Share on facebook
Share on telegram
Share on whatsapp

பொதுப்புத்தியும் ஆனந்தமும் – 6

அடுத்து நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய ஏழாவது பொதுப்புத்தி அறியாமையில் இருந்து வெளியே வந்து அறிவை, ஞானத்தை பெறுவதே ஆனந்தம் பெறும் வழி என்பது தான். அறிவை, ஞானத்தை பெறுவது என்பது ஒவ்வொன்றிலும், குறிப்பாக, நாம் துன்பம், ஏமாற்றம், சோகம், வலி என்று உணரும் விஷயங்களுக்கு பின்னால் உள்ள இறைவன் தரவிருக்கும் ஞானத்தை பார்ப்பது ஆனந்தத்தை பெரும் வழி. நாம் இவற்றுக்கான காரணங்களை, நம் பழைய அனுபவங்களுடன் பொருத்தி பார்த்தே புரிந்துக் கொள்கிறோம். அதாவது நம் அறியாமையில் இருந்து அறிவை தேடுகிறோம். உள்ளுறை ஞானத்தை கேட்பதில்லை. அதனால் நாம் நமக்கு வர வேண்டிய உயர் ஞானத்தை உயர் மனப்பான்மையை மறுக்கிறோம்.

உதாரணமாக நமக்கு ஒரு தோல்வி ஏற்பட்டு அதன் பின்னால் உள்ள பயத்தை அறிந்து நமக்கு தைரியம், தீரம் வேண்டும் என்று பிரார்த்தனை செய்வதாக வைத்துக் கொள்வோம். இறைவனால் அதை எப்படி தர முடியும், அந்த குணங்களை வளர்க்க தேவையான சூழலை உருவாக்கியே அந்த ஞானத்தை தர முடியும். பிரார்த்தனைக்கு பிறகு நாம் பயந்தது அனைத்தும் நடக்கும். தோல்வி, துன்பம் தரும் அனைத்தும் நடக்க  வாய்ப்புள்ளது.  அதிலிருந்து நாம் முதலில் பெற வேண்டிய ஞானம், அனைத்து பயத்திற்கும் பின்னால் ஒரு இயலாமை இருக்கிறது, அனைத்து இயலாமைக்கும் பின்னால் ஒரு திறமைக்  குறைவு, குணக்குறைவு, பண்புக்குறைவு இருக்கிறது என்பது ஞானமாக வர வேண்டும். அதன் பிறகு அந்த குறையை நிறைவு செய்யும் திறமையை, குணத்தை, பண்பை எடுத்துக் கொண்டு அந்த சூழலை எதிர்கொள்ளும் போது அதில் வெற்றி பெறுகிறோம்.  பின் பயம் என்பதே அப்படிப்பட்ட சூழலில், மனிதர்கள் இடத்தில், வருவதேயில்லை.  அப்படி இல்லாமல் இருந்தால் அத்தகைய சூழல், வேலை, மனிதர்களை விட்டு விலகி விடுவோம்.  அல்லது அவர்களுக்கு அடிமையாக, சேவகர்களாக மாறிவிடுவோம். இதுவும் ஒரு வகையில் நம் பயம் அவர்களின் தைரியத்திற்கு சமர்ப்பணம் ஆவதே. அதற்கு பதிலாக, நம் மனதின் அறிவால் பயத்தை ஆன்மாவின் தைரியத்திற்கு சமர்ப்பணம் செய்தால் நாம் மற்றவர்களை, சமுதாயத்தை ஆள முடியும். நம்மை சுற்றியுள்ள நம்மை அடக்கியாளும் சுயநலம் கொண்டவர்களை இந்த கண்ணோட்டத்தோடு கவனித்தால் நான் சொல்வது புரியும்.  

