Share on facebook
Share on telegram
Share on whatsapp

வாழ்வில் நிச்சய வெற்றிக்கு இருபது வழிகள்- 14

வாழ்வில் நிச்சய வெற்றிக்கு இருபது வழிகள்- 14

இது வரை எழுதியவை பிடிபடும் போது அது அடுத்த பன்னிரண்டாவது வழிக்கு கொண்டு செல்லும். நல்ல தரமா , நல்ல சேவையா , நேர்த்தியான வேலையா , செம்மையான செயலா, நல்ல நண்பரா , நல்ல முதலாளியா, நல்ல டீச்சரா ,  நல்ல வேலைக்காரனா, நல்ல தாயா என்று நாம் மற்றவர்களால் அறியப்படுவது – நாம் எந்த அளவிற்கு அதற்கான பண்புகளோடு நம்மை அடையாள படுத்தி இருக்கிறோம் என்பதை பொறுத்தது என்று முன்பு பார்த்தோம். அதுவே நம் சுபாவமாக  மாறும்போது அது நற்பெயர், நம்பகத்தன்மை என்று சூழலின், சமுதாயத்தின் கருத்தாக மாறுகிறது. ( REPUTATION & RELIABILITY ) அது உண்மையில் சூட்சுமத்தில் சேருகிறது. சரியான நேரம் வரும்பொது அது தானே சாதிக்கும் திறமை கொண்டது.  இந்த நிலையை “கீர்த்தி” என்றழைக்கிறார் கர்மயோகி. நிச்சய வெற்றிக்கான அடுத்த வழி அதுவே.

இந்த நிலை வரும்போது உலகம் உங்களை திரும்பி பார்க்கும். உங்கள் முன்னேற்றத்திற்கான  சூழல், மனிதர்கள் , அருள் அனைத்தையும் அதுவே கொண்டு வரும் . குறைந்த பட்சம் – நாம் செய்யும் செயலின் காலத்தைக் குறைக்கும்  அல்லது பலனை பல மடங்கு அதிக படுத்தும் நிலைகளை வாழ்வில் ஏற்படுத்தும். சில பாயிண்ட்  களுக்கு முன் நான் சொன்ன உதாரணத்தையே எடுத்து கொள்கிறேன். ஏராளமான  NEGATIVE IMAGE / BAGGAGE உடன் நான் அன்னையிடம்  வந்த பொது – அதை கர்மயோகிக்கு எழுதிய போது அவர் சொன்ன அறிவுரை – சொன்ன சொல் தவறாதவன் என்னும் பண்பை ஏற்று செய்ய முடியுமா என்று பார். அது உன் அனைத்து பழைய விஷயங்களையும் அதற்கான வாழ்வின் மறுமொழிகளையும் மாற்றும் என்றார். முடிந்தவரை கடைபிடித்தேன். 2005 முதல் 2015 வரை கடைபிடித்தேன். நல்ல பெயர்  வந்தது . ஆனால் அதனால் பெரிதாக ஏதாவது நடந்ததாக  சொல்லும் அளவிற்கு இல்லை. ஆனால் 2015 இல் வெள்ளத்தில் ஏராளமான நஷ்டம் வந்து, அடுத்து முதலீட்டிற்கு என்ன செய்வது என்று புரியாமல் நின்ற போது ஒரு கம்பெனி ஒரு கோடி வரை பொருட்களை கடன் கொடுப்பதாக முன் வந்தது.  வட  இந்தியாவை சேர்ந்த அந்த  கம்பெனி  தமிழ் நாட்டில் காலூன்ற ஒரு பெரிய PROJECT ஐ தங்கள் பொருளை உபயோகப்படுத்தி  பார்க்க என்னை பற்றி கேள்விப்பட்டு முன் வந்தது.  எந்தவித எழுத்து பூர்வ ஆதாரம், பிணை இல்லாமல் தர முன்வந்தது. என்னை விட பெரிய புகழ் பெற்ற கம்பெனி சென்னையில்   பல இருந்தும் எனக்கு தர, என்னை தேடி  வந்தது என் நம்பகத்தன்மை பற்றி கேள்விப்பட்டே. அது கீர்த்தி . அது போல அவர்கள் கேட்டது போல  பெரிய PROJECT .எப்படி தேடுவது? அப்போது முதல் அமைச்சரிடம்  திறப்பு விழாவிற்கான  தேதி பெற்று விட்ட கம்பெனி ஒன்று PROJECT தாமதம் ஆவது கண்டு வேறு ஒரு கான்ட்ராக்டரை தேடி கொண்டு இருப்பதாக அறிந்தேன். அவர்கள் அதை அறுபது நாட்களில் முடிக்க வேண்டும் என்று சொன்னார்கள். பலரும் முடியாது என்று சொன்ன பொது நான் 45 நாட்களில் முடிப்பதாக சொன்னேன். அதுவரை நான் HANDOVER செய்த நேரம் தவறாமை-ஐ கருத்தில் கொண்டு எந்த  கேள்வியும் கேட்காமல் அந்த PROJECT எனக்கு தரப்பட்டது. இதுவும் கீர்த்தியின் ஒரு அடையாளமே. அதன் பிறகு நடந்தவை அனைத்தும் நான் செய்தது அல்ல. சூழல்  தன்னை தானே பூர்த்தி செய்து கொண்டது. அதுவரை வேறு ஒரு கம்பனிக்கு DISTRIBUTOR ஆக  இருந்த நான் என் சொந்த PRODUCT ஐ என் BRANDல் கொண்டுவர அதுவே காரணமாக அமைந்தது. அதாவது சூழலில் நான் சேர்த்த நம்பகத்தன்மைக்கான பண்புகள் சரியான நேரத்தில் கீர்த்தியாக வெளிப்பட்டு சாதித்தது.

