சாசனம்
மும்பை மேரிடன் ஹோட்டல். பன்னிரண்டாவது மாடி பால்கனியில் இருந்து பார்த்தபோது எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத சூரியோதயம். உள்ளே திரும்பினால் அதையும் தாண்டிய அதிசயமாய் அன்னையின் புன்முறுவல். கண்ணாலேயே கட்டிப்போடும் அந்த வாஞ்சையில் நெகிழ்ந்தேன். “இந்த உயரத்திற்கு வருவோம்என்று என்றாவது நினைத்தீரா, ராஜன்?” “எதை? பன்னிரண்டாவது மாடியை சொல்கிறீரா?” ஜோக் அடித்தார் ராஜன். “அன்னையிடம் வந்தபிறகு உயரம் ஒரு பொருட்டன்று. நம் பண்புகளுக்கு ஏற்ற உயரத்தை நிச்சயம் கொடுப்பார். நாம் மூன்று வருடங்களுக்கு முன் இருந்தது போல […]
அடுத்த கட்டம்
மொட்டைமாடி. நாள் முழுதும் அடித்த வெயிலுக்கு மேகமூட்டமும், தென்றல் உடலை வருடுவதும் இதமாக இருந்தது. தொடர்ந்து கும்மென்று மரமல்லிகையின் வாசம். ஆகஸ்ட் மாதத்தில் மரமல்லிகையின் பருவம் ஆரம்பிப்பதுகூட ஏதோ சொல்வது போலிருந்தது. என் பார்வையே அதைச் சொல்லி இருக்க வேண்டும். “ஆரம்பித்துவிட்டாயா?’ என்பது போல் பார்த்தார் நண்பர் ஜெகன். “மாலையிலிருந்து ஒரு மாதிரியாகத்தான் இருக்கின்றீர்கள்”, கிண்டல் அடித்தார். ஆம், இன்று ஆகஸ்ட் 15. தியான மையத்திலிருந்து சொற்பொழிவும், தியானமும் முடிந்து இப்போதுதான் வீடு திரும்பினோம்.அங்கு ஆரம்பித்த நெகிழ்வும், ஆச்சரியமும் விலகாமல் இருந்தேன். “என்ன ஜெகன், நீங்கள் உணரவில்லையா? அந்தச் சூழலிலேயே ஒரு நெகிழ்ச்சியும், நன்றியும் இருப்பதாகப் பட்டதே……?” “நிச்சயம் உணர்ந்தேன். அந்த அதிர்வு எப்படிச் சாத்தியமாயிற்று என்று தான் யோசித்துக்கொண்டு இருக்கிறேன்” என்றார். […]
காணிக்கை
“ஓ!”….. என்று கூச்சல், கைத்தட்டல். பால்கனிக்கு வந்து எட்டிப் பார்த்தேன். நான் இருக்கும் அபார்ட்மெண்டின் சக குடியிருப்பாளர்களின் குழந்தைகள், சிறுவர்கள்…. களிப்புடன் கால்பந்து விளையாடிக்கொண்டு இருந்தார்கள். சில மாதங்களுக்குமுன் கிரிக்கெட்டை இதே கூச்சலுடன் விளையாடினார்கள். எது விளையாடினாலும் உலகக்கோப்பைக்கு விளையாடுவது போன்று அப்படி ஓர் உற்சாகம்….. ஈடுபாடு…. ஆச்சரியப்படுத்தியது. சின்னஞ்சிறார்களுக்கு எங்கிருந்து வருகிறது இவ்வளவு சக்தி?…. ஆர்வமாக விரும்பிச் செய்தால் எந்த வேலைக்கும் தேவையான எனர்ஜி தானே வந்துவிடுமோ?…. யோசித்துக்கொண்டே ஹாலுக்குள் வந்து அமர்ந்தேன். எனக்குத் தான் எனர்ஜியே இல்லாமல் சோர்வாக இருந்தது. இலக்கில்லாமல் ரிமோட்டைத் தட்டிச் சேனலை மாற்றி, மாற்றிப் பார்த்துக்கொண்டு இருந்தேன். மனம் நாளைய மாதாந்திர ரெவ்யூ மீட்டிங்கை எப்படிக் கையாளப்போகிறேனோ என்று இருந்தது. காரணம், காலையில் ஜி.எம்.க்கும் எனக்கும் நடந்த உரையாடல். “மூர்த்தி!…. அந்த stadium […]
