கடைசியாக நான் எழுதிய கட்டுரை மே 1 , 2025 – காரணம் யாருக்காக எழுதுகிறோம் என்று தெரியாமல் , மின்னஞ்சலில் வரும் 10 அல்லது 12 கமெண்ட்களை மட்டுமே சீரியஸ் ஆக எடுத்து கொண்டு எழுதும்போது நாளடைவில் அதில் ஆறு பேர் நேரடித்தொடர்பில் இருப்பதால் நேரில் பேசி கொள்ள வேண்டியதை எதற்கு எழுதவேண்டும் என்ற காரணத்தால் அதன் பிறகு ஒரு சிறு – நட்பு / அன்பர் வட்டத்திலேயே கர்மயோகியின் கருத்துகளை, வழிகளை, பகிர்ந்து கொண்டேன்.
சில நாட்களுக்கு முன் இந்த வெப்சைட் செக்யூரிட்டி EXPIRE ஆனதால் வெப்சைட் தெரியவில்லை என்று பல குறும்செய்திகள் – இதுவரை தொடர்பு கொள்ளாதவர்கள் கூட அனுப்பி இருந்தார்கள். சிலர் பேசும்போது – பகவானை பற்றி , அன்னையை பற்றி அவர்கள் வழி , புத்தகம் ஆகியவற்றை விளக்க ஏராளமானோர் இருக்கிறார்கள் , ஆனால் கர்மயோகி பற்றி சொல்ல அவர் வழிகளை விளக்க சிலரெ இருக்கிறார்கள் – உங்கள் விளக்கம் எளிமையாக பின்பற்ற கூடியதாக இருப்பதால் எழுதுவதை தொடர வேண்டும் என்றார்கள். அதோடு அந்த வெப்சைட்-ஐ சரி செய்தவர் – ANALYTICS பற்றியும் சொல்லி தினசரி பலரும் வருகை தருகிறார்கள் , குறிப்பாக விடுமுறை / தர்ஷன் டே போன்ற நாட்களில் 20 அல்லது 30 நபர்கள் வருகிறார்கள் என்பதே உங்கள் கட்டுரைக்கு வரவேற்பு இருக்கிறது என்பதை காட்டுகிறது என்றார். அந்த பார்வை என்னை சற்று சிந்திக்க வைத்தது.
அதனால் மீண்டும் ஒரு ஆரம்பமாக – ஏற்கனவே வந்த ஒரு கட்டுரை-ஐ சிறு மாற்றங்களுடன் பகிர்ந்துளேன். அடுத்த கட்டுரைகளில் டோக்கன் ஆக்ட் மூலம் எப்படி Thy-Will ஐ புரிந்து கொள்ள முடியும் அதற்கு தேவையான கட்டுப்பாடுகள் என்ன என்பது பற்றி எழுத நினைக்கிறேன். கர்மயோகியின் ஆசிர்வாதம் இருக்கும் என்று நம்புகிறேன்.
புது வருடம் – புது யுகம் – புது வாழ்வு என்பது கர்மயோகியின் வரிகள்.
“Life is aspiration on the Move”. நம் ஆர்வத்தின் பயணம் தான் நம் வாழ்க்கை என்றும் கூறுகிறார். நம் ஆர்வத்தின் அடிப்படையில் தான் நம் குடும்பம் நம் வாழ்வை நடத்துகிறது. நம் சமுதாயம் நம் வாழ்வை நடத்துகிறது. நம் ஆர்வத்திற்கு ஏற்பவே நம் சூழல், நண்பர்கள், உறவுகள் அமைகிறது என்பதை கவனித்துப் பார்த்தால் புரிந்துக் கொள்ள முடியும். அதுவே பெரும்பாலும் நம் வாழ்வை நடத்துவது தெரியும்.