அந்த நிலை முன் சொன்ன 11 வழிகளுக்கான உழைப்பு, திறமை , தெளிவு பெற்ற  பிறகே வரும். நாம் எந்த அளவு, நம்மை சுற்றி உள்ளவர்களை  கவருகிறோமோ  அந்த அளவு நம் முன்னேற்றம் இருக்கும் என்பது நமக்குத்  தெரியும். ஆனால் எத்தனை பேரை அல்லது ஒவ்வொருவராக  நம்மால் கவர முடியும். ஆனால் இந்த கீர்த்தி என்பதை உண்டாக்குவதன் மூலம் நம்மால் பலரை கொத்து கொத்தாக கவர முடியும். நமக்கு தேவையான  INVESTORS , MARKET , PERSONS , SOCIETY என்று பலரையும், பலவற்றையும் ஒரே நேரத்தில் திட்டமிடாமலேயே கவர முடியும் என்பதை இதில் பொருத்தி பார்த்தால் இந்த தத்துவத்தை புரிந்து கொள்ள முடியும். இதன் பின் உள்ள சட்டத்தை, அதன்  செயல் முறையை  புரிந்து கொள்ளமுடியும். தன்னை நோக்கி இவற்றை வர வைப்பவன்  தலைவன் ஆகிறான்.

சமீபத்திய உதாரணமாக நான் பார்ப்பது. திரு அண்ணாமலையை. அவரது கட்சி , அதன் நோக்கம், சித்தாந்தம் ஆகிவற்றுள் நான் போகவில்லை. சரியோ தவறோ அவர் வாழ்வில், படித்த காலத்தில் இருந்து IPS  வேலை பார்த்த காலத்தில் இருந்து ஒரு நேர்மையை , நம்பகத்தன்மையை உருவாக்கினார். இன்று தமிழ்நாட்டில் ஏன் இந்தியாவின் சரித்திரத்தில் இவ்வளவு எதிர்ப்பை கிண்டல், கேலியை, சந்தித்தவர் யாரும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு எதிர்ப்பை சந்திக்கிறார். எப்படியாவது அவரை இழிவுபடுத்த வேண்டும் என்று கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு அவர் வேலை செய்த இடம், படித்த இடம், விளையாடிய குக்கிராமம் என்று கேமராவுடன் சென்று பேசிக்கூட, எதிர்ப்பாளர்களால்  பெரிதாக ஒன்றும் கண்டு பிடிக்க முடியவில்லை. ஒரு சிறு தவறு செய்திருந்தால் கூட பெரிதாக்கலாம் என்றாலும் எதுவும் கிடைக்கவில்லை.  இன்று நீண்ட நாள் அரசியலில் இருக்கும் ஒரு 60 வயதான அரசியல்வாதி அடைய முடியாத, அதுவும் உலகிலேயே அதிக உறுப்பினர்கள் கொண்ட கட்சியில், அகில இந்தியாவிலும் பரவியுள்ள ஒரு கட்சியில் 38 வயதில் PARLIAMENTARY BOARD ன் உறுப்பினராக வரமுடிவது,அவருடைய நடத்தையில் சூட்சுமத்தில் சேர்ந்த நற்பெயர், நம்பகத்தன்மை. அது கீர்த்தியாக சூழலில், சமுதாயத்தில் சரியான நேரம் வரும் போது வெளிப்படுகிறது. இது புரிந்தால் தான் நம்மால் அடுத்த நிலைக்குச் செல்ல முடியும்.

