முன் சொன்ன பதினான்கு வழிகளிலும் வரும் தெளிவு, அதை செயல்படுத்தும் திறன் வந்த பிறகு நாம் பதினைந்தாவது வழிக்குச் செல்வோம்.
நடைமுறைப்படுத்தும் சாரம் புரிவது மிகப் பெரிய முன்னேற்றம். காரணம் இந்த நிலையில் நமக்கு CREATIVITY, INNOVATION, INVENTION என்று புது கண்டுபிடிப்புகள், வித்தியாசமான சிந்தனைகள், புது தளத்தை கண்டு பிடிப்பது (DISCOVERING NEW PLANE TO EXPRESS) அல்லது அடுத்த உயர்ந்த நிலைக்கு செல்லும் SHORT CUT என்று பலவும் உட்பார்வையாக, உள்ளுணர்வாக வர ஆரம்பிக்கும். அது உங்களை மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுத்திக் காட்டும், ஆயிரம், லட்சம் மனிதர்களில் ஒருவன் என்பதில் இருந்து பத்தில் ஒருவன் என்னும் நிலைக்கு வருவோம். அந்த நிலைக்கு வரும் போது, அதற்கான மரியாதை, ஆற்றல், அந்தஸ்து, தொடர்புகள், நீங்கள் சந்திக்கும் மனிதர்கள், அனைத்தும் வேறு நிலையில் மிக உயர்ந்த நிலையில் இருக்கும். ஒரு ஸ்தாபனத்தின் அல்லது சமுதாயத்தில் உயர்ந்த நிலையில் இருப்பவர்களின் தொடர்பு ஏற்படும் அளவு சூழல் அமையும்.
ஒரு முறை PUNJAB BORDER இல் ஒரு PROJECT க்காக சென்ற போது அது வரை PURCHASE MANAGER நிலையிலேயே உரையாடல்கள் நடந்தது. SITE INSPECTION க்கு சென்ற போது நாங்கள் இறங்கிய விமான நிலையத்தில் இருந்து அந்த இடம் சுமார் 100 km என்று தெரிந்தது. பேருந்தில் மட்டுமே செல்ல முடியும் என்று தெரிய வந்தது. அந்த பேருந்தும் பெங்காலி படங்களில் வருவது போல, ஆடு மாடு, மனிதர்கள், பொருட்கள் என்று அனைத்தையும் ஒன்றாக ஏற்றிச் செல்லும் பேருந்து. சரியாக கேட்காத என் முட்டாள்தனத்தை நினைத்து வேதனைப்பட்டுக் கொண்டே SITE க்கு சென்றேன். அங்கு சென்ற பிறகு அங்கு இருந்த MD யிடம் என் BUSINESS CARD ஐ கொடுத்த பிறகு – இந்த கம்பெனியை பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன் என்று கூறி ஒரு சாதாரண SUPPLIER ஆக உங்களை நடத்தியதற்கு மன்னிக்கவும் என்று கூறி தன் BMW காரை பயன்படுத்தி கொள்ள சொல்லி, தன் மாளிகை போன்ற GUEST HOUSE இல் தங்க வைத்து ராஜ மரியாதை தந்ததுடன், சீக்கியரின் பொற்கோயிலுக்கு தனி மரியாதையுடன் சென்று வர அனுமதி பெற்று தந்து கவனித்தார். என் TECHNICAL KNOWLEDGE பெற்றுத் தந்த மரியாதை அது. இது பல முறை நடந்து இருக்கிறது.
ஒரு கம்பெனியின் PURCHASE MANAGER ன் நிலையில் எப்போதும் L1, L2, L3 என்று சொல்லப்படும் யார் குறைவாக கொடுக்கிறார்களோ அவர்களுக்கே ORDER என்னும் நிலையே இருக்கும். போட்டி கடுமையாக, கர்மயோகிக்கு ஒத்து வராத லஞ்சம், பரிசுகள் என்ற நிலையும் சேர்ந்தே வரும். ஆனால் TECHNICAL க்கான திறன், கீர்த்தி பெற்ற பிறகு என் பேச்சு வார்த்தைகள் பெரும்பாலும் தரத்தைப் பற்றி, QA / QC எனப்படும் தரம் சோதனை செய்யும் மனிதர்கள் உடன் தான் இருக்கும். அவர்கள் இது தான் வேண்டும் என்று சொன்ன பிறகு PURCHASE இல் மாற்ற முடியாது. விலை குறைவு என்பதால் வேறொன்றை வாங்க முடியாது. அதனால் எனக்கு 10% TO 15% அதிக விலை கிடைக்கும். இது வாழ்விலும் பரிணாமமாக மாறும்.
