Share on facebook
Share on telegram
Share on whatsapp

எதை இடைவிடாது உறுதியுடன் விரும்புகிறோமோ அதை சாதிக்க முடியும்-1

ஒரு தத்துவம் விளங்கும்போது நம் அனுபவமே உதாரணமாக வேண்டும் என்பது கர்மயோகி அடிக்கடி சொல்லும் வார்த்தை. லைப் டிவைன் முழுவதுமே வாழ்க்கைத் தத்துவம் என்பதால் , அனைத்து மனிதனின் ஆர்வமும் ஒன்றாக இருக்கும்போது வாழ்க்கையில் அனைத்தும் அந்த தத்துவங்களின் அடிப்படையிலேயே நடக்கிறது என்பது உண்மை. அதனால் ஒரு தத்துவம் புரிந்தது என்று சொன்னால் அதை நம் வாழ்வில் பொருத்தி பார்ப்பது தத்துவத்தை  புரிந்து  கொண்டதற்கான அடையாளம்.

அது புரியாததற்கு காரணம் நம்  அறியாமை. நமக்கு நம் அறியாமை  ருசிப்பது போல அறிவும்  ருசித்தால்  அதன் பெயர் விழிப்பு.- awareness. அறிவும் விழிப்பும் சேரும்போது அதை ஞானம் என்று கூறலாம். அந்த ஞானம், ஒரு உறுதி , will மேல் செயல்படும்போது ஒரு செயல் வாழ்வில் உண்டாகிறது. அது தரும் பலனை பொறுத்தே நம் ஆனந்தம் இருக்கிறது.

நான்  வேலை செய்தபோது எனக்கு எவ்வளவோ விஷயம் தெரிந்து இருந்தாலும் ( கேட்டரிங் , பேக்கிங் , கட்டிட வேலைகள் , கெமிக்கல் என்று பல இருந்தாலும் கெமிக்கல்-இல் அப்போது இருந்த அறிவு மட்டுமே  எனக்கு சொந்த தொழில் ஆரம்பிக்க நம்பிக்கையைக் கொடுத்தது. அது ஒரு உறுதியை கொடுத்தது.   அந்த அறிவு  உறுதியின் மேல் செயல் பட்ட போது ஒரு கம்பெனியாக, செயல் திட்டமாக   form ஆக வாழ்வாக மாறியது.

அதனால், எந்த ஞானமும் ஒரு will, ஒரு determination , ஒரு aspiration மேல் செயல்படும் போது , ஒரு அனுபவம் உண்டாகிறது, ஒரு விளைவு உண்டாகிறது.  இது இரண்டும் ஒரு வாழ்வாக மாறுகிறது.  பல ஆண்டுகள் உழைத்து வீடு கட்ட முடியாத ஒருவர், மரணப்படுக்கையில் இருந்த போது , வீடுக் கட்டத் தேவையான தொகை தயார், நீங்கள் கட்டலாம் என்று மகன்கள் சொன்ன போது, எழுந்து உட்காந்தவர் அடுத்த இருபது ஆண்டுகளுக்கு ஆரோக்கியமாக வாழ்ந்ததைப் பற்றி கர்மயோகி  எழுதிருப்பார் .  அதாவது ஆர்வம் இருந்தால் செயல்படும் ஞானம் வரும், தெம்பு வரும், அதை energy for accomplishment என்கிறார்.  இதை ஒரே energy ஞானமாகவும், வாழ்வாகவும், ஜடமாகவும் இருக்கிறது என்று சொல்லலாம். 

அதையே வேறு விதமாக சொன்னால் இந்த உலகத்தில் படைக்கப் பட்டதெல்லாம் ஏதோ ஒரு ஞானமும் உறுதியும் சேர்ந்தது அல்லது ஒரு சித்தம் ஒரு செயலாக வெளிப்பட்டு வாழ்வின் மேல் செயல்பட்டதால் வந்த விளைவு, இதில் ஏதாவது ஒன்றின் energy குறைந்தாலும் அதாவது ஒரே energy மூன்றுமாக மாற முடியவில்லை என்றால், தகுந்த முழுமையான விளைவு வருவதில்லை.  எண்ணம், உணர்வு, உடல் ஒன்றுக்கொன்று தொடர்புடையது என்றால் ஒரே energy மூன்றையும் தூண்ட முடிந்தால் அது சரியான விளைவைத் தருகிறது.  எண்ணத்தில் energy இல்லையென்றால் உணர்வு ஏற்றுக்கொள்வதில்லை, உணர்வில் energy இல்லையென்றால் உடல் ஒத்துழைப்பதில்லை .  ஆர்வம், தெம்பு எழ ஒரு எண்ணம் வேண்டும்.  அந்த எண்ணம் பரிணாமத்திற்கு எதிரான எண்ணமாக இல்லாமல்  இருந்தால், வளர்ச்சி நிச்சயம், முன்னேற்றம் நிச்சயம். 

