Share on facebook
Share on telegram
Share on whatsapp

சமர்ப்பணம் – ஒரு பார்வை -2

நாம் சமர்ப்பணம் என்று சொல்வதெல்லாம் நம் வேண்டுதல்களே. Prayers என்பதே நம் எதிர்பார்ப்பு, ஆசை, ஆகியவற்றை தரச் சொல்லி, முடிந்தால் அதையெல்லாம் நாம் நினைக்கும் வழியிலேயே தரச் சொல்லி வைக்கப்படும் கோரிக்கை மனுக்கள். ஒரு சாதாரண மனிதனின், குடும்பஸ்தனின் கஷ்டத்தை அன்னை புரிந்துக் கொள்கிறார். அதை ஏற்றுக்கொள்கிறார். ஒரு சில முறை நம் குணக்கேடுகளையும் மீறி பலிக்கிறார். ஆனால் ஓரிரு முறைக்குப் பிறகு நம் சமர்பணத்தில் ஒரு உயர் சித்தம், ஒரு உயர் மனப்பான்மை, ஒரு உயர் பண்பு தேவை என்னும் நிலைக்கு நாம் வரவில்லையென்றால், அன்னை திரும்பிப் பார்ப்பதேயில்லை. நாம் கேட்பதை கொடுப்பது மட்டுமே அன்னையின் வேலை இல்லை. அன்னையின் அவதார நோக்கம் திருவுருமாற்றம். அதை விரும்பாதவர்கள் மட்டுமே என்னை வழிபடுவதே போதும் என்று இருக்கிறார்கள். அவர்களை நான் ஊக்குவிப்பதில்லை என்கிறார் அன்னை.

இதிலிருந்து என்ன புரிகிறது என்றால் நம் சித்தம், மனப்பான்மை, பண்புகளுக்கு ஏற்ற நிலைகளிலேயே சமர்ப்பணம் அன்னையால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. பலனும் அதற்கு ஏற்றாற்போலவே இருக்கிறது. குறிப்பாக நம் சுபாவத்தில் உள்ள தடைகள், நம் நம்பிக்கைகள், நம் அபிப்ராயங்கள், முன் முடிவுகள், சுக சார்புகள் அதை நிர்ணயிக்கிறது.

அப்படியென்றால் சமர்ப்பணம் என்பது அன்னை விரும்பும் அனைத்தையும் உள்ளடக்கியதாக இருந்தால் அது உயர்ந்த நிலையில் பலிக்கும் என்றாகிறது. காரணம் சமர்ப்பணம் என்பது ஒரு கோரிக்கையை அன்னையிடம் வைப்பது. ஒரு அரசு அலுவலகத்தில் ஒரு கோரிக்கையை வைப்பதற்கும், முதல் அமைச்சர், பிரதம மந்திரி ஆகியோரிடம் ஒரு கோரிக்கையை வைப்பதற்கும் தேவையான மனப்பான்மை, அந்தஸ்து, சட்டங்கள் நமக்குத் தெரியும். அது போல அன்னையிடம் ஒரு கோரிக்கையை வைப்பதற்குத் தேவையான சட்டம் purity (அப்பா purity என்பதை – That which always wishes Divine Will to be established என்று கூறுகிறார்) உன்னுள் எது அன்னையின் விருப்பம் நிறைவேறட்டும் என்று இருக்கிறதோ அதுவே தூய்மையின் இருப்பிடம். purity. அது குறைந்த பட்சம் அன்னை விரும்பும் மாற்றத்தை நம்மிடம் கொண்டு வர வேண்டும் என்னும் தூய எண்ணத்தை உள்ளடக்கிய சமர்ப்பணமாக இருக்க வேண்டும்.. அதை வேறு வகையாக allowing free flow of Divine Force – அன்னையின் சக்தி நம்முள் தடையில்லாமல் பரவ உதவுவது என்று எடுத்துக்கொள்ளலாம் . அது பரவ அனுமதிக்கும் அளவிற்கு அதன் பலனும் இருக்கும்.

