Share on facebook
Share on telegram
Share on whatsapp

வாழ்வில் நிச்சய வெற்றிக்கு இருபது வழிகள்- 15

இது வரை படித்த அனைத்தையும் சில சமயம் செய்வோம், பல சமயம் செய்ய மாட்டோம். அதை செய்வதால் வந்த பலனைப் பார்த்தும் செய்ய மாட்டோம் . நாம் அறிந்த அத்தனையையும் ஒரு CONSISTENCY க்கு கொண்டு வருவதே அடுத்த வழி. அதை முன்னேற்றத்திற்கான கட்டுப்பாடு DISCIPLINE FOR PROGRESS என்று கூறுகிறார். பொதுவாக நாம் கட்டுப்பாடு என்பதை  நமக்கு புரிந்த வகையில் ஏற்றுக் கொண்டு கடந்து செல்கிறோம். ஆனால் பெரும்பாலான வார்த்தைகளுக்கு வித்தியாசமான விளக்கம் கொடுப்பவர் கர்மயோகி. கட்டுப்பாடு என்னும் வார்த்தைக்கு அவர் தரும் விளக்கம் – discipline  – கட்டுப்பாடு என்பது முன்னேற்றத்திற்காக செய்ய வேண்டிய அனைத்தையும் செய்ய வேண்டிய முறைப்படி, செய்ய வேண்டிய நேரத்தில் செய்வது என்று இருக்கும் ஒரு நிலை தான் கட்டுப்பாடு என்கிறார். அடுத்தது கொண்ட கொள்கை, நோக்கம், ஆர்வம் – (ASPIRATION , AMBITION , IDEALS) – ஆகியவற்றில் இருந்து கவனத்தை சிதறடிக்க முடியாதது, அதற்கான பண்புகளில் சமாதானமாகாதது (DISTRACTION AND COMPROMISES ) , நேரத்தையும், சக்தியையும் தேவையில்லாதவைளுக்கு செலவு செய்யாமல், முன்னேற்றத்திற்கு உரிய விஷயங்களுக்கு மட்டுமே செய்வது என்பது போன்ற விளக்கத்தை கொடுக்கிறார் கர்மயோகி.

இதற்கு உதாரணமாக அவர் தருவது – ராணுவத்தில் எப்போது எதை செய்ய வேண்டும், எவ்வளவு செய்ய வேண்டும், யார் முன்னால் செல்ல வேண்டும், யார் பின்னால் செல்ல வேண்டும், ஒரு இறப்புக்கான மரியாதை என்றால் காலை எவ்வளவு வினாடிகளில், நிதானமாக எடுத்து நடக்க வேண்டும், பாராட்டுக்கு எப்படி நடக்க வேண்டும், இவற்றுக்கு துப்பாக்கியால் சுட்டு மரியாதை செய்யும் போது எதற்கு 45 DEGREE 90 DEGREE  என்பது போன்ற சிறு விஷயங்களில் கூட அந்த நிகழ்வுக்கான, அந்த நோக்கத்திற்கான  கட்டுப்பாடு கவனத்தோடு அமைக்கப்பட்டு இருக்கும். இந்த சிறு விஷயங்கள் தான் போர் போன்ற பெரிய இடங்களில் பலன் கொடுக்கும். ஒரு கலவரம் என்றால் லோக்கல் போலீஸ் அல்லது RIOT CONTROL போன்ற மாநில அளவில் உள்ள பிரிவுகளும் அந்த கலவராத்தை அடக்க, பயிற்றுவிக்கப்பட்டவர்களே. ஆனால் கலவரம் கை மீறி போகும் போது, ராணுவம் தான் வரவழைக்கப்படுகிறது. பெரும் கலவரம் நடக்கும் இடத்தில் ராணுவத்தின் ஒரு அமைதி நடை  PEACE MARCH – கலவரத்தை பெரும்பாலும் கட்டுக்குள் கொண்டு வருகிறது. அதே போல ஒரு TRAFFIC JAM அல்லது களேபரமான நேரத்தில், கூட்டம் அதிகம் இருந்தாலும் அங்கு ஒரு சாதாரண CONSTABLE -ன் விசில் சத்தம் வந்தால் அனைவரும் அடங்குகிறார்கள்.   அந்த ஒரு CONSTABLE அந்த கூட்டத்தை எதுவும் செய்ய முடியாது என்பதே உண்மை. ஆனால் அவர் விசில் சத்தம் அதை செய்கிறது. காரணம், அரசு, அதன் சட்டம், அதன் பலம், அதன் SYSTEMS , ORGANISATION  ஆகியவற்றை வெளிப்படுத்தும் ஒரு கருவி அந்த CONSTABLE ன் விசில். அதை அந்த சூழல் – ATMOSPHERE – புரிந்துக் கொள்வதால் நடத்திக் கொடுக்கும் சக்தியாக மாறுகிறது