உதாரணமாக ஒரு சராசரி மனிதன் ஒரு எண்ணம் வந்தவுடன், அது தரும் சந்தோஷத்தை உணர்வில் தேட ஆரம்பிக்கின்றான். அதன் மூலம் அனுபவங்களை வாழ்வில் தேடுகின்றான் .  ஆனால்  சற்று உயர்ச்சித்தம் கொண்டவர்  தான் தேடும் ஆனந்தத்திற்கு தடையாக இருப்பவற்றை வாழ்வில் ஏற்க மறுக்கிறார். அதாவது இருவரும் வாழ்வில் மட்டுமே தான் அடை யவேண்டியதை பற்றி  நினைக்கிறார்கள்.  இருவர் தேடுவதும் ஒன்றே என்றாலும், வேறு வேறு திசையில் தேடுகிறார்கள்.  உண்மையில் அது வாழ்வில் ஆன்மீகமாக, உயர்ந்த சித்தமாக இல்லாமல், tangible mental formation என்று மாறி விடுவதால், reconciliation இணக்கத்தீர்வு இல்லாமல் போய்விடுகிறது. அனைத்தும் சக்தி என்பது இன்றைய விஞ்ஞானம்.  ஆன்மீகமும் அனைத்தும் ஒன்றே என்று கூறுகிறது. எந்த பாதையில் தேடினாலும் முடிவு ஒன்றே. சர்வ்ம் பிரம்மம் என்பதே அது..

அப்படியென்றால் இந்த energy, உறுதி, ஞானம் எல்லாம் வேறு எதற்காக இருக்கிறது.  மறைந்து விட்ட, மறந்து விட்ட consciousness ஸை , வெளியே கொண்டுவருவதற்கு இல்லாமல் வேறு எதற்காக இருக்க முடியும்,  தான் அடைய நினைத்த ஆனந்தத்தை அடைவதற்கே அது வெளியே வரவேண்டும்.  ஆற்றலே உறுதி. உறுதியே ஞானம். அது விழிப்பாக வாழ்வில் வெளிப்பட்டால், அது ஆனந்தமான முடிவாக இருக்கிறது. Will is consciousness applying itself to work for result that is Anandha என்கிறார்.  நம் வாழ்வில் ஆசை, இச்சை, ஆர்வம், உறுதி, என்று எதை எடுத்துக்கொண்டாலும் அதை மூன்று தலைப்புகளில் அடைத்து விடமுடியும் – unending life , unbounded knowledge , unfettered power – அதாவது முடிவற்ற வாழ்வு, அல்லது சாகா வரம், எல்லையற்ற ஞானம் . இதையே நடைமுறைக்கு ஏற்றவாறு  தோல்வியறியாத முழுமையான அறிவு. அளவில்லாத சக்தி அல்லது தடையில்லாத ஆற்றல் என்று கூறலாம். நம் அனைத்து செயல்களையும், ஆசைகளையும், எதிர்பார்ப்புகளையும் அதற்கான உறுதியையும் நம் அனைத்து will ஐயும்இந்த மூன்று தலைப்புகளுக்குள்ளும்  அடக்கலாம். 

சராசரி மனிதன்  முடிவற்ற வாழ்வு என்பதை நீண்ட நாள் வாழும் உபாயங்களிலும், எல்லையில்லா ஞானத்தை ஆராய்ச்சிகளிலும், எல்லாவற்றையும் அடக்கி ஆளும் அடிமைப்படுத்தும் சக்தியை ஆயுதங்களிலும், தொழில்நுட்பங்களிலும் தேடுகிறான்.

உயர் சித்தம் கொண்டவன்  சாகா வரத்தை மோக்ஷமாகவும்,பிரபஞ்ச அறிவை ஞானமாகவும், உடல், உணர்வு, மனதைக் கடக்கும் ஆற்றலை எல்லையில்லா சக்தியாகவும் தேடுகிறான்.

