Share on facebook
Share on telegram
Share on whatsapp

பொதுப்புத்தியும் ஆனந்தமும் – 7

இந்த பிரபஞ்சத்தை தன் ஆனந்தத்திற்காக இறைவன் படைத்தான் அந்த ஆனந்தத்தின் வெளிப்பாடு தான் நாமும், நம் வாழ்வும். நம் இருப்பு, இயல்பு, existence and nature , அதை ஒட்டிய மனப்பான்மை அதற்கான அபிப்ராயங்கள், அதன் பின்னால் அந்த அபிப்ராயம் வந்ததற்கான அனுபவங்கள், அதை ஒட்டிய நம் செயல்கள், அதில் வெளிப்பட்ட பாடங்கள், அதன் பலன்கள் , என்று பார்த்தால் எல்லாம் நம் வாழ்வு மற்றும் மன  வளர்ச்சிக்காகவே என்பது புரியும். அதையே உயர்சித்ததை HIGHER CONCIOUSNESS – ஐ அடைவதற்கான பயணம் என்கிறோம்.

இதன் மூலம் நம் பிரச்சினை, துன்பம், வலி போன்றவற்றுக்கான காரணங்களை முழுதுமாக புரிந்துக் கொள்ளவில்லை என்றால் கூட, பிரச்சினை ஏன் வருகிறது, நாம் அதற்கு எப்படி காரணமாவோம். அதற்கு தீர்வு என்ன என்று சிந்திக்கும் அளவிற்காவது வந்திருப்போம். அதை செயல்படுத்தும் நிலைக்கு செல்வது  நம்மை பொதுப்புத்தி என்னும் நிலைக்கு எடுத்துச் செல்லும். குறைந்த பட்சம் ஒரு முழுமை தெரிந்த அறிவின் முதிர்ச்சி – MATURITY-ஆகவாவது மாறும்.  அப்படிப்பட்ட MATURITY, FORESIGHT எதிர்காலத்தை பற்றிய பார்வை என்னும் நிலைக்காவது கொண்டு  செல்ல உதவும். அந்த நிலைகளை அதற்கான பொதுபுத்திகளை அவருடைய கட்டுரைகளிலிருந்து தொகுத்து இருக்கிறேன்.

இங்கு முதல் விதியாக அவர் சொல்வது EVOLUTION IS RESPONSIBILITY  பொறுப்பை ஏற்றுக் கொள்வதே நம் வளர்ச்சிக்கு முதல் படி. நான் காரணமாக இல்லாமல் இந்த சூழ்நிலை, பிரச்சினை, துன்பம் வந்து இருக்காது என்று ஏற்றுக் கொள்ளும் மன நிலை. காரணம் வாழ்வில் அனைத்தும் நம் தவறை – மனக்குறைவு, குணக்குறைவு, அறிவுக் குறைவு, திறமை குறைவு – சுட்டிக்காட்டவே வருகிறது. அதிலிருந்து வெளியே வந்து பிரச்சினைகளை எதிர்கொள்ள எதிர்காலத்தில் அது போன்ற பிரச்சினைகள் வராமல் இருக்க தேவையான முதிர்ச்சி பக்குவம் தரவே வருகிறது. நமக்கு வாழ்வில் மீண்டும் மீண்டும் வரும் பிரச்சினைகளை பார்த்தால் இது புரியும். இதை முதலிலேயே புரிந்துக் கொண்டால், துன்பங்களை தவிர்க்கலாம். அடுத்த கட்ட முன்னேற்றத்திற்கு செல்லலாம்.  

