COMPLETE ACT பற்றி நிறைய படித்திருக்கிறோம். சிலர் அது பற்றிய சொற்பொழிவுகளும் கொடுத்து இருக்கிறார்கள். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் நாம் நினைத்த பலனை குறைந்த பட்சமாகவும், சாதனை என்று சொல்லுமளவிற்கு இருப்பதை அதிகபட்சமாகவும் கொண்டு இருக்க வேண்டும். சற்றே விரிவாக சொல்ல வேண்டுமென்றால் – வெற்றி மேல் வெற்றி பெற வேண்டும். அடுத்த வெற்றி அல்லது இப்போதய வெற்றி முந்தய வெற்றியை உறுதிப்படுத்தவேண்டும். இல்லையெனில் அது நம்மால் வந்த வெற்றி அல்ல – நாம் முறை அறிந்து பெற்ற வெற்றி அல்ல. காரணம் இப்போது நம் நம்பிக்கை முறைகள் மேல் இல்லை. முறைகளின் மூலமான பண்புகளின் மேல், அதை படைப்புத்திறனாக புரிந்து கொண்ட அந்த ஞானத்தின் மேல் இருக்கிறது. மூட நம்பிக்கைகளாக இல்லை. ஒவ்வொன்றின் process புரியும் நிலையில் இருக்கிறோம். அது சித்தப்பூர்வமாக conscious ஆக இருக்கும் நிலைக்கு கொண்டு செல்லும். அப்போதுதான் இவையெல்லாம் சூழல், திறன், திறமை, அறிவு, பொதுபுத்தி என்று அனைத்தாலும் நாம் பெற்ற பலனா?. அது படைப்பாற்றல் கொண்டதாக இருக்கிறதா, அல்லது அடுத்த நிலைக்கு வாழ்வில், வளத்தில், மனநிலையில், ஞானத்தில் அடுத்த நிலைக்கு செல்வதற்கான வித்தோடு இருக்கிறதா என்று பார்க்க முடியும். .நாம் இருக்கும் நிலையில் இருந்து அடுத்த நிலைக்கு செல்ல முடியும். இருக்கும் இடத்தை தக்க வைக்கும் நிலை அது. அடுத்த முன்னேற்றத்திற்கு பலமான அடித்தளமாக இருக்க கூடியது. இதை SATURATING THE PREVIOUS PLANE என்கிறார். வாழ்வில் இப்போது இருக்கும் நிலைக்கு முந்தைய நிலைக்கு எப்போதும் போகத் தேவையில்லாத நிலை அது. அந்த நிலையை அல்லது அந்த தளத்தை CREATIVE ELEMENT என்கிறார்.
நான் சாதாரணமாக P &P உதாரணங்களை எடுத்துக் கொள்வதில்லை. காரணம் நான் உட்பட பலருக்கும் அது பற்றி தெரியாது என்பதால். ஆனால் இங்கு இந்த CREATIVE ELEMENT பற்றி ஒரே இடத்தில் மட்டுமே சொல்லியிருக்கிறார். பொதுவாக அனைவரும் சொல்வது எலிஸபெத் டார்ச்சியின் அரண்மனை போன்ற மாளிகையை பார்த்த போது தான் அவளுக்கு மனமாற்றம் வந்தது. அங்கிருந்து தான் அவர் வாழ்வு மாற ஆரம்பித்தது என்பார்கள். அது ASPIRATION ACHIEVES என்னும் அடிப்படையில் சொல்லப்பட்டது. ஆனால் அதற்கான மனமாற்றம் அவளுக்கு எங்கிருந்து வந்தது என்றால் – லிடியா ஓடிப் போனபிறகு, அது பற்றி டார்சிக்கு தெரியும் என்ற பிறகு. – தன்னைப்பற்றி, தன் குடும்பத்தைப்பற்றி, அவள் கொண்டிருந்த உயர்ந்த அபிப்ராயம் அனைத்தையும் அகற்றி தாங்கள் எவ்வளவு கீழ்த்தரமாக இருக்கிறோம், அதை மீறி டார்சி எப்படி உதவுகிறார் என்று தெரிந்து , SELF-AWARENESS, IDENTITY WITH DARCY வரும் போது தான், அந்த இடத்தில் இருந்து தான், அவளின் படைப்பாற்றல் தொடங்குகிறது. அதாவது ஒருவரது சித்தத்தை நாம் தொடும் போது அவர் மனநிலை, ஆர்வம் ஆகியவற்றை நாம் முழுதும் புரிந்துக் கொள்ளும் போது, நமக்கான படைப்பாற்றல் தொடங்குகிறது. அது வாழ்வில் முன்னேற்றமாக வருகிறது.
