பிரச்சினையில்லாத தினமில்லை. அதைத் தீர்க்க வேண்டுமானால் பிரச்சினை ஏற்பட்ட அதே நிலையில் இருந்து அதே பார்வையில் சிந்திப்பதை விட்டு அதன் பின்னணியில் அது வந்ததற்கான சக்தியைப் கண்டுக்கொள்ள முடிந்தால் அதற்கு எதிரான சக்தியைப் பயன் படுத்த முடிந்தால் வாழ்க்கை நல்ல மறு மொழியைக் கொடுக்கும்.
பிரச்சினை எப்படி வந்தது என்று கேட்டால் – நாம் தான் அதற்குக் காரணம் என்று சொல்லாமல் .தானாக வந்தது, எதிர்பாராமல் வந்தது என்பதை வெவ்வேறு வார்த்தைகளைப் போட்டுச் சொல்லுவோம். அதைக் கவனித்துப் பார்த்தால் எப்படி வந்தது என்று தெரியவில்லை என்பதைத்தான் அப்படி மறைமுகமாகச் சொல்கிறோம் என்று புரியும் தானாக வருவது என்பது வாழ்க்கை. நாம் எதிர்பார்க்காவிட்டாலும் வாழ்க்கை அதுபோல் செயல்படுவது ஒரு நியதிக்கு உட்பட்டதேயாகும். அந்த நியதிகள் பலவகையின. இவற்றைப் புரிந்துகொண்டால், இன்று நமக்குள்ள பிரச்சினைகளை, தீர்க்கச் சொல்ல முடியும். வாழ்க்கையும்அதற்கு நல்ல மறுமொழி அளிக்கும்.
ஒரு பிரச்சினை தீர தேவை- செயல், அந்தச் செயலை நிறைவேற்றும் ஆர்வம், அதற்குரிய அறிவு. அறிவும், ஆர்வமும், செயலும் இருந்தால் பிரச்சினைத் தீரும் . அதில் ஏதேனும் ஒன்றில் குறையிருந்தால், கூட பிரச்சினை தீராது.
நமக்கோ பிறருக்கோ ஏற்கனவே வந்த பிரச்சினைகளை கவனித்தால் – அதிலுள்ள திறமை குறைவு, அறிவுகுறைவு, தகுதி குறைவு தெரியும். அவற்றை ஆராய்ந்தால் நாம் பெற வேண்டிய மனப்பான்மை, அறிவு, ஞானம் புரியும். அப்படிப் பார்க்க வேண்டிய சில: அறிவில் உள்ள குறை. உணர்வில் உள்ள குறை. செயலில் உள்ள குறை. உடலின் திறனில் குறை , அதனால் வரும் உடலின் எதிர்ப்பு. முன் செய்த தவறின் எதிரொலி. நம் செயல்களை ஒட்டிய பிறர் செயல்களின் தொடர்ப்பு. வேண்டுமென்றே செய்ததின் விளைவு. தெரிந்தே செய்த தவறின் விளைவு. – ஆகியவை நம்மை பற்றிய நம் வாழ்வைப்பற்றிய புரிதலை தரும்.
நமக்கோ பிறருக்கோ ஏற்கனவே வந்த பிரச்சினைகளை கவனித்தால் – அதிலுள்ள திறமை குறைவு, அறிவுக் குறைவு, தகுதிக் குறைவு தெரியும். அவற்றை ஆராய்ந்தால் நாம் பெற வேண்டிய மனப்பான்மை, அறிவு, ஞானம் புரியும். அப்படிப் பார்க்க வேண்டிய சில: அறிவில் உள்ள குறை. உணர்வில் உள்ள குறை. செயலில் உள்ள குறை. உடலின் திறனில் குறை , அதனால் வரும் உடலின் எதிர்ப்பு. முன் செய்த தவறின் எதிரொலி. நம் செயல்களை ஒட்டிய பிறர் செயல்களின் தொடர்ப்பு. வேண்டுமென்றே செய்ததின் விளைவு. தெரிந்தே செய்த தவறின் விளைவு. – ஆகியவை நம்மை பற்றிய நம் வாழ்வைப்பற்றிய புரிதலை தரும்.
நமக்கு வரும் பிரச்சினைகளை வகை படுத்தினால் அவை அனைத்தும் பெரும்பாலும் நன்கு வகைகளில் அடங்குவதைக் காணலாம்.
நம்பிக்கையின்மையால் வரும் பிரச்சினைகள்:
என்னால் முடியாது. என் விதி இவ்வளவுதான். அன்னைக்கும் ஒரு எல்லை உண்டு அல்லவா? , என் qualification கு இதுதான், என் அறிவுக்கு, என் தகுதிக்கு இவ்வளவுதான். இந்த வயதில், இவ்வளவு நாள் கழித்து செய்வதால் என்ன பயன் போன்ற அவ நம்பிக்கைகள் etc.,
முன்னேற்றத்திற்கு முயலாதால் வரும் பிரச்சினைகள்::
திறமை, திறன், செயல் திறன், நேர்த்தி .skill , capacity , ability , perfection ஆகியவற்றிக்கு முயலாமை etc .,
அன்பை தர முடியாததால் வரும் பிரச்சினைகள்:
பிறர்நிலை பார்வை, சமநிலை, எதிர்வினை ஆற்றாதது, ஒப்புமை – other man point , equality, non -reaction , correspondence etc.,
உடல் நலம் பேணாததால் வரும் பிரச்சினைகள் :
நாக்கை கட்டுப்படுத்த முடியாதது, ருசிக்காக அளவில்லாமல் சாப்பிடுவது, வேளை இல்லாமல் சாப்பிடுவது, உடலுக்கு கெடுதி என்று தெரிந்தும் அதை செய்வது, உடற்பயிற்சி இல்லாதது etc.,
இதெல்லாம் நமக்கு நன்றாகத் தெரியும். அதற்கான தீர்வும் தெரியும். ஆனால் அதை நாம் அதைச் செய்வதில்லை. காரணம் நமக்கு பிரச்சினை பிடிக்கிறது. காரணம் அது நம்மை engaged ஆக வைத்திருக்கிறது. அதற்கு நாம் செய்யும் முயற்சிகள் ஒரு sense of achievement தருகிறது. ஒரு அறியாமை வேறு ஒரு அறியாமையை கொண்டு வரும்போது அது ஒரு புது பிரச்சினையைக் கொண்டு வருவது நமக்கு ஏதோ வாழ்க்கை வேகமாகபோவது போல- அர்த்தமற்று இருந்தாலும்- பிடிக்கிறது. Problems are engaging. Peace is insipid – என்று அதை கூறுகிறார். அறியாமையை நீ விரும்பி அழைக்கும்போது அறிவு எப்படி உள்ளே வரும் பிரச்சினை இல்லாத வாழ்வு எப்படி வரும் என்று கேட்கிறார்.
வாழ்வு பரிணாமத்தில் முன்னேற தன் ஆழத்திலிருந்து குரல் எழுப்பும். அது பிரச்சினையாகத் தெரிகிறது. அதைப் புரிந்துக் கொள்ள நாம் அதன் ஆழத்தை அறியவேண்டும். வாழ்வின் ஆழத்தைக் காணமுடியாதவர்கள் தங்கள் மனத்தின் ஆழத்தைக் அதிலுள்ள பொய்மையைக் காணலாம். மனத்தின் ஆழத்தில் இருந்து செய்யும் சமர்ப்பணம் வாழ்வின் ஆழத்திலிருந்து அதன் மறுமொழியை எழுப்பும். அது பிரச்சினை அனைத்தையும் தீர்க்கும்.