இரண்டாவது, அன்னைக்காக செய்வதாக நினைத்து செய்வது. அது நம் இருண்ட சுபாவம் அத்தனையையும் அடக்கி வைக்கும். உதாரணமாக நம் வீட்டை நாம் சுத்தம் செய்யும் விதம், அந்த அலட்சியம், மனநிலை ஆகியவற்றையும், தியான மையத்தை சுத்தம் செய்யும் சந்தர்ப்பம் கிடைத்தால் அதை சுத்தம் செய்யும் முறையை, மனநிலையை நினைத்துப் பார்த்தால் இது புரியும்.
மூன்றாவது, அன்னையைச் செய்யச் சொல்லி அதையே செய்வது. உதாரணமாக லஞ்சம் மிகுந்த அலுவலகத்தில் ஒரு வேலை ஆக வேண்டுமென்றால், நான் முதலில் அதன் அருகில் இருக்கும் பெட்டிக் கடையில் விசாரிப்பேன். டீ , வடை சாப்பிடுவேன். பின் reception அல்லது despatch -ல் என்று முன்னுரிமைக்கு tips கொடுப்பேன். அந்த காரியம் முடிய என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வேன். இதை அப்படியே அன்னையை செய்யச் சொல்வதாக சொல்லி – Mother நேராக இந்த file -ஐ எடுத்துக்கொண்டு பெட்டிக்கடைக்கு செல்லுங்கள். பின் ஒரு டீ , வடை சாப்பிட்டுக்கொண்டே ஆட்களை பற்றி விசாரியுங்கள், யார் முடித்து கொடுப்பார்கள் என்று பாருங்கள், Receptionist அல்லது despatch clerk க்கு லஞ்சம் கொடுங்கள். பிறகு உயரதிகாரியிடம் சென்று பேசி என்ன செய்ய வேண்டுமோ செய்யுங்கள் என்று அன்னையிடம் சொல்ல முடியாது. Mother இந்த வேலை ஆக வேண்டும், இந்த பிரச்சினை இருக்கிறது. நீங்கள் பேசித் தீர்த்துக்கொடுங்கள் என்றே சொல்ல முடியும். அதன் படியே நாம் செய்வது . நேரே சென்று அந்த அதிகாரியைப் பார்த்து விளக்குவது. முடிவை அப்படியே ஏற்றுக்கொள்வது மூன்றாவது முறை.
நான்காவது, அன்னையே செய்வதாக நினைத்துச் செய்வது. ஒரு விஷயத்தை அன்னை செய்தால் எப்படி செய்வார். அந்த திறமை, திறன், நேர்த்தி, செம்மை, நடத்தை, மனப்பான்மை, உணர்வில், அறிவில், ஆன்மாவில் என்று எப்படி இருப்பார் எப்படி நடப்பார் என்ற நமக்குத் தெரிந்த அளவில் செய்தல். அதாவது குறைந்த பட்சம் உடலில், உணர்வில், அறிவில் , நாம் அறிந்த ஆன்மாவின் பண்புகளை கொண்டு வந்து ஒரு காரியத்தை செய்வது. செய்யும் செயல் அனைத்தையும் நாம் அறிந்த உயர்ந்த நிலையில் செய்வது .
இந்த நான்கு முறைகளில் எதைச் செய்வதாக இருந்தாலும் அதற்குத் தேவை அன்னைக்கான ஆர்வம். அந்த ஆர்வம் தருவது இடையறாத அன்னை நினைவு, இடையறாத அன்னை நினைவு என்பது சமர்ப்பணம்.
அதற்கு விளக்கமாக கர்மயோகி கூறுவது – மேற்சொன்ன நான்கு மன நிலைகளில் நம் அபிப்ராயங்கள் இல்லை – அதனால் புதியன ஏற்கும் தடை இல்லை. எதிர்பார்ப்பு இல்லை. அதனால் ஏமாற்றம் இல்லை. முன்முடிவு இல்லை, விருப்பத்தேர்வு இல்லை, சுகச் சார்புகள் இல்லை, அதாவது நம் சுபாவத் தடைகள் பெரும்பாலும் இல்லை என்பதால் அன்னை சக்தி அதிகமாக செயல்பட முடிகிறது. அன்னை விரும்புவதைத் தர முடிகிறது. அதனால் அது சமர்ப்பணமான செயலாக மாறுகிறது. அன்னை தருவதை அன்னை விரும்பும் பண்புகளே பெற முடியும். நம் பண்பின் அளவு அருளின் அளவை நிர்ணயிக்கிறது. 1 கிலோ பிடிக்கும் பையில் 10 கிலோ வைக்க முடியாது. உதாரணமாக நம்மை ஒருவர் தூண்டும் போது உள்ளே கொதித்தாலும் வெளியே அமைதி காப்பது முதல் நிலை என்றால், equality – சமநிலை அதன் முடிவான நிலை. அதற்கு ஏற்றாற்போல, அன்னை சக்தி செயல்பட்டு சமர்ப்பணத்தை ஏற்றுக்கொள்ளும்.