நம் எல்லோருக்கும் முன்னேற வேண்டுமென்ற ஆர்வம் இல்லாமல் இல்லை. அனைவருக்கும் ஒரு இலக்கு இருக்கிறது. அந்த இலக்கை நோக்கி தான் இந்த வருடம் சென்றோமா அல்லது அடுத்த வருடம் செல்ல என்ன செய்ய வேண்டும் என்பதை ஆராய்ந்தால், நாம் மாற வேண்டிய இடங்கள், பெற வேண்டிய திறமை, திறன் மனப்பான்மை, ஆகியவற்றை புரிய வைக்கும். நமக்குத் தேவையான நிலைமாற்றம், திருவுருமாற்றம் ஆகியவற்றை புரிய வைக்கும்.( transition , transformation).
உதாரணமாக மாத சம்பளத்தில் இருந்து சொந்த தொழிலுக்கு உயர்வது, இன்றைய வருமானத்தில் இருந்து இரண்டு மடங்கு, மூன்று மடங்கு உயர்வது, சாதாரண சமூகம் சார்ந்த வாழ்வில் இருந்து, கொள்கை, பண்புகள் நிறைந்த வாழ்வுக்கு மாறுவது என்று முதலில் நம் இலக்கை தெளிவாக நிர்ணயிக்க வேண்டும். அதை அடையும் வழி (அன்னை வழி, சமுதாய வழி) என்ன என்பதை பற்றிய தெளிவு வேண்டும். அதை படிப்படியாக செய்வது எப்படி என்னும் திட்டம் மனதுக்குள் வேண்டும். அதன் பிறகு அதை செயல்படுத்த வேண்டும். இந்த முடிவுக்கு வர நாம் நம்மைப் பற்றிய தெளிவுக்கு முதலில் வர வேண்டும்.
நம் இலக்கை நம் ஏதோ ஒரு திறமை மேல் வைத்து தான் முடிவு செய்து இருப்போம். அப்படி என்றால், நமக்கு நாமே கேட்க வேண்டிய கேள்வி – அதற்கான full potential -ஐ நாம் இப்போது செய்து கொண்டு இருக்கும் வேலையில் வெளிப்படுத்துகிறோமா? அது result -ஐ தந்துக் கொண்டு இருக்கிறதா என்று பார்ப்பது முதல் வேலை. இல்லையென்றால் அது நம் முடிவு, நம் தெளிவு அல்ல. Aspiration ஆர்வம் அல்ல. வெறும் ஆசையே. அடிப்படையில்லாத யாராலோ, அல்லது சூழலாலோ, சுமுதாயத்தாலோ நம் மேல் திணிக்கப்பட்ட ஒரு விஷயம். நம் தெளிவு, ஆர்வம் அல்ல.
அடுத்து நாம் கவனிக்க வேண்டியது – இப்போது நாம் இருக்கும் comfort zone -இல் இருந்து வெளியே வர தயாராக இருக்கிறோமா, சிலருக்காக, சில அல்லது பல compromise களை செய்ய தயாராக இருக்கிறோமா என்று பார்க்க வேண்டும். இலக்கே முக்கியம் வேறெதுவும் முக்கியம் இல்லை என்னும் நிலைக்கு சில காலமாவது இருக்க முடியுமா (consolidation phase ) என்ற தெளிவு வேண்டும் .
இந்த இரண்டும் தான் பரிணாமத்தில் உயர்வதற்கான – அது தொழில் ஆகட்டும், பண்புகள் ஆகட்டும், ஆன்மீக முறைகள் ஆகட்டும் – இந்த இரண்டும் தான் நிலைமாற்றம், திருவுருமாற்றத்திற்கான அடிப்படை. இதற்கு எதிரான எந்த நிலையும் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லாது.
முன்னேறுகிறோம் என்னும் போதே அதன் பொருள் பின்னால் எதையோ விடுகிறோம் என்பது. அது எது என்பதில் இருக்கும் தெளிவே முன்னேற்றம் – மாற்றம் இல்லாமல், முன்னேற்றம் இல்லை. ஓடாத நீர் பாசிபிடிக்கும். வளராத விதை இறக்கும். அது போல நாம் satisfaction , contentment என்ற பெயரில் பல இடங்களில் முற்றுப்புள்ளி வைத்துக் கொள்கிறோம். அது சிறிது சிறிதாக நம் முன்னேற்றத்தை சாகடிப்பதை நாம் உணர்வதில்லை. எல்லோரும் ஓடும்போது நாமும் ஓடுவதாக நினைப்போம் . ஆனால் சில காலம் கழித்து பார்த்தால் நாம் அதே இடத்தில இருப்பது தெரிய வரும். பின் சில காலம் கழித்து பார்த்தால் நாம் பின் தங்கி விட்டது தெரியும். இதை உணரும் நிலை வரும் போது நாம் ஜீவனற்றவனாக மாறிவிடுகிறோம்.