இதுவரை இதை செய்யவில்லை என்றாலும் நம்மால் இப்போது கூட இதை வளர்க்க முடியும். நம் சுபாவமாக மாற்ற முடியும். எப்படி கீர்த்தி பெற்றுள்ளார் என்று  நமக்கு தெரிந்தவரை பற்றி சிந்தித்தால் ஒரு மூன்று, நான்கு விதங்களில் மட்டுமே அவர் செயல்பட்டு இருப்பதை காண முடியும். தன்னம்பிக்கை, தன்னை சார்ந்து இருத்தல், COURAGE , UNCONVENTIONAL BEHAVIOUR, அடுத்தவர் விமர்சனத்திற்கு பயப்படாமல் செய்ய வேண்டியதை செய்பவர், எது சரி, எது தவறு என்று மட்டுமே பார்த்து யார் சரி, யார் தவறு என்று பார்க்காதவர். எடுத்த முடிவுகளில் திடமாக இருத்தல் , முன்னுதாரணமாக, அல்லது தலைமை தாங்கி வழிநடத்துதல் என்று இவற்றில் சிலவற்றை மட்டுமே செய்பவராக இருப்பார். அல்லது தொடர்ந்து முன்னேற வேண்டும், தொடர்ந்து திறமையை வளர்த்துக்கொள்ள, அறிவை வளர்த்துக்கொள்ள, தேவையானதை செய்பவராக இருப்பார். இவற்றை ஆழமாக கவனித்தால் உழைப்பு, திறமை, தரம், மதிப்பு, தைரியம், கடமை என்று ஒரு சிலவற்றை அவர்கள் ORGANISE செய்வதை தெரிந்துக் கொள்ள முடியும். அந்த பவர் of organisation கீர்த்தியாக மாறுவது தெரியும். அதன் மூலம் வெளிப்படும் உழைப்பு, நிர்வாகத்திறமை, நடத்தை, COMMUNICATION SKILLS, INTERPERSONAL SKILLS ஆகியவற்றில் அவரது நம்பகத்தன்மை, நற்பெயர் அதிகரிப்பது தெரியும். அது சூட்சுமத்தில் சேரும் போது கீர்த்தியாக வெளிப்படுகிறது.  மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது என்னும் பழ மொழியை இந்த கருத்தோடு இணைத்து பார்த்தாலும் புரிந்து கொள்ள முடியும். இதையே பரிணாம வளர்ச்சி, மனதின் வளர்ச்சி என்று பார்க்கும்போது ஒரு வேலையின்  சாரம் புரிந்து அது சுபாவமாக மாறும் போது அது வாழ்வில் சாதனையாக எதிரொலிக்கிறது என்கிறார்.

உதாரணமாக, ஒரு நோக்கம் நிறைவேற வேண்டும் என்று வைத்துக்கொள்வோம். அதற்கான திறமையாக நாம் அறிந்ததை அறிவில் பெறவேண்டும். பின், உணர்வாகப்பெற வேண்டும். மனமும், உணர்வும் ஒன்றை பெற்ற பிறகு அது சத்தியத்திற்காக, விவேகமாக, முன்னேற்றத்திற்கான விவேகமாக மாறவேண்டும். அந்த விவேகத்தின் மேல் முழு நம்பிக்கையோடு செயல்பட வேண்டும். அந்த நம்பிக்கையோடு வேலையை அந்த வேலைக்காக செய்ய வேண்டும். அது ஒரு கட்டத்தில் கீர்த்தியாக மாறும். முன் சொன்ன அண்ணாமலை உதாரணத்தில் பொருத்திப் பார்த்தால், இது நன்றாகப் புரியும்.

இன்னொரு வகையிலும் பார்க்கலாம். உதாரணமாக என் வாழ்வில் நான் பல தோல்விகளை, இழப்புகளை சந்த்தித்திருக்கிறேன். அதை ஆராயும் போது அங்கு எனக்குத் தேவைப்படும் திறமை என்னவென்று தெரிகிறது. அதுவே என் முன்னேற்றத்திற்கான விவேகம் என்று தெரிகிறது. அந்த விவேகத்தில் ஒன்று தான் “சொன்ன சொல் தவறாமை”. அதுவே என் வளர்ச்சிக்கு காரணமாகிறது.  மனிதர்களும், சூழலும் உதவும் அளவிற்கு வருகிறது. அதன் சாரம் எதிர்பார்ப்பு இல்லாத பொறுமை.  இந்த PROCESS புரிந்தால் பல இடங்களில் இதை விரிவுபடுத்த முடியும். அன்னை அன்பர்கள் என்று வரும்போது இதை இன்னும் சுருக்கலாம். அன்னைக்கு பிடித்து எடுத்து, பிடிக்காதது எது , இது ஆசையா தேவையா போன்ற கேள்விகளை ஒவ்வொரு செயலுக்கு முன்னும் கேட்டு கொண்டால் கீர்த்தி அருளாக மாறும்.

