Share on facebook
Share on telegram
Share on whatsapp

மனதைக் கடக்க முடியுமா?

சுருக்கமாக மனதைக் கடந்துச்  செயல்படுதல் என்பதை   நம் விருப்பு வெறுப்பு அபிப்ராயம் ஆகிவற்றை கடந்து செயல்படுவது என்று கூறலாம். மனமே விருப்பு, வெறுப்பை உற்பத்தி செய்கிறது. அவற்றை விட்டு உயர் சித்தத்தின் அன்னையின் பார்வையில் ஒரு விஷயத்தைப் பார்க்கும் போது மனதைக் கடந்த நிலையில் செயல்படுகிறோம். அது மனிதவாழ்விலிருந்து யோகவாழ்வுக்கு மாறுவது. மனித வாழ்வு சுயநலமானது. யோகவாழ்வு தன்னலமற்றது. மனம் சுயநலத்தை மட்டுமே கருதும். மனத்தைக் கடந்து வந்தால் பரநலத்தை மட்டுமே கருதுவோம். எனவே பரநலத்தை மட்டுமே கருதினால், நாம் மனத்தைக் கடந்த நிலையிலிருந்து செயல்படுவோம்.

மனத்தைக் கடந்த நிலையில் பாவமில்லை. புண்ணியமில்லை  அதனால்  வாழ்வின் மறுமொழிகளும் நமக்கு இல்லை.  எனவே எந்த பொறு செயலையும் பாவம் புனியம், நல்லது, கெட்டது ட்டது , எதிர்ப்பார்ப்பு, பலன்  என்று எந்த சிந்தனையும்  இல்லாமல்  செயலாக மட்டுமே அதன் முழுமைக்காக, செம்மைக்காக செய்ய முனைந்தால், நாம் மனதைக் கடந்து வந்து விடுகிறோம்.

வலியைப் பற்றி அன்னை சொல்லும்பொழுது பயமிருந்தால் வலி அதிகமாகத் தெரியும்; மனம் வலியைப் பொறுத்துக் கொள்ள முடிவு செய்தால் எவ்வளவு வலியையும் பொறுத்துக்கொள்ளலாம்; மனத்தைக் கடந்து வந்தால் வலி ஆனந்தமாகிறது என்கிறார். அதை ஒட்டி – சோர்வு, வருத்தம், துன்பம் ஆகையவற்றை நாம் ஏற்றுக்கொள்ளமல்  அவை முன்னேற்றத்திற்கே என்று கருதும் மனப்பான்மை மனதைக் கடந்த நிலைக்குரிய மனப்பான்மை ஆகும். என்   திறமைக்குறைவை ஏற்று கொள்ள மாட்டேன் என்று முடிவு செய்தால் அந்த எண்ணம் வலு இழந்து விடுகிறது. தொடர்ந்து மனத்தால் அதைக் கருதுவது இல்லை என்றால் அதாவது மனத்தைக் கடந்த நிலையை அடைந்தால் – அதர்க்கான வழி தெரிந்து திறமையாகிறது. அகந்தையின் எந்த எந்த உருவத்தையும், பொய்மையின் எந்த உருவத்தையும் , எந்த சுபாவ குறைவையும் , குணக்குறைவையும்  அன்னையை அழைத்து மாற்றினால், நாம் மனத்தைக் கடக்க முடியும்.

அப்படி இல்லாமல் நான் அன்னையிடம் சொல்கிறேன் என்று சொல்வது அதன் மூலம் மனதை கடந்து விட்டதாக நினைப்பதும்  எது நினைவிற்கு வந்தாலும் அன்னையிடம் சொல்வதாகச் சொல்வதும் , அன்னையை நினைப்பதாக சொல்வதும் நம் மனதின் எல்லையே.அல்லது அன்னையைப்  பற்றிய ஒரு கற்பனையில் உலா வருவதாக இருக்கும். We are only reconciling in Mother.

இங்கு மனதைக்   கடக்கவில்லை. அடக்குகிறோம். அடக்கும்  எதுவும் வேறு இடத்தில் வீறு கொண்டு எழும் என்பதே உண்மை. மௌனம் மந்தை கடப்பது என்று நினைக்கிறோம். மௌனம் என்பது மிகப்பெரிய யோகப் பண்பு.  அது அந்த மனதைக்  கடக்கும் நிலையைத் தரலாம்.   ஆனால் சராசரி  மனித வாழ்க்கையில் மவுனம் அதன் பலனுக்காகவும் அதன் மதிப்பிற்காகவும் தான் செய்ய படுகிறது. உன்மையில் அந்த நேரத்தில் மான் பிற விஷயங்களில் ஈடுபட்டு கொண்டிருப்பதைக் காணலாம். யோகிகளும் ஒரு எதிர்பார்ப்பிலேயே மவுனத்தை கடைபிடித்தனர். உண்மையில் அந்த நேரங்கள் நமக்கு உபயோகம்  இல்லாத விஷயங்களால் நிரப்பப்படுகிறது என்பதே உண்மை.

மனிதன் மனதால் கண்டுண்டவன், மௌனம் வர மனம் நடுநிலையில் இருக்க வேண்டும், எண்ணம்  ஓடாவிட்டால் மனம் மௌனமாகும் . அமைதியும்  மௌனமும்  நடுநிலை ஆகாது.. சரி,  தவறு, உண்மை, பொய்,  அபிப்ராயம், பாரபட்ச, எதிர்பார்ப்பு இருக்கக்  கூடாது. நடுநிலை இல்லாத மௌனம் மௌனம் ஆகாது.என்று கர்மயோகி அவர்கள் கூறுகிறார்கள்.

