Share on facebook
Share on telegram
Share on whatsapp

TOKEN ACT TO THY WILL – 2

TOKEN ACT TO THY WILL – என்னும்போது இப்போதைக்கு அதன் சாரமாக- நம் வாழ்வு எதை நோக்கிச் செல்கிறது? நான் செய்தேன், நான் செய்தேன் என்று சொன்ன இடங்களையெல்லாம் இன்று நினைத்துப் பார்த்தால் இதில் எதுவுமே நான் செய்யவில்லை என்னும் நிலை இருப்பது ஏன்?, வாழ்க்கை சில விஷயங்களை, சில சூழல்களை, சில CHARACTER, ATTITUDE உள்ள மனிதர்களை மட்டுமே பெரும்பாலும் நம்மிடையே கொண்டு வருவது ஏன்? இவர்கள் எல்லாம் நமக்கு தடையாகவே இருப்பது ஏன்?  என்பது போன்றவை புரிந்தால் LIFE DIVINE சொல்லும் வாழ்வில் ஆனந்தம் என்னும் நிலை ஒவ்வொரு கணமும் இருக்கும்.

நம் வாழ்வில், நம் மூலம், நம் ஆன்மா மூலம், இறைவன் அடைய விரும்பிய ஆனந்தம் அது. இதையே இறைவன் திருவுள்ளம் THY WILL என்கிறோம். அது புரிந்துவிட்டால் வாழ்வு பிரிச்சினைகளே இல்லாத நீரோட்டமாக ஓடும். அதற்கு கர்மயோகி தரும் உதாரணம்- ஆறு மேல் நிலையில் பார்க்கும் போது பிரிந்து இரு கரைகளுக்கு நடுவில் ஓடுவது போல தோன்றினாலும் நடுவில் அல்லது ஏதோ ஒரு நிலையில் இரு கரைகளும் இணைந்தே இருக்கிறது. அது கடலை நோக்கி மட்டுமே  சென்று கொண்டு அல்லது இணைத்துக் கொண்டு இருக்கிறது. மேலே ஓடும் ஆறு தன் இஷ்டத்திற்கு ஓடுவது போல தோன்றினாலும் அடித்தளம் போட்ட வழியில் மட்டுமே, அதன் முடிவை நோக்கி மட்டுமே செல்வதை சிந்தித்தால் புரிந்துக்  கொள்ள முடியும்.

அது போல நம் வாழ்வும், இறைவன் திருவுள்ளம், விதி, கர்மா என்று எப்படிக் கூறினாலும் ஏதோ ஒன்று சொல்லும் ஒரு வழியில் தான் சென்றுக் கொண்டு இருக்கிறது. அதைப் புரிந்துக் கொண்டால் வாழ்வில்  பிரச்சினைகள் இல்லாமல் ஆனந்தமாக எடுத்துச் செல்ல முடியும் என்பது இப்போதைக்கு இந்த தலைப்பின் சாரமாக எடுத்துக் கொள்ளலாம்.

முரண்பாடே உடன்பாடு என்றும், அதன் வெவ்வேறு விளக்கங்களும் இதை விளக்க வந்தவையே.  ஆனால் அவை எல்லாம் பொதுத் தத்துவமாக மாறிவிட்டதால் ஏதோ நமக்கு தொடர்பு இல்லாதது போல இருக்கும் அல்லது பக்தியின் அடிப்படையில்  அர்த்தமில்லாமல், நமக்கு தேவையில்லாத சூழல், மனிதர்கள், ஆகியவற்றை சுமுகம் என்ற பெயரில் ஏற்றுக்கொண்டு எந்த முன்னேற்றமும் பெரிதாக இல்லாமல், சராசரியாக அனைவரும் சாதாரணமாக பெறுவதை அன்னை தந்தது என்று நம்மை நாமே  திருப்திப்படுத்துக் கொள்வோம்.