வேலை செய்யும், சம்பளம் வாங்கும் நிலையில் உள்ள ஒருவர் இயல்பாகவே இந்த திறமைகளை வைத்து அடுத்த நிலை வருமானத்தை தேடுவார். அது பல நேரங்கள் – LIAISING ஆக மாறும். பின் தான் ஈடுபடும் துறைக்கான பொருளை வாங்கி விற்கும் SELLER, பின் DISTRIBUTOR என்று மாறும். பின் பின் அதே பொருளை தயாரிக்கும் தொழில் முனைவர் ஆக ENTREPRENEUR ஆக மாற வேண்டும்.. இது பற்றிய இந்த PROCESS பற்றிய விளக்கத்தை கர்மயோகி சில புத்தகங்களில் எழுதி இருக்கிறார். ஒவ்வொரு அன்பரும் சம்பளம் வாங்குபவர் என்பதில் இருந்து தொழிலதிபராக வர வேண்டும் என்று பல கட்டுரைகள் எழுதியிருப்பார். என் வாழ்வில் அது அப்படியே நடந்தது. 6000 ரூபாய் சம்பளத்தில் சேர்ந்த நான், ஒரு லட்சம் என்று MARKETING INCENTIVE கிட்டத்தட்ட LIAISING என்னும் முறை – அடைந்தேன். பின் அந்த PRODUCT ன் DISTRIBUTOR ஆனேன். பின் அதே PRODUCT ஐ நானே என் BRAND இல் தயாரிக்க ஆரம்பித்து விட்டேன். இன்று பெயர் சொன்னால் ஓரளவு தெரியும் அளவிற்கு வளர்ந்து இருக்கிறது. குறிப்பாக தரமான பொருள் என்னும் பெயரை பெற்று இருக்கிறது. இதன் பின்னால் இருந்தது தொழிலின் சாரம் புரிந்ததால் வந்த CREATIVITY, INNOVATION அதனால் என் PRODUCT இல் நான் ஏற்படுத்திய வித்தியாசம். இது உண்மையில் பரிணாமம். ஒரு தொழிலாளி, முதலாளி ஆவது பரிணாமம் அல்லாமல் வேறு என்ன என்று கேட்கிறார் கர்மயோகி.
இந்த இடத்தில் வாழ்வில் பரிணாமம் என்பதை விளக்க வேண்டி உள்ளது. ஒருவரது வாழ்வை நடத்துவது குணம். விளக்கம் அளிப்பது அறிவு. வழிவகுப்பது மனப்பான்மை. அது வெளிப்படுவது நடத்தை. இவை அனைத்தும் அமைவது அடிப்படை சுபாவத்தை ஒட்டியே. அந்த சுபாவம் அமைவது பெரும்பாலும் பெற்றோர்களிடமிருந்து, வளரும் சூழல், படிக்கும் சூழல் , இது இல்லாமல் ஆழ்மனதில் இருக்கும் முன் ஜென்ம நினைவுகள், இவையெல்லாம் நாம் நினைக்கும் அனைத்தையும் பழக்கமாக செய்ய, சுபாவம் மாற்றி விடும். எந்த உயர்ந்த அறிவை பெற்றாலும் வழக்கமாக செய்வதையே செய்துக் கொண்டு இருப்போம். காரணம் சுபாவத்தை ஒட்டியே நம் குணம் வெளிப்படும். பெரும் அறிவும் சுபாவத்தை ஒட்டி புரிந்துக் கொண்டதாகவே இருக்கும். அதனால் சில நேரம் தேவைக்கு ஏற்ப சுபாவம் மாறுமே தவிர அடிப்படையை மாற்ற முடியாது. என்னதான் திறமை , திறனைப் பெற்றாலும் – ஒரு செயல் என்று வரும்போது நம் சுபாவமே வெளிப்படும்.. சுபாவத்தை மாற்றும் திறன் வளரும் ஆன்மா, பரிணாமத்தை விரும்பும் ஆன்மாவிற்கே உண்டு. அது பண்புகள் மூலம் – ஆன்மா விரும்பும் பண்புகள் மூலம் – வெளிப்படும். நோக்கம், மனப்பான்மை மூலம் மாறும். அது வாழ்வில் வளமாக, நிச்சய வெற்றியாக வெளிப்படும்.
