Share on facebook
Share on telegram
Share on whatsapp

வாழ்வில் நிச்சய வெற்றிக்கு இருபது வழிகள்-8

இந்த வழிகள் எல்லாம் தெளிவான பிறகு, அதன் சாரம் புரிந்தபிறகு, அதை நடைமுறை படுத்த முடிந்த பிறகு அவை எல்லாம் நம்மை அடுத்த நிலைக்கு எடுத்து செல்ல வேண்டும். விரும்பி செய்வது என்பது அடுத்த நிலைக்கான ஒரு commitment ஆக , ஒரு perfection க்கான commitment ஆக ஒரு சிறந்ததை செய்ய வேண்டும் , சிறந்ததை தர வேண்டும் என்னும் உறுதியாக மாறவேண்டும். அதற்கு நாம் எப்போதும் நாம் அறிந்த உயர்ந்ததையே செய்வோம் என்னும் மன நிலைக்கு வரவேண்டும். ஒவ்வொரு செயலிலும், நடத்தையிலும் ஒவ் வொரு கணமும் – ஒரு உயர்ந்த பண்பை கொண்டு வர முடியுமா என்று பார்க்க வேண்டும். செயலில் மட்டுமல்ல உறவுகளிலும் , நடத்த்தையிலும் கூட அது முடியும். அது நம்மை பற்றிய சித்ததுடன் – conscious – இருக்க வைக்கும்.

வெறும் சிறந்ததை செய்வோம் என்று இல்லாமல் , சிறந்தது என்றால் என்ன, நாம் புரிந்து கொண்டதா, சமுதாயம் சொல்வதா, அன்னை சொல்வதா , அதை அடையக்கூடிய முறை என்ன , எப்போது செய்ய போகிறேன் எத்தனை காலத்தில் அதை சுபாவமாக – personality யாக அடையப்போகிறோம், என்பதில் ஒரு தெளிவு வேண்டும். அந்த தெளிவையே அந்த நோக்கத்தையே பிரதானமாக வைத்து நாம் ஒரு செயலை விரும்பி செய்யும்போது – நம் செயல் ஆழ உழுவது போல ஆகிறது. நம் goal , நம் ambition க்கான பாதையாக , அதை நோக்கி தெளிவாக நடந்து செல்லும் பாதையாக இருக்கும். விவேகாநந்தர், ரமணர் என்று எடுத்து கொண்டாலும் சரி, அம்பானி, ஸ்டீவ் ஜாப்ஸ் , பில் கேட்ஸ் என்று எடுத்துக் கொண்டாலும் சரி – அவர்கள் வாழ்வு அவர்கள் செய்த செயல்களால் சாதிக்கப் படவில்லை. . அதற்கு பின்னல் உள்ள ஒரு உயர்ந்த நோக்கத்திற்கான வாழ்வாக அதை மாற்றி கொண்டார்கள். அல்லது தங்கள் நோக்கத்திற்கு தாங்களே சேவை service செய்தார்கள் என்று எடுத்து கொள்ளலாம். அப்படி செய்யும்போதுதான் நம்மால் சிறந்ததை செய்ய முடியும். சிறந்தது வெளிப்பட முடியும்

இதற்கு முன் சொன்ன வழிகளில் சற்றே இலக்கு இல்லாமல் இருப்பது போல் போதுவானதாக இருக்கும் . இந்த point இலக்கை நோக்கிய சாதனையை நோக்கிய பயணமாக இருக்கும். சிறந்ததை தர வேண்டும் என்றால்
நாம் சிறந்ததை பற்றிய தெளிவோடு , conscious ஓடு இருக்க வேண்டும் . இந்த முறையில் அது தானே வந்து விடும். நம் திறமை குறைவு, குண குறைவு, அறிவு குறைவு பற்றிய தெளிவு வரும். அதை சரி செய்தால் நாம் நினைத்ததை விட அதிக உயரத்தை அடைய முடியும். அதற்கு ஒரு வழியாக கர்மயோகி சொல்வது – நாம் ஈடுபட்டு இருக்கும் துறைகள் பற்றி ஒரு நாளைக்கு ஒரு விஷயமாவது புதிதாக தெரிந்து கொள்வது.அல்லது அந்த துறையில் இருக்கும் சிறந்தவர் ஒருவர் செய்வதை, சாதித்ததை அல்லது பொருளை எப்படி செய்தார்கள் , அடைந்தார்கள், என்று பார்ப்பது. உதாரணமாக warren buffet share இன்வெஸ்ட்மென்ட்டில் perfection – ஐ அடைந்து விட்டார் என்றால் அந்த நிலையை எப்படி அடைந்தார். என்றுப் பார்ப்பது. அதன் சாரத்தை புரிந்து கொள்வது. உதாரணமாக அவர் ஒரு கம்பெனியின் டர்ன் ஓவர் அல்லது வருமானத்தை பார்க்காமல் – அதன் நேர்மை, ஆர்வம், பொருளின் தரம் ஆகியவற்றை பார்த்து இன்வெஸ்ட் செய்தார். ஸ்டீவ் ஜாப்ஸ் இதையெல்லாம் ஒரு போன் செய்ய முடியுமா என்னும் அளவிற்கு வெறும் பேசுவதற்கு மட்டுமே பயன்பட்ட போன் ஐ தந்தார். அம்பானி எந்த பொருளாக இருந்தாலும் அது சாமானியரை அடைய வேண்டும் என்று volume சேல்ஸ்-ஐ டார்கெட் செய்தார். இதுபோல ஒரு சாதனைக்கு பின்னால்; உள்ள சாரத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். கற்று கொள்ள வேண்டும். இவை எல்லாம் ஒரு வேலையை பற்றிய முழுமை, அதற்கு தேவையான ஞானம் , விவேகம், அனுபவம் இல்லாமல் வர முடியாது. அதனால் தான் தினமும் ஒன்றை புதிதாக கற்றுக்கொள்ள வேண்டும் . இந்த கருத்தை மனித சுபாவத்தில் நான் படித்து அப்போது நான் ஈடுபட்ட எலெக்ட்ரோ ஸ்டாடிக் – என்னும் சப்ஜெக்ட் பற்றி அதிகமாக படிக்க ஆரம்பித்தேன். என்னை அறியாமலேயே என் திறமை வளர்ந்தது. இப்பொது இருக்கும் ஞானம் வர வேண்டும் என்றால் குறைந்தது 5 வருடம் பிசிக்ஸ், மேகட்ரோனிக்ஸ் படிக்க வேண்டும். அனால் திறமையை வளர்க்க ஆர்வத்தோடு படிக்கும்போது அதன் சாரம் எளிதில் பிடி படுகிறது. அப்போது கல்விக்காக படித்தவர்களை விட அதிக ஞானம், விவேகம் வருகிறது.