உதாரணமாகப் பார்த்தால் , ஒரு சராசரி மனிதன்  ஒருவனை அடக்கி ஆள நினைத்தால் , கோபம் , அதிகாரம், பலத்தை உபயோகித்து அதை செய்கிறான்.  அதை அவன் unfettered power என்று நினைக்கிறான்.  உண்மையில் அதன் பின் இருப்பது அவன் விரும்பும் ஏதோ ஒரு சுதந்திரம் அல்லது நிம்மதி. அது பிறரால் தடைபடுகிறது எண்ணும்போது அதை மீறும் உறுதி அப்படி செயல் பட வைக்கிறது.

அதையே உயர் சித்தம் கொண்டவர்  பிறர் நிலை பார்வை, சுமுகம் என்று கொண்டு வரநினைக்கிறார்.  இதை வேறு வகையாகப் பார்த்தால் சராசரி மனிதன்  அகந்தையை மையமாக ego center வைத்து பார்ப்பதை, உயர்ச்சித்தம் கொண்டவர்  இறை மையத்தை Divine Center மையமாக வைத்துப் பார்க்கிறான்.  அகந்தைக்கு நம் பகுதியான அறிவும் நம் அனுபவத்தால் வந்த ஆற்றல் மட்டுமே துணை நிற்கும்.  ஆனால் இறை மையத்திற்கு முழு ஞானமும் முழு ஆற்றலும் சேர்ந்து வேலை செய்யும்.  பலன் பல மடங்காக, ஆனந்தம் பல மடங்காக இருக்கும்.  காரணம் இரண்டாவதில் ஒரு பரிணாம முனேற்றத்திற்க்கான எண்ணம், வித்து இருக்கிறது.  அதனால் தான் புரியாதது புரிகிறது.  unknowable knowable ஆகிறது. 

இதன் தொடர்ச்சியை அடுத்த வாரம் பதிவேற்றுகிறேன்.

Author Info
Ramesh Kumar

Ramesh Kumar

SHARE
Share on facebook
Share on telegram
Share on whatsapp

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 5

இதுவரை சொன்னவை அனைத்தும்   “உயர்ந்தவை நிர்ணயிக்கின்றன. அவை நிறைவேற தாழ்ந்தவை உதவுகின்றன” – என்னும் லைப் டிவைனின் ஒரு  கருத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு தலைப்பில் இருந்து விலகிச் செல்லாமல் எழுத வேண்டும் என்று

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 4

இதுவரை நாம் பேசியதை Life Divine – கருத்துகளில் பொருத்தி பார்க்கும் போது – முன்னேறும் பாதையின் நன்கு  நிலைகளை.  – மனித வாழ்வு, யோக வாழ்வு, தெய்வீக வாழ்வு என்று மூன்று பகுதிகளாகப்

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை  – 3

அதற்கு பதிலாக ஒரு பண்பை எடுத்துக் கொண்டு, அதன் பார்வையில் நம் முடிவை organise செய்ய முடிந்தால், அது நம் அனைத்து  முடிவுகளுக்குக்  காரணமாக அமைந்தால், அது படைப்பாற்றல் மிக்கதாக இருக்கும்.  உதாரணமாக முன்

Read More »

More Articles

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 5

இதுவரை சொன்னவை அனைத்தும்   “உயர்ந்தவை நிர்ணயிக்கின்றன. அவை நிறைவேற தாழ்ந்தவை உதவுகின்றன” – என்னும் லைப் டிவைனின் ஒரு  கருத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு தலைப்பில் இருந்து விலகிச் செல்லாமல் எழுத வேண்டும் என்று

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 4

இதுவரை நாம் பேசியதை Life Divine – கருத்துகளில் பொருத்தி பார்க்கும் போது – முன்னேறும் பாதையின் நன்கு  நிலைகளை.  – மனித வாழ்வு, யோக வாழ்வு, தெய்வீக வாழ்வு என்று மூன்று பகுதிகளாகப்

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை  – 3

அதற்கு பதிலாக ஒரு பண்பை எடுத்துக் கொண்டு, அதன் பார்வையில் நம் முடிவை organise செய்ய முடிந்தால், அது நம் அனைத்து  முடிவுகளுக்குக்  காரணமாக அமைந்தால், அது படைப்பாற்றல் மிக்கதாக இருக்கும்.  உதாரணமாக முன்

Read More »