அன்னையின் சக்தி ஊடுருவுவதைத் தடை செய்வது எது என்று பார்த்தால் நம் சுபாவம், நடத்தை, முன் முடிவு, அபிப்ராயங்கள், விருப்பத்தேர்வுகள் , சுகசார்புகள் என்று ஏராளமானவைத் தடைகளாக, நாம் நினைத்ததும் நடக்காமல், அன்னை நினைப்பதும் நடக்க விடாமல் இருக்கிறது. அன்னை சக்தி, பரிணாம வளர்ச்சிக்கான சக்தி என்பதால் சமர்ப்பணம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் அது வந்து இறங்குகிறது. இறங்கியவுடன் நம் தற்போதைய personality ஏற்க முடியாத , நமக்கு பிடிக்காத ஒரு சூழல், ஒரு மனிதன், ஒரு நிகழ்வு மூலம் அது செயல்பட நினைக்கிறது. அதனால் தான் சமர்ப்பணம் பிடிக்காத விஷயங்கள் மூலம் வரும் என்று சொல்லப்படுகிறது. உண்மையில் அது ஒரு திறமை, ஒரு திறன், ஒரு மனப்பான்மை, ஒரு ஞானத்தை அடுத்த நிலையில் தரவே வரும். கர்மயோகி இதை அடுத்த உயர்ந்த நிலைக்கான அன்னையின் அழைப்பு என்கிறார்.

நாம் சமர்ப்பணம் செய்து பெற்றதாகச் சொல்பவற்றை கவனித்து, ஆராய்ந்து பார்த்தால் இது புரியும். உண்மையில் அன்னை விரும்பும் “adventure of consciousness ” இது. ஆனால் – நாம் அந்தத் தடைகளை, முரண்பாடுகளை புறந்தள்ளி அதையும் சமர்ப்பணம் என்று சொல்லி, அதையும் அன்னையே செய்வார் என்று எதிர்ப்பார்க்கிறோம். ஒவ்வொரு சமர்பணத்திலும் முன்பு இருந்த மனப்பான்மை, சித்தத்தில் ஒரு இழையாவது முன்னேற்றம் வேண்டும் என்று நினைக்காமல், நான் மனப்பான்மையில், திறமையில், திறனில், நடத்தையில், சித்தத்தில் அப்படியே இருப்பேன் என்றால் முடிவு மட்டும் எப்படி வேறு மாதிரி இருக்கும். விதி வலியது, எதற்கும் ஒரு அளவு உண்டல்லவா என்று சமாதானப்படுத்திக்கொள்வோம். சமர்ப்பணம் பலிக்கவில்லை என்று சொல்லி நாம் வீணே ஏமாற நேரிடும்.

ஆனால் சமர்ப்பணம் செய்தவுடன் நம் சிந்தனை, சூழல் ஆகியவற்றை கவனித்தாலே நாம் செய்ய வேண்டியதை அது சுட்டிக்காட்டுவதைக் காண முடியும். உண்மையில் அந்த நிலை insight, intuition போன்ற யோகப் பண்புகளைத் தர முயல்கிறது என்பதே உண்மை. அவை பற்றி பேசுவது இந்த கட்டுரையை திசை மற்றும் என்பதால் சமர்பணத்தின் வழிகளை – Process of consecration -ஐ மட்டும் பார்ப்போம்.

இப்போது சொன்ன அத்தனையும் ஆராய்ந்தால் நம் சமர்ப்பணத்தில் நாம் பார்ப்பது – aspiration – நம் அன்னைக்கான ஆர்வம். அப்படிப் பார்த்தால் சமர்ப்பணம் என்பது ஒரு யோக பண்பு, ஆன்மீக முறை என்றாலும் அது ஒரு சட்டத்திற்கு உட்பட்ட ஒரு சக்தி என்பது புரியும். புரிந்தால் ஒரு தேர்வில் வெற்றி பெறுவது போல, ஒரு தேர்தலில் வெற்றிப் பெறுவது போல சட்டங்களையும், முறைகளையும் உள்ளடக்கிய, நம்மை அடுத்த நிலைக்குக் கொண்டுச் செல்லக் கூடிய ஒரு திறனாய்வு என்பது புரியும்.

