Share on facebook
Share on telegram
Share on whatsapp

சமர்ப்பணம் – ஒரு பார்வை – 5

ஒரு பெரிய காரியத்திற்காக சமர்ப்பணம் எப்படி செய்ய வேண்டும் என்று கர்மயோகியிடம் கேட்டபோது அவர் அவர் மெயிலில் அனுப்பியவற்றின் தொகுப்பை கீழே தருகிறேன்.

─         இடையறாத நினைவு, இடையறாத தரிசனமாகும் அளவிற்கு அழைப்பைத் தரும் சமர்ப்பணம் தேவை .

─         பூரண சமர்ப்பணத்தை இலட்சியமாகக் கொள்ளுதல்.

─         1 மணி பூரண சமர்ப்பணத்தை தினமும் தவறாது பயிலுதல்.

─         அன்னையின் சட்டங்களை தவறாது பின்பற்றுதல்

─         பெரும் செல்வம் பெறுவது இயலும் என அறிதல். அதை பெற அனைத்து முயற்சிகளையும் எடுத்தல்.

─         எந்த எதிர்பார்ப்பும் இல்லமல் எந்த நேரமும் உள்ளிருந்து குதூகலம் பொங்கி வருவது.

─         பழைய நினைவுகளை, செயல்களை கடந்த கால சமர்ப்பணம் செய்தல்  திருவுருமாற்றுதல்

─         திருவுருமாற்றம் கண்ணெதிரே செயல்படுவதைக் காண்பது

─         உலகை அறிதல், அன்னை கூறியபடி அறிதல்.

─         உள்ளத்தை அறிதல், உள்ளம் உலகை உட்கொண்டதை அறிதல்.

—  இரவும் பகலும் இதயம் நிறைந்து, நம்மையறியாமல் அது பூரணம் பெற்று, ஆழ்மனம்  முழு மனமாகி, நாம் அன்னையை அழைத்ததை நம்மைக் கடந்தது ஏற்று அதுவே சொல்லால் அழைத்து, அச்சொல்லும் அழிந்து, உள்ளே சென்றது அன்னையாக மாறி அன்னை எழுப்பும் குரல் “கேட்பது” சமர்ப்பணம் நிலையாவது.

— இலட்சியமாக இன்று கொண்டால் வரும் காலத்தில் இலட்சியம் பூரணம் பெறும்.  பூரண சமர்ப்பணம் அவதாரப் புருஷனுக்குரியது. இந்த யோகம் அவதாரப் புருஷனுக்குரியதையும் அனைவருக்கும் தீவிர முயற்சிக்கு பதிலாக க்ஷணம் தரவல்லது. ஒரு நாள் முழுவதும் பயில செய்யும் முடிவின் தீவிரம் ஒரு மணி பலிக்கும். அதைச் செய்வது அவசியம். பூரண சமர்ப்பணத்தின் புனிதம் எல்லா வகையிலும் உள்ளும் புறமும் தெரியும். பலனில் தெரிவது எளிது.

—  ஒரு மணி நேரம் பூரண சமர்ப்பணம் செய்ய ஒரு நாள் செலவாகும் எனர்ஜி தேவை.

—  மெதுவான பேச்சு, பெரும் நல்லெண்ணம் முக்கியம். எந்த சட்டமும் தவறக்கூடாது. சுமார் 10 முதல் 20 சட்டங்களை எழுதிப் பயில வேண்டும்.

—  பெரும் செல்வம் நம்பிக்கைக்குள் வருவது சிரமம். நம் சுபாவத்திற்கேற்ப நம்பிக்கையை சரி செய்து, மனம் இதமாக ஏற்கும் வரை முயல்வது அவசியம். மனம் நம்பியதை செயல்படுத்துவது சாதகருக்கு உரியது.. அதை இலட்சியத்தைப் பல பாகமாகப் பகுத்து — காலம், அளவு, அந்தஸ்து, கர்மம், ஆகியவற்றை  ஒன்றொன்றாய் நம்பிக்கைக்குள் கொண்டு வர வேண்டும். இது பறக்க முடியும் என நம்புவது போலிருக்கும். முதலில் பறந்தவர் மனநிலை எழும்.

— சமர்ப்பணமான செயலால் தவறு எழாது. எச்செயல் தவறுகிறதோ அது சமர்ப்பணமாகாத செயல்.

உலகம் இறைவனால் இயக்கப்படுவதை நாம் காண்பதில்லை. வீட்டிலுள்ள சிறுவர்கட்கு பெரிய குடும்ப விஷயங்களோ, ஊர் அரசியலோ தெரியாதது போல் நமக்கு ஆண்டவன் செயல் தெரிவதில்லை. மனத்தைக் கடந்தால் முதல் நிலை அறிவு வரும். உணர்ச்சியைக் கடந்தால் அடுத்த நிலை தெரியும். உடல் உணர்ச்சியைக் கடந்தால் அனைத்தும் தெரியும் என்று அன்னை கூறுகிறார்.

