Share on facebook
Share on telegram
Share on whatsapp

பொதுப்புத்தியும் ஆனந்தமும் – 5

My next preference is to take a list of common-sense truisms as the one above and examine its empirical validity. Further, there is a greater work as to how to use them to practical advantage. Scales and measurements vary in their use according to the field of application. – Subtle indices for each can be discovered and tested for their validity – KARMAYOGI on JIM COLLINS . அதற்கான ஒரு சிறு முயற்சியே இந்த கட்டுரை.

அடுத்த ஐந்தாவது பொதுப்புத்தி அப்படி நாம் வாழ்வை பார்க்கும் போது, மனப்பான்மை, நோக்கம் கொள்கையை எடுத்துக் கொள்ளும் போது, நம் வரையறையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.  உதாரணமாக கர்மயோகி எடுத்த நோக்கம், மனப்பான்மை, கொள்கையை நாம் எடுத்தால் அதற்கான பலனையும் ஏற்கத் தயாராக இருக்க வேண்டும். நான் தேவையில்லாமல் யோகம் செய்வதாக நினைத்து ஒரு உயர்ந்த கொள்கையை எடுத்துக்கொண்டு அதனால் சுமார் ஒரு கோடி இழந்ததை பற்றி சில வாரங்களுக்கு முன் எழுதி இருந்தேன்.  வேறு சில உதாரணங்களும் தருகிறேன்.

உதாரணமாக நிர்வாகம் வாழ்வுக்கு உயர்வு, ஆன்மீகத்திற்கு எதிரி என்று தன் ஸ்தாபனத்தை எந்த சட்டத்திற்கும் உட்படுத்தாமல், சமுதாய சட்டப்படி செய்ய வேண்டியவைகளைத் தவிர வேறு எதற்கும் உட்படுத்தாமல்  இருந்தார். THY WILL என்று எடுத்துக் கொண்டார். அவை சின்னா பின்னமானாலும் அதை பொறுத்துக் கொண்டார்.  என் உண்மையை, சத்தியத்தை, அன்னை விரும்பியபடி பரிணாமத்தில் வளர தேவையான என் நிலை  ஆகியவற்றை அறிய தம்மை சுற்றி தீய சக்திகள் அவசியம் என்று நினைத்து விஷப்பாம்புகளுக்கு தெரிந்தே பால் வார்த்தார்.  அதனால் அவர் பட்ட வேதனையை நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியாது.அது உயர்ந்த நிலை.

என்னை எடுத்துக் கொண்டால், பிறருக்கு உதவி செய்தால், பிரார்த்தனை செய்தால் அவர் கர்மத்தை நாம் ஏற்றுக் கொள்வதாகும் என்று எனக்குச் சொல்லப்பட்டதற்கு பயந்து பல வருடங்கள் யாருக்கும் எதுவும் செய்யாமல் இருந்தேன். DECEMBER 2019-இல் எனக்கு ஒரு விபத்து நடந்த போது ஏராளமானோர்  கூடி எனக்கு முதலுதவி செய்து, மருத்துவமனையில் சேர்த்தது, எங்களை ஏற்றி வந்த ஒரு AUTO ஓட்டுனர் அதற்கான பணம் வாங்காமல் சென்றது என்பதை பார்த்த போது, நான் மனிதன் என்ற வார்த்தைக்கு அடையாளமாக மனிதாபிமானம் என்பதே இல்லாமல் இத்தனை வருடம் இருந்தது புரிந்தது. இதில் வேடிக்கை என்னவென்றால்  அப்படி சொன்னவர்கள் ஒரு நாள் விடாமல் மற்றவர்கள் உதவியை  பெற்று, சாப்பாடு முதல், துணி மணி, அணிகலன்கள் , காணிக்கைகள் என்று பெற்றுக் கொண்டு அனைத்து தவறுகளையும் செய்துக் கொண்டு இருந்தது, அதன் மூலம் தங்களை, தங்கள் குடும்பத்தை முன்னேற்றிக் கொண்டது என் கண்ணில் படாத முட்டாள்தனம் எனக்கு அப்போது தான் புரிந்தது.

