அடுத்தது VERTICAL என்பது – இதை VERTICAL என்று கூறினாலும் உண்மையில் இங்கு, உள்ளே ஆழத்திற்கு செல்ல சொல்கிறார். அதற்கு அடிப்படையாக நாம் முதலில் பெற வேண்டியது தெளிவு. நாம் எங்கே இருக்கிறோம், எங்கே செல்ல வேண்டும் அல்லது எதை படைக்க வேண்டும் என்ற தெளிவு. அந்த தெளிவை பெற்ற பிறகு நாம் பார்க்க வேண்டியது நாம் அறியாமையில் இருந்து செயல்படுகிறோமா அல்லது ஞானத்தில் இருந்து செயல்படுகிறோமா என்பதை.
முன்முடிவுகள், அபிப்ராயங்கள், வழக்கமாக செய்யும் முறைகள், பழக்கமாக செய்யும் முறைகள் அனைத்தும் அறியாமையில் இருந்து செயல்படுவதற்கான அடையாளம். நன்றாக கவனித்து பார்த்தால் நாம் பெரிய விஷயங்களில் முடிவு எடுப்பது முதல் , வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது வரை , பகுத்தறிவு, அனுபவ அறிவு அனைத்தயும் மீறி சில மனிதர்களுக்காக நாம் எடுத்த முடிவுகள் வரை பற்றி சிந்தித்து பார்த்தால் நம்மில் நம் அறியாமை செயல்படும் விதம் புரியும். நாம் வாழ்வில் செய்வதெல்லாம் – நம் செயல்கள் actions -ஐ எல்லாம் – நம் அறிவுக்கும் உணர்வுக்கும் ஏற்ற நிலையில் நாமறிந்த உயர்ந்த நிலையில் செய்வதாக நினைக்கிறோம். ஆனால் உண்மையில் அவை அனைத்தும் மனதின் reactions -ஏ, எதிர்வினைகளே. ஒரு கொள்கையோ திட்டமோ, உறுதியோ இல்லாமல் நம் முன் வரும் விஷயங்களுக்கு ஏற்றார் போல அப்போது இருக்கும் மனநிலைக்கு ஏற்றாற்போல , சூழல் , மனிதர்களுக்கு ஏற்றாற்போல நாம் செயல் படுகிறோம். நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை எதிர் வரும் மனிதர்களோ, உறவுகளோ, நண்பர்களோ, market -ட்டோ, சமுதாயமோ, சூழலோ தான் முடிவு செய்கிறது. அறிவில் செயல்படுவதாக நினைத்தாலும் சூழலுக்கேற்ற உணர்வாலேயே செயல்படுகிறோம் அல்லது நம் அனுபவங்கள் தந்த அபிப்ராயங்களை ஒட்டிய எண்ணங்களாலேயே செயல் படுகிறோம்.
அப்படி இல்லாமல் நாம் அறிந்த உயர்ந்த நிலையில் சித்தப்பூர்வமாக நின்று செய்வது ஞானத்தில் இருந்து செயல்படுவதாகும். எப்போதும் கூறும் உதாரணம், அலுவலகத்தில் INSPECTION நேரத்தில், தியான மையத்தில் தரிசன நாட்களில் நம் நடத்தை, வீட்டில் சாதாரண நாட்களில் சுத்தம், முக்கிய நாட்களில் சுத்தம் ஒழுங்கு என்று தேவையானபோது நம் அறிந்த உயர்ந்த நிலையில் எப்படி இருப்போமோ அதே போல எப்போதும் இருப்பது என்பது நாம் பெற்ற உயர்ந்த ஞானத்தை செயலில் சித்தப்பூர்வமாக வெளிப்படுத்துவது. இன்னும் குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் நம் முன்னேற்றத்திற்கு, பரிணாமத்திற்கு, செல்வவளத்திற்கு உதவாத எதுவும் அறியாமையே. உயர்ந்த பண்பானாலும் அதற்கு படைப்பாற்றல், சாதிக்கும் திறமை கிடையாது.