இந்த பிறவியின் நோக்கம் ஆனந்தத்திற்காக, பரிணாம வளர்ச்சி என்னும் ஆனந்தத்திற்காக என்னும் போது வாழ்வின் மேல் நாம் கடுமையாக இருந்து அந்த முன்னேற்றத்தை கொண்டு வரவில்லை என்றால், அதாவது ஆன்மாவின் ஆர்வம் வாழ்வில் மேல் செயல்பட்டு அந்த முன்னேற்றத்தை கொண்டு வரவில்லை என்றால் வாழ்வு நம் மேல் கடுமையாக செயல்பட்டு அதை கொண்டு வருவதை கவனித்து பார்த்தால் புரியும்.அதாவது வாழ்வு நம்மை கட்டுப்படுத்த போகிறதா அல்லது வாழ்வை நாம் கட்டுப்படுத்த போகிறோமா என்னும் முடிவில் தான் நம் அடுத்த கட்ட, அடுத்த வருட முன்னேற்றம் இருக்கிறது. அதை தருவது நிலைமாற்றம், திருவுருமாற்றம்.
உதாரணமாக 10 கிலோ கல்லை தோளில் சுமக்கும் சித்தாள் முகத்தில் அதன் சுமை தெரியும். ஆனால் அவளே அதை விட அதிக தூரம் 10 கிலோ உள்ள தன் குழந்தையை சுமக்கும் போது அவள் முகத்தில் அந்த சுமை தெரியாது. காரணம் அவள் மனதில் ஏற்படும் நிலைமாற்றம். குழந்தைக்கான ஆர்வம். அது போல நம் செயலுக்கும் நமக்கும் ஒரு emotional bonding வைத்துக் கொள்ளும் போது, எந்த அமைப்பும், யாருடைய விலகல்களும், யாருடைய நடத்தையும் ஒரு பொருட்டாகத் தெரியாது.
உதாரணமாக, இந்த ஆண்டு 10 கிலோ குறைப்பேன் என்பது இலக்கானால் அதே வேலையாக செய்தால் அல்லது வேறு எந்த நோக்கத்துடனும் செய்தால் அது பெரிய பலனை அளிப்பதில்லை. ஆனால் 10 அல்லது 15 கிலோ இளைத்தால், நான் எப்படி இருப்பேன், எப்படி எல்லாம் என் ஆரோக்கியம், தோற்றம், நடத்தை, உடை, அணிகலன்கள் அணியும் விதம் இருக்கும் என்று யோசித்தால், நமக்கு வருவது நம் இலக் குக்கான emotional bonding . அதுவே நம்மை இலக்கை நோக்கி வேகமாக பயணிக்க வைக்கும். இது உயர் சித்தத்திற்கான பிரம்மம் பெற விரும்பும் ஆனந்தம். நம் இலக்கை நாம் அடைந்து விட்டால் கிடைக்கப் போகும் சந்தோஷம் எப்போதும் நம் நினைவில் இருக்க வேண்டும். அதைவிட வேறுதுவும் பெரிதில்லை என்று இருக்க வேண்டும். அதற்கான பண்புகளை கடைபிடிக்கும்போது கிடைக்கும் சிறு சிறு வெற்றிகளை கவனித்து அதை அதிகப் படுத்த வேண்டும். நம்மால் முடிகிறது என்று அதை கொண்டாட வேண்டும். செய்ய முடியாத இடங்களை ஏன் செய்ய முடியவில்லை என்று பார்த்து திறமையை அதிகப்படுத்த வேண்டும். ஏற்கனவே நம் determination ஆல் நாம் பெற்ற வெற்றியை நினைவுக்கு கொண்டு வந்து நம் ஆர்வத்தை அதிகப்படுத்த வேண்டும்.