நம் மனமே உயர்ந்தது அதுவே எல்லாவற்றையும் நடத்துகிறது நாம் பெற்ற அறிவே உயர்ந்தது என்று நினைத்தே எதையும் செய்கிறோம். தோல்விக்காக, துன்பத்திற்காக என்று எதையும் நாம் திட்டமிட்டு செய்வதில்லை. என்றாலும் அப்படி வருகிறது என்றால் நாம் ஏதோ ஒரு அறியாமையில் இருக்கிறோம் என்று பொருள். காரணம் அதற்கான பொருளை நம் வாழ்வின் அனுபவங்களில் இருந்தே எடுத்துக் கொள்கிறோம்.  அது நமக்கான சால்ஜாப்பாகவே இருக்கும். குறைந்த பட்சம் அந்த செயலில் நமக்கு குறையாக இருந்த மனப்பான்மை, திறமை, திறன், ஆற்றல் ஆகியவையாவது நமக்கு புரிய வேண்டும். பின் அதற்குத் தேவைப்படும் சூட்சும விஷயங்கள், சூழல், பண்புகள், ஆர்வம் போன்ற விஷயங்களில் இருந்த குறை புரிய வேண்டும். அதற்காக நாம் வெளிப்படுத்திய உழைப்பு, காட்டிய பண்புகள் ஆகியவற்றில் இருந்த குறை புரிய வேண்டும். இவையெல்லாம் நமக்கு மிகப் பெரிய அறிவை, ஞானத்தை  கொடுக்கும். இனி பெரும்பாலும் தோல்வி என்பதே இல்லை என்னும் அளவிற்கு செயல்பட முடியும்.  நம் மனம், சுயநலம், கயமை, எதிர்பார்ப்பு போன்ற நோக்கத்துடன் வேலை செய்யும் போது நன்றாக கவனித்து பார்த்தால், நம் வரையறை தடை, அறியாமை ஆகியவற்றின் மேல் கவனமாக இருப்பது தெரியும். அதற்கு எதிரான வகைகளில் இருந்து சுயநலத்திற்கு  தேவையானதை பிரித்து எடுத்துக் கொள்ளும் திறமை அதற்கு இருப்பது புரியும். மனதின் அந்த திறனை கவனத்துடன் அறிவை பிரித்து எடுக்க  பயன்படுத்த வேண்டும். ஒரு செயல் வெற்றி பெற, அல்லது அதன் மூலம் நாம் பெற விரும்பும் ஆனந்தத்தை பெற தேவையான பண்புகள் எது, அது எந்த சட்டப்படி இயங்குகிறது அதன் பின் உள்ள சத்தியம் என்ன, அந்த சத்தியத்திற்கு காரணமானவர் யார் என்பது எல்லாம் புரிந்தால் நாம் யார் என்பது நமக்கு புரியும். நம் அறிவின் நிலை, நம் தளம் நமக்கு புரியும். அதை உயர்த்துவது அறியாமையில் இருந்து வெளியே வருவது. அது பரிணாமத்தில் முன்னேறுவது என்றால், அது வாழ்வில் பணமாக, வசதியாக, அந்தஸ்தாக, புகழாக, நமக்கு ஆனந்தம் அளிக்கும் ஏதோ ஒன்றாக வெளிப்படும். அப்படி இல்லாமல் அதாவது இறைவன் விரும்பும் பண்புகள் மூலம் ஒன்றை பார்க்காமல் நம் உணர்வு, உணர்ச்சி, அதன் அனுபவம் மூலம் மட்டுமே பார்த்தால், நாம் அறியாமையிலேயே இருப்போம். அது வலி, துன்பம் ஆகியவற்றைத் தரும் போது இறைவன் மேல் நம்பிக்கை இழந்து மேலும் மேலும் நம்மை நம்ப ஆரம்பிப்போம். அல்லது வெறுப்பான மனநிலைக்கு வந்து விடுவோம். அது மேலும் மேலும் நம்மை துன்பத்திற்கே தள்ளும். இறைவன் நம்மை படைத்தது ஆனந்தமடையவே என்னும் போது அதன் பார்வையில், செயல்கள், அவற்றின் மூலம் வரும் பலன்கள்,, அதற்காக செயல்படும் சட்டங்கள், அவற்றின் வெளிப்பாடுகள், நம் வாழ்வில் அவற்றின் தாக்கம், ஆகியவற்றை conscious ஆக கவனிப்பது அறியாமையில் இருந்து வெளியே வந்து வாழ்வுக்கான அதன் ஆனந்தத்திற்கான ஞானத்தை பெறுவது பொதுப்புத்தி.