உதாரணமாக பிறர் நிலை பார்வையை உயர்ந்த பண்பாக நினைக்கிறோம். அதற்கான ஐந்து அல்லது ஆறு நிலைகளை பல முறை கூறியிருக்கிறேன். அவை அப்போதைக்கு பலனளித்தாலும் தொடர்ந்த பலன், CREATIVE ELEMENT உருவாகும் பலன் SATURATING PREVIOUS PLANE என்னும் சட்டம் அதில் இல்லை. அந்த நிலை வந்ததற்கான ஞானம் பெற்ற பிறகு அது அதற்கு எதிரான வளர்ச்சிக்கான பண்பாக மாறினால் தான் அது COMPLETE ACT என்று கூற முடியும். உதாரணமாக பிறர் நிலை பார்வையில் நமக்கு அவர் மேல் பொறாமை இருப்பதாக தெரிந்தால், அதனால் தடை வந்துள்ளதாக தெரிந்தால், அதன் பின் உள்ள நம் இயலாமை புரிய வேண்டும். அது அதற்கான திறமையை, திறனை வளர்த்துக் கொள்ளும் வழியைக் காட்ட வேண்டும். பின் அந்த திறமையை பெற்று செயல்படும் ஞானமாக மாற வேண்டும். அந்த நிலைக்கே புதியன படைக்கும் திறன் உண்டு. அது வரை அது அறியாமையே அல்லது வெறும் தெளிவே. செயல்படும் ஞானம் அல்ல. எதிராளியின் கோபம் நியமானது என்று சில வேளைகளில் பண்பிற்காக ஏற்று கொள்ளலாம் . ஆனால் அது நம் ஒரு இயலாமையின் மேல் வெளிப்பட்ட பிறர் நிலை என்பது புரிந்தால் அதற்கு எதிரான நிலை எடுத்தால் இயலாமை வலிமையாக மாறும். முன்பு சொன்னது போல கவனித்து பார்த்தால் அது வரை நம் செயல்கள் அனைத்தையும், சூழலே முடிவு செய்து கொண்டு இருக்கும். நாம் பெற்றுள்ள எந்த ஞானத்திற்கும் அங்கு வேலை இருக்காது. சூழல் முடிவு செய்யாமல் பரிணாமத்திற்கான நம் ஆர்வம் அனைத்தையும், நம் செயலையும், அது வெளிப்படும் விதத்தையும், முடிவு செய்ய வேண்டும். அப்போது தான் அந்த ஞானம் ஒரு புது படைப்பாக, அடுத்த கட்ட முன்னேற்றமாக மாறும்.ஒவ்வொரு செயலிலும் அடுத்த கட்டத்திற்கான வித்து இருக்க வேண்டும் என்பதே சட்டம்.
அது செயலில் எப்படித் தெரியும் என்றால் ஒவ்வொரு கணமும் இந்த செயலில் எந்த உயர்ந்த பண்பை நம்மால் கொண்டு வர முடியும் என்று நாம் சித்த பூர்வமாக – CONSCIOUS ஆக இருப்பதில் தெரியும். நாம் வாழ்வு முழுவதையும் ஞானத்தை பெற மட்டுமே செலவு செய்யக் கூடாது. அதை நடைமுறைப்படுத்தும் வழியையும் பார்க்க வேண்டும். அதுதான் படிப்பு திறன் பெறுவதற்கான ஆரம்பம்.
பண்புகளை பற்றி பல ஆண்டுகளாக பேசினாலும், மனமாற்றத்தால் எதையும் சாதிக்கலாம் என்றாலும் நமக்கு என்று வரும் போது இரண்டு பக்கம் LIFE DIVINE படித்தேன், சாவித்ரி படித்தேன் , ஓம் நமோ பகவதே ஆயிரம் முறை எழுதினேன் என்று கூறும் விதங்கள் செயல்படும் வழிகள் அல்ல. பக்தியும் அல்ல. அது அறியாமை மட்டுமல்ல. அன்னைக்காக தெரிந்ததை செய்யாத கயமையும் கூட.
ஆரம்பத்தில் இதை நடிப்பாகக் கூட செய்யலாம். நாளடைவில் அது நம் சுபாவமாக மாறிவிடும். நாடகத்தில் சிவாஜி வேடம், INSPECTOR வேடம் போடுபவர் சில வாரங்களில் சாதாரணமாக இருக்கும் போது கூட விறைப்பாக இருப்பதைக் காணலாம். காரணம் நம் எண்ணம் முதலில் நம் BEHAVIOUR , நடத்தையாக மாறுகிறது. அதன் பொருள், வலிமை, பாராட்டு, முன்னேற்றம் புரியும் போது அதன் உளவியல் முக்கியத்துவம் (PSYCHOLOGICAL IMPORTANCE ) புரிந்து அது நம் ATTITUDE – மனப்பான்மையாக மாறுகிறது. அந்த மனப்பான்மை தரும் பண்புகள், நம் CONSCIOUSNESS ஆக மாறுகிறது. அதாவது நம் முன்முடிவுகள், அபிப்ராயங்கள், ஆசைகள், முன்னேற்றம் ஆகியவற்றை பற்றிய தெளிவு சித்தப்பூர்வமாக இருக்கிறது. அதுவே சித்தமாக மாறுகிறது. அதன் பின் உள்ள சத்தியம், TRUTH புரியும் போது அது ஏன் இருக்கிறது, அது ஏன் பலன் அளிக்கிறது, இந்த பரிணாமம் தான் படைத்தவன் விரும்புவது என்றெல்லாம் புரியும் போது அதை ஒட்டியே நம் செயல்கள் இருக்கும் போது அது “THY WILL” ஆகிறது. அப்போது படைப்பது நாம் அல்ல. அதை விரும்பிய இறைவன். இப்படி பண்புகளில் வளர்வதைத்தான் அதன் மூலம் SUPER MIND வரை செல்ல முடியும் என்று கூறி பரிணாமத்திற்கான VERTICAL DEVELOPMENT என்கிறார்.
