொன்ன ஏழு வழிகளையும் பின்பற்றும்போது அது தானாகவே 8 ம் வழிக்கு கொண்டு செல்லும். அதாவது வாழ்க்கை  என்பது , அதில் நடப்பது, நமக்கு வருவது, காதில் விழுவது எல்லாமே ஒரு அனுபவத்திற்குத்தான். ஒரு அறிவை தந்து, ஞானத்தை தந்து , நம்மை பரிணாமத்தில் முன்னேற வைத்து அதன் மூலம் முன்பு பெற்ற  துன்பங்களை மீண்டும் பெறாமல் ஆனந்தம்  அடைய வைக்கவே அனைத்தும் நடக்கிறது. அது வாழ்வின் வழி. Life long learning process என்பது புரியும். அது விவேகத்தை , பாகுபாட்டை – wisdom and discrimination தரவேண்டும். இது பற்றி கர்மயோகி நிறைய எழுதி இருக்கிறார்.

விவேகம் என்பது வழக்கமாக நமக்கு இருக்கும் அபிப்ராயம், முன் முடிவுகள், விருப்பு வெறுப்புகள் அனைத்திலிருந்தும் நாம் வெளியே வந்து, நாம் செய்யும் வேலையின் சாரம் புரிந்து, அதன் பின் உள்ள தத்துவதை, வெற்றிக்கான வழியை ஏற்று அதை அதன் உயர்ந்த நிலையில் நின்று செய்வது. உதாரணமாக கல்வி என்பது அறிவு வளர, தொழில் என்பது வாழ்வு வளர – என்பது நமக்கு நன்றாகவே தெரியும்.  என்றாலும் அதன் சாரத்தை பின்பற்றாமல் – கல்வி என்பது வாழ்வில் வளர என்றோ, பணத்தின் வளர்ச்சிதான் வாழ்வின் வளர்ச்சி என்று நினைத்து பணம் சம்பாதிக்கத்தான்  கல்வி  என்னும் நிலைக்கு வந்து விடுகிறோம். அதனால் கல்வி தரும் அறிவின் சாரத்தை, விவேகத்தை நாம் பெறுவதில்லை. கல்வி என்பது மதிப்பெண்களுக்காக மட்டுமே என்று மாறி விடுகிறது. படிப்பதே  சம்பாதிக்கத்தான் என்று ஆகி விடுகிறது.

ஆனால் பெரும் சாதனை புரிந்தவர்களை கவனித்தால் அவர்கள்  சமுதாயத்தின் இந்த பெரும்பான்மையான பார்வையை , ஒபினியனை எடுத்துக்கொண்டு இருக்க மாட்டார்கள். அவர்களுக்கு அதை தாண்டி Doctorate , IAS , ஆராய்ச்சி , புதிய கண்டு பிடிப்புகள் அல்லது வேறு தேடல்கள், சாதனைக்கான நோக்கங்கள், இலக்குகள் இருக்கும்.

அதே போல பாகுபாடு என்பது – நாம் வழக்கமாக பழக்கத்தின் அடிப்படையில் செய்கிறோம். அது habit  என்னும் நிலையில் இருக்கிறது. அதனால் நாம் பெற்ற  உயர்ந்த அறிவை  நம்மால் அந்த குறிப்பிட்ட காரியத்தில் பயன்படுத்த முடிவதில்லை. பிறருக்கு அறிவுரை சொல்லும்போது மட்டும் வரும் . அது unconscious.  அதை conscious  செய்யும்போது அது skill  ஆகி- capacity, ability, capability , talent என்று மாறுவது, ஒரு செயலுக்கான  சாரம் , பாகுபாடு புரிந்ததற்கான அறிகுறி.  எதையும் அடுத்த  நிலைக்கு உயர்த்த முடியும். அதற்கான முறைகளை ஆராய்வது – mental attitudes – என்று மாறும் அறிவின்  விவேகம் .  அது plan , stradegy, master stroke, secret of success, essence of work – என்று  பல நிலைகளுக்கு கொண்டு செல்லும்.  ஒரு செயலில் ஆர்வமும், தைரியமும்  அறிவும் செயல்திறனும் மட்டுமல்ல –  விவேகம் வேண்டும், பாகுபாடும் தெரியவேண்டும். நடைமுறையில் – அதை, எங்கே, எப்போது எந்த அளவிற்கு செய்ய வேண்டும் என்னும் விவேகம் என்று கூறலாம். சாம , பேத , தான , தண்டம் என்பார்களே அதுபோல எதற்கு அடுத்தது எதை செய்ய வேண்டும் என்பது பாகுபாடு. கர்மயோகி அதை  – இதம், பதம், பக்குவம், சாதுர்யம் என்று வெளிப்படுத்த முடியும் என்று கூறுகிறார். இந்த வார்த்தைகளுக்கு அவர் தரும் விளக்கம் ஒரு தனி கட்டுரையாகி விடும் என்பதால் – நமக்கு இந்த வார்த்தைகளை பற்றி இருக்கும் பொதுவான புரிதலை பின்பற்றினாலே நமக்கு வெற்றிக்கான வழி பிடிபட்டு  விடும்.