நான் லஞ்சம் கொடுக்காமல் வியாபாரம் செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்ததில் வந்த இழப்புகள், பிரச்சினைகள் அதிகம். என்றாலும் அதை விடாமுயற்சியாக செய்ய காரணம், கர்மயோகியுடன் எனக்கு ஏற்பட்ட emotional bonding . அந்த vibration அவரை அடையும் என்னும் நம்பிக்கை. அதுவே பின்னால் அவருடன் உண்டு, உறங்கும் வரை வந்தது என்று நினைக்கிறேன். அதுவே இன்று அவருடனே இருந்தவர்கள் அவருடன் இருந்தவர்கள் இன்று அவருக்கே துரோகம் செய்யும்போது அந்த நம்பிக்கை குறைகிறது. பண்புகளுக்கான என் ஆர்வமும் குறைகிறது. அதனால் ஆர்வமே நம் வாழ்வை நடத்துகிறது என்று புரிகிறது. இலக்கை நோக்கிய பயணத்தை துரிதப்படுத்துகிறது என்பது புரிகிறது.
இதை வாழ்வுடன் நாம் கொள்ளும் communication என்கிறார் கர்மயோகி. அதில் எந்த அளவு quality , தரம் இருக்கிறதோ, பண்பு இருக்கிறதோ அந்த அளவு முன்னேற்றம் இருக்கும். காரணம் அது நம் சித்தத்தின் communication .
- உதாரணமாக prayer என்பது அன்னைக்கான நம் சித்தத்தின் communication .
அனைத்து பொறுப்பையும் ஏற்க அன்னை காத்திருக்கிறார். அவர் மேல் வரும் ஆர்வம் நம் வாழ்வை வழி நடத்தினால், அதன் வளர்ச்சிக்கு எல்லையே இல்லை.
- அந்த ஆர்வம்:அன்னையின் கருத்துகளையும் அன்னைக்கு ஏற்ற உணர்வுகளையும் அன்னை ஏற்று கொள்ளும் பழக்கங்களையும் , அவர் விரும்பும் பண்புகள், அவர் சட்டங்கள் ஆகியவற்றை புரிந்து தெளிந்து பின்பற்றி மேலும் மேலும் அன்னையை ஏற்று கொள்வது எப்படி என்று இடையறாது நினைக்கும் ஆர்வத்தை தரவேண்டும்.அன்னை விரும்பும் பண்புகளை நடைமுறை படுத்த முடியாமல் இருப்பதற்கான காரணங்கள் பற்றிய விழிப்புணர்வை அந்த ஆர்வம் தரவேண்டும்.
- அன்னை ஏன் நமக்கு உதவுகிறார், பரிணாமத்தையும் வளத்தையும் ( Evolution & Prosperity) கொண்டுவரும் விஷயங்கள் எவை, அவை இரண்டுக்கும் உள்ள தொடர்பு ஆகியவற்றை அறிய ஆர்வம் வேண்டும்.
- அதன் மூலம் நம் personality falsehood கு தரும் ஆதரவு, அதன் பின் உள்ள இயலாமை – அதனால் நாம் மாற வேண்டிய இடங்கள் எது என்று புரிய வேண்டும்.அன்னையை பின் பற்றும் நம் ஆர்வம் நாம் அன்னையை நோக்கிப் போவது அல்ல , அன்னையை நம்மை நோக்கி வரவைப்பது என்னும் ஞானம் வரவேண்டும்.
இன்றைய இளைஞன் படிப்பது தவிர மற்றவற்றையெல்லாம் அதிகம் செய்வது நாம் வாழ்வில் செய்து கொண்டு இருக்கிறோம் என்பது புரிந்து அதை தவிர்க்கும்
Resolutions – ஐ இந்த புத்தாண்டில் ஏற்று கொள்வோம்.