- ஒரு செயலை ஆரம்பிப்பதற்கான சுய உந்துதல், ஆர்வம், சூழல் இருக்கிறதா?
- திட்டம் சரியாக முறையாக இருக்கிறதா அதன் தொடர் நிகழ்வு (sequence) பற்றிய தெளிவு இருக்கிறதா?
- கடின உழைப்பு உடலில், உணர்வில், அறிவில் தேவைப்பட்டால் அதற்கான நேரம் , மனமார்ந்த நிலை (sincerity) இருக்கிறதா?
- அதற்கான, திறமை, திறன், செயல்திறன் – (skill, capacity , ability ) இருக்கிறதா?
- இது போன்று வாழ்வில் அல்லது தொழிலில் வெற்றி பெற்றவர் உனக்குத் தெரிந்து இருந்தால் – அவரிடம் உள்ளது , எது உன்னிடம் உள்ளது , எது உன்னிடம் இல்லை, அவரிடம் இல்லாதது எது உன்னிடம் உள்ளது என்று சிந்திக்க முடியுமா?
- சமுதாயம் போற்றும் பண்பில் எது உனக்கு கசக்கிறது எது உனக்கு பிடிக்கிறது? வாழ்வில் , தொழிலில் எல்லோரும் அவசியம் என்று நினைப்பதில் எது உனக்கு பிடிக்கிறது, எது உனக்கு கசக்கிறது?.
- உன்னை பாதித்த உன் குணங்கள், உன் நடத்தை, உன் சுபாவங்கள், உன்னிடம் உள்ள பிறர் விரும்பாத உன் குணங்கள், நடத்தை, சுபாவங்கள் பற்றி பெரும்பாலும் உனக்குத் தெரியும். அது எப்படி வந்தது, ஏன் உள்ளது என்பதை பற்றி சிந்திப்பாயா?
- எரிச்சல், கோபம், வெறுப்பு, சலிப்பு வரும் இடங்கள் உன் இயலாமையை, உன் திறமைக்குறைவை, உன் தகுதிக்குறைவை காட்டும் இடங்கள் என்பதை அறிவாயா?
- மேலே உள்ள இரண்டும் புரிந்தால், அறிந்தால் அதை ஏன் நீ மாற்ற முயல்வாயா?
- மேலே சொன்ன எல்லாவற்றையும் அன்னை ( higher consciousness / values0 பார்வையில் பார்த்தால் எது உனக்கு பிடிக்கிறது, எது உனக்கு கசக்கிறது? அன்னைக்கு பிடித்ததை ஏற்று கொள்ளும் மனப்போக்கு (temperament) , மனப்பான்மை (attitude) இருக்கிறதா?