கால் சென்டர்
மாலை மணி ஆறு. பேக்டரியில் அனைவரும் சென்று விட்டார்கள். நான் எப்போது போவேனோ என்று வழி மேல் விழிவைத்து காத்திருந்தான் வாட்ச்மேன். ஜன்னல் வழியாகப் பக்கத்தில் இருந்த பூங்காவைப் பார்த்தேன்…. காதல் ஜோடிகள், நடைப்பயிற்சி செய்யும் முதியோர்கள், உற்சாகம் கொப்பளிக்க விளையாடும் குழந்தைகள்… என்னைத்தவிர உலகத்தில் அனைவரும் சந்தோஷமாக இருப்பது போல்பட்டது. கொஞ்ச நாட்களாகவே வாழ்க்கை ஒரு சுவாரசியமும் இல்லாமல் இருக்கிறது. வியாபாரம் எதிர்பார்த்தவிதத்தில் இல்லை. நஷ்டமில்லாமல் ஓட்டுவதே போராட்டமாக இருந்தது. நாளைய பணப் புரட்டல்களுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் நண்பர் ஜெகனைக் கேட்க… அவர் ஆறு மணிக்கு வருவதாகச் சொன்னதால் இந்தக் காத்திருப்பு. இன்னது தான் செய்வது […]
அன்னை ஒரு குழந்தை
டிசம்பர் 21, 2004….கோயம்பேட்டில் கிருஸ்துமஸ் மற்றும் புதுவருட விடுமுறை கூட்டம். தரை தெரியாத கூட்டத்தில் மிதந்து பெங்களூர் KPNஐக் கண்டுபிடித்து ஏறி இருக்கை எண்-ஐப் பார்த்து அமர்ந்தேன்…அப்பாடா!…. இரவு 10.00 மணிப் பேருந்து அது. நிரம்பிவிட்டால் 15 நிமிடம் முன்பேகூட கிளம்பிவிடும். 10.15 ஆகியும் கிளம்பவில்லை. காரணம் என் பக்கத்து இருக்கை காலி. “குருவி’ கூவி அழைத்தும் ரூ.390/- டிக்கெட் ரூ.500/- விற்கும் நேரத்தில் “சிங்கிள் சீட்’ ஒன்றுகூட தேறவில்லை. டிரைவர் ஆச்சரியப்பட்டுக்கொண்டே வண்டியை எடுக்க… எனக்கு உரைக்க ஆரம்பித்தது…. நான் செல்வது ஓர் அகில இந்தியரீதியான டிரெய்னிங்கிற்காக.அதில் என்னைத்தவிர அனைவரும் இஞ்ஜீனியர்கள், விற்பன்னர்கள்.என் கம்பெனி வேறு வழியில்லாமல் என்னை அனுப்புகிறது.குண்டுசட்டியில் குதிரை ஓட்டும் என்னை […]
ரயில்வே கேட்
(கதை என்று நான் எழுத நினைத்தாலும் உண்மைச் சம்பவமே, கடைசி நான்கு வரிகளைத் தவிர). எப்பொழுதும் மூடியே கிடக்கும் ரங்கராஜபுரம் ரயில்வே கேட். வழக்கம்போல, கூட்டத்தில், காலை நேர நெரிசலில், டென்ஷனுடன் கேட் திறப்பதற்காக நின்றுகொண்டிருந்தேன். வழக்கமாகக் குனிந்து வண்டியைத் தள்ளிச் சென்றுவிடுவேன். கடந்த சில தினங்களாகத் தினம் ஓர் இடிப்பு, தகராறு என்பதால், இன்று பல்லைக் கடித்துக்கொண்டு நின்றிருந்தேன். எல்லாம் ஒரு விளையாட்டால் வந்த வினை. என் நினைவு நான்கு நாட்களுக்குமுன் பறந்தது…. …..மாதக் கடைசி, பைக்கில் இருக்கும் சொச்ச பெட்ரோல்தான் இன்னும் இரண்டு நாட்கள் சுற்றியாக வேண்டும். வேறு கைமாற்றுக்குக்கூட வழியில்லை. இந்த ஓட்டை பைக் மைலேஜ் வேறு தராது. நாளை வில்லிவாக்கம் போனால் சிறிது பணம் […]