இவை  எல்லாம் mental maturity – அறிவின்  முதிர்ச்சி என்னும் நிலைக்கு கொண்டு செல்லும். சிலர் ஒரு பெரிய விஷயத்தை , அல்லது சிக்கலான விஷயத்தை கையாளும் விதத்தை பார்த்தால் , ஒரு வியாபாரி ஒரு பெரிய பிரச்சினையை கையாளும் விதத்தை பார்த்தால் – நாமெல்லாம் எவ்வளவு சிறுபிள்ளை தனமாக செயல் பட்டு கொண்டு இருக்கிறோம் என்பது புரியும் . ஒவ்வொரு கணமும், நடப்பதில் இருந்து, படிப்பதில் இருந்து, காதில் விழுபவைகளில் இருந்து ஓர் அனுபவ சாரத்தை எடுத்து கொண்டு அதை எதிர்கால முன்னேற்றத்திற்கு பயன்படுத்துவதே இந்த எட்டாவது  வழி. lifelong process என்பது power of information என்று புரிவதே இதன் அடிப்படை.

அதன் ஒரு வெளிப்பாடுதான் சென்ற கட்டுரையில் சொன்ன தினமும் ஒரு விஷயத்தைப்  பற்றி படிப்பது என்பது . அதன் மூலம் நானும் என் நண்பர்களும் பெற்ற முன்னேற்றத்தையும் குறிப்பிட்டு இருந்தேன். அது செயலுக்கு. தொழிலுக்கு.

அது  போல அனுபவங்களில் இருந்து  தினம் ஒன்றை புரிந்து கொள்வது வாழ்க்கைக்கு. அது தோல்வியே இல்லாத வாழ்க்கையை தரும் . நன்றாக கவனித்து பார்த்தால் – பணமோ, புகழோ – சம்பாதிப்பது என்பது பெரிய விஷயமே இல்லை. அதை பல காலத்திற்கு தக்க வைத்து கொள்வதை  , அல்லது பரம்பரைக்கும்  தக்க வைத்து கொள்வதை அதற்காக செய்ய வேண்டியதை நினைத்தால் பிரமிப்பாக இருக்கும். தினமும் நாம் பெரும் அனுபவங்கள் அதன்மூலம் நாம் பெரும் பலன்கள் ஆகியவற்றை conscious ஆக  கவனிப்பதால் மட்டுமே முடியும். power of information – conscious execution என்பதை systematic ஆக செய்ய முடியும்.

நாம் புத்தகம் படித்து புரிந்து கொள்வதை உதாரணமாக எடுத்து கொள்வோம். கர்மயோகி ஒரு 100 புத்தகம் எழுதி இருக்கிறார். நான் பேசுவது, எழுதுவது எல்லாம் அதில் இருந்து தான். ஆனால் பலரும் பல விஷயங்களை, புரியவில்லை, தெரியவில்லை, கேள்விப்பட்டது  இல்லை , மையத்தில் இப்படி சொன்னார்கள், அவர்கள் சொன்னார்கள், இவர்கள் சொன்னார்கள் என்றுதான் சொல்வார்களே தவிர கர்மயோகியின் அறிவின் சாரத்தை அவர் தர நினைக்கும் prosperity க்கான வழிகளை நேரடியாக பெற முயல்வதில்லை.

ஒரு கணக்கு போடுவோம்.தினம் ஒரு மணி நேரம் படித்தால் ஒரு வாரத்தில் ஒரு புத்தகம் படிக்கலாம். வருடத்திற்கு 50 புத்தகம் படிக்கலாம். இரண்டு  வருடத்தில் அவரது அனைத்து  புத்தகங்களையும் படித்து விடலாம். அது systematic ஆக பெறும் power of information – உண்மையில் அது information  அல்ல. அவர் அனுபவங்களின் சாரம். வெற்றிக்கான, வாழ்வின் சட்டங்களை அறியும் சாரம். இதை அனைத்திலும் பின் பற்ற முடியும். சமுதாயத்தில் கூட finger tip இல் information வைத்து இருப்பவர், நெளிவு , சுளிவு, விவேகம் தெரிந்தவர், சரியான data வைத்திருப்பவர் ஆகியோருக்கு, அலுவலகத்தில் , கோர்ட்டில் , அரசாங்கத்தில் , கட்சியில் என்று அவர்கள் இருக்கும் இடங்களில்  ஒரு முக்கியத்துவமும், பவர்-ம் , வருமானமும் அதிகம் இருப்பதை காணமுடியும்.