அதற்கு முதல் தேவை நம்மைப் பற்றிய விழிப்புணர்வு AWARENESS. இது பற்றி வேறு பார்வையில் ஓரிரு கட்டுரைகளிளும், வெற்றிக்கு இருபது வழிகள் என்பதிலும் விளக்கி எழுதியிருக்கிறேன். ஒவ்வொன்றும் ஒவ்வொரு பார்வையில், கோணத்தில், (PERSPECTIVE AND ANGLE-லில்) தரப்பட்டது.  இங்கு விழிப்புணர்வு என்பது நாம் அகந்தையில்லை என்று சொல்லும் அனைத்தும், மனசாட்சி என்று சொல்வது, பாவம் புண்ணியம் என்று செய்வது , உயர்ந்த பண்புகள் என்று நாம் நினைப்பது அனைத்தும் – அகந்தை ஆன்மாவின் பண்பை எடுத்து, தான் செய்து, நம்மை ஏமாற்றிக் கொண்டு இருக்கிறது என்பதை புரிந்துக் கொள்வது. சட்டங்களின் அடிப்படை புரியாமல், கீழ்ப்படிதல், பரோபகாரம், பக்தி, காணிக்கை, நன்றியறிதல் அனைத்தையும், அத்தகைய உயர்ந்த பண்புகளை அகந்தை அடக்கம் என்னும் வேடமிட்டு செய்வதால் தான் அதற்கு கூறப்பட்ட பலன்கள் எதுவும் பெரிதாக கிடைக்கவில்லை என்பதை புரிந்துக்கொள்வது.

உதாரணமாக அன்னைக்கு பெரிய சேவை செய்பவர் என்று சொல்லிக் கொள்பவர் எல்லாம் எப்படி அகந்தையோடு நடந்துக் கொள்கிறார்கள். தான் சொல்வதே சரியான பொருள், தான் சொல்வது தான் வழி என்று கூறுபவர்கள், அனைத்திற்கும் பிடிவாதம் பிடித்து சாதித்து கொள்பவர்கள்,  அவர்கள் சொல்வதை, அறிவுரைகளை அவர்களே கடைபிடிப்பதில்லை என்பதை நன்றாக கவனித்துப்  பார்த்தால் தெரியும்.

அன்னை, முன்னேற்றத்தை பற்றி நிறைய சொல்லி இருந்தாலும் நம்மளவில் சேவை என்பது – ஒன்று, நம் செயல் நம் சித்தததை உயர்த்துவதாக (CONSCIOUSNESS) இருக்க வேண்டும். அல்லது நம் வளத்தை (PROSPERITY)-ஐ உயர்த்துவதாக இருக்க வேண்டும்.  காரணம் இந்த இரண்டு மட்டும் தான் அன்னைக்கு சேவை. ஒன்று பரிணாமத்தில் வளர்ச்சி என்னும் தத்துவத்தை அடக்கியது. இன்னொன்று இந்தியா உலகத்தின் தலைவனாக வேண்டும் என்பதை உள்ளடக்கியது. இது இரண்டை தவிர வேறு எதுவும் சேவையில்லை. மற்றவை அனைத்தும், இதை பெற்றுத் தருகிறேன் என்று சொல்லும் இடைத்தரகர்களுக்கு சேவை செய்வதாகவே அமையும். நம் உழைப்பில் அவர்கள் முன்னுக்கு வந்து கொண்டு, ராஜ வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டு இருப்பார்கள். நம் செயல்கள் நம் முன்னேற்றத்திற்கு உதவவில்லையென்றால், அது அடுத்தவரை முன்னேற்றத்தான் பயன்படும் என்னும் அடிப்படையை புரிந்துக் கொள்ள வேண்டும்.

அடுத்தது கட்டுப்பாடு (DISCIPLINE) பற்றிய விழிப்புணவு. கட்டுப்பாடு என்றவுடன் நமக்கெல்லாம் தெரிவது இதை செய்யாதே, அதை செய்யாதே, அங்கே போகாதே, இங்கே போகாதே என்று நம்மை தம்மிடையே தக்க வைத்துக் கொள்ள சொல்லப்பட்ட இது போன்ற  அர்த்தமற்றவைகளை  – அன்னையோ, கர்மயோகியோ எங்கே சொல்லி இருக்கிறார்கள், என்ன CONTEXT இல் சொல்லியிருக்கிறார்கள் என்று கேட்டால் அதற்கான ஆதாரத்தைக் கூட தரமுடியாமல், கேள்வி கேட்பவரை NEGATIVE FORCE ஆக கட்டம் கட்டுவதே அதிகம்.