இது வரை சொன்ன பதினைந்து வழிகளில் நம் சுபாவம் நமக்கு பிடிபட்டுவிட்டால், அது பற்றிய தெளிவு நமக்கு வந்தால், அதில் நம் முன்னேற்றத்திற்கு எதிரான விஷயங்கள் இருந்தால் அதை களைந்து மாறுவதே பரிணாமம். உதாரணமாக என்னதான் அறிவு சொன்னாலும், திறன் பெற்று இருந்தாலும் – ஒரு விஷயத்தை தள்ளிப்போடும் பழக்கும் இருந்தால் அதற்கு எதிரான சுறுசுறுப்பை சுபாவத்தில் ஏற்றுக் கொள்ள செய்ய வேண்டும். ஒரு கட்டாயத்திற்காக அதை மாற்ற முடியும். அது பல நேரங்களில் வாழ்வின் மறுமொழியை அடுத்த உயர்ந்த நிலையில் தரும். ஆனால் அது சுபாவமாக மாற வேண்டும் என்றால் அது பற்றிய நோக்கம், மனப்பான்மை (MOTIVE AND ATTITUDE ) மாற வேண்டும். ஆன்மா விரும்பும் பண்பாக – சுறுசுறுப்பு திருவுருமாற்றம் என்றோ, அல்லது இறைவன் விரும்பும் பண்பு என்றோ நோக்கமும், மனப்பான்மையும் மாறும் போது அது சுபாவத்தையே மாற்றுவதாக அமையும். அப்போது வாழ்வு தரும் மறுமொழி நிரந்தரமாக இருக்கும்.
பரிணாமம் என்பது இறைவன் விரும்புவது. எந்த தேவையையும், எந்த செயலையும் , நோக்கம், பரிணாமம், மனமாற்றம், உயர்ச்சித்தம் என்னும் பார்வையில் பார்க்க ஆரம்பித்தால், இறைவன் விருப்பம் நிறைவேறுகிறது என்பது பொருள். அப்படி என்றால், அதற்கு தடையான அகந்தை கரைய வேண்டும். அதை செயல்படுத்தும் சுபாவம் திருவுருமாற வேண்டும். அதை நோக்கம் மாறும்போது, மனமாற்றம் வரும் போது மட்டுமே செய்ய முடியும்.
உதாரணமாக ஏராளமான கடன் ஏற்பட்ட ஒருவர், கடன் தீர வேண்டும் என்று உண்மையாகவே நினைக்கலாம். ஆனால் ஒரு பெருந்தொகை வரும் போது முதலில் கடனை தர வேண்டும் என்று அறிவு சொன்னாலும், சுபாவம், தான் ஆசைப்படும் ஏதாவது ஒன்றுக்கு செலவு செய்ய மனதை தூண்டும். கடன் தீர்ந்து நிம்மதியாக இருப்பது முக்கியம் என்று அறிவுக்குத் தெளிவாக தெரிந்தால் கூட, அன்றாட செலவுகளில், மற்ற செலவுகளில் அதற்கான சிக்கனத்தை கடைபிடிக்கவிடாமல், செலவுகளை பெருமளவு குறைக்கவிடாமல், மற்ற விஷயங்களில் அகல கால் வைக்கும் விதங்களை சுபாவமே நடத்துவதை நாம் கவனிப்பதில்லை. நம் ஆசைக்கு, ஆர்வத்திற்கு, பகட்டிற்கு, சமுதாயத்திற்கு என்று சுபாவம் செலவழிப்பதை நாம் கவனிப்பதில்லை. எவ்வளவு உழைத்தாலும் கடன் தீருவதில்லை. இது வாழ்வின் நடைமுறை. ராசி, அம்சம், கர்மம், என்றோ அன்னை எனக்கு உதவவில்லை என்றோ சொல்லிவிடுவோம். அதன் பின்னால் அகந்தை நடத்தும் இந்த சுபாவத்தை மாற்றுவதற்கான நோக்கம், மனப்பான்மை தேவை. இந்த சிறு சிறு அகந்தையின் திருப்தியை விட வாழ்வில் ஆனந்தம் வேண்டும் என்னும் தொலைநோக்கு இருக்க வேண்டும். அதற்கு கடன் இயலாமையின் வெளிப்பாடு. பிறர் சொத்து, அதை தந்தே தீர வேண்டும் என்னும் தீவிரம் மனதிற்கு வரவேண்டும். அதுவே இறைவன் விரும்பும் மனமாற்றம். அது கடனை தீர்ப்பதைத் தவிர வேறெதையும் செய்ய மாட்டேன் என்னும் வெளிப்பாடாக, நடத்தையாக மாற வேண்டும்.