இதை வாழ்வில் நடைமுறைப்படுத்த பல எளிமையான வழிகள் சொல்லப்பட்டுள்ளன. நாம் அறிந்த உயர்ந்த நிலையில் நாம் எப்போதும் நின்று செயல்பட வேண்டும் என்பது அடிப்படை. அது அடுத்தடுத்த உயர்ந்த நிலைக்கு மனிதனில் இருந்து ஆன்மீக மனிதனுக்கு கொண்டு செல்லும்.உதாரணமாக இப்படி உயர்ந்த பண்பை, இறைவன் விரும்பும் பண்பை மனதில் வைத்து செய்வது என்பது நம்பிக்கை, FAITH இல்லாமல் இது வராது. அது முதல் முன்னேற்றம். பின் அதுவே GOODWILL, OTHERMAN POINT, GRATITUDE, RESPONSIBILITY, CHEERFULNESS , PERFECTION , EXPANSIVENESS என்று சூழலுக்கேற்ப இறைவன் விரும்பும் பண்பாக வெளிப்பட்டு, அதுவே நாளடைவில் மனப்பான்மையாக மாறி பின் நம் சுபாவமாகவே சுபாவமாக மாறுகிறது. அது சித்தமாக மாறும் போது நாம் பரிணாமத்தில் வளர்கிறோம். அதாவது SPIRITUAL INDIVIDUAL ன் குணங்களை வெளிப்படுத்துகிறோம். அதன் மூலம் அடுத்த கட்ட ஆன்மீக மனிதனாக மாறுகிறோம். இதுவே அன்னை விரும்புவது.
அதற்கான ஆரம்ப வழிகளாக சொல்லப்பட்ட சிலவற்றைத் தருகிறேன்:
– குறைந்த பட்சம் ஒரு ஆரம்பமாக நம்மளவில் நல்லவர் என்று நாம் நினைப்பவர் செய்யும் நல்லவற்றை செய்தல் அவர் செய்ய அஞ்சும் செயல்களை செய்யாமல் இருத்தல் .
– நம் ஜாதி, ஊர், சமுதாயம் கொண்ட நல்லது என்று ஒன்று இருக்கும் அதை பெருமபாலும் செய்தல் . உதாரணமாக தஞ்சை விவசாயிகளின் ஈகை குணம், சவுத் ஆற்காடு ரெட்டியார்களின் விருந்தோம்பல் , செட்டியார்களின் சக , தன் இன வியாபாரியை அல்லது கஷ்டப்படும் வியாபாரியை கை தூக்கி விடுவது , பிராமணர்களின் சாஸ்திரங்களின் மீதான பற்று அதை கடமையாக செய்வது என்று ஒவ்வொரு சாதி, மதம், இனம், சமூகம் ஆகியவற்றிக்கு ஒரு நல்லது உண்டு. அதை அதிக பட்சமாக செய்வது.
– பாவம், புண்ணியம், மனசாட்சி என்றெல்லாம் சில நமக்கு சொல்லப் பட்டு இருக்கும் . அதை அதிக பட்சம் நினைவில் இறுதி செய்வது.
– ஒவ்வொரு நிலையிலும் நமக்கு எது நல்லது எது கெட்டது எனபது தெரியும்.அதில் நல்லதை மட்டுமே செய்தல்.
– இந்த நிமிடம் முதல் நமக்கு எது உயர்ந்ததாக தெரிகிறதோ அந்த அளவு உயர்வான முறையில் செயல்படல்.
அடிப்படையான இவற்றை சித்தப்பூர்வமாக நடிப்பிற்க்காக கடைபிடித்தால் கூட நாளடைவில் அது நம் சுபாவமாக மாற வாய்ப்பிருக்கிறது. அது மனதின் பரிணாமத்தை வித்தாக கொண்டு இருக்கும்.
