Share on facebook
Share on telegram
Share on whatsapp

TOKEN ACT TO THY WILL – 1

கர்மயோகியின் கட்டுரைகளை படிக்கும் போது, அந்த தலைப்புக்கு அதன் சாரத்தை நமக்கு தெரிந்த அளவு பொருத்திப் பார்த்து  புரிந்துக் கொண்டு, விட்டு விடுகிறோம். தெரிந்து  கொள்ள வேண்டும் என்பதை விட பெரும்பாலும் அவர் இருந்த போது பக்தியின் அடிப்படையிலேயே, வளம் ( PROSPERITY ) வேண்டும் என்னும் ஒரு பார்வையில் மட்டுமே பார்த்தோம். ஆனால் அந்த கட்டுரைகளை அதன் சாரத்தை  அவரின் நோக்கமான பரிணாம வளர்ச்சி, ஆன்மாவின் வளர்ச்சி, அதன் PHYSICAL வெளிப்பாடாக PERSONALITY DEVELOPMENT என்று பார்க்கும் போது, ஏராளமான கருத்துக்களை வெவ்வேறு கட்டுரைகளில் உள்ளீடாக தந்துள்ளது தெரிய வருகிறது.  நாம் கவனத்துடன் படிக்கவில்லை. அன்னையின் அருள், அது செயல்படும் விதம், அது LIFE RESPONSE ஆக  வாழ்வில் வெளிப்படும் விதம் ஆகியவற்றை நாம் சரியாக புரிந்துக் கொள்ளவில்லை, அல்லது நமக்கு சொன்னவர்கள் அதை விளக்கிச் சொல்லாமல் தங்கள் சுயநலத்திற்காக, பதவிக்காக, காணிக்கைக்காக, நம்மை பக்தர்கள் என்ற நிலையிலேயே, சமர்ப்பணம், சரணாகதி என்று சொல்லி இருக்க வைத்து விட்டார்களோ என்று தோன்றுகிறது.

நான் சென்ற வாரம் முன்னுரையில் சொன்னது போல TOKEN ACT என்ற ஒன்றை எடுத்துக் கொண்டால் அதன் மூலம் நம்மை புரிந்துக் கொள்வதோடு அதன் அடுத்த முனையாக இறைவனின் விருப்பத்தை (THY WILL) ஐ புரிந்துக் கொள்ள முடியும் என்கிறார்.  ஒரு கட்டுரையில்  வரும் இந்த ஒரு வரியை எடுத்துக் கொண்டு, இது பற்றி வேறு கட்டுரைகளில் வேறு எதுவும் கூறியிருக்கிறாரா என்று தேடும் போது பொக்கிஷமாக நிறைய விஷயங்கள் கிடைத்தது.  அதற்காக அவர் தரும் DEFINITION – பொருள் விளக்கம், பொருளின் பின்னால் உள்ள பண்பின் விளக்கம் வேறு எவரும் தரமுடியாத தனித்துவமான விளக்கம்.

உதாரணமாக DISCIPLINE கட்டுப்பாடு என்பதை வெறும் கட்டுப்பாடாக கொள்ளாமல், அது ஒரு வகையான சுதந்திரம், எதை செய்யக் கூடாது , எதை செய்யலாம் என்று தெரிந்துக் கொள்ளும் சுதந்திரமாக, எதை நம்மால் கட்டுப்படுத்த முடியும், எதை நம்மால் கட்டுப்படுத்த முடியாது என்பது தெரியும் சுதந்திரம் என்று வரையறுத்து அதை DETACHMENT – பற்றற்ற நிலை, கடமையை விரும்பி செய், பலனுக்காக செய்யாதே என்னும் ஆன்மாவின் கல்விக்கு கொண்டு வந்து அதன் மூலம் வரும் ஆன்மீக பண்புகளான NON-REACTION, SILENT WILL, SILENCE, PERSEVERANCE, PATIENCE, EQUALITY என்று வளர்ந்து அது சமர்ப்பணம், சரணாகதி என்று படைப்பாற்றல் கொண்ட நிலை,  அன்னை SYMBOL-ல் உள்ள ஒரு நிலைக்கு கொண்டு செல்வதை ஆங்காங்கே குறிப்பிடுகிறார். 