அடுத்தது சமுதாயமும் நம்மை போலவே இறைவனால் படைக்கப்பட்ட ஒரு ஜீவனுள்ள படைப்பு, அதனுடன் நம் தொடர்பு, அதன் SYMBOLS , சுட்டிக்காட்டும் அடையாளங்கள் ஆகியவற்றை கவனிக்கும் அளவு ஒன்றுதல் ஆனந்தத்தை தரும் பொதுப்புத்தி. இது பற்றி சமூகம் அதிர்ஷ்ட சாகரம் என்னும் புத்தகம் அதிகமாக விளக்குகிறது.

சமூகம் என்பது ஜீவனுள்ளது நம்முடன் இரண்டர கலந்து இருக்கிறது என்பதை சற்று கவனித்தால் புரியும். காலையில் பல் தேய்க்க எந்த PASTE உபயோகப்படுத்த வேண்டும் என்பதிலிருந்து இரவு உறங்க செல்லும் வரை அனைத்தையும் அதுவே INFLUENCE செய்கிறது என்பதை கவனித்து பார்த்தால் புரியும். சட்டம், முறை, பழக்கம், வழக்கம் , நாகரிகம் என்று அனைத்தின் மூலமும் சமூகம் நம்மை தொடுகிறது. சமுதாயத்திற்கான சமூக சட்டத்தை மீறினால் தண்டனை கிடைக்கும்  என்பது நமக்குத் தெரியும். அதே போல சமூக வாழ்விற்கான சட்டங்களை அப்படி மீறும் போது நாம் பெறும் தண்டனைகள் நம் கண்ணில் படுவதில்லை. பண்புகள், படிப்பு, நடத்தை, முதல் நாகரிகம் வரை நாம் அதை மீறும் போது, அல்லது அதனுடன் ஒட்டிச் செல்லாத போது நாம் விலக்கப்படுகிறோம். அதே போல அது நம்மிடையே நெருங்கும் இடங்களை, முன்னேற்றத்திற்கான இடங்களை அல்லது எதிர்காலத்தைப் பற்றி அது காட்டும் SYMBOL -களை கவனித்து அதனுடன் ஒன்றினால் அதிர்ஷடம் வரும். ஆனந்தம் வரும். இன்று சமுதாயம் தனி மனித முன்னேற்றதிற்கு பல வகைகளில் பாடுபடுகிறது. அதற்கான சமூகத்தின்  நல்லெண்ணம் சம்பாதிக்கும் வாய்ப்புகள் அதிகமாவதைக் காட்டுகிறது. அதாவது பணத்தை நம் ஆனந்தத்திற்கு சேவை செய்ய வைக்கிறது.  இன்று எவர் முயன்றாலும் எந்த தொழிலும் செய்ய முடியும். INNOVATION , CREATIVITY , INDIVIDUALITY-க்கு அதிக மரியாதை வருகிறது. முன் போன்ற கடினமான சூழல் படிப்பிற்கோ, வியாபாரத்திற்கோ இல்லை என்பதெல்லாம் எதை காட்டுகிறது என்றால், நாம் முயன்றால் எளிதாக எதையும் பெற முடியும் என்பதையே. விலங்கு போல நாடோடியாக திரிந்த மனிதனை ஊரும் உறவுமாக வாழ வைத்தது. வேட்டையாடி பிழைத்தவனுக்கு விவசாயம் செய்ய உதவி, வீட்டிற்கே காய், கனி தானியமாக வந்தது, உழைப்பின் பலனை பகிர்ந்துக் கொள்ள பண்ட மாற்று வந்தது என்று ஆரம்பித்து மருத்துவம், கல்வி, DOOR DELIVERY என்று சமுதாயம் மனிதனின் ஆனந்தத்திற்கு கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படுவது போல படுகிறது. அந்தந்த காலகட்டத்தில் அதை கவனித்து அத்துடன் ஒன்றுவது பொதுப்புத்தி.

நம் சமூகத்தில் நம்மை சுற்றி உள்ள மனிதர்கள், நண்பர்கள், அலுவலகம், குடும்பத்துடனான நம்  உறவை பற்றிச் சிந்தித்து, அங்கு இருக்கும் முரண்பாடுகள், சிக்கல்கள், எரிச்சலூட்டும் விஷயங்கள் ஏன் வந்தது என்பதை பார்ப்பது, அவற்றையெல்லாம் இந்த அறிவோடு பார்ப்பது பொது புத்திக்கான அடிப்படை.