குறிப்பாக “பெரியோர்கள்” சொல்லும் கட்டுப்பாடுகள் அவர்கள் குடும்பத்திற்கு இல்லை என்பதும் எந்த “பெரிய” சேவை அன்பரும் தங்கள் குடும்பத்தாரை “சேவை”  செய்ய ஈடுபடுத்தவில்லை என்பதையும் கவனித்துப் பார்த்தால் இது புரியும்.  அல்லது லாபகரமான இடத்தில், அதிகம் வருமானம் சம்பளத்துடன் கூடிய வேலையாக அது இருக்கும். அது தெரியாமல் நாம் சேவை என்று நம்பிக் கொண்டு இருப்போம்.

ஆனால் discipline, Discipline, DISCIPLINE என்று மூன்று வகையாக கர்மயோகி கூறியதை ஏற்கனவே சில கட்டுரைகளில் எழுதியிருக்கிறேன். இங்கு disciplineக்கு வேறு ஒரு பொருளாக, TOKEN ACTக்கு தயாராவதற்கு அவர் தருவது, அகந்தையில் இருந்து வெளியே வருவதற்கு வழி. ஒன்று – நான் மாறத் தயாராக இருக்கிறேன் என்பது, அதற்கு தேவையானதை கற்றுக் கொள்ள தயாராக இருக்கிறேன் என்பது, கற்றுக் கொண்டதை ஒரு இழையானாலும் செயல்படுத்தி பார்ப்பது என்று இருப்பது. இது ஆன்மாவின் தத்துவத்தை அறிவு, உணர்வு, உடல் அனைத்திலும்  ஏற்றுக்கொண்டு, அதை ஒரே நேர்கோட்டில் கொண்டு வரும் INTEGRAL BEING க்குகான  முதல் நிலை என்று எடுத்துக் கொள்ளலாம்.  இதுவே பரிணாமத்தில் INDIVIDUALITY யாகவும், பின்னர் SPIRITUAL INDIVIDUAL ஆகவும் மாறும்.

இவை அனைத்திலும் நாம் புரிந்துக் கொள்ள வேண்டியது அன்னை, பக்தர்களுக்கு தந்த சத்தியம். “என்னை வழிபடுவது மட்டுமே போதும் என்று இருப்பவர்களை நான் விரும்புவதேயில்லை. எனக்கு தேவை, என் அவதார நோக்கம் திருவுருமாற்றம். அதை செய்பவர்கள் என் உதவியை பற்றி கவலைப்படத் தேவையில்லை. அது உன்னைத் தேடி வரும் என்கிறார். சேவை அன்பர்கள் பலர் மிக சின்சியராக சேவை செய்தும் கூட அவர்களை விட பல அன்பர்கள், பல மடங்கு முன்னேற்றம், வளம், ஆனந்தம் பெறுவதை கவனித்தால் இது புரியும். அன்னை விரும்புவது எது என்பது புரியும்.

இவற்றைஅடுத்து வரும் வாரங்களில் முடிந்தவரை விளக்குகிறேன். அது இந்த கட்டுரைக்கு அன்பர்கள் தரும் வரவேற்பைப் பொறுத்தது. காரணம் – ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒவ்வொரு கட்டுரையில் வேறு வேறு பொருள்களை  (CONTEXT) தருமாறு எழுதுகிறார். PROSPERITY என்ற பார்வையில் பார்த்தால் ஒரு பொருளாகவும், THY WILL என்னும் பார்வையில் பார்த்தால் வேறு பொருளாகவும் வரும் போது எதை சொல்வது, எதை விடுவது என்று தெரியவில்லை. உதாரணமாக DISCIPLINE பற்றி வெவ்வேறு CONTEXTகளில் அவர் சொல்வதை தொகுத்தால் இரண்டு அல்லது மூன்று மணி நேர சொற்பொழிவு தர முடியும் என்னும் அளவில் இருக்கிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக இந்த கட்டுரை முடியும் வரை கவனத்தில் கொள்ள வேண்டியதை கீழே தந்துள்ளேன்.