நாமுள்ள நிலையில் இருந்து அன்னை நிலைக்கு, அன்னை விரும்பும் படைப்பாற்றல் கொண்ட பண்புகளுக்கு  SYMBOL-ல் உள்ள MANIFESTING ASPECTS க்கு செல்வதற்கு பத்து அல்லது இருபது நிலைகள் உள்ளன. அவற்றை எவரும் பெற முடியும்.  அதுவே க்ஷணத்தில் பலிக்கும் நிலை என்று குறிப்பிடுகிறார். அது போல நல்லவர்கள் ஏன் அதிகம் துன்பத்தை அனுபவிக்கிறார்கள் என்ற கட்டுரையை அடிப்படையாக வைத்து அவர் கருத்துக்களை பார்க்கும் போது வாழ்க்கை சட்டங்கள் ஒன்று என்றாலும்  அது நமக்கு பலிக்கும் விதங்கள் வேறு வேறு. காரணம் நாம் வாழ்க்கையை உயர் பண்புகளை  கொண்டே நடத்தினால் கூட, அது சில கோட்பாடுகளை ஒட்டியே நடக்கிறது -LAWS ARE LIMITED TO PHILOSOPHY WE TAKE – நம் சுபாவம், நம் நம்பிக்கை, நம் நோக்கம், நம் மனப்பான்மை ஓட்டியே வாழ்வின் மறுமொழி LIFE RESPONSE இருக்கும் என்று கூறுகிறார். 

உதாரணமாக அன்னையை  வேண்டுதல் பலிக்கும், சமர்ப்பணம் பலிக்கும், சுத்தம் பலிக்கும், மனமாற்றம் பலிக்கும் என்று ஏராளமான சட்டங்கள் உள்ளது. ஆனால் எனக்கு வேண்டுதல், அழைப்பு, மலர்கள், மையம் என்று எதிலும் எதுவும் பலித்ததில்லை. ஆனால் மனமாற்றத்திற்கு முயலும் போது ஏராளமாக நடந்து இருக்கிறது.  அதை இந்த நான்கைந்து வருடத்தில் பல சொற்பொழிவுகளில், கட்டுரைகளில் விளக்கி இருக்கிறேன்.  சட்டம் பொது என்றாலும் என் நம்பிக்கை, என் சுபாவம், நானே செய்வேன் என்னும் அகந்தை மூலம் மட்டுமே பலிக்கிறது.  மனமாற்றம் மட்டுமே வாழ்வில் முன்னேற உதவும் என்பது என் ஆன்மா நம்பும் அன்னையின் சட்டம் PHILOSOPHY கோட்பாடு என்று கூறலாம்.  எனக்கு பெரும்பாலும் அந்த முறையில் மட்டுமே LIFE RESPONSE கிடைத்திருக்கிறது.

அதே போல வேறொரு உதாரணம் சொல்ல வேண்டுமென்றால் HARMONY பற்றி தெரியும்.  ஆனால் சுமுகத்திற்காக விட்டு கொடுத்து நடக்கும் பலருக்கும் எந்த மாற்றமும் வருவதில்லை. மேலும் சொல்வதானால் அவர்கள்  EXPLOIT செய்யப்படுகிறார்கள் என்று கூட சொல்லலாம்.  காரணம் அந்த HARMONYக்கு பின்னால் ஒரு பயம், ஒரு கெட்ட எண்ணம், ஒரு திறமைக்குறைவு, ஒரு சுபாவக்குறைவு என்று பலவும்  இருக்கலாம்.  அதனால் அது முழுவதும் பலனளிப்பதில்லை.  ஆனால் அந்த சட்டத்தோடு நம் எண்ணம், நல்லெண்ணம், தைரியம், திறமை  அல்லது நோக்கம் சற்றே சேரும் போது தான் வாழ்வு அதன் முழு பலனை கொடுக்கிறது என்கிறார்.சுமுகம் என்பது சட்டம். அது பலிப்பது நமக்கான கோட்பாடு என்று எடுத்துக் கொள்ளலாம். 

இதை பதியம் போடுதல் போன்ற உதாரணம் மூலம் விளக்கி இருக்கிறார் – இதை பற்றிய விளக்கத்தை இந்த வலைதளத்தில் வேறு கட்டுரையில் எழுதி இருக்கிறேன். அதன் சாரம் என்னவென்றால் – ஒரு கிளையை பதியம் இடும் போது, அதன் வளரும் கணு பகுதியை பாதுகாப்பதன் மூலமே அதை துளிர வைக்க முடியும்.  அது போல நம் கோட்பாடுகளை சரி செய்வது அருள் வரும் பாதையை எளிதாக்குவது.  இது போன்ற ஏராளமான கருத்துகள், ஆங்காங்கே சிதறி கிடக்கிறது.