இன்று எலெக்ரோ ஸ்டாடிக் அஸோஸிஷனில் உலகத்திலேயே பொறியியல் அல்லது பிசிக்ஸ் படிக்காமல் உறுப்பினராக இருப்பது நான் மட்டுமே. அது வருமானத்தை பல மடங்கு உயர்த்தி உள்ளது. வாழ்வில் வெற்றி பெற்றவனாக ஒரு பல்முக மனிதனாக என்னை உலகத்திற்கு காட்டி உள்ளது.

அடுத்தவாரம் அடுத்த வழியை பார்க்கலாம்.

Author Info
Parinaaman (Ramesh Kumar)

Parinaaman (Ramesh Kumar)

SHARE
Share on facebook
Share on telegram
Share on whatsapp

வாழ்வில் நிச்சய வெற்றிக்கு இருபது வழிகள்- 18

அடுத்தது பதினாறாவது  வழி. இது வரை சொன்னவை புரிந்த பிறகு அதற்கான வெற்றிக்கு அடித்தளம் இட்ட பிறகு, நாம் இருக்கும் தளத்திற்கான சூழல், ஆட்கள் நடுவில் இருக்கும்படி நம்மை நாம் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

Read More »

வாழ்வில் நிச்சய வெற்றிக்கு இருபது வழிகள்- 17

முன் சொன்ன பதினான்கு வழிகளிலும் வரும் தெளிவு,  அதை செயல்படுத்தும் திறன் வந்த பிறகு நாம் பதினைந்தாவது வழிக்குச் செல்வோம். நடைமுறைப்படுத்தும் சாரம் புரிவது மிகப் பெரிய முன்னேற்றம்.  காரணம் இந்த நிலையில் நமக்கு

Read More »

வாழ்வில் நிச்சய வெற்றிக்கு இருபது வழிகள்- 16

இது வரை விளக்கிய பதிமூன்று வழிகளும் நமக்கு நன்றாக புரிந்துவிட்டது, செயல்படுத்த தெரிந்துவிட்டது என்றால் தானாகவே நாம் அடுத்த பதினான்காவது வழிக்குச் சென்று விடுவோம். SKILL, CAPACITY, ABILITY, CAPABILITY, TALENT என்று அவை

Read More »

More Articles

வாழ்வில் நிச்சய வெற்றிக்கு இருபது வழிகள்- 18

அடுத்தது பதினாறாவது  வழி. இது வரை சொன்னவை புரிந்த பிறகு அதற்கான வெற்றிக்கு அடித்தளம் இட்ட பிறகு, நாம் இருக்கும் தளத்திற்கான சூழல், ஆட்கள் நடுவில் இருக்கும்படி நம்மை நாம் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

Read More »

வாழ்வில் நிச்சய வெற்றிக்கு இருபது வழிகள்- 17

முன் சொன்ன பதினான்கு வழிகளிலும் வரும் தெளிவு,  அதை செயல்படுத்தும் திறன் வந்த பிறகு நாம் பதினைந்தாவது வழிக்குச் செல்வோம். நடைமுறைப்படுத்தும் சாரம் புரிவது மிகப் பெரிய முன்னேற்றம்.  காரணம் இந்த நிலையில் நமக்கு

Read More »

வாழ்வில் நிச்சய வெற்றிக்கு இருபது வழிகள்- 16

இது வரை விளக்கிய பதிமூன்று வழிகளும் நமக்கு நன்றாக புரிந்துவிட்டது, செயல்படுத்த தெரிந்துவிட்டது என்றால் தானாகவே நாம் அடுத்த பதினான்காவது வழிக்குச் சென்று விடுவோம். SKILL, CAPACITY, ABILITY, CAPABILITY, TALENT என்று அவை

Read More »