இதே போன்று மரபு, சம்பிரதாயம் , கோயில்கள், விசேஷங்கள்  என்று பலவற்றை சொல்லி என்னை ஏமாற்றிய கூட்டம், தான், தன் குடும்பம், விசேஷங்கள்  என்று மகிழ்ச்சியாக இருக்கும் போது, தன் பெண் அல்லது பிள்ளைகள் அப்படி இருக்கும் போது அவர்கள் விஷயத்தில், அது அவர்கள் சுதந்திரம், நான் தலையிடுவது இல்லை என்று சால்ஜாப்பு சொல்லும் “சாதகர்கள்”(?) பிற அப்பாவி அன்பர்களை விவாகரத்து வரை, உற்றார் உறவினர் நண்பர்கள், ஏன் தாய் தந்தை, மாமியார் என்று அனைவரிடமிருந்தும் பிரித்ததை நான் பார்த்து இருக்கிறேன்.  நான் சமுதாயத்தில் ஒட்டாமல் தனியாக நிற்பதன் முட்டாள்தனம் புரிகிறது.

இவையெல்லாம் நம்மை விட்டு நம் சித்த உயர்வின் மூலம் விலக வேண்டுமே தவிர நாமே விலக்கக்கூடாது என்பது புரிய வேண்டும். எவற்றை எந்த அளவு செய்ய வேண்டும் என்னும் விவேகம், பாகுபாடு வேண்டும்.

உயர்நிலைகள் நிச்சயம் பலன் தரும். ஆனால் அதற்கான மன உளைச்சல்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவமும் வேண்டும். நான் வாழ்வை சமர்ப்பணம் செய்யலாம். ஆனால் என்னை கட்டி சுண்ணாம்பு கால்வாயில் போட்டாலும் , அதுவே THY WILL என்று ஆனந்தப்படும் மனநிலை எனக்கு வேண்டும். அது முடியுமா. 

இந்த இடத்தில் இது பற்றி நான் சிந்தித்ததை நான் பகிர்ந்துக்க கொள்ள விரும்புகிறேன். நாமே விலக்க கூடாது. அதுவே விலக வேண்டும் என்பது பற்றி சிந்தித்த போது, தோன்றியது இது. உதாரணமாக எனக்கு யாராவது திருமண பத்திரிகை கொடுத்தால் அவசியம் வர வேண்டும்  என்று நினைப்பார்கள்.  செல்லவில்லை என்றால் மன வருத்தம் வரும். ஆனால் அதுவே அவரே அந்த பத்திரிகையை கர்மயோகிக்கு தருவதாக இருந்தால், அவர் வந்தே ஆக வேண்டும் என்னும் எதிர்பார்ப்பு இருக்காது. அவருடைய BLESSINGS கிடைத்தால் போதும் அல்லது இந்த பத்திரிகை அவருக்கு கொடுப்பதே பெரும் பாக்கியம் என்று இருக்கும். நம் CONSCIOUSNESS வளருவதன் மூலம் தான் எதையும் விலக்க வேண்டும். அதன் அளவுக்குத்தான் எதையும் செய்ய வேண்டும்.  இந்த பொதுப்புத்தி நமக்கு மிகவும் முக்கியம். அதுவே ஆனந்தம் தரும் பொதுப்புத்தி.