நான் பல முறை எழுதிய சொன்ன உதாரணம் தான். மனித சுபாவம் புத்தகத்தில் சொன்னது போல நான் வேலை செய்த கம்பெனியின் – முதலாளியின் மனம், ஆர்வம், புரிந்து அவர் சித்தத்தை ஒட்டி நான் வேலை செய்த போது ஒரே வருடத்தில் அதே கம்பெனியின் PARTNER ஆனேன். பின் அதே போல அதற்கு இணையான கம்பெனி ஆரம்பித்தேன் என்று கூறியுள்ளேன். அது இத்தகைய CREATIVE ELEMENT க்கு சரியான உதாரணம். காரணம் ஒருவரது படைப்பாற்றல் சாதித்த விதத்தை அவருடன் ஒன்றி நாம் புரிந்துக் கொள்ளும் போது, அவரில் அத்தனை திறமை, ஞானம் நமக்கு சூட்சுமமாக வந்து விடுகிறது. வாழ்வில் அனுபவித்து பெற வேண்டிய ஞானத்தை நேரடியாக பெற்று விடுகிறோம். அந்த விதத்தில் நாம் படைப்பாற்றல் மிக்க ஞானி ஆகிறோம்.
இன்று நான் பெற்றுள்ள இந்த SUBJECT KNOWLEDGE நான் படித்து பெற்றதல்ல. அனுபவத்தால் என்று ஓரளவு சொல்லலாம் என்றாலும் இந்த அறிவை பெற குறைந்தபட்சம் 20 வருட அனுபவம் தேவை. ஆனால் எப்படி வந்தது. நான் வேலை செய்த கம்பெனி மற்றும் அதன் முதலாளியை விட்டு விலகி வந்து ஏழு அல்லது எட்டு ஆண்டுகளுக்கு பிறகு கூட நான் PRESENTATION தரும் இடங்களில் அப்படியே உங்கள் பழைய முதலாளி போல பேசுகிறீர்கள், எழுதுகிறீர்கள் என்பார்கள். அந்தளவு அவர் சித்தத்தோடு ஒன்றியதால் அவரின் 20 அனுபவ அறிவு நான் கேட்காமலேயே எனக்கு வந்துவிட்டது என்று நினைக்கிறேன்.
அதே போல என் சொந்த PRODUCT ஐ கண்டுபிடித்த விதம் பற்றியும் கூறியிருக்கிறேன். ஒரு முறை ஒரு இறக்குமதி செய்யப்பட்ட பொருளை வைத்து வேலை செய்ய வேண்டி வந்தது. அந்த SITE ஐ TOKEN ACT ஆக எடுத்துக் கொண்டதால் 100% PERFECTION என்பது அடிப்படை. அந்த அளவில் பார்த்தால் என்னால் 85% அல்லது 90% தான் அடைய முடிந்தது. தொழில் துறை சராசரி என்று பார்த்தால் இதுவே அதிகபட்சம் தான். காரணம் 70% அல்லது 80% EFFICIENCY ஏ போதும் என்பது தான் தொழில் துறை ஏற்றுக் கொண்டது. என்றாலும் TOKEN ACT என்பதால் 100% ஐ எப்படி அடைவது என்று பார்த்தேன். அதனுடன் வந்த MANUAL ஐ மீண்டும் மீண்டும் படித்தேன். பெரிதாக ஒன்றும் புரித்துக் கொள்ள முடியவில்லை. பின் அதைத் தயாரித்தவர் என்ன நினைத்து இதை செய்து இருப்பார். 100% எப்படி அடைந்து இருப்பார். எதற்காக அதை 100% என்று நிர்ணயித்து இருப்பார் என்றும், அடுத்ததாக CUSTOMER POINT OF VIEW வில் அவர் அதை எப்படி முடிவு செய்து இருப்பார் என்றும் சிந்திக்க ஆரம்பித்தேன். அப்போது தான் அவரது FORMULA வும் அதை செய்யும் முறையும் எனக்குப் புலப்பட்டது. அவரது படிப்பின் நோக்கம் புரிந்தது. அது ஒரு புது முயற்சி என்பதால் என் LAB இல் அதை செய்து பார்த்தேன். வெற்றிகரமாக வந்தது. அதன் மூலம் என் நெடு நாள் கனவான என்னுடைய OWN BRAND PRODUCT , மற்றும் MANUFACTURING க்கு என்னால் செல்ல முடிந்தது. அது வரை வேறு PRODUCT களுக்கு DISTRIBUTOR ஆக இருந்த நான் அன்று முதல் தொழில்முனைவர் ஆனேன். அதாவது வாழ்வில், வளத்தில், பரிணாமத்தில், மனநிலையில் அடுத்த உயர்ந்த நிலைக்கு சென்றேன். காரணம் ஏற்கனவே படைப்பாற்றல் கொண்ட ஒருவரது சித்தத்தோடு, என் ஆர்வம், நோக்கம், ஆகியவற்றோடு ஒன்றியது அவரது ஞானத்தை எனக்கு தந்து எனக்கான காலத்தை சுருக்கி அதே படைப்பாற்றலை எனக்கு தந்துவிட்டது.