இப்படி கடன் விஷயத்தில் இருப்பது போல, நம்முன் உள்ள ஒவ்வொரு பிரச்சினையிலும், நம் முன் விருப்பம், முன் முடிவுகள், அபிப்பிராயங்கள், சுயநலம், அறியாமை இருக்கும். அதை ஒட்டிய அகந்தையின் பண்புகளே சுபாவத்தின் மூலம் வெளிப்பட்டு நடத்தையாக மாறி இருப்பது தெரிய வரும். அதன் பின் உள்ள நோக்கத்தை ஆராய்ந்து அதற்கான மனமாற்றத்தை பெறுவது நிச்சய வெற்றிக்கு வழி வகுக்கும்.
நாம் உள்ள நிலையிலேயே அனைத்தையும் செய்யாமல், நாமிருக்கும் நிலைக்கான ஆசை, எதிர்பார்ப்பு என்று குறுகிய வட்டத்துள் இல்லாமல் அடுத்தடுத்த நிலைகளை பற்றி சிந்தித்து அது உயர் சித்தம் மூலம் மட்டுமே வரும் என்று நம்பி அதற்கான நோக்கத்தை ஏற்றுக்கொள்வது , அதற்கு தேவையான வழிகளை – இதுவரை சொன்ன பதினான்கு வழிகளை ஏற்று கொள்வது மனமாற்றம்.
முன்பு சொன்னது போல நமக்கு தெரிந்த அனைத்தயும் நாம் வழக்கமாக பழக்கத்தின் அடிப்படையில் செய்கிறோம். அது habit என்னும் நிலையில் இருக்கிறது. அது unconscious. அதை conscious செய்யும்போது அது skill ஆகி- capacity, ability, capability , talent என்று மாறுவது, ஒரு செயலுக்கான நம் மன மாற்றத்தின் அறிகுறி. ஜடமான நிலையிலிருந்து அறிவுக்கு வரும் மனமாற்றம். எதையும் அடுத்த நிலைக்கு உயர்த்த முடியும். அதற்கான முறைகளை ஆராய்வது – mental attitudes – எனப்படும் அறிவின் மாற்றம். அது உயர் ஞானத்திற்கான மன மாற்றம். அது awareness, strategy, master stroke, secret of success, essence of work – என்று பல நிலைகளுக்கு கொண்டு செல்லும். அவையெல்லாம் காலத்தை சுருக்கும் தன்மை கொண்டவை என்பதால் அவற்றை எல்லாம் ஆன்மா செயல்படுவதற்கான மனமாற்றம் எனலாம். ஒரு செயலில் வீரமும் அறிவும்செயல்திறனும் மட்டுமல்ல – விவேகம் வேண்டும், உயர் மனப்பான்மையும் வேண்டும், பாகுபாடும் தெரியவேண்டும்- என்ற சாரம் புரிவதற்கான மனப்பான்மை அது. நாம் அறிந்த வெற்றி பெற்றவர்களின் வாழ்வை ஆராய்ந்து பார்த்தல் இவை அனைத்தும் அவர்களிடம் இருப்பது தெரியும்.
வாழ்வு பாடம் கற்றுக் கொடுக்கும் இடங்கள் , முன்னேற்றம் இல்லாமல் நிற்கும் இடங்கள் – திருவுருமாற,பரிணாமத்தில் முன்னேற வேண்டிய இடங்கள், வாழ்வு கட்டாயப்படுத்தி நாம் செய்வதற்கு பதிலாக நாமே செய்துவிட்டால் வாழ்வு MIRACLE என்று சொல்லும் அளவிற்கு இருக்கும்.
அடுத்த வழியை பற்றி அடுத்தவாரம் பேசலாம்.