அடுத்து அடைய வேண்டிய ஆறாவது பொதுப்புத்தி நம் செயல்கள் அனைத்தும் ஒரு ஆன்மீக பண்புடன் இணைக்கப்பட வேண்டும் அல்லது அதை உள்ளடக்கி இருக்க வேண்டும். நம்மை, பிறரும், அல்லது நாம் பிறரை ஒரு பண்புடன்  தொடர்பு படுத்தி  அடையாளப்படுத்தியே புரிந்துக் கொள்கிறோம். உதாரணமாக நாம் ஒரு ஆசிரியராக இருந்தால், எளிதாக எதையும் புரிய வைக்கும் ஆசிரியர், அன்பான ஆசிரியர், கண்டிப்பான ஆசிரியர், ஆழமாக சொல்லிக் கொடுக்க தெரியாத அல்லது தெரிந்த ஆசிரியர், நல்லெணம்மிக்க ஆசிரியர், மாணவர் நலனை, முன்னேற்றத்தை விரும்பும் ஆசிரியர் என்று பல விதமாக அறியப்படுவோம். அல்லது வியாபாரத்தில் இருந்தால், நேர்மையான வியாபாரி, கறாரான வியாபாரி,வியாபார நோக்கம் மட்டுமே உள்ளவர், வாடிக்கையாளர் முக்கியம் என்று நினைப்பவர், தரமான, பொருள் மட்டுமே தருபவர் , சொன்ன சொல் தவறாதவர், பணத்திற்காக எதையும் செய்பவர் என்று நாம் அடையாளப்படுத்தும்   விதங்கள் , அனைத்தையும் கவனித்தால் நம்மை பிறர் உயர்வாக நினைக்கும் இடங்கள் எல்லாம் ஒரு பண்புடன் சம்பந்தப்பட்டே இருக்கும். அதனால் நாம் செயல்களை ஒரு பண்புடன் இணைப்பது நமக்கு அதிகபட்ச முன்னேற்றத்தையும் ஆனந்தத்தையும் தரும். அது எந்த அளவிற்கு உயர் சித்ததுடன் இருக்கிறதோ, அந்த அளவுக்கு நமக்கு பெயர், புகழ், அந்தஸ்து கிடைக்கும். அதற்கு உதாரணமாக அரசியவாதிகள் அல்லது சமூக விரோதிகள் ஏராளமாக நூற்றுக் கணக்கில் ஆயிரக்கணக்கில்  கோடிகள் சம்பாதிப்பார்கள். அதே போல சினிமா நடிகர்கள், நடிகைகள் நிறைய சம்பாதிப்பவர்கள் நான் இது போன்றவர்களுக்கு Catering செய்து இருப்பதால் அவர்களது  உண்மையான மனநிலை தெரியும். என்ன தான் இருந்தாலும், அரசியல்வாதி தானே, சமூக விரோதிதானே, கூத்தாடிகள் தானே என்பது போன்ற சமூக மனப்பான்மை அவர்களுக்கு தரும் சங்கடம், வருத்தம் அதிகம்.  அதனால் தான் அவர்களில் பெரும்பாலோர்  அடுத்த GENERATION அந்த தொழிலுக்கு வரக் கூடாது என்றே நினைப்பார்கள், எனக்கு தெரிந்து அரசியலில் இருப்பவர்கள், INVEST செய்வதற்கு ஒரு நல்ல இடம்  வியாபாரம் சொல்லுங்கள் என்று கேட்பார்கள்.  லாபத்திற்கு அல்ல தான் ஒரு வியாபாரி என்று காட்டிக் கொள்ள. இவை எல்லாம் எதை காட்டுகிறது என்றால் என்ன இருந்தாலும், எவ்வளவு இருந்தாலும் அது ஒரு பண்புடன் இணைப்படவில்லை என்றால், அதனால் நமக்கு ஆனந்தம் கிடைக்காது என்பது தான்.