நாம் சமர்ப்பணம் என்று சொல்லும் போது , அன்னை சக்தியை அழைப்பது போல, நம் அகந்தையின் சுபாவங்கள் அதன் வெளிப்பாடுகள் ஏராளமான மற்ற சக்தியை அழைக்கிறது. அதை நாம் கவனிப்பதில்லை. எல்லா சக்திகளும் ஒன்றாக வேலை செய்யும் போது ஒன்றை ஒன்று எதிர்க்கவே செலவாவதால், அல்லது அன்னை சக்தி அகந்தையை அடக்க முயல்வதால் பலன் குறைவாகவே கிடைக்கிறது. அதிகபட்ச அன்னை சக்தி அதிகபட்ச அன்னை விரும்பும் பண்புகளாலேயே வரும். அதிக பட்ச பண்புகள் நம் அதிக பட்ச sincerity இடையறாத நினைவு என்பதால் அது சமர்ப்பணமான செயலாக மாறும். எந்த சக்தி அதிகமாக வேலை செய்கிறது என்பதை பொறுத்து பலன் மாறும்.
இவற்றைத் தாண்டி சமர்பணத்திற்கு என்று ஒரு இடத்தை நம்மில் ஏற்படுகிறது அதன் அடுத்த கட்டம். – Creating a place of awareness – அது நெற்றி புருவ மத்தியாக இருக்கலாம், நெஞ்சுப் பகுதியாக இருக்கலாம். அங்கே சத்தியத்தின் சக்தி, அல்லது அன்னை இருப்பதாக நினைத்து ஒவ்வொரு நினைவு, சொல், ஆகியவற்றை அதனிடம் சொல்லி அதன் ஒப்புதலுடன் செய்வது என்று ஆரம்பித்தால் சமர்ப்பணம் தானே வரும். பொது புத்தி , உள் பார்வை, உள்ளுணர்வு ஆகியவை வளரும்போது அன்னை என்ன சொல்கிறார், எதைச் செய்கிறார், எதற்காக செய்கிறார் என்பது புரியும். கர்மயோகி சொல்லும் விவேகம், பாகுபாடு புரியும். It should become our causal plane என்கிறார் கர்மயோகி. உதரணமாக என்னை பொறுத்தவரை , நெற்றி போட்டு , புருவமத்தி, இதயத்திற்கு பின்னால் என்றெல்லாம் என்னால் நினைவு கூற முடிவதில்லை. அதனால் ஒரு கணம் நிதானித்து , என் பர்ஸில் இருக்கும் பிளெஸ்ஸிங் பாக்கெட் அல்லது அன்னை சிம்பல் டாலர் – இடம் கேட்டு செய்வது போல கற்பனை செய்வேன். அதுவே எனக்கு causal plane ஆக மாறுகிறது. பல இக்கட்டான நேரங்களில் அங்கே ஒரு அதிர்வு ஏற்படுவதை கவனித்து இருக்கிறேன். சரியான வழியை காட்டுவதை கவனித்து இருக்கிறேன்.
அத்தகைய causal plane நம் வாழ்வை நடத்தும் விழிப்புணர்வு தளமாக, அன்னையின் தளமாக இருக்க வேண்டும், உடல், உணர்வு, அறிவு என்னும் தளங்கள் அதனுள் அடங்க வேண்டும். causal plane -ம், subtle plane -ம் எங்கோ இருப்பதாக நினைக்கிறோம். ஆனால் நாம் ஒரு இடத்தை உருவாக்கி அதை அன்னை இருக்கும் இடமாக மாற்றினால் அதை மீறிய சாதிக்கும் சக்தி வேறு எதுவும் கிடையாது. வாழ்வே சமர்ப்பணமான வாழ்வாக இருக்கும்.
காரணம் ஒவ்வொரு முறை நாம் ஆசைப்படும்போதும், விரும்பும்போதும், செயல்படும்போதும், சாப்பிடும்போதும், தூங்கும்போதும் அதனிடம் கேட்டு செய்யும் போது , நாம் அறிந்த அன்னை வழிகளைச் செய்யும் போது நாம் நம் பழக்கங்கள், அபிப்ராயங்கள், முன் முடிவுகள், சுகசார்புகள், சுயவிருப்பங்கள், ஆகியவற்றிலிருந்து இழை இழையாக வெளியே வருகிறோம். உயர் சித்தத்திற்கு செல்கிறோம். நம் சுபாவத்தில் இருந்து நாம் வெளியே வருவதாக நினைத்தாலும் , உண்மையில் வெளியே வருவது ஆன்மா.
Saving higher consciousness is saving higher force – which is Grace என்கிறார் கர்மயோகி . நம் நிலைக்கு ஏற்றாற்போல அது luck, grace, Mother”s Grace, Super Grace, Supramental Grace என்று வாழ்வில் அற்புதங்களை நட த்தவல்லது. இதுவே வாழ்வு முறையாக மாறும்போது சமர்ப்பணம் சரணாகதியாகிறது. அன்று நாம் அன்னையின் கருவியாகிறோம். அப்போது நம் வாழ்வை நாம் நடத்தவில்லை, அன்னை நம்மை, நம் வாழ்வை, தான் ஏற்று தனக்காக நடத்திக் கொள்கிறார்.
இதன் தொடர்ச்சியை அடுத்தடுத்த கட்டுரைகளில் பகிர்ந்து கொள்கிறேன்.
இந்த பக்கத்தை / லிங்க்-ஐ மேல இடது புறம் உள்ள WhatsApp , Telegram logo வை கிளிக் செய்தால் பிறருக்கு பகிர முடியும்.