நான் 2016 – இல்  சென்னை வெள்ளத்திற்கு பிறகு முதலீட்டை கடனாக  திரட்டி சுமார் 75 லட்சம் மதிப்புள்ள ஒரு ப்ரொஜெக்ட்டை எடுத்தேன். என் தொழில் எலெக்ட்ரோனிக்ஸ் மற்றும் எலக்ட்ரிகல் பொருள் தயாரிக்கும் தொழிற்சாலைக்கான ஒரு TECHNICAL ஆன தரை போடும் வேலை. மிகுந்த கவனமும், தரமும் தேவைப்படும் தொழில் . முழு வேலை  முடிந்து தரத்தை சோதனை செய்த பிறகே பணம் தருவார்கள். அதனால் அதிக பாதுகாக்கப்பட்ட  இடமாக அது இருக்கும். அப்படிப்பட்ட நிலையில் திறப்பு விழாவன்று – ஒரு மத்திய அமைச்சர் முன்னிலையில் நடந்தது- ஏராளமான அரசியல்வாதிகள் மற்றும் தொண்டர்கள் அது பற்றி தெரியாமல் சேறு காலுடன் மற்றும் கொடிகள் நட CHAIR  இழுக்க என்று அந்த இடத்தை சேத  படுத்தி விட்டார்கள். மறுநாள் customer சரியாக பாதுகாக்காதது , BARRICADE வைக்காதது என்  தவறுதான் என்று கூறி அத்தனையும் சரி செய்து தர சொன்னார்கள். சட்டப்படி இடத்தை ஒப்படைத்த பிறகு அது என் பொறுப்பு அல்ல. தவறு என்னுடையது இல்லை என்பதற்கு என்னிடம் ஏராளமான ஆதாரங்கள் இருந்தது. அவர்கள் கேட்பதை  செய்து கொடுத்தால்   எனக்கு சுமார் 8 லட்சம் நஷ்டமாகும். கர்மயோகியிடம் என்ன செய்வது  என்று மெயில் போட்டு கேட்டேன். அதை செய்து கொடுத்து விடு என்றார். நான் பொதுவாக எதுவும் அவரிடம் கேட்பதில்லை. ஆனால் கேட்டால்   அவர் என்ன சொன்னாலும் அதை தட்டாமல் மாறாமல் செய்வேன்.  அதனால் பிடிக்கவில்லை என்றால் கூட சரி செய்து தருவதாக ஏற்றுக்கொண்டேன். செய்தும் கொடுத்தேன்.

முதல் நிலையில் அதன் ப்ராஜெக்ட் மேனேஜர் நெகிழ்ந்து போய் – உங்கள் தவறு இல்லை என்று தெரியும் என்ன செய்வது கம்பெனி சொல்வதை கேட்க வேண்டியதாக போய்விட்டது என்று சொல்லி இந்த நஷ்டத்தை நான் வேறு விதத்தில் ஈடு செய்கிறேன் என்று கூறி வேறு சிறு வேலைகளை அதிக லாபத்தில் கொடுத்தார். அதோடு அவரின் வேறு வேறு இலாகா சூப்பர்வைசேர் களிடமும் சொல்லி எனக்கு  உதவ சொன்னார். எல்லோரும் எனக்குதான் வேலை  தரவேண்டும் என்று சொல்லுவதால்  சந்தேகப்பட்ட அதன் இந்தியா தலைவர் – ஒரு KOREAN என்னை பார்க்க வேண்டும் என்றார். அவரை சென்று பார்த்து பேசி கொண்டு இருந்த போது என் technical அறிவு பற்றி ஆச்சிர்யப்பட்டார். இவ்வளவு அறிவு இருக்குபோது நீங்கள் ஏன் உங்கள் சொந்த தயரிப்பு செய்யவில்லை என்று கேட்டார். ஏன் இறக்குமதி செய்யப்பட்ட ஒரு பொருளை உபயோக படுத்துகிறீர்கள் என்று கேட்டார். நான் உங்கள் கம்பெனி தான் சர்வதேச பொருள் வேண்டும், எங்கே செய்திருக்கிறார்கள்  என்று விவரம் வேண்டும் அவர்கள் சான்றிதல் வேண்டும் என்றெல்லாம் கேட்கிறார்கள் இல்லயென்றால் இதை விட சிறந்த பொருள் இதை விட குறைந்த  விலையில் செய்ய முடியும் என்றேன். உடனடியாக அணைத்து TECHNICAL PERSONS ஐயும் கூப்பிட்டு – CHEM COATS -என் கம்பெனி – எந்த பொருள் போட்டாலும் கேட்க வேண்டாம் . காரண்டி  மட்டும் வாங்கி கொள்ளுங்கள் என்று கூறி உடனடியாக ஆர்டர் போட்டார்.  

அது என் பத்தாண்டு கனவான – என் சொந்த brand தயாரிக்க வேண்டும் என்ற ஆசையை நிறைவெற்றியது.  அது ஒரு LEADING BRAND ஆக  வளர்ந்து சிங்கப்பூரில் ஒரு ஆபீஸ் போடும் வரை சென்றது.

இது போன்று நாம் தயங்கும், தவிர்க்கும் இடங்கள், துன்பப்படும் இடங்களுக்கு பின்னால் தான் உண்மையான ஆனந்தம் இருக்கிறது. முன்னேற்றம் இருக்கிறது . அடுத்த கட்டத்திற்கு செல்லும் வளர்ச்சி, நம் ஒரு கனவு நிறைவேறுவதற்கான வளர்ச்சி இருக்கிறது.  அதற்கான விழிப்புணர்வு தருவது பொறுப்பேற்றுக் கொள்ளும் பொது புத்தி.