பெரும்பாலும் நம்மை சுற்றி உள்ள சமூகம் பணத்தை அடிப்படையாக கொண்டே உள்ளது. அதனால் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்று ஒரு எண்ணம் நம்மில் விதைக்க படுகிறது. அதை நாம் சமுதாயத்தில் இருந்தே பெற வேண்டும். நாம் அதை எப்படி சம்பாதிக்க போகிறோம், எந்த பண்பை வைத்து  சம்பாதிக்க போகிறோம் என்பது  நம் சூழலுக்கு ஏற்ற பொது புத்தியால், அது தரும் ஞானத்தால்   நிர்ணயிக்கப்படுகிறது. ( உதாரணம் – சுத்தம் சரவணபவன், குறைந்த விலை – சரவணா ஸ்டோர்ஸ் ).  அதை சமூகம் ஏற்றுக்கொள்ளும் விதத்தை அறிந்து விலை நிர்ணைகிறது. பண்பு அதிகம் தரம் அதிகம் என்று நினைத்தால் அதிக விலை வைக்கிறோம் . அல்லது குறைத்து வைக்கிறோம். 15 ரூபாய்க்கு மேல் ஒரு டீ ஐ விற்க முடியாத இடத்தில் அதற்கு அருகிலே 200 ரூபாய்க்கு காபீ டே-வும் , ஸ்டார் பக்ஸ்-உம் , விற்பது பண்புகளுக்கு சமூகம் தரும் ஆதரவு என்பது  புரிய வேண்டும். இதற்கான நேரம் , முதலீடு, நம் எண்ணம், நம்பிக்கை  என்று மேல சொன்ன அனைத்திற்கும் வரையறை உண்டு. ஆனால் பண்பு  உயர்வதற்கு வரையறை இல்லை. ஆனால் இவற்றின்  மேல் சூழலின் சமுதாயத்தின் நம்பிக்கை உயர்வதற்கு அளவே  இல்லை. அது உயரும் அளவிற்கு வருமானம் உயரும். இதுவே சட்டம் என்று அறிவது பொதுப்புத்தி.

இங்கு சமுதாயத்திற்கான பண்புகள்   என்றால்  குணங்களை மட்டுமே  நினைக்கிறோம். அப்படி அல்ல. வேலையின்  பண்புகள் SKILL , CAPACITY , ABILITY, PERFECTION  . அது போல ஒவ்வொன்றுக்கும்  உண்டு. ASPIRATION, TECHNOLOGY , EVOLUTIONARY IDEA போன்றவையும் பண்புகளே.  பண்பை, அதன் வெளிப்பாட்டை , அதன்  நிர்வாக முறையை பின்பற்ற வரையறையை இல்லை. . நாம் செய்யும் தொழிலில் இன்று அதிகபட்ச நுணுக்கங்கள் எவ்வளவு உள்ளதோ அத்தனையும் பின்பற்றினால் அறிவு சமுதாயம் விரும்பும் பண்பாக வெளிப்படும் . அது முடிவில்லாத நம்பிக்கையை சமூகத்திற்கு எழுப்ப முடியும். அது வாழ்வில் வருமானமாக எதிரொலிக்கும்.