நம் வாழ்வையே எடுத்துக் கொண்டால், கடந்த கால வாழ்வில் வெற்றி பெற்றவைகளில் நாம் பின்பற்றிய முறை முழுதும் சரியானது என்று சொல்ல முடியாது. என்றாலும் வெற்றி பெற்றோம் என்ற அளவில் அதை சரி என்று எடுத்துக் கொள்ளலாம். அதே போல தோல்வி அடைந்த இடங்களில் நாம் பின்பற்றிய முறை அனைத்தும் தவறு என்று கூற முடியாது. ஏன் பலன் வரவில்லை என்னும் ஆராய்ச்சி தேவை. இங்கெல்லாம் ஏதோ ஒரு திறமை, நடத்தை, மனப்பான்மை, உயர் சித்தம், சத்தியம் என்று பரிணாமத்திற்கு தேவையான  ஏதோ ஒன்றை செய்து இருப்போம். அந்த பண்புடன் எப்போதும் நம்மை ஐக்கிய படுத்தி கொள்வதும், அதுவே பிறகு நம் சுபாவம் ஆவதும் நம்மை ஒரு தொடர் முன்னேற்றத்திற்கு கொண்டு செல்லும்.

குறைந்த பட்சம் கீழ் கண்ட  பண்புகளுடன் நம்மை இணைப்பது நம் முன்னேற்றத்திற்கு , ஆனந்தத்திற்கு அவசியம் என்று கூறுகிறார்.

சுய முக்கியத்துவம் , சுய நலத்தில் இருந்து வேலையின் முக்கியத்துவம் , அதன் நோக்கத்தில்  முக்கியத்துவம்.

வெளி சூழலை ஒட்டி நம் நடத்தையை , மனப்பான்மையை மாற்றாமல் , உள்ளே இருந்து அல்லது நம் கொள்கை அல்லது நம் உயர்ச்சித்தம்  வெளியே  நடப்பதை நிர்ணயம் செய்ய முயல்வது.

பிறரை, சூழலை குறை  கூறாமல் அனைத்தையும் நம் நிலைக்கு ஏற்றதே , இதை தண்டி முன்னேற வேண்டும் என்று அனைத்தையும் மகிழ்வுடன் ஏற்றுக்கொள்வது.

பலன் எதிர்பார்ப்பு ஆகியவற்றை ஒட்டி எதுவும் செய்யாமல் ஆர்வத்திற்காக, செம்மைக்காக  செய்வது .

நம் சூழல் , மனிதர்கள்,  வாழ்வு, சட்டம் என்று நம்மை எதிர்க்கும், முரண்படும்  அனைத்தும்  கூற வருவது ஒன்றைத்தான். இவற்றை பற்றிய பொதுப்  புத்தி நமக்கு இன்னும் வரவில்லை என்பதைதான் கூற வருகிறது.

அனுபவம், அறிவு, விவேகமாக மாறும் முதல் நிலை அது. இது வருமானம், திறமை, ஒரு செயலை, சூழலை, நாம் எதிர்கொள்ளும் விதம், மக்களுடன் தொடர்புகொள்வது, அதன் பின் உள்ள மனப்பான்மை, நோக்கம், அது வெளிப்படுத்தும் உணர்வு, பிற மனிதர்களின் அணுகுமுறைகள்,  அவர்களின் மனப்பான்மை, அவர்களின் எதிர்வினை, ஆகியவற்றை கையாளும் நம்மைப் பற்றிய அறிவு, அதை ஒட்டி நாம் வெளிப்படுத்தும் பண்புகள், ஆகியவற்றை உள்ளடக்கியது. வாழ்வின் சட்டங்களை பற்றிய பாகுபாடு புரியும் நிலை இது. அதுவே ஆனந்தம் தரும் பொதுப்புத்தி. இறைவனையும், மனிதர்களையும், செயல்களையும் இணைக்கும் ஆற்றல் பண்பு. அதுவே முன்னேற்றத்திற்கு, ஆனந்தத்திற்கு அடிப்படை. அது உயர்சித்தம் , அல்லது அதிமன பண்புகளாக இருந்தால் இன்னும் நல்லது.

சென்ற வாரம் தந்த SALESMAN உதாரணத்தை மேலும் விளக்க சிலர் கேட்டு இருந்தனர். அதனால் அதை சற்றே விரிவு படுத்தி இருக்கிறேன்.