அடுத்தது நமக்கு முன்னேற்றம் என்றால் என்ன என்பது பற்றிய தெளிவு இருக்க வேண்டும்.  பிறக்கிறோம் இறக்கிறோம், இடையில் படிப்பு, வேலை திருமணம் என்று இருக்கிறோம். அதிலும் படிப்பு என்றால் RANK , வேலை என்றால் PROMOTION , திருமணம் என்றால் அடுத்தது குழந்தை பிறப்பு என்று அதையே அடுத்த கட்ட முன்னேற்றம் என்று எடுத்துக் கொள்கிறோம். அதெல்லாம் எல்லோரும் செய்வது தான்.  தானாகவே அவையெல்லாம் சமுதாய, குடும்ப நிர்பந்தத்தால் நடக்கத் தான் போகிறது. அல்லது நடந்து விட்டது. அது நாம் விரும்பிய முன்னேற்றம் அல்ல.  சமுதாயமும் குடும்பமும் நம் மேல் திணித்தது. அதனால் தான் நம்மால், படிப்பு, வேலை, குடும்பம், உறவுகள் என்று எதிலும் ஆனந்தம் பெற முடியவில்லை. காரணம் நம் முன்னேற்றம் எங்கே இருக்கிறது . அதன் மூலம் நாம் அனுபவிக்க கூடிய ஆனந்தம் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்ற தெளிவு இல்லை. இப்போது யாரையாவது நான் உங்கள் LIFE -இல் மூன்று  priority முன்னுரிமை எதற்கு கொடுப்பீர்கள் என்றால் யாருக்காவது சொல்லத் தெரியுமா? அந்த தெளிவு இருக்கிறதா?  மீண்டும் குடும்பம், குழந்தைகள்  சம்பந்தப்பட்ட ஏதாவது ஒரு கடமையை, அதை ஒட்டிய நம் ஆசைகளை த்தான் நம் முன்னேற்றம் என்று நினைத்திருப்போம். சரி அது தான் உங்கள் முன்னுரிமை, PRIORITY என்று எடுத்துக் கொண்டால், அதன் மூலம் நீங்கள் பெற நினைத்த ஆனந்தத்தை பெறுகிறீர்களா என்றால் பெரும்பாலும் பதில் இல்லை என்றே இருக்கும்.

இங்கு தான் நமக்கு நம் முன்னேற்றம் நம்மை வித்தியாசப்படுத்துவதில் இருக்கிறது என்னும் பொதுப்புத்தி வர வேண்டும். எல்லோரும் செய்யும் ஒரே விஷயத்தை, அதே போல செய்தால் நமக்கு அதிலிருந்து ஆனந்தம் பெற முடியாது. நமக்கே கூட முன்பு செய்ததையே அதே முறையில் , அதே செயல்பாடோடு, அதே மனப்பான்மையோடு  செய்தால் RESULT மட்டும் எப்படி வேறு மாதிரி இருக்கும். அடுத்த உயர்ந்த  நிலையில் எப்படி வரும் என்ற கேள்வி நமக்கு எழ வேண்டும். வித்தியாசமாக சிந்திப்பவர்களே , வித்தியாசமாக செய்தவர்களே முன்னேறி இருக்கிறார்கள், புகழ் பெற்று இருக்கிறார்கள். அதிகாரத்திற்கு வந்து இருக்கிறார்கள் இங்கு அறிவு, அனுபவம் என்பதெல்லாம் முக்கியமல்ல. என்ன செய்கிறீர்கள் என்பது முக்கியமல்ல, எப்படி செய்கிறீர்கள் என்பதே முக்கியம். அதற்கு  நமக்கான PROGRESS , GOAL , AMBITION என்ன என்பது பற்றிய ஒரு தெளிவு இருக்க வேண்டும். அதை நோக்கிய பார்வை, பயணம், அதில் பெரும் வெற்றி தான் ஆனந்தத்தை தரும்.