உதாரணமாக, கர்மயோகி சமாதி ஆகும் வரை நான் LIFE DIVINE  படிக்கவில்லை. எனக்கு புரியாது என்றே சொல்லி கொண்டு இருந்தேன். ஆனால் அதற்கு பின் வாழ்வு செல்லும் வழியை புரிந்து கொள்ள முடியாத பொது – வாழ்வின் சட்டங்களை பற்றிய கர்மயோகியின் கட்டுரைகளை என் பார்வையில் புரிந்துக் கொள்ளாமல், அவர் பார்வையில் புரிந்துக் கொள்ள வேண்டும், அதற்கான திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும், அப்போது தான் அவர் விரும்பிய அன்னை விரும்பும் பரிணாமத்திற்கான பண்புகளை சூழலுக்கு கொண்டு வரமுடியும் என்னும் விவேகம் வந்தது.  அதன் மேல் நம்பிக்கை வைத்து செயல்படும்போது அது கீர்த்தியாக மாறி இன்று  333 SUBSCRIBERS என் கட்டுரையை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையை ஏற்படுத்துகிறது. இதை அகந்தையாக சொல்லவில்லை. இது ஒரு PROCESS தான். எவரும் செய்ய முடியும் என்று கர்மயோகி கூறுவதையே கூறுகிறேன்.

அடுத்த வாரம் அடுத்த வழியைப் பற்றி பேசலாம்.

Author Info
Parinaaman (Ramesh Kumar)

Parinaaman (Ramesh Kumar)

SHARE
Share on facebook
Share on telegram
Share on whatsapp

வாழ்வில் நிச்சய வெற்றிக்கு இருபது வழிகள்- 18

அடுத்தது பதினாறாவது  வழி. இது வரை சொன்னவை புரிந்த பிறகு அதற்கான வெற்றிக்கு அடித்தளம் இட்ட பிறகு, நாம் இருக்கும் தளத்திற்கான சூழல், ஆட்கள் நடுவில் இருக்கும்படி நம்மை நாம் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

Read More »

வாழ்வில் நிச்சய வெற்றிக்கு இருபது வழிகள்- 17

முன் சொன்ன பதினான்கு வழிகளிலும் வரும் தெளிவு,  அதை செயல்படுத்தும் திறன் வந்த பிறகு நாம் பதினைந்தாவது வழிக்குச் செல்வோம். நடைமுறைப்படுத்தும் சாரம் புரிவது மிகப் பெரிய முன்னேற்றம்.  காரணம் இந்த நிலையில் நமக்கு

Read More »

வாழ்வில் நிச்சய வெற்றிக்கு இருபது வழிகள்- 16

இது வரை விளக்கிய பதிமூன்று வழிகளும் நமக்கு நன்றாக புரிந்துவிட்டது, செயல்படுத்த தெரிந்துவிட்டது என்றால் தானாகவே நாம் அடுத்த பதினான்காவது வழிக்குச் சென்று விடுவோம். SKILL, CAPACITY, ABILITY, CAPABILITY, TALENT என்று அவை

Read More »

More Articles

வாழ்வில் நிச்சய வெற்றிக்கு இருபது வழிகள்- 18

அடுத்தது பதினாறாவது  வழி. இது வரை சொன்னவை புரிந்த பிறகு அதற்கான வெற்றிக்கு அடித்தளம் இட்ட பிறகு, நாம் இருக்கும் தளத்திற்கான சூழல், ஆட்கள் நடுவில் இருக்கும்படி நம்மை நாம் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

Read More »

வாழ்வில் நிச்சய வெற்றிக்கு இருபது வழிகள்- 17

முன் சொன்ன பதினான்கு வழிகளிலும் வரும் தெளிவு,  அதை செயல்படுத்தும் திறன் வந்த பிறகு நாம் பதினைந்தாவது வழிக்குச் செல்வோம். நடைமுறைப்படுத்தும் சாரம் புரிவது மிகப் பெரிய முன்னேற்றம்.  காரணம் இந்த நிலையில் நமக்கு

Read More »

வாழ்வில் நிச்சய வெற்றிக்கு இருபது வழிகள்- 16

இது வரை விளக்கிய பதிமூன்று வழிகளும் நமக்கு நன்றாக புரிந்துவிட்டது, செயல்படுத்த தெரிந்துவிட்டது என்றால் தானாகவே நாம் அடுத்த பதினான்காவது வழிக்குச் சென்று விடுவோம். SKILL, CAPACITY, ABILITY, CAPABILITY, TALENT என்று அவை

Read More »