பொதுவான உதாரணமாக பார்க்கலாம். இருபதாம் நூற்றாண்டு AUTOMATION-க்கு அடிபோட்டு உச்சத்தை  அடைந்தது. அந்த நேரத்தில் தனி மனித, அல்லது  தொழிலாளர் எதிர்ப்புக்கு பயந்து AUTOMATE செய்யாதவர்கள் அனைவரும் பின் தங்கினர் அல்லது அழிந்தனர். AUTOMATE செய்தவர்கள் தப்பினர். இந்தியாவில் 1960-முதல் 2000 வரை இருந்த ஆட்டோமொபைல் கம்பெனிகள் TEXTILE நிறுவனங்கள், ஆகியவற்றின் நிலையை இப்போது ஆராய்ந்து பார்த்தால் இது புரியும். அதே போல இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டு INTERNET  TECHNOLOGY  வளர்ச்சிக்கானது. அதோடு ஒன்றியவர்கள் அபரிமிதமாக வளர்கிறார்கள். அதோடு கூட இந்த வளர்ச்சியின் காரணமாக வந்த OPENNESS , TRANSPARENCY , ரகசியம்  மூடி மறைக்க முடியாதது, பிறரின் PERFECTION செம்மை தெரிவது, PRODUCTIVITY என்று எல்லாமே மாறி விட்டது. வெளிப்படையாகி விட்டது. அதை புரிந்து நாமும், அடக்குமுறை, ரகசியம், குறுகிய மனப்பான்மை, ஏமாற்று வேலைகள் இனி உதவாது என்று புரிந்து மாற வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக சமூகம், உலகம் பண்புகளுக்கு மாறுவது SUPRAMENTAL FORCE , இறங்கி வருவதால் என்று புரிய வேண்டும், முடிந்த வரை அத்தகைய பண்புகளுடன் ஒன்ற வேண்டும். இப்படி சமுதாயம் அரசு சட்டம், ஜட உலக சட்டம் GROSS LAWS , SUBTLE LAWS சூட்சும சட்டங்கள் என்று பலவற்றை நமக்கு காட்டிக் கொண்டு இருக்கிறது.  மனித முன்னேற்றதிற்கு கட்டுப்பட்டு நடந்துக் கொண்டு இருக்கிறது. ஆனால் நாம் நம் சுபாவத்திற்கு கட்டுப்பட்டு அது தரும் ஆனந்தத்தை அனுபவிக்க முடியாமல் இருக்கிறோம்.  சமூகத்தின் இந்த நடப்பு அதற்கான அதிகாரம் நமது ஆவது, அதிர்ஷ்டம் சாகரம் என்கிறார். இன்று நமக்கு கிடைத்துள்ள தனி மனித சுதந்திரம் அதற்கு அறிகுறி. அது நம் சுபாவத்தை சுதந்திரத்தில் இருந்து ஆரம்பிக்கிறது. நம் சுதந்திரம் என்பது நம் மேல் நம்பிக்கை அது தன்னம்பிக்கை. அந்த தன்னம்பிக்கை நம் திறமை, அதன் பண்புகள் மேல் வருவதால் வருகிறது. நம் திறமை பண்புகள் மேல் சமூகம் நம்பிக்கை வைக்கும் போது , அது பல மடங்கு பலனைத் தருகிறது. சமூகம் தனி மனிதனை நம்பும் அளவிற்கு அவன் வாழ்வு மாறும்.

நம்மை சுற்றி உள்ளவர்களை கவனித்தாலே, தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள், டியூஷன் எடுப்பவர்கள், பழைய பொருட்கள் எடுப்பவர்கள் முதல், டைலர்கள் என்று எவரைப் பார்த்தாலும் அந்த ஏரியாவில் நம்பிக்கையை பெற்றவர்களே அதிகம் சம்பாதிக்கிறார்கள்.  BANK , INSURANCE , MUTUAL FUND போன்றவற்றை, கவனித்தால் CUSTOMER நம்பிக்கை பெற்றவர்களே வளர்கிறார்கள். அதாவது நம் நம்பிக்கை சமுதாயத்தின் நம்பிக்கை ஆகும் போது, அது அபரிமிதமாக வளர்ந்து ஆனந்தத்தை தருகிறது.

என் கம்பெனி 2008-இல் ஆரம்பித்து கர்மயோகியின் BLESSING-குக்காக மைலில் எழுதி கேட்ட போது -சொன்ன சொல் தவறமாட்டேன், PROJECT HANDOVER செய்வது முதல், பணப் பட்டுவாடா வரை என்பதை கொள்கையாக எடுத்துக் கொள் என்றார். அப்போது அதை ஏன் சொன்னார் என்பது புரியவில்லை.  அதனால் பண விஷயத்தில் ரொம்பவும் பயப்படுவேன். risk எடுக்க மாட்டேன். கடன் என்பது கிடையாது. CREDIT CARD கூட வாங்கவில்லை. காரைக் கூட பணம் சேமித்து தான் வாங்கினேன். loan கிடையாது. அப்படி இருந்த எனக்கு 2015-க்கு வெள்ளத்தில் பெரு நஷ்டம் அடைந்த பிறகு CREDIT / LOAN  போன்றவை இருந்தால் தான் தொழில் செய்ய முடியும் என்ற நிலை வந்தது. எப்படி கேட்பது என்று தெரியாத நிலையில், அதுவும் கையில் PROJECT -ஐ வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாத நிலையில் ஒரு கம்பெனி தானாகவே முன் வந்து யாருக்கும் 1 லட்சம் CREDIT கொடுக்க யோசிக்கும் ஒரு கம்பெனி அதற்கான BLANK CHEQUE பல வாங்கும் கம்பெனி எந்த வித CONDITION-னும் இல்லாமல் 75 லட்ஷம் வரை CREDIT கொடுக்க முன் வந்தது. அது நான் அது வரை நம்பிக்கை வைத்த – ஒரு பண்பின் மேல் – சமுதாயம் வைத்த நம்பிக்கை. இவற்றையெல்லாம் நாம் கவனிப்பதில்லை.  கவனிப்பது பொதுப்புத்தி.