இது நமக்கான இறைவனின் திருவுள்ளம் THY WILL என்பதை ஒரு சிறு செயல் TOKEN ACT இல் ஆரம்பித்துக் கண்டு பிடிப்பது. அது நம்மை படைப்பாற்றல் கொண்டவராக, நாம் விரும்பும் ஆனந்தத்தை இறைவன் விரும்பும் ஆனந்தத்துடன் இணைத்து எப்படி பெறுவது என்பதை  தெரிந்துக் கொள்வது. அது, ஒவ்வொன்றையும்  ஆரம்பிக்கும் இடத்தில் இருந்து, அன்னை SYMBOLலில் இருக்கும் பன்னிரண்டு படைப்பாற்றல் கொண்ட பண்புகளை அடைந்து அந்த நிலையில் நாம் பெறுவது. ஆனால் அந்த நிலை அவ்வளவு எளிதானது அல்ல. அதற்கு முன் பத்து அல்லது இருபது நிலைகள் இருப்பதாக கூறுகிறார் கர்மயோகி.

நாமுள்ள நிலையில் நம் சுபாவம்,  திறமை, குணத்தை ஒட்டி ஆரம்பிப்பது முதல் நிலை. அன்னையாகவே மாறுவது இறுதி நிலை. நாம் அன்னை போல யோகம் செய்ய வரவில்லை. நமக்கு அன்னை செய்ததற்கு நன்றியறிதலோடு எந்த நிலையில் நிற்கலாம், துன்பமில்லாத, இன்பமயமான வாழ்வுக்கு எந்த நிலையில் நிற்கலாம் என்பதை நாம் முடிவு செய்வது பொதுபுத்தி. அது பற்றியும் ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். விரும்புவோர் படிக்கலாம்.

நான் நிறுத்துவது படைப்பாற்றல் என்று இருக்கும் ஒரு புள்ளியில், அதாவது நமக்கு படைப்பாற்றல் வரும் இடம் எதுவோ அது வரை நாம் செல்ல வேண்டும் அதற்கு  மேல் தேவை இல்லை  – தேவையானால் அன்னை நம்மை தன் சேவைக்கு எடுத்து கொள்ளட்டும் என்பது என் முடிவு. அன்னையாக மாற வேண்டும்,. அன்னையைத் தாண்டி செல்ல வேண்டும் என்று கர்மயோகி எழுதுவது போலவும் முயலலாம். அல்லது நான் தாண்டி விட்டேன், நானே அன்னையின், கர்மயோகியின் அடுத்த  அவதாரம்,வாரிசு என்று சொல்லிக்கொள்பவர்களை, யாரோ எழுதியதை தன் பெயரில் வெளியிட்டு அதன் மூலம் ஆன்மிகத்தில் தான் வளர்ந்து விட்டதாக காட்டுபவர்களை “MOTIVATION” ஆக எடுத்துக் கொண்டும் செய்யலாம்.

இந்த  படைப்பாற்றல் என்னும் புள்ளிக்குச் செல்ல தேவை – INTUITION, INSIGHT, உள்ளுணர்வு, உட்பார்வை – ரிஷி, முனி என்று சொல்லப்படும் மனதின் நிலைகள். அதை பழக்கம், பயிற்சியின் மூலம் பெற முடியும் அது மனிதனுக்கு “GENIUS” என்னும் நிலை என்கிறார். அந்த நிலையை அடைவது முதல் படி.