முன் சொன்ன free flow of force – அன்னையின் சக்தி செல்லும் வழிகளை அடைக்கும் அத்தனையும் ஒரு தலைப்பில் கொண்டு வந்தால் அது “அகந்தையின் வடிவங்கள்” என்பதாக இருக்கும். நம் சமர்ப்பணத்தில் எந்த அளவு அகந்தையின் வடிவங்களான முன் முடிவு, அபிப்ராயங்கள், விருப்பத் தேர்வுகள் , சுகச் சார்புகள், எதிர்பார்ப்பு, எதிர்வினை, அன்னை விரும்பாத குணங்கள் , நடத்தைகள், மனப்பான்மை, இல்லாமல் இருக்கிறதோ அந்த அளவிற்கு அது நினைத்தே பார்க்காத அற்புதங்களாக, வியத்தகு நிகழ்ச்சிகளாக நடக்கும். ஆனால் வாழ்வில் பட்ட அடிகளால், எப்போதும் மனதில், உணர்வில், எதிர்வினையாற்றும் சிந்தனையோடு, படுத்துக்கொண்டு இருந்தாலும் கால் ஆட்டிக் கொண்டே இருக்க வேண்டும், இல்லையென்றால் புதைத்து விடுவார்கள் என்னும் உஷார் தன்மையோடு எப்போதும் இருக்கும் என் போன்ற சராசரி மனிதர்கள் அகந்தையின் வடிவங்களிலிருந்து வெளியே வர முடியுமா?

அதற்கு அப்பா சொல்லும் ஒரு வழி – அன்னை விரும்பும் பண்புகளை அதிகபட்சம் கொண்டு வரும் போது, நம் அகந்தையும் அதன் வெளிப்பாடுகளும் குறைகிறது.

முதல் நிலையில் அன்னையிடம் நம் விருப்பத்தை சொல்லி விட்டு, நம்மால் செய்ய முடிந்த அத்தனையையும் செய்தல், எவ்வளவு பண்புகளைக் கொண்டு வரமுடியுமா அவ்வளவு பண்புகளையும் கொண்டு வருதல். இதில் விருப்பத்தைச் சொல்லுதல், அல்லது prayer – வேண்டுதல் என்பதை ஒரு மிகப் பெரிய ஆன்மீகச் சொல் என்பதை நாம் புரிந்துக்கொள்ளவில்லை என்கிறார். நாம் சமர்ப்பணம் என்னும் பெயரில் நம் விருப்பத்தையும் அதற்கான வழிகளையும் அன்னையிடம் சொல்கிறோம். பின் அது சம்பந்தமான எதிர்பார்ப்பு, அது தொடர்பான எண்ணங்கள், அனுபவங்கள், என்ன நடக்கும், எது நடக்கும், எப்படி நடக்கும், எப்படி நடக்கக்கூடாது, அதற்கு அன்னை என்ன செய்ய வேண்டும் என்பதையே மனம் மீண்டும் மீண்டும் சொல்லும். அதை விரும்பி ஏற்று ஓரிரு முறை இது எனக்குத் தேவையில்லை என்று அன்னை உருவத்தை நினைப்போம். அதை சமர்ப்பணம் என்று நினைப்போம். அப்படி இல்லாமல் ஓரிரு வரியில் உங்கள் தேவையை அன்னையிடம் சொல்ல முடிந்தால் ( formulating a prayer) அதுவே 75 சதவிகிதம் வெற்றியைத் தரும். மீதி 25 சதவிகிதம் அதற்கு எதிராக எதுவும் செய்யாமல் இருப்பது. அதாவது அந்த காரியம் நடக்க நாம் நம்பும் மனிதர், சக்தி, அந்தஸ்து, பணம், செல்வாக்கு என்று எதையும் நாடாமல், நினைக்காமல் இருப்பது. உதாரணமாக இந்த கல்லூரி , இந்த பாடம் என்று விலாவரியாக விளக்கி கேட்காமல்- என் மகனுக்கு ஒரு நல்ல படிப்பை கொடு என்றால் அதுவே சாதிக்கும். அதையும் தாண்டி இன்னும் சுருக்கமாக என் மகனுக்கு ஒரு நல்ல வாழவைக்க கொடு என்றால் அது அனைத்தையும் உள்ளடக்கியது. அது போல என் மகளுக்கு இந்த நிறத்தில், இந்த உயரத்தில், இந்த நாட்டில், இந்த கம்பெனியில் , இவ்வளவு சொத்தோடு வரன் வேண்டும் என்று கேட்பது விட – என் மகளுக்கு நல்ல வாழ்வைக்கொடு என்று கேட்பது சுருக்கம். இங்குத் தான் நான் சொன்ன முதல் நிலை வருகிறது. இத்தகைய வேண்டுதல்களில் நாம் அன்னையை மட்டுமே நம்புகிறோம். அந்த காரியம் நடக்க நாம் நம்பும் மனிதர், சக்தி, அந்தஸ்து, பணம், செல்வாக்கு என்று எதையும் நாடாமல், நினைக்காமல் இருப்பதாய் கவனிக்க முடியும். அது அன்னை சக்தி ஆற்றல் முழுதும் செயல் பட உதவும்.