மேலே கூறியதில்  உள்ளது போல பிரித்தே அறிய முடியாத நிலையே காலியான மனம் என்கிறார். இதை equality, without minds division என்று சில இடங்களில் சொன்னாலும் அவருக்கு பிடித்த கல்விமுறையில் non- fissiparous என்னும் வார்த்தையை உபயோக்கிறார் – அதாவது பிரித்தே அறிய முடியாத நிலை.  

அதற்கு மாணவர்களுக்கு செயல் முறை விளக்கமாக அவர் கூறுவது நமக்கும் பொருந்தும்.

நாமெல்லாம் எவ்வளவு திறமை (skill)   இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட செயல்திறன் அளவில்தான் (ability ) செயல் படுகிறோம். அறிவுத்திறன் (capacity) என்னும் நிலையில் இருப்பதில்லை. அந்த அறிவுத்திறன் நிலைக்கு வர எப்போதும் நினைப்பது மன  நிலையை காலியாக வைப்பது. அது அடுத்த உயர்ந்த ஞானத்தை எப்போதும் நிரப்பி கொண்டிருக்கும். உதாரணமாக நாம் ஒரு விஷயத்தில் மட்டும் பத்து  அல்லது பதினைந்து கட்டங்களை முன்னேற்றத்திற்க்காக புரிந்து கொள்கிறோம்.   வேறுஒரு விஷயத்தில் திரும்பவும் யோசிக்க வேண்டிய அல்லது கேட்க வேண்டிய நிலையிலேயே இருக்கிறோம். ஆனால்  முன்னேற்றத்திற்கான நம் நிலையின் சாரத்தைப்  புரிந்து கொண்டால் மனதைத்  தாண்டிய intuition , insight நிலை தொடர்ந்த  ஞானத்தைத் தரும் எனபது அவர் கூற்று.  அதனால் மாணவன் எந்த subject ஐ யும் படிக்கச் முடியும் , புரிந்து  கொள்ள முடியும் , பல் துறை வல்லுநர் ஆக  முடியும்  என்பது அவர் idea.

அதற்குச்  சுருக்கமாக  அவர் சொல்லும் வழி நடுநிலைமையுடன்  Mother Symbol -இல் இருக்கும் 12 manifesting aspects  பற்றி எப்போதும் சிந்திப்பது.

சரி,  தவறு, உண்மை, பொய்,  அபிப்ராயம், பாரபட்ச, எதிர்பார்ப்பு இல்லாமல் எப்போதும் சிந்திப்பது மனதை க் கடப்பது. அதை பரிணாமத்திற்காக (evolution) எப்போதும் காத்திருக்கும்  மனம் என்கிறார். அது மனித மனதைக்   கடந்து யோக  மனதை அடையும் நிலை என்கிறார்.

Author Info
Ramesh Kumar

Ramesh Kumar

SHARE
Share on facebook
Share on telegram
Share on whatsapp

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 5

இதுவரை சொன்னவை அனைத்தும்   “உயர்ந்தவை நிர்ணயிக்கின்றன. அவை நிறைவேற தாழ்ந்தவை உதவுகின்றன” – என்னும் லைப் டிவைனின் ஒரு  கருத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு தலைப்பில் இருந்து விலகிச் செல்லாமல் எழுத வேண்டும் என்று

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 4

இதுவரை நாம் பேசியதை Life Divine – கருத்துகளில் பொருத்தி பார்க்கும் போது – முன்னேறும் பாதையின் நன்கு  நிலைகளை.  – மனித வாழ்வு, யோக வாழ்வு, தெய்வீக வாழ்வு என்று மூன்று பகுதிகளாகப்

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை  – 3

அதற்கு பதிலாக ஒரு பண்பை எடுத்துக் கொண்டு, அதன் பார்வையில் நம் முடிவை organise செய்ய முடிந்தால், அது நம் அனைத்து  முடிவுகளுக்குக்  காரணமாக அமைந்தால், அது படைப்பாற்றல் மிக்கதாக இருக்கும்.  உதாரணமாக முன்

Read More »

More Articles

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 5

இதுவரை சொன்னவை அனைத்தும்   “உயர்ந்தவை நிர்ணயிக்கின்றன. அவை நிறைவேற தாழ்ந்தவை உதவுகின்றன” – என்னும் லைப் டிவைனின் ஒரு  கருத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு தலைப்பில் இருந்து விலகிச் செல்லாமல் எழுத வேண்டும் என்று

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 4

இதுவரை நாம் பேசியதை Life Divine – கருத்துகளில் பொருத்தி பார்க்கும் போது – முன்னேறும் பாதையின் நன்கு  நிலைகளை.  – மனித வாழ்வு, யோக வாழ்வு, தெய்வீக வாழ்வு என்று மூன்று பகுதிகளாகப்

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை  – 3

அதற்கு பதிலாக ஒரு பண்பை எடுத்துக் கொண்டு, அதன் பார்வையில் நம் முடிவை organise செய்ய முடிந்தால், அது நம் அனைத்து  முடிவுகளுக்குக்  காரணமாக அமைந்தால், அது படைப்பாற்றல் மிக்கதாக இருக்கும்.  உதாரணமாக முன்

Read More »