அடுத்தது, அதன் பின் உள்ள LIFE DIVINE கூறும் “ஆன்மீக தத்துவம்”. நான் இது வரை எழுதியது எல்லாம் புதிது அல்ல. யாருக்கும் தெரியாததும் அல்ல. ஆனால் ஏன் செய்யவில்லை. ஏன் செய்ய முடியவில்லை. படிக்கும் போதும் சொற்பொழிவுகளை கேட்கும் போதும், சக்தி ஏறி உடனே செய்ய வேண்டும் என்று தோன்றுவது அடுத்த ஒரு மணி நேரத்தில், அந்த சக்தி, அது தந்த ஊக்கம் எங்கே செல்கிறது. அது புரிய வேண்டுமென்றால் இறைவனின் படைப்பு தத்துவம் – தன்னை அறியாமையில் புகுத்தி அஞ்ஞானத்தின் உருவமாக படைப்பை மாற்றி அதிலிருந்து வெளியே வந்து அறிவை, ஞானத்தை பெறுவதே ஆனந்தம் என்னும் அடிப்படை. அதனால் நம் அனைத்து பழக்கங்களும் வழக்கங்களும் நம்மை அடக்கி ஆண்டு, நாம் அறியாமல் கூட அல்லது முன் சொன்னது போல நம் நல்ல பண்புகளை அகந்தை எடுத்துக் கொண்டு செய்வதை அறியாமல் இருப்பது வரை அனைத்தும் SUBCONSCIENT என்னும் நிலையில் இருப்பது. அதுவே நமக்கு புரியும் அளவில் ஒளியும், இருளும் சேரும் இடம். இருள் அறியாமை மூலம் செயல்படும் போது, அறிவால் அங்கு CONSCIOUSNESS சித்தத்தை நிறுத்தி வைப்பது என்பது தான் இறைவனின் திருவுள்ளத்தின் முதல் படி. பரிணாம வளர்ச்சியில்  முதல் அடி எடுத்து வைப்பது. LIGHTING THE SUBCONSCIENT INHERITANCE.

உதாரணமாக வாயை  திறந்தால் பொய் சொல்லாமல் இருக்க முடியாதவர்கள் இருக்கிறார்கள், எல்லாம் இருந்தும் எப்போதும்  எதிர்மறையாக சலிப்பாக பேசுபவர்கள் இருக்கிறார்கள், அனைத்தையும் குறை கூறி கொண்டு இருப்பவர்கள் இருக்கிறார்கள் இருக்கிறார்கள், முரண்பாடு இல்லாமல் பழக முடியாதவர்கள் என்று இருப்பவர்கள்   எல்லாம் அதை வேண்டும் என்றே செய்வதில்லை. அது அவர்கள் சுபாவமாக , பழக்கங்களாக ஆழத்தில் வேரூன்றி இருக்கின்றன. அதுவே இறைவன் இறுதியாக அறியாமையில் மூழ்கிய இடம் . தன்னை  மறந்த இடம். அங்கே நாம் ஏற்படுத்தும் ஒளி தான் அல்லது நாம் நிறுவும் சித்தத்தின் ஒளிதான் நம்மை மாற்றும்.

உதாரணமாக நாம் பொறாமை படுபவர்களாக இருக்கிறோம் என்று வைத்து கொள்ளவோம். பொதுவாக அதனால் வரும் தடைகள் நமக்கு தெரிவதில்லை. ஆனால் என்றாவது ஒரு நாள் அது தவறு என்று புரியும் போது – உடனே நல்லெண்ணத்தை அந்த இடத்தில் வைக்கும் போது – நாம் பரிணாமத்திற்கான ஒரு சித்தத்தை (Consciousness ) அங்கே வைக்கிறோம். அது ஒளியுடன் நம் Subconscient ஐ இணைப்பது.  அதுவே மனமாற்றம் என்பதற்கான முதல் படி. என்னை பொறுத்தவரை அது சாதிக்காதது இல்லை. சில ஒரே நாளில் நடந்து இருக்கிறது , சில பல மாதங்களில் நடந்து இருக்கிறது , ஓரிரண்டு பல வருடங்கள் கழித்து நடந்து இருக்கிறது. எதை விதைக்க வேண்டும் , எந்த மாற்றத்தை கொண்டு  வரவேண்டும் என்று புரிய எடுத்த காலம் தான் அவையே தவிர  – பரிணமத்திற்கான மாற்றத்தை கொண்டு வந்த உடனேயே அந்த  காரியம் வெற்றிகரமாக நடந்து இருக்கிறது. அப்படி என்றால் அதுவே இந்த விஷயத்தில் இறைவன் அடைய  விரும்பிய ஆனந்தம்  இதுவே என்று புரிகிறது. அதுவே Thy Will.

