Human choice is the human choosing to be the Divine at once.இதை நீங்கள் அடிக்கடி கூறுவது போல் நமக்கென்று இருக்கும் உச்சபச்சத்தில் ஒவ்வொரு நேரமும் செயல்படுவது என்று புரிந்து கொள்ளளாமா sir.
சமர்ப்பணனின் இன்றைய செய்தியின் key word – Divine at once . அது தொடர்பாக ஒரு கமெண்ட் ஐ தான் நான் பதிவிட்டு இருந்தேன். நீங்கள் கேட்ட “உயர்ந்த நிலைகள்” நமக்கு தெரிந்த உயர்ந்த நிலைகள்-அதை கூட நாம் செய்வதில்லை. உயர்ந்த மனப்பான்மையை உள்ளடக்கியதாக இருந்தால் அதை நாம் போற்றுவோமே தவிர செய்வதில்லை. செய்து அனுபவத்தில் பார்ப்பதில்லை. When unknowable comes as values we exaggerate and adore it, glorify it to keep it beyond our capacity – என்கிறார் கர்மயோகி. அப்படி இல்லாமல் நாம் அறிந்த உயர்ந்த நிலைகளை கவனமாக ( concentration) செய்யும் போது, அது அன்னையின் சாய்ஸ் ஆக இருக்கும்போது , அது perfection ஐ நோக்கிய பரிணாம வளர்ச்சி என்பதால் நாம் மூலத்தை தொடுகிறோம். நான் எப்போதும் சொல்லும் உதாரணம் தான். பொதுவாக என் கை எழுத்து , என் மனைவிக்கோ , ஆபீஸ் அட்மின் க்கோ புரியாத அளவிற்கு கிறுக்கலாக இருக்கும். அதுவே கர்மயோகிக்கு எழுதும்போது அச்சடித்ததுபோல இருக்கும். இது செயல்.
தெரிந்த உயர் நிலையில் , செம்மையில் நான் எப்போதும் இருப்பதில்லை.
அப்படி நமக்கு தெரிந்த அனைத்து உயர்நிலைகளிலும் நாம் இருக்கும்போது , குறித்த பட்சம் நம்மை சுற்றி உள்ளவர்களுக்கு நாம் தெய்வம் ஆகிறோம்.
இவை எல்லாம் மன நிலைகள். ரிஷி, முனி, அதி மனங்கள் மூலம் அனைவரும் இறைவன் ஆகலாம் என்பது ஸ்ரீ அரவிந்தம். இதை நடைமுறையில் செய்ய முடியுமா என்பது கேள்வி.
முன் சொன்ன உதாரணம் ஒரு செயல். அப்படி எழுதுவதைத் தாண்டி – குறைந்த சொற்களில் சொல்லுதல், சொல் நயம், தெளிவான, எளிமையான புரிய வாய்ப்பு, நல்லெண்ணம் கொண்டுவருதல் என்று அதை கவனமாக அதிக படுத்தும்போது நாம் ஆழ் மனதிற்கு செல்கிறோம். அதன் தாக்கம் பலமாக இருக்கும். அதற்கு அடுத்த நிலை கேள்வி கேட்பவருக்கு எதுவும் சொல்லாமல் இருப்பது. சில நாள் அல்லது சில காலம் கழித்து அவருக்கு அது புரியும். இது நம் ஆழ்மனம் அவரது ஆழ்மனதை தொடுவது. அதாவது அவர் கேட்டதை நாம் சூட்சுமத்தில் தருகிறோம். அதற்கு சாதிக்கும் சக்தி இன்னும் அதிகம். நிறைவேறும் காலம் குறைவு. அதாவது பிறருக்காக காலத்தை சுருக்க நம்மால் முடிகிறது. இவை எல்லாம் நாம் இறை தன்மை என்று விட்டு விடுகிறோம். ஆனால் இதை செய்ய முடியும் என்பதறகு கர்மயோகி ஒரு உதாரணம். நான் சென்னை வெள்ளத்தால் பாதிக்கப் பட்டு அவருக்கு கடிதம் எழுதிய போது வழக்கமாக அன்னை முறைகள் பற்றி எழுதும் அவர் அன்று ஒரு திருக்குறளை எழுதி அனுப்பினார். நான் அன்று இருந்த நிலையில் எனக்கு மிகுந்த எரிச்சலை கொடுத்தது. அதன் பொருள் என்ன என்று கேட்டேன். நீயே தெரிந்து கொள்ளும் போதுதான் அதன் சக்தி வெளி வரும் என்றார். சில நாட்கள் கழித்து அது புரிந்தது. வாழ்வு மாறியது. வாழ்வு பற்றி ஒரு புது பார்வை கிடைத்தது. அதாவது அவர் எனக்கு பல பக்கங்களில் விளக்க வேண்டியதை சூட்சுமமாக கொடுத்து விட்டார்.
இதை அவர் மட்டும் தான் செய்ய முடியுமா என்றால் – அவர் அளவிற்கு அன்னையை பின்பற்றும் எவராலும் செய்ய முடியும் , மனிதருள் தெய்வம் எனும் அளவிற்கு உயர முடியும். நான் டோக்கன் ஆக்ட் பற்றி பேசும்போது என் முதலாளி ஒருவரின் conciousness ஐ தொடும் முறையை பின் பற்றி – மனித சுபாவம் – புத்தகத்தில் சொல்ல பட்டதை பின் பற்றி ஒரே வருடத்தில் அவரின் partner ஆகவும் பின் அதே போன்ற கம்பெனி ஆரம்பித்ததையும் சொல்லி இருக்கிறேன். அதுவும் நாம் இறைவன் ஆகும் முறையே. அந்த அளவிற்கு அந்த டோக்கன் ஆக்ட் ஐ அன்னைக்காகவும் , கர்மயோகிக்காகவும் பின் பற்றினேன்.
அது போல நான் ஈடு பட்டு இருக்கும் static control துறை பற்றி நான் எதுவும் முறையாக படிக்கவில்லை. ஆனால் இது பற்றி படி த்தவருக்கும் இல்லாத அறிவை பெற்று இருக்கிறேன். எல்லாம் அனுபவத்தில் கற்று கொண்டதே. என்று சொன்னாலும் இன்று வாடிக்கையாளரிடம் பேசும்போது பலர் அப்படியே உங்கள் பழைய முதலாளி போல பேசுகிறீர்கள் என்பார்கள். அதாவது அவரை நான் அன்னையாக ஏற்று கொண்டதால் அவர் ஞானம் சூட்சுமமாக எனக்கு வந்து விட்டது. ஆஞ்சநேயர் கோயில் அர்ச்சகர் ஆஞ்சநேய முகத்தை பெற்றது பற்றி கர்மயோகி ஒரு கட்டுரையில் எழுதி இருப்பார். இவை எல்லாம் மனதின் மூலம் உயரும் நிலைகள்.
இதையே சூப்பர் மைண்ட் நிலயில் செய்யும்போது நாமே அன்னையாகலாம் அவரை தாண்டியும் செல்லலாம் என்கிறார். ஒரு theoretical possibility யாக வாவது இது புரியும் என்று நினைக்கிறேன்.
எல்லாமே நம் choice இல் இருக்கிறது என்பதே நமக்கு கொடுக்கப்பட்ட சுதந்திரம்.