இதை தண்டி அன்னை மேல் நம்பிக்கை உள்ளவர்களுக்கு:
முதல் நிலையில் அன்னையிடம் நம் விருப்பத்தை சொல்லி விட்டு, அதற்காக நம்மால் செய்ய முடிந்த அத்தனையையும் செய்தல், எவ்வளவு பண்புகளைக் கொண்டு வரமுடியுமா அவ்வளவு பண்புகளையும் கொண்டு வருதல். அன்னைக்கு பிடிக்காத எதையும் அதில் கொண்டு வராமல் பார்த்து கொள்ளுதல்.
இரண்டாவது, அன்னைக்காக செய்வதாக நினைத்து செய்வது. உதாரணமாக நம் வீட்டை நாம் சுத்தம் செய்யும் விதம், அந்த அலட்சியம், மனநிலை ஆகியவற்றையும், தியான மையத்தை சுத்தம் செய்யும் சந்தர்ப்பம் கிடைத்தால் அதை சுத்தம் செய்யும் முறையை, மனநிலையை நினைத்துப் பார்த்தால் இது புரியும்.
மூன்றாவது, அன்னையை அனுப்பி , செய்யச் சொல்லி அதை அப்படியே நாமே செய்வது. இதன் productivity , காலம் சுருங்கும் தன்மை செய்து பார்த்தால் மட்டுமே புரியும்.
நான்காவது, அன்னையே செய்வதாக நினைத்துச் செய்வது. ஒரு விஷயத்தை அன்னை செய்தால் எப்படி செய்வார். அந்த திறமை, திறன், நேர்த்தி, செம்மை, நடத்தை, மனப்பான்மை, உணர்வில், அறிவில், ஆன்மாவில் என்று எப்படி இருப்பார் எப்படி நடப்பார் சமர்ப்பணம், சரணாகதி, அவர் பகவானிடம் இருந்த விதம் என்று நமக்குத் தெரிந்த அளவில், படித்தது , அறிந்தது, உணர்ந்தது என்று நமக்கு அன்னையை பற்றி எவ்வளவு தெரியுமோ அத்தனையும் செய்தல்.
நமக்கு நம் சித்த உயர்வு என்பது நம் மனப்பான்மை உயர்வில் மட்டுமே இருக்கிறது என்பது புரிய வேண்டும். அதன் சாரமாக நம் சுபாவம் திரு உரு மாறவேண்டும் என்பது புரிய வேண்டும் அது புரிந்தால், நம் பார்வை மாறும். CHANGING PERCEPTION நம் பார்வை மாறினால் அனைத்தும் மாறும். புதியன படைக்க முடியும். உதாரணமாக சுமுகம் என்பதற்கு HARMONY என்பதற்கு நமக்கு ஒரு பார்வை உண்டு. அதன் ஐந்து அல்லது ஆறு நிலைகளை பல முறை பேசி இருக்கிறோம். ஆனால் அது பற்றிய பார்வை மாறும் போது நாம் பெரும் சாரம் அல்லது ஞானம் என்னவென்றால் யாரும் முரண்பட முடியாத நிலைக்கு நாம் சென்று விட வேண்டும் என்பது தான். அது தான் COMPLETE ACT – ஐ த் தாண்டிய CREATIVE ELEMENT . ஒரு சிறு உதாரணம் மூலம் விளக்கலாம். எனக்கு ஒருவர் திருமண பத்திரிகை கொடுத்து நான் திருமணத்திற்கு வர வேண்டும் என்று நினைக்கிறார். சில காரணங்களால் என்னால் வர முடியாது என்று சொன்னால், பின் வருத்தம், முரண்பாடு வருகிறது. அதுவே திருமண பத்திரிகையை கர்மயோகிக்கு கொடுப்பதாக வைத்துக் கொள்வோம். தருவதையே புனிதமாக, அதை அவர் பெற்றுக் கொண்டதே ஆசீர்வாதமாக, அவர் வர வேண்டும் என்ற எண்ணம் கூட எழாது. அந்த நிலை முரண்பாடற்ற நிலை. அப்படி ஒவ்வொரு விஷயத்திலும் நாம் முன்னேறுவது CREATIVE ELEMENT. முன் நிலைக்கு செல்ல தேவை இல்லாத நிலை. சென்ற வாரம் சொன்ன என் கம்பெனி வளர்ச்சி – Distributor டு Manufacturer என்பதை இங்கு பொருத்தி பார்த்தல் இது புரியும்.
அடுத்த வாரம் மூன்றாவது நிலையைப் பற்றி பேசலாம்.