முன்பு எட்டு முக்கியமான பொதுப்புத்தியில் சொன்னது போல, இது ஒரு பண்பின் மேல் நாம் வைக்கும் நம்பிக்கை. அந்த நம்பிக்கை மேல் மற்றவர்களுக்கும் நம்பிக்கை வரும் போது தான், நாம் அடுத்த கட்ட முன்னேற்றத்தை பெறுகிறோம். மக்களின், சமுதாயத்தின் நம்பிக்கையை பெறும் வியாபாரம், பல கிளைகளை கொண்டு வளர்கிறது.  மக்களின் நம்பிக்கையை பெறுபவன் தலைவன் ஆகிறான்.  விஞ்ஞான கண்டுபிடுப்புகள், TECHNOLOGY , ENTREPRENEURSHIP என்று அடுத்த கட்டம் சென்றவர்களை கவனித்து பார்த்தால் இந்த PROCESS அவர்கள் வாழ்வில் நிச்சயம் நடந்து இருக்கும்.

நம் மனம் என்பது இறைவன் படைத்தது என்றாலும் அது இப்போது ஆன்மாவின் சக்தி பெறாமல் அகந்தையின் சக்தி பெற்றே வாழ்வை நடத்துகிறது.  அதன் நோக்கம் சுயநலம்.  நம் சுயநலம்  நமக்கு எனெர்ஜி தருகிறது. அதை மாற்ற முடியாது. ஆனால் அதன் திசையை மாற்ற முடியும். நம் மனநிலைகளுக்கு ஏற்ப, மனப்பான்மை பரந்து விரிவதற்கு ஏற்ப, வாழ்வில் பலன் வருவதைக் காணலாம். அதுவே தான் அனைவருக்கும் இருக்கிறது என்பது புரிவது அடுத்த பொதுப்புத்தி.

அதனால் எல்லோரும் சுயநலத்தின் அடிப்படையில் தான் செய்கிறார்கள் என்பது புரிந்தால், நம் எதிர்பார்ப்பு குறையும். அதன் மூலம் வரும் ஏமாற்றம், சோகம், துன்பம், வலி குறையும். எதிர்பார்ப்பு இல்லாத உறவு என்பதே கிடையாது என்னும் நடைமுறை ஞானத்தை நாம் பெற வேண்டும். கீழே விழுந்த கர்சீப்பை எடுத்து கொடுத்தால் வாங்கியவர் THANKS சொல்லாமல் சென்றால் கூட நம் மனம் கத்தும். ஒரு THANKS கூட சொல்லாமல் போகிறார் பார் என்று உடனே மனதுக்கு ஒரு COMMENT -ஐ அறிவு அனுப்பும். இப்படித் தான் எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள் என்பது புரிந்தால் நாம் உயர்ந்த பண்பான பிறர் நிலை பார்வை, OTHER MAN POINT OF VIEW  , CORRESPONDENCE , ஒப்புமை ஆகியவற்றிக்கு வருகிறோம். அப்போது ஒருமை என்னும் தத்துவம் UNITY , ONENESS  என்னும் தத்துவம் புரியும். நமக்குள் அவர் இருக்கிறார். நாம் அவருள் இருக்கிறோம் என்று அன்னை சொல்வதன் பொருள் புரியும். அதாவது நாம் செய்யும் செயல்கள் நம்மில் ஒரு பகுதியே. நாம் இறைவன் அம்சத்தை கொண்டவர்கள் என்பதால் நம் செயல்களில் அந்த அம்சமும்  பரவி விடுகிறது. அதிலிருந்து வெளிப்படத் துடிக்கிறது. அதாவது நாம் ஒரு இறை பண்பை, நல்ல பண்பை, உயர் பண்பை வெளிப்படுத்தாமல் நம்மால் ஒரு விஷயத்தில் ஆனந்தம் அடைய முடியாது.

உதாரணமாக விட்டுக் கொடுத்தல் என்பதை ஒரு இடத்தில கடைபிடிக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். அது ஆரம்பத்தில் அகந்தைக்குத் தோல்வியாகத் தெரியும். ஆனால் காலப்போக்கில் அது மிகப் பெரிய பலனைத்தரும். ஜடத்தில் அது PROSPERITY ஆக வரும். உணர்வுக்கு புகழாக வரும், அறிவுக்கு ஞானமாக வரும். பிடியை  விடுதல் எனபது மிகப் பெரிய யோகம் என்கிறார் கர்மயோகி. குறைந்த பட்சம் மற்றவர்கள் எதிர்பார்ப்பு என்ன என்று புரிந்து நடந்துக் கொண்டால், அல்லது உங்கள் எதிர்பார்ப்பு என்ன என்பதை அவரக்ளுக்கு புரிய வைத்தால், நம் சுயநலம், நிதானம் என்னும் பண்பாக மாறும். 