அவற்றை தலைப்புகளாக – DISCIPLINE, TOKEN ACT, THY WILL, WHY LIFE REPEATS என்று (இந்த தலைப்புகளின் அடிப்படையில் ஏற்கனவே எழுதி இருக்கிறேன்) அடுத்த கட்டத்திற்கு எழுதலாம் என்றால் என் திறமை குறைவு காரணமாக, அவை தனிப்பட்ட கட்டுரைகளாக மாறுகிறதே தவிர ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக எழுத வரவில்லை.  ஆனால், மனதில் எண்ணத்தில் ஓடுவதை தொகுத்தால் TOKEN ACT என்று ஆரம்பித்து சங்கிலித்தொடர் போல சென்றால் LIFE DIVINE அத்தியாயங்களான ORDER OF THE WORDS, DEATH, DESIRE, INCAPACITY போன்ற அத்தியாயங்களைத் தொட்டு, நடப்பது அனைத்தும் இறைவனின் விருப்பமே என்று புரிய வைக்கிறார். 

ஆனால் வாழ்வில் இருக்கும் நாம் வாழ்வில் ஆனந்தம் வேண்டும் என்னும் போது இதற்கான நிலைகளை மட்டும் எடுத்துக் கொண்டு அந்த இடத்தில்  நின்றால்  அவர் கூறும் வாழ்வில் யோகம், ஆன்மாவின் ஆனந்தம் என்னும் அளவில் நிற்கலாம்.

இதை கர்மயோகி சில கட்டுரைகளில் எழுதுவது போல POINT BY POINT ஆக கருத்துக்களாக எழுதலாம், அன்பர்களே புரிந்துக் கொள்ளலாம் என்றால்  இதை  நான் விவாதித்த சிறு அன்பர்கள் வட்டத்திற்கு கூட தெளிவாக தர முடியவில்லை.  உதாரணங்களை சொல்லியே விளக்க முடிகிறது.

அதனால் இதை பற்றி மனதில், எண்ணத்தில் தோன்றுவதை தொடராக எழுத இருக்கிறேன். அதனால் தலைப்புகள் DIVERT ஆகி செல்லலாம். ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லாததாக இருக்கலாம்.  ஆனால் நோக்கம் ஒன்றே.  அதனால் ஒவ்வொரு முறையும் , இந்த முன்னுரையை நினைவில் கொண்டு வந்து படிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்.

இது பற்றி உங்கள் கருத்துக்களை 8014422222 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தியாக அனுப்பவும். இந்த எண்ணை  சேமித்து வைத்து கொண்டால் – நான் ஸ்டேட்டஸ் – இல் போடும் செய்திகளையும் பார்க்க முடியும்.

தயவு செய்து, CUT AND PASTE, அன்னை செய்திகள், வாழ்த்துக்கள், ஆகியவற்றை FORWARD செய்வதை தவிர்க்கவும்.

Author Info
Ramesh Kumar

Ramesh Kumar

SHARE
Share on facebook
Share on telegram
Share on whatsapp

TOKEN ACT TO THY WILL – 5

இப்போது முதல் TOKEN ACT ஐ  எடுத்துக் கொள்ள அடிப்படையான மனப்பான்மைகளை விளக்க நினைக்கிறேன். இது SPIRITUAL OPULENCE இல் உள்ள PREPARATION TO TOKEN ACT மற்றும் அது தொடர்பான கட்டுரைகள், மற்றும்

Read More »

TOKEN ACT TO THY WILL – 3

கர்மயோகி அவர்கள்  ஒரு  “Daily Message “-இல் Seek life for expressing the Spirit. Do not seek Spirit to enrich our life. என்று கூறி இருப்பார். அதுவே நம்

Read More »

More Articles

TOKEN ACT TO THY WILL – 5

இப்போது முதல் TOKEN ACT ஐ  எடுத்துக் கொள்ள அடிப்படையான மனப்பான்மைகளை விளக்க நினைக்கிறேன். இது SPIRITUAL OPULENCE இல் உள்ள PREPARATION TO TOKEN ACT மற்றும் அது தொடர்பான கட்டுரைகள், மற்றும்

Read More »

TOKEN ACT TO THY WILL – 3

கர்மயோகி அவர்கள்  ஒரு  “Daily Message “-இல் Seek life for expressing the Spirit. Do not seek Spirit to enrich our life. என்று கூறி இருப்பார். அதுவே நம்

Read More »