இந்த கர்மயோகி புத்தகங்கள் விஷயத்தையே  எடுத்து கொண்டால்  – நான் MSS சம்பந்தப்பட்ட மையத்திற்கு 2005இல் வந்தேன். 2010 வாக்கில் பெரும்பாலான அன்பர்களுக்கு, வெளியூர்களில் இருக்கும் மையத்தை சேர்ந்த அன்பர்களுக்கும் தெரிந்தவன் ஆகிவிட்டேன். நான் வந்தபோது கர்மயோகிக்கு சுமார் 5000 devotees இருந்தார்கள். அதில் நானும் ஒருவனாக இருந்தேன். இன்று அனைவர்க்கும் தெரிந்த  முதல் 5 பேரில் நானும் ஒருவன் எனும் அளவிற்கு இருக்கிறேன். இருபது வருடம் , முப்பது வருடம்  அவருடன் இருந்தவர்களுடன் – 64 நாட்களே இருந்த நான் ஒப்பிடப்படுகிறேன். காரணம் அவர் கருத்துகளை பற்றிய நான் சேகரித்த information.

சரியாக திட்டமிட்டால் எந்த field -லும் நாம் நிபுணத்துவம் பெற முடியும். சிறந்தவர்களாக விளங்க முடியும். அந்த கருத்துகளின் சாரம், அனுபவங்களின்  சாரம் – நம்  வாழ்வின் பல படிகளை – ஒவ்வொன்றிலும் நிற்காமல் – தாண்டி செல்ல வைக்கும். அதற்கான விவேகத்தையும் , பாகுபாட்டையும் சாதுர்யத்தையும் தருவது – நம்மை பற்றி நமக்கு இருக்கும் information. 

அடுத்த கட்டுரையில் 9 வது வழியை பார்ப்போம்.

உங்கள் கருத்துகளை rameshposts@gmail.com இல் தெரிவிக்கவும்.

Author Info
Parinaaman (Ramesh Kumar)

Parinaaman (Ramesh Kumar)

SHARE
Share on facebook
Share on telegram
Share on whatsapp

வாழ்வில் நிச்சய வெற்றிக்கு இருபது வழிகள்- 18

அடுத்தது பதினாறாவது  வழி. இது வரை சொன்னவை புரிந்த பிறகு அதற்கான வெற்றிக்கு அடித்தளம் இட்ட பிறகு, நாம் இருக்கும் தளத்திற்கான சூழல், ஆட்கள் நடுவில் இருக்கும்படி நம்மை நாம் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

Read More »

வாழ்வில் நிச்சய வெற்றிக்கு இருபது வழிகள்- 17

முன் சொன்ன பதினான்கு வழிகளிலும் வரும் தெளிவு,  அதை செயல்படுத்தும் திறன் வந்த பிறகு நாம் பதினைந்தாவது வழிக்குச் செல்வோம். நடைமுறைப்படுத்தும் சாரம் புரிவது மிகப் பெரிய முன்னேற்றம்.  காரணம் இந்த நிலையில் நமக்கு

Read More »

வாழ்வில் நிச்சய வெற்றிக்கு இருபது வழிகள்- 16

இது வரை விளக்கிய பதிமூன்று வழிகளும் நமக்கு நன்றாக புரிந்துவிட்டது, செயல்படுத்த தெரிந்துவிட்டது என்றால் தானாகவே நாம் அடுத்த பதினான்காவது வழிக்குச் சென்று விடுவோம். SKILL, CAPACITY, ABILITY, CAPABILITY, TALENT என்று அவை

Read More »

More Articles

வாழ்வில் நிச்சய வெற்றிக்கு இருபது வழிகள்- 18

அடுத்தது பதினாறாவது  வழி. இது வரை சொன்னவை புரிந்த பிறகு அதற்கான வெற்றிக்கு அடித்தளம் இட்ட பிறகு, நாம் இருக்கும் தளத்திற்கான சூழல், ஆட்கள் நடுவில் இருக்கும்படி நம்மை நாம் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

Read More »

வாழ்வில் நிச்சய வெற்றிக்கு இருபது வழிகள்- 17

முன் சொன்ன பதினான்கு வழிகளிலும் வரும் தெளிவு,  அதை செயல்படுத்தும் திறன் வந்த பிறகு நாம் பதினைந்தாவது வழிக்குச் செல்வோம். நடைமுறைப்படுத்தும் சாரம் புரிவது மிகப் பெரிய முன்னேற்றம்.  காரணம் இந்த நிலையில் நமக்கு

Read More »

வாழ்வில் நிச்சய வெற்றிக்கு இருபது வழிகள்- 16

இது வரை விளக்கிய பதிமூன்று வழிகளும் நமக்கு நன்றாக புரிந்துவிட்டது, செயல்படுத்த தெரிந்துவிட்டது என்றால் தானாகவே நாம் அடுத்த பதினான்காவது வழிக்குச் சென்று விடுவோம். SKILL, CAPACITY, ABILITY, CAPABILITY, TALENT என்று அவை

Read More »