சமூகம் ஒரு தனி மனிதன் மேல் வைக்கும் நம்பிக்கை தான் அவரை தலைவன் ஆக்குகிறது.  சமூகம் ஒரு தனி மனிதன் மேல் வைக்கும் நம்பிக்கை தான் அவரை குருவாக்குகிறது.   சமூகம் ஒரு தனி மனிதன் மேல் வைக்கும் நம்பிக்கை தான் அவரை பிரபஞ்ச அன்னையாக ஏற்றுகொள்ள வைக்கிறது.  இது புரிவது பொதுப்புத்தி.

https://whatsapp.com/channel/0029Vb1XFQ71dAwCTbnKdY1q

Please subscribe to above WhatsApp Channel to get updates in WhatsApp.

Author Info
Ramesh Kumar

Ramesh Kumar

SHARE
Share on facebook
Share on telegram
Share on whatsapp

TOKEN ACT TO THY WILL – அறிவிப்பு

இடைவிடாத வேலை, உள்நாடு மற்றும் வெளிநாடு தொடர் பயணங்கள் காரணமாக மார்ச் 31 , 2026 வரை அடுத்த மூன்று அல்லது நான்கு வாரங்களுக்கு கட்டுரைகள் எழுத / பதிவேற்ற முடியாது. டோக்கன் ஆக்ட்

Read More »

TOKEN ACT TO THY WILL – 6

பொறுப்பேற்றலின் முதல் அடையாளம் அதில் எந்த  வித குறை கூறுதலும், அதன் எந்த பரிணாமமும் இல்லாது இருக்க வேண்டும். நாம் அன்னை விரும்பும் பண்பு என்பதால், பொறுப்பேற்றலை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அதன் பின்னால்,

Read More »

TOKEN ACT TO THY WILL – 5

இப்போது முதல் TOKEN ACT ஐ  எடுத்துக் கொள்ள அடிப்படையான மனப்பான்மைகளை விளக்க நினைக்கிறேன். இது SPIRITUAL OPULENCE இல் உள்ள PREPARATION TO TOKEN ACT மற்றும் அது தொடர்பான கட்டுரைகள், மற்றும்

Read More »

More Articles

TOKEN ACT TO THY WILL – அறிவிப்பு

இடைவிடாத வேலை, உள்நாடு மற்றும் வெளிநாடு தொடர் பயணங்கள் காரணமாக மார்ச் 31 , 2026 வரை அடுத்த மூன்று அல்லது நான்கு வாரங்களுக்கு கட்டுரைகள் எழுத / பதிவேற்ற முடியாது. டோக்கன் ஆக்ட்

Read More »

TOKEN ACT TO THY WILL – 6

பொறுப்பேற்றலின் முதல் அடையாளம் அதில் எந்த  வித குறை கூறுதலும், அதன் எந்த பரிணாமமும் இல்லாது இருக்க வேண்டும். நாம் அன்னை விரும்பும் பண்பு என்பதால், பொறுப்பேற்றலை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அதன் பின்னால்,

Read More »

TOKEN ACT TO THY WILL – 5

இப்போது முதல் TOKEN ACT ஐ  எடுத்துக் கொள்ள அடிப்படையான மனப்பான்மைகளை விளக்க நினைக்கிறேன். இது SPIRITUAL OPULENCE இல் உள்ள PREPARATION TO TOKEN ACT மற்றும் அது தொடர்பான கட்டுரைகள், மற்றும்

Read More »