அது போல நம் ஆர்வம், நோக்கம், அதற்கான பண்புகள் என்று அனைத்தையும் வெளிப்படுத்துவது கட்டுப்பாடு. அது சூழலை நமக்கு சாதகமாக மாற்றும். நம் நோக்கம், அதற்கான TRAINING , ORGANISATION , அதற்கு வெளிப்படுத்த வேண்டிய செயல் பற்றிய தெளிவு, எதற்கு அடுத்தது எது என்பது பற்றிய தெளிவு , அது போல நம் நோக்கத்தைப் பற்றிய தெளிவு, அதை அடைந்தால் நாம் பெறப்போகும் ஆனந்தத்தை பற்றிய தெளிவு, அதற்கு செய்ய வேண்டிய அனைத்தையும் செய்வது. அதை மட்டுமே செய்வது என்பது நம் வாழ்க்கையை, நம்மை, நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறது. அந்த கட்டுப்பாடு நம்மிடம் வந்தாலே, கலவரம், களேபரம், சூழலை கட்டுப்படுத்துவது போல, நம்மால் நம் சூழலை, கட்டுப்படுத்த முடியும்.

கட்டுப்பாடு என்பது பற்றி நமக்கு ஒரு அடிப்படை புரிதல் இருக்கும். இருந்தாலும் எப்போது, எதை எவ்வளவு செய்ய வேண்டும் என்பதற்கு உதாரணமாக ஒரு அன்பர் வாழ்வில் நடந்ததை எடுத்துக் கொள்கிறேன். ஒரு அன்பரின் தொழிற்சாலையில் மிகப் பெரிய STRIKE நடந்துக் கொண்டு இருந்தது. இன்று அதை தீர்க்கவில்லை என்றால் நாளை LOCKDOWN ஆகும். அது பெரிய இழப்பு ஏற்படும் என்னும் நிலை. அதற்கான MEETING மாலை மூன்று  மணிக்கு இருந்தது. இது பற்றி கர்மயோகியிடம்  கேட்ட போது, அன்று காலையில் இருந்து அது பற்றி நினைக்காதே, எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எதையும் செய்யாதே, முழு நிதானம் என்னும் கட்டுப்பாட்டை எடுத்துக் கொள், நாள் முழுதும் கதவை நிதானமாக மூட வேண்டும், நாளிதழை திருப்பினாலும் சத்தம் வரக் கூடாது, தட்டு, tumbler போன்றவற்றை சத்தம் இல்லாமல் வைக்க வேண்டும்.  மிக நிதானமாக, குறைந்த சத்தத்தில் பேச வேண்டும்.  CHAIR ஐ  நகர்த்தினால் சத்தம் வரக் கூடாது என்று நிதானத்தை தெளிவை, அதை செயல்படுத்தும் தெளிவோடு கூறினார்.

தொழிலதிபருக்கு அன்றைக்கு இருந்த பரபரப்பில், டென்ஷன் கோபத்தில் இதையெல்லாம் கடை பிடிக்கக்கூடிய மனநிலை இருந்திருக்காது என்றாலும் வேறு வழி இல்லாமல் கடைபிடித்தார். இரண்டு மணிக்கு தொழிசாலைக்கு கிளம்ப தயாரானார். அப்போது அவருக்கு STRIKE ஐ த் தூண்டிய தொழிற்சங்க தலைவர்கள் ராஜினாமா செய்து விட்டு சென்று விட்டார்கள், அதனால் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது என்னும் செய்தி வந்தது.