இன்னொரு உதாரணம் மூலம் விளக்க வேண்டும் என்றால் SALESMAN ஐ எடுத்துக் கொள்ளலாம். வெற்றிகரமான SALESMAN வருடா வருடம் TARGETஐ அடையும் SALESMAN, SALES MANAGER ஆக PROMOTE ஆகிறார். அங்கு அவர் தோல்வி அடைகிறார். அவரால் பல நல்ல SALESMAN ராஜினாமா செய்கிறார்கள். காரணம் SALESMANSHIP என்பது ஒரு கலை. அது அவருக்கு கை வந்துள்ளது. ஆனால் SALES MANAGER என்பது பல கலைகளை சேர்ந்த அறிவியல். அதை MANAGERக்கான அனுபவமோ CHARACTER, BEHAVIOURஓ தராது. அதையெல்லாம் உள்ளடிக்கிய அதை தாண்டிய ஒன்று தேவை. அதுவே PERSONALITY.  அதுவே அவரது அல்லது அவர் சார்ந்த கம்பெனியின் சாதனையை நிர்ணயிக்கும்.  சிற்றூர் அல்லது கிராமத்தில் இருந்து நகரத்துக்கு வருபவன் PERSONALITY கொண்டவனாக இருந்தால் விரிவடைவான்.  CHARACTER அல்லது BEHAVIOUR கொண்டவன் தன் நிலை,தன் கிராம பெருமை பேசி தன் இளமை கால பெருமை பேசி, தன் ஜாதி பெருமை பேசி  எதிர்ப்பான்.

Author Info
Ramesh Kumar

Ramesh Kumar

SHARE
Share on facebook
Share on telegram
Share on whatsapp

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 5

இதுவரை சொன்னவை அனைத்தும்   “உயர்ந்தவை நிர்ணயிக்கின்றன. அவை நிறைவேற தாழ்ந்தவை உதவுகின்றன” – என்னும் லைப் டிவைனின் ஒரு  கருத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு தலைப்பில் இருந்து விலகிச் செல்லாமல் எழுத வேண்டும் என்று

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 4

இதுவரை நாம் பேசியதை Life Divine – கருத்துகளில் பொருத்தி பார்க்கும் போது – முன்னேறும் பாதையின் நன்கு  நிலைகளை.  – மனித வாழ்வு, யோக வாழ்வு, தெய்வீக வாழ்வு என்று மூன்று பகுதிகளாகப்

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை  – 3

அதற்கு பதிலாக ஒரு பண்பை எடுத்துக் கொண்டு, அதன் பார்வையில் நம் முடிவை organise செய்ய முடிந்தால், அது நம் அனைத்து  முடிவுகளுக்குக்  காரணமாக அமைந்தால், அது படைப்பாற்றல் மிக்கதாக இருக்கும்.  உதாரணமாக முன்

Read More »

More Articles

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 5

இதுவரை சொன்னவை அனைத்தும்   “உயர்ந்தவை நிர்ணயிக்கின்றன. அவை நிறைவேற தாழ்ந்தவை உதவுகின்றன” – என்னும் லைப் டிவைனின் ஒரு  கருத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு தலைப்பில் இருந்து விலகிச் செல்லாமல் எழுத வேண்டும் என்று

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 4

இதுவரை நாம் பேசியதை Life Divine – கருத்துகளில் பொருத்தி பார்க்கும் போது – முன்னேறும் பாதையின் நன்கு  நிலைகளை.  – மனித வாழ்வு, யோக வாழ்வு, தெய்வீக வாழ்வு என்று மூன்று பகுதிகளாகப்

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை  – 3

அதற்கு பதிலாக ஒரு பண்பை எடுத்துக் கொண்டு, அதன் பார்வையில் நம் முடிவை organise செய்ய முடிந்தால், அது நம் அனைத்து  முடிவுகளுக்குக்  காரணமாக அமைந்தால், அது படைப்பாற்றல் மிக்கதாக இருக்கும்.  உதாரணமாக முன்

Read More »