டோக்கன் ஆக்ட்

அழகான மாலை நேரம். மண்வாசனை மழை வரப்போவதை கட்டியம் கூறியது. மழை என்றாலே அருள் என்பதால் மேலே விழும் ஒவ்வொரு துளியிலும் அன்னையின் ஸ்பரிசம். எதிர்பார்த்துக் கொண்டு அண்ணாச்சி கடையில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தேன். மீதி சில்லறையில் இரண்டு ரூபாய் நாணயங்களைப் புரட்டிப் பார்த்து பாக்கெட்டில் போட்டேன்…. ஆம்…. பகவானின் உருவம் பதித்த நாணயம் வந்த பிறகு இந்தப் பழக்கம் வந்து விட்டது. ஒன்று கிடைத்தாலும் சிலிர்க்கும். பகவானே என்னைத் தேடி வந்ததுபோல ஒரு சந்தோஷம். அண்ணாச்சி சிரித்தார். “நீங்கள் அன்னை பக்தரா?” கல்லாவில் தேடி ஒரு நாணயம் எடுத்துத் தந்தார். அன்று ஆரம்பித்து – தியான மையம் செல்லும் வழியில் […]