வழக்கத்தை விட அதிகமானவர்கள் கிரேயேட்டிவ் எலிமெண்ட் பற்றியும் , சிந்தனைக்கும், எண்ணத்திற்கும் இருக்கும் வித்தியாசம் பற்றியும் கேட்டு இருந்தீர்கள் . நேரமின்மை காரணமாக தனித்தனியாக விளக்கம் எழுத முடியவில்லை. நேரம் கிடைக்கும் பொது கட்டுரையாக விளக்கமாக எழுதுகிறேன். இதில் – சிந்திக்காதே என்று கர்மயோகி சொல்லி இருக்கிறாரே என்று கூட ஒருவர் கேட்டார். இந்த கேள்வி மேலும் சிலருக்கு இருக்கலாம். அவர் எங்கே சொல்லி இருக்கிறார். சிந்திக்க தெரியாதவர்கள் – அவர் சொன்னதாக சிந்திக்க சொன்னதால் – அது நமக்கு வசதியாக இருப்பதால் எடுத்து கொண்டு விட்டோம். அப்படி என்றால் mental development பற்றி , சிந்தனை பற்றி ஏன் இத்தனை கட்டுரைகள் எழுதினர் என்ற அடிப்படை கேள்விக்கான சிந்தனை கூட நம்மிடம் வரவில்லை என்பதே உண்மை.
சரி ஆரம்பத்தில் அப்படி எழுதினார் என்று சிலர் சப்பை கட்டு கட்டலாம். கடைசி நாட்களில் எழுதிய புத்தகமான நூறு கோடியில் கூட – சிந்தனை பற்றியும் , பொது புத்தியின் அவசியம் பற்றியும் எழுதியிருக்கிறார். அது ஏன்.
சரியான சிந்தனை தனித்தன்மைக்கு அடிப்படை என்பது கர்மயோகி சொல்வது. அது creative element கு கொண்டு செல்லும் . அது ஒருமைக்கு வழி வகுத்து தனித்தன்மையை அதன் மூலம் ஒரு சாதனையை கொண்டு வரும் என்கிறார்.
நான் தற்செயலாக என் ESD paints காண formula வை கண்டு பிடித்த விதத்தை சில சொற்பொழிவுகளில் சொல்லி இருக்கிறேன். அது கிரேயேட்டிவ் எலிமெண்ட் கு ஒரு சரியான உதாரணம். அது பற்றி விளக்கம் சில வாரங்கள் எழுத வேண்டும் என்பதால் நேரம் இருக்கும்போது எழுதுகிறேன். அதே போல சிந்தனைக்கும் , எண்ணத்திற்கும் இருக்கும் வித்தியாசத்தை பற்றி சிலர் கேட்டிருந்தார்கள் . அதுவும் பெரிய விளக்கம் தேவைப் படும் விஷயமே. காரணம் சரியான சிந்தனை – தனித்தன்மைக்கு அடிப்படை , அதுவே சாதிக்கும் என்கிறார் கர்மயோகி. அது பற்றி சில கட்டுரைகள் முன்பே எழுதி இருக்கிறேன். அதன் லிங்க் கீழே கீழே கொடுத்துளேன்.
ஒரு சிறு ஆரம்பமாக இதை செய்தால் அடுத்து வரும் அன்னை பிறந்த நாள் அல்லது உங்கள் பிறந்த நாள் – ளுக்கு முன் ஒரு உயர் நிலை சித்தத்திலோ வாழ்விலோ நிச்சயம் ஏற்படும்.
சிந்தனை -1
சிந்தனை – 2
சிந்தனை மூலம் பரிணாமம் – 1
சிந்தனை மூலம் பரிணாமம் – 2
லிங்கில் நேரடியாக செல்ல முடியாதவர்கள் – right click செய்து new tab இல் படிக்கலாம்.