இப்போது இந்த நிலையை அன்னையிடம், குருவிடம் பொருத்தி பார்ப்போம். அவர்களின் நோக்கத்தை, ஆர்வத்தை, சித்தத்தை நாம் அடைய நினைக்கும் போது நாம் பெறும் ஞானம், முன்னேற்றம், படைப்பாற்றல் நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியாதது. அவர்களிடம் இருக்கும் அனைத்தும் நமக்கும் வரும். காரணம் அவர்களின் நோக்கம் – சித்தம், ஆர்வம், படைப்பாற்றல் கொண்டது. அந்த வகையில் ஓரளவாவது முயன்றதால், கர்மயோகியின் பார்வையில் உலகத்தை பார்க்க முயன்றதால் எனக்கு அறிவு வந்தது, இனம் புரியாத ஆனந்தம் எப்போதும் உள்ளே எழுந்தது. திறமை, திறன் அதிகமானது. வாழ்வு வளம் பெற்றது. நான் கனவிலும் நினைக்காதது எல்லாம் எனக்கு கிடைத்தது. நம்மை அறியாமல் அன்னையுடன் நாம் ஒன்றும் நேரங்களில் இதை அனுபவிக்க முடியும்.
இது எடுத்தவுடன் செய்யக்கூடிய அளவிற்கு எளிதானது அல்ல. ஆனால் அந்த திறமையை படிப்படியாக வளர்த்துக் கொள்ள முடியும். முதலாவதாக நான் சில வாரங்களுக்கு முன் ஒரு கட்டுரையில் எழுதியத்தைப் போல நமக்கு அன்னை அல்லது குரு விரும்பும் ஒரு நல்ல பண்பு இருந்தால் அதை அன்னையின் படைப்பாற்றல் கொண்ட ஒரு பண்போடு, அதாவது அன்னை SYMBOL லில் இருக்கும் ஏதாவது ஒரு பண்போடு இணைக்க வேண்டும்.
உதாரணமாக உங்களிடம் பொறுமை இருக்கிறது என்று நினைத்தால், அதை PERSEVERANCE என்னும் அளவிற்கு உயர்த்த வேண்டும். பக்தி இருக்கிறது என்றால் அதை, அன்னை விரும்பியதை மட்டுமே செய்யும் ASPIRATION அல்லது COURAGE ஆக மாற்ற வேண்டும்.
நான் சொன்ன அனுபவங்களில், நான் என் மனப்பான்மையை, நடத்தையை -, TOKEN ACT , கர்மயோகி அன்னை, CUSTOMER க்கான SINCERITY – என்று பலவிதமாக மாற்றியதால் என்னால் அடுத்த நிலைக்கு செல்ல முடிந்தது. அல்லது அவர்கள் பார்வையில் பார்க்கும் போது எதுவும் பிடிபடவில்லை என்றால் நன்றியறிதல், இந்த நிலைக்கு கொண்டு வந்ததற்கான நன்றியறிதலாக வெளிப்படுத்தலாம். அன்னையை காட்டியதற்காக கர்மயோகிக்கும், கர்மயோகியை காட்டியதற்காக அன்னைக்கும் நாம் நன்றி கூறி அவர் பார்வையில் பார்த்தால், அதன் படி நாம் நடந்தால், நாம் நம் CREATIVE ELEMENT இல் அவர்களை இணைத்தவர்கள் ஆவோம்.