இதன் தொடர்ச்சியை அடுத்தடுத்த கட்டுரைகளில் பகிர்ந்து கொள்கிறேன்.

இந்த பக்கத்தை / லிங்க்-ஐ மேல இடது புறம் உள்ள WhatsApp , Telegram logo வை கிளிக் செய்தால் பிறருக்கு பகிர முடியும்.

Author Info
Ramesh Kumar

Ramesh Kumar

SHARE
Share on facebook
Share on telegram
Share on whatsapp

TOKEN ACT TO THY WILL – அறிவிப்பு

இடைவிடாத வேலை, உள்நாடு மற்றும் வெளிநாடு தொடர் பயணங்கள் காரணமாக மார்ச் 31 , 2026 வரை அடுத்த மூன்று அல்லது நான்கு வாரங்களுக்கு கட்டுரைகள் எழுத / பதிவேற்ற முடியாது. டோக்கன் ஆக்ட்

Read More »

TOKEN ACT TO THY WILL – 6

பொறுப்பேற்றலின் முதல் அடையாளம் அதில் எந்த  வித குறை கூறுதலும், அதன் எந்த பரிணாமமும் இல்லாது இருக்க வேண்டும். நாம் அன்னை விரும்பும் பண்பு என்பதால், பொறுப்பேற்றலை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அதன் பின்னால்,

Read More »

TOKEN ACT TO THY WILL – 5

இப்போது முதல் TOKEN ACT ஐ  எடுத்துக் கொள்ள அடிப்படையான மனப்பான்மைகளை விளக்க நினைக்கிறேன். இது SPIRITUAL OPULENCE இல் உள்ள PREPARATION TO TOKEN ACT மற்றும் அது தொடர்பான கட்டுரைகள், மற்றும்

Read More »

More Articles

TOKEN ACT TO THY WILL – அறிவிப்பு

இடைவிடாத வேலை, உள்நாடு மற்றும் வெளிநாடு தொடர் பயணங்கள் காரணமாக மார்ச் 31 , 2026 வரை அடுத்த மூன்று அல்லது நான்கு வாரங்களுக்கு கட்டுரைகள் எழுத / பதிவேற்ற முடியாது. டோக்கன் ஆக்ட்

Read More »

TOKEN ACT TO THY WILL – 6

பொறுப்பேற்றலின் முதல் அடையாளம் அதில் எந்த  வித குறை கூறுதலும், அதன் எந்த பரிணாமமும் இல்லாது இருக்க வேண்டும். நாம் அன்னை விரும்பும் பண்பு என்பதால், பொறுப்பேற்றலை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அதன் பின்னால்,

Read More »

TOKEN ACT TO THY WILL – 5

இப்போது முதல் TOKEN ACT ஐ  எடுத்துக் கொள்ள அடிப்படையான மனப்பான்மைகளை விளக்க நினைக்கிறேன். இது SPIRITUAL OPULENCE இல் உள்ள PREPARATION TO TOKEN ACT மற்றும் அது தொடர்பான கட்டுரைகள், மற்றும்

Read More »