அதுவரை பிற பொருட்களை வாங்கி காண்ட்ராக்ட் ஆக  செய்த நான்- இத்தகைய  மனமாற்றத்தை கொண்டு வந்த போது என் நெடுநாளைய கனவான – own brand , own product – அமைந்தது. கர்மயோகி சொன்ன ஒரு entrepreneur காண இலக்கணத்தோடு அது வந்தது. இதன் முழு பின்னணியை முன்பே எழுதி இருக்கிறேன்.

அதாவது நான் அன்னையின் சிம்பலில்  உள்ள  ஒரு விஷயத்தில் முழுதும் தொட்ட  நிலையே  அந்த படைப்பாற்றலை வளர்த்து கொள்ளும் நிலை.- இதற்கு அடிப்படை ஒரு படைப்பாற்றலை உருவாக்க கூடிய , சக்தி , அம்சம் கொண்டவனாக இருக்க தேவையானது – நாம் செய்யும் வேலையில் நம் கவனம், உணர்வு, அறிவு, உழைப்பு, செயல் அனைத்தும் அதன் உட்சபட்சத்தில், அதற்கான, குணம், திறமை, மனநிலை , பண்புகள் , நேர்த்தி, சிறப்பு ஆகியவற்றுடன் இருப்பது , மற்றும் அதற்கான விழிப்புணர்வு.

அது எப்போது இருக்கும் என்றால் அந்த வேலை, வாழ்வின் சட்டங்கள், அது நமக்கு பலிக்கும் விதங்கள், நிலைகள் , அதன் PROCESS அது பூர்த்தி அடையும் விதம், நமக்கு புரிய வேண்டும். அதன் மூலம் வாழ்வு செயல்படும் முறை, அதில் சூட்சுமமான விஷயங்கள் , பரிணாமத்திற்கான பண்புகள் ஆகியவற்றின் தாக்கம்   போன்றவை அதில் எந்த பங்கை அளிக்கிறது என்பது புரியும். அப்போதுதான் நம் வாழ்வு நம் கட்டுப்பாட்டி நம் ஆன்மா விரும்பும் வழியில் அதற்கான ஆனந்தத்தோடு வரும்.  

Author Info
Ramesh Kumar

Ramesh Kumar

SHARE
Share on facebook
Share on telegram
Share on whatsapp

TOKEN ACT TO THY WILL – 5

இப்போது முதல் TOKEN ACT ஐ  எடுத்துக் கொள்ள அடிப்படையான மனப்பான்மைகளை விளக்க நினைக்கிறேன். இது SPIRITUAL OPULENCE இல் உள்ள PREPARATION TO TOKEN ACT மற்றும் அது தொடர்பான கட்டுரைகள், மற்றும்

Read More »

TOKEN ACT TO THY WILL – 3

கர்மயோகி அவர்கள்  ஒரு  “Daily Message “-இல் Seek life for expressing the Spirit. Do not seek Spirit to enrich our life. என்று கூறி இருப்பார். அதுவே நம்

Read More »

More Articles

TOKEN ACT TO THY WILL – 5

இப்போது முதல் TOKEN ACT ஐ  எடுத்துக் கொள்ள அடிப்படையான மனப்பான்மைகளை விளக்க நினைக்கிறேன். இது SPIRITUAL OPULENCE இல் உள்ள PREPARATION TO TOKEN ACT மற்றும் அது தொடர்பான கட்டுரைகள், மற்றும்

Read More »

TOKEN ACT TO THY WILL – 3

கர்மயோகி அவர்கள்  ஒரு  “Daily Message “-இல் Seek life for expressing the Spirit. Do not seek Spirit to enrich our life. என்று கூறி இருப்பார். அதுவே நம்

Read More »