பொதுவாக DISCIPLINE என்றவுடன் – ஒழுக்கம் என்னும் அளவிலேயே நாம் கடந்து சென்று விடுவோம். அதை கட்டுப்பாடு என்னும் அளவில் கூட நாம் கொண்டு வருவதில்லை. அதன் பல்வேறு நிலைகளை ஆராய்ந்து சூழலுக்கு ஏற்றாற் போல செயல்படுத்துவது தான் வெற்றிக்கான அடுத்த வழி.  உடல், மனம், உணர்வு, ஆன்மா ஆகியவற்றில் நம் நோக்கம், அது தரும் ஆனந்தம் அதற்கு தேவையான கட்டுப்பாடுகள், அதை ORGANISE செய்யும் முறைகள், அதை தேவையான நேரத்தில் வெளிப்படுத்தும் தெளிவு என்னும் நிலைகள் புரிவதே கட்டுப்பாடு என்பதற்கு உண்மையான விளக்கமாக தருகிறார் கர்மயோகி.

TOKEN ACT என்னும் தலைப்பில் இதை வெளிப்படுத்தும் முறைகளை பல முறை எழுதியிருக்கிறேன். அது தவிர அவர் தரும் இன்னோரு முறை “CAUSAL PLANE ” என்னும் முறை.

The supramental plane is the causal plane – அதிமனதளமே எந்த ஒரு செயலையும் நிர்ணயிக்கிறது. ஆனால் நடைமுறையில் அதை உணர்வதில் சிக்கல் உள்ளது.

ஆனால் conscious ஆக அதைப்பார்த்தால் அதில் கவனமாக இருந்தால் நம்மால் நம் செயலை அதன் பலனைக் கட்டுப்படுத்த முடியும். பண்புகளே ஒரு செயலின் பலனை, வாழ்வின் மறுமொழியை முடிவு செய்கிறது என்பது புரிந்தால்  எந்த பண்பை எப்படி தேர்ந்து எடுக்கிறோம் என்று கவனிக்க வேண்டும். பெரும்பாலும் நாம் அறிந்த உயர்ந்த கருத்துகள், மனசாட்சி என்று அறிவது, அன்னையின் பண்புகள், ஆன்மாவின் பண்புகள் என்று ஏதாவது ஒன்றில் தேடி அதில் சிறந்ததை  எடுத்துக்  கொள்கிறோம். அதாவது அன்னையின் பண்புகள், ஆன்மாவின் பண்புகள் வாழ்வில்  செயல்பட நம் மனதில் இறங்குகிறது.  (spiritual plane descending to mental plane).

அப்படி இல்லாமல் ஆன்மாவின் மேலேயே , அன்னையின்  மேலேயே நம் கவனம் இருந்தால்  ( இடையறாத நினைவு) மனமே நம் செயல்களை ஆன்மீகத் தளத்தில் ஆரம்பிக்க வைக்கிறது.

இதற்கு வழிகளாக கர்மயோகி அவர்கள் கூறுவது:  எப்போதும் இதயத்திற்குப்  பின்னால் ஆன்மா  இருப்பதாக கற்பனை செய்து , அல்லது அன்னை இருப்பதாக கற்பனை செய்து ஒவ்வொன்றையும் அவரிடம் சொல்லிவிட்டு, கேட்டு விட்டு செய்வது. அல்லது  “causal plane” ஒன்றை வைத்து அதனிடம் கேட்டு செய்வது. (எனக்கு இதயத்திற்கு பின்னால் எனபது சற்று சிக்கலாக இருகிறது. அதனால் பாக்கெட் இல் இருக்கும் பிளெஸ்ஸிங் பாக்கெட் -ஐ நினைத்துக் கொள்வேன் ).. இது முதல் நிலை. இது “causal plane” ஐ திறக்கும் உருவாக்கும் மந்திரம். என்றாலும் இவை  ஒரு நிலைக்கு பின் பிளெஸ்ஸிங்  பாக்கெட் வெறும்  காகிதமாக ஜீவனற்ற  நினைவாக  ஜீவனற்ற  முறையாக மாறிவிடும்.

அன்னையை ஏற்பது என்பது புரிவது அல்ல. கர்மயோகி அவர்கள்  சொல்வது  அன்னையை  முழுவதுமாக உணர்ந்து புரிந்துக்  கொள்ள வேண்டுமானால், அவர் பரிணாமத்தை முன்னேற்ற வந்த சக்தி, செயல் படும் சக்தி என்பது புரிய வேண்டும் என்றால்  அன்னையை அதற்கான (plane) தளத்தில் செயல்  படுத்திப் பார்க்க வேண்டும். அன்னையின் சக்தி அந்தந்த தளத்தில்  வெளிப்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் அருள் நம்மை தொடர்வதை உணர முடியும். அப்போதுதான் அன்னை பரிணாமத்தை முன்னேற்ற வந்த சக்தி என்பது புரியும்.