அதாவது அகந்தையின் பரிமாணங்களை விட்டு – பரிணாமத்தில் வளரவேண்டும் என்பதே சமர்பணத்தின் மூல மாக இருப்பதால் , அதற்கு அன்னை அருள் கேளாமல் தேடி  என்பதால் , அதில் நம் கவனத்தை வைப்பது -அன்னை மேல் இடையறாத நினைவிற்கு சமம். என்னை பொறுத்தவரை அதுவே அன்னைக்காக செய்வது. அதுவே சமர்ப்பணம்.  அந்த கவனத்தை விழிப்புணர்வை அடிப்படியாக கொண்ட சமர்ப்பண  முறையை ” விழிப்பான சமர்ப்பணம்” என்று எழுதினேன். விருப்பம் உள்ளவர்கள் அதை டவுன்  லோட் செய்து படிக்கலாம் . லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பகவானின் யோகம் முழுதும் சமர்ப்பணம் , சரணாகதி ஆகியவற்றை மட்டுமே – இறைவனின் திருவுள்ளம் நிறைவேறுவது மட்டுமே – அடிப்படையாக கொண்டதால் இந்த தலைப்பை  பற்றி பேச முடிவே இல்லை. அதனால் இன்னொரு முறை இன்னொரு பார்வையில் சந்திப்போம்.

இதற்கான விளக்கம் மேலும் தேவை என்றால் நாம் செய்து பார்த்து, அனுபவித்து, உணர்ந்து தான்  புரிந்து கொள்ள வேண்டும். இந்த யோகத்திற்கு நாமே குரு என்பதால் நமக்கான சமர்பணத்தின் முறை எது என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும். படிப்படியாக உயர்த்த வேண்டும். அதோடு கர்மயோகி இது பற்றி என்னவெல்லாம் சொல்லியிருக்கிறார் என்று தலைப்பு வாரியாக குறிப்பு எடுத்து எழுதி படித்தாலும் இதை பற்றி அதிகமாக தெரிந்து கொள்ள முடியும்.

“நீங்கள் விரைவாகக் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கும் போது, மற்றவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்.

நீங்கள் ஆழமாக கற்றுக்கொள்ள வேண்டியிருக்கும் போது, அனுபவத்திலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்.”

Author Info
Ramesh Kumar

Ramesh Kumar

SHARE
Share on facebook
Share on telegram
Share on whatsapp

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 5

இதுவரை சொன்னவை அனைத்தும்   “உயர்ந்தவை நிர்ணயிக்கின்றன. அவை நிறைவேற தாழ்ந்தவை உதவுகின்றன” – என்னும் லைப் டிவைனின் ஒரு  கருத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு தலைப்பில் இருந்து விலகிச் செல்லாமல் எழுத வேண்டும் என்று

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 4

இதுவரை நாம் பேசியதை Life Divine – கருத்துகளில் பொருத்தி பார்க்கும் போது – முன்னேறும் பாதையின் நன்கு  நிலைகளை.  – மனித வாழ்வு, யோக வாழ்வு, தெய்வீக வாழ்வு என்று மூன்று பகுதிகளாகப்

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை  – 3

அதற்கு பதிலாக ஒரு பண்பை எடுத்துக் கொண்டு, அதன் பார்வையில் நம் முடிவை organise செய்ய முடிந்தால், அது நம் அனைத்து  முடிவுகளுக்குக்  காரணமாக அமைந்தால், அது படைப்பாற்றல் மிக்கதாக இருக்கும்.  உதாரணமாக முன்

Read More »

More Articles

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 5

இதுவரை சொன்னவை அனைத்தும்   “உயர்ந்தவை நிர்ணயிக்கின்றன. அவை நிறைவேற தாழ்ந்தவை உதவுகின்றன” – என்னும் லைப் டிவைனின் ஒரு  கருத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு தலைப்பில் இருந்து விலகிச் செல்லாமல் எழுத வேண்டும் என்று

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 4

இதுவரை நாம் பேசியதை Life Divine – கருத்துகளில் பொருத்தி பார்க்கும் போது – முன்னேறும் பாதையின் நன்கு  நிலைகளை.  – மனித வாழ்வு, யோக வாழ்வு, தெய்வீக வாழ்வு என்று மூன்று பகுதிகளாகப்

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை  – 3

அதற்கு பதிலாக ஒரு பண்பை எடுத்துக் கொண்டு, அதன் பார்வையில் நம் முடிவை organise செய்ய முடிந்தால், அது நம் அனைத்து  முடிவுகளுக்குக்  காரணமாக அமைந்தால், அது படைப்பாற்றல் மிக்கதாக இருக்கும்.  உதாரணமாக முன்

Read More »