அடுத்த பொதுப்புத்தி  நீங்கள் சொல்வதை மற்றவர்கள் முழுதும் ஏற்றுக் கொள்ள வேண்டும், நீங்கள் சொல்வதை அவர்கள் கேட்க வேண்டும் என்றால் உங்களின் நேர்மை, உண்மை அவர்களை தொட வேண்டும். நீங்கள் அதை செய்து பார்த்து இருக்க வேண்டும். மற்றவர்களை உற்சாகப்படுத்தும் MOTIVATE செய்யும் அனுபவங்களை நீங்கள் நிறைய அடைந்து இருக்க வேண்டும். அதை சொல்லி தரும் திறமை, திறன், SKILL AND INTELLIGENCE உங்களுக்கு இருக்க வேண்டும்.  அப்போது தான் உங்களால், மனிதர்களை, சூழலை, செயலை உங்கள் வசப்படுத்த முடியும். நீங்கள் விரும்பும் ஆனந்தத்தை நீங்கள் பெற முடியும்.

உதாரணமாக கர்மயோகி -100 கோடி அனைவரும் பெறலாம் என்று கூறும் போது, அதை அவர் அடைந்த பிறகே கூறினார். அதனால் தான் இவ்வளவு பேர் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அவரது ஆசியை, அருளை மட்டுமே எதிர்பார்த்து அவரிடம் இருந்தார்கள். ஆரம்பத்தில் சொன்ன பகவானைப்பற்றிய குறிப்புகளை கவனித்தால் அவரும் எதையும் செய்து பார்க்காமல் – அதில் ஒரு செம்மையை கொண்டு வராமல் எழுதவில்லை  என்பது புரியும். –

ஒரு மதத்தின் புனித புத்தகத்தில் – YOU DON’T BELIEVE THE MESSAGE – IF YOU DO NOT BELIEVE THE MESSENGER என்று குறிப்பிட்டு இருப்பதாக சொல்வார்கள். விஷயத்தை சொல்பவரிடம் உண்மை இருந்தால் தான் அவர் சொல்லும் விஷயத்தின் மேல் நம்பிக்கை வரும் என்று பொருள். இந்த அடிப்படையான பொதுப்புத்தி நமக்கு வேண்டும்.

Author Info
Ramesh Kumar

Ramesh Kumar

SHARE
Share on facebook
Share on telegram
Share on whatsapp

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 5

இதுவரை சொன்னவை அனைத்தும்   “உயர்ந்தவை நிர்ணயிக்கின்றன. அவை நிறைவேற தாழ்ந்தவை உதவுகின்றன” – என்னும் லைப் டிவைனின் ஒரு  கருத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு தலைப்பில் இருந்து விலகிச் செல்லாமல் எழுத வேண்டும் என்று

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 4

இதுவரை நாம் பேசியதை Life Divine – கருத்துகளில் பொருத்தி பார்க்கும் போது – முன்னேறும் பாதையின் நன்கு  நிலைகளை.  – மனித வாழ்வு, யோக வாழ்வு, தெய்வீக வாழ்வு என்று மூன்று பகுதிகளாகப்

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை  – 3

அதற்கு பதிலாக ஒரு பண்பை எடுத்துக் கொண்டு, அதன் பார்வையில் நம் முடிவை organise செய்ய முடிந்தால், அது நம் அனைத்து  முடிவுகளுக்குக்  காரணமாக அமைந்தால், அது படைப்பாற்றல் மிக்கதாக இருக்கும்.  உதாரணமாக முன்

Read More »

More Articles

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 5

இதுவரை சொன்னவை அனைத்தும்   “உயர்ந்தவை நிர்ணயிக்கின்றன. அவை நிறைவேற தாழ்ந்தவை உதவுகின்றன” – என்னும் லைப் டிவைனின் ஒரு  கருத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு தலைப்பில் இருந்து விலகிச் செல்லாமல் எழுத வேண்டும் என்று

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 4

இதுவரை நாம் பேசியதை Life Divine – கருத்துகளில் பொருத்தி பார்க்கும் போது – முன்னேறும் பாதையின் நன்கு  நிலைகளை.  – மனித வாழ்வு, யோக வாழ்வு, தெய்வீக வாழ்வு என்று மூன்று பகுதிகளாகப்

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை  – 3

அதற்கு பதிலாக ஒரு பண்பை எடுத்துக் கொண்டு, அதன் பார்வையில் நம் முடிவை organise செய்ய முடிந்தால், அது நம் அனைத்து  முடிவுகளுக்குக்  காரணமாக அமைந்தால், அது படைப்பாற்றல் மிக்கதாக இருக்கும்.  உதாரணமாக முன்

Read More »