அப்படி இல்லையென்றால் வேறு விதமாகவும் இதை செய்யலாம். நம் செயலை HORIZONTAL, VERTICAL, HISTORIAL என்ற வகையில் பார்க்க வேண்டும்.
HORIZONTAL என்பது நமக்கு வரும் பிரச்சினைகள், தடைகள் அனைத்தும் வாய்ப்புகளே என்று எடுத்துக் கொண்டு அதற்கான திறமை, திறன், மனப்பான்மை, குணம் ஆகியவற்றை ஏற்றுக் கொள்வது. நாம் மாற தயாராக இல்லாததால், நம் COMFORT ZONE ஐ விட்டு வெளியே வராததால், நபர்கள், உறவுகள், சமூகம் என்று ஒரு புதிய விஷயத்தை செய்ய பயந்ததால், நாம் இழந்தவற்றை இப்போது நினைத்து பார்த்தால் இது புரியும்.
குறிப்பாக நாம் நினைக்கும் முன்னேற்றத்தைப் பெற தேவையான கட்டுப்பாடு DISCIPLINE நம்மிடம் இருக்கிறதா என்று தெரிய வேண்டும். குறைந்த பட்சம் நம் நோக்கம், மனப்பான்மை, வழி, கொள்கை, பண்பு ஆகியவற்றில் இருந்து நம்மை விலக்கும் விஷயங்களை பற்றிய CONSCIOUSNESS நமக்கு இருக்க வேண்டும். மனப்பான்மை என்பது நம் அபிப்ராயம், முன் முடிவுகளின் சாரம், அது சேர்த்த MENTAL IMAGE . நம் அபிப்ராயங்கள், முன் முடிவுகள், விருப்பங்கள், ஆசைகள், எதிர்பார்ப்புகள் மீதான பற்றும் அதன் நியாயப்படுத்துதலும் மனதில் அதன் கட்டமைப்பும் (justification and mental structures). அதன் மூலம் தான் நாம் நடப்பவை, நடக்க இருப்பவை அனைத்தையும் பார்க்கிறோம். நமக்கு இப்போது தேவை புதிய வாழ்க்கை என்றால் புதிய வாழ்வை தேடி போக தேவையில்லை. நம் பார்வையை மாற்றினால் போதும். அன்னையின் பார்வையில் பார்வையில் பார்த்தல் போதும். அதற்கு தேவையான பண்புகளை கடை பிடித்தால் போதும். அப்போது நம் வாழ்வு அகண்டதாகும். அதுதான் creative element ஆரம்பிக்கும் இடம்.
பரிணாமத்தில் முன்னேற அதுவே முக்கிய தேவை என்பதால் பூரண யோகத்தின் நோக்கமும் அதுவே என்பதால் அது இறைவன் இருக்கும் இடம். அதாவது படைப்பாற்றல் உள்ள இடம். அடுத்த நிலைக்கு தேவை யான ஆர்வம், நோக்கம், ஞானம், பண்பு, மனப்பான்மை பற்றிய ஒரு தெளிவுக்கு அல்லது அந்த தளத்தில் ஒரு முழுமையை அடைய வேண்டிய நிலைக்கு முந்தைய நிலை என்பதால் அது unformed intelligence உருவம் பெறாத ஞானம் என்கிறார் கர்மயோகி. அது பெரும்பாலும் பிரச்சினைகள் , முரண்பாடுகள் மூலமே வரும் என்பதால் அது அகந்தை உடையும் இடம். நம் தற்போதைய அறிவு, அனுபவம், திறன், திறமை ஆகியவை தோற்கும் இடம் என்பதால், வெற்றிக்காக நாம் அறிந்ததை விட வேறு ஒன்று உண்டா என்று நினைக்க வைக்கும் இடம் என்பதால் அது புதியதாக படைப்பதற்கு தேவையான ஞானத்திற்கான இடம். காரணம் இந்த இடத்தில, அன்னை, ஞானம், வேலை , முன்னேற்றம், ஆர்வம் என்று எதோ ஒன்றுடன் நம் சித்தம் ஒன்றும்.
அதுவே creative element க் கான இடம். இவையெல்லாம் நமக்கு ஒரு INDIVIDUALITY , PERSONALITY ஐ கொடுத்து ஒரு CREATIVITY ஐ கொடுத்து அதன் மூலம் ஒரு படைப்பாற்றல் வரும். அது நம்மை வாழ்வில் முன்னேற்றும்.
அடுத்த இரண்டு வழிகளை பற்றி அடுத்த வாரம் பார்க்கலாம்.