Causal plane – ஏ நம் வாழ்வை நடத்தும் விழிப்புணர்வு தளமாக, அன்னையின் தளமாக இருக்க வேண்டும், உடல், உணர்வு, அறிவு என்னும் தளங்கள் அதனுள் அடங்க வேண்டும்.  causal plane -ம், subtle plane -ம் எங்கோ இருப்பதாக நினைக்கிறோம்.  ஆனால் நாம் ஒரு இடத்தை உருவாக்கி அதை அன்னை இருக்கும் இடமாக மாற்றினால் அதை மீறிய சாதிக்கும் சக்தி வேறு எதுவும் கிடையாது.  வாழ்வே சமர்ப்பணமான வாழ்வாக இருக்கும். அது தரும் கட்டுப்பாடான வாழ்க்கை  முறை – சமர்பணத்திற்கும், சரணாகதிக்கும்   கொண்டு செல்லும்.

Author Info
Parinaaman (Ramesh Kumar)

Parinaaman (Ramesh Kumar)

SHARE
Share on facebook
Share on telegram
Share on whatsapp

வாழ்வில் நிச்சய வெற்றிக்கு இருபது வழிகள்- 18

அடுத்தது பதினாறாவது  வழி. இது வரை சொன்னவை புரிந்த பிறகு அதற்கான வெற்றிக்கு அடித்தளம் இட்ட பிறகு, நாம் இருக்கும் தளத்திற்கான சூழல், ஆட்கள் நடுவில் இருக்கும்படி நம்மை நாம் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

Read More »

வாழ்வில் நிச்சய வெற்றிக்கு இருபது வழிகள்- 17

முன் சொன்ன பதினான்கு வழிகளிலும் வரும் தெளிவு,  அதை செயல்படுத்தும் திறன் வந்த பிறகு நாம் பதினைந்தாவது வழிக்குச் செல்வோம். நடைமுறைப்படுத்தும் சாரம் புரிவது மிகப் பெரிய முன்னேற்றம்.  காரணம் இந்த நிலையில் நமக்கு

Read More »

வாழ்வில் நிச்சய வெற்றிக்கு இருபது வழிகள்- 16

இது வரை விளக்கிய பதிமூன்று வழிகளும் நமக்கு நன்றாக புரிந்துவிட்டது, செயல்படுத்த தெரிந்துவிட்டது என்றால் தானாகவே நாம் அடுத்த பதினான்காவது வழிக்குச் சென்று விடுவோம். SKILL, CAPACITY, ABILITY, CAPABILITY, TALENT என்று அவை

Read More »

More Articles

வாழ்வில் நிச்சய வெற்றிக்கு இருபது வழிகள்- 18

அடுத்தது பதினாறாவது  வழி. இது வரை சொன்னவை புரிந்த பிறகு அதற்கான வெற்றிக்கு அடித்தளம் இட்ட பிறகு, நாம் இருக்கும் தளத்திற்கான சூழல், ஆட்கள் நடுவில் இருக்கும்படி நம்மை நாம் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

Read More »

வாழ்வில் நிச்சய வெற்றிக்கு இருபது வழிகள்- 17

முன் சொன்ன பதினான்கு வழிகளிலும் வரும் தெளிவு,  அதை செயல்படுத்தும் திறன் வந்த பிறகு நாம் பதினைந்தாவது வழிக்குச் செல்வோம். நடைமுறைப்படுத்தும் சாரம் புரிவது மிகப் பெரிய முன்னேற்றம்.  காரணம் இந்த நிலையில் நமக்கு

Read More »

வாழ்வில் நிச்சய வெற்றிக்கு இருபது வழிகள்- 16

இது வரை விளக்கிய பதிமூன்று வழிகளும் நமக்கு நன்றாக புரிந்துவிட்டது, செயல்படுத்த தெரிந்துவிட்டது என்றால் தானாகவே நாம் அடுத்த பதினான்காவது வழிக்குச் சென்று விடுவோம். SKILL, CAPACITY, ABILITY, CAPABILITY, TALENT என்று அவை

Read More »