அது:
Mental Plane-ல்:
ஒரு விஷயத்தை எப்படி நியாயப்படுத்துகிறோம், எப்படி செய்கிறோம், உதாரணங்களாக எதை, எதை எடுத்துக் கொள்கிறோம், எப்படி விவரங்களை தருகிறோம், நம் தனிப்பட்ட கருத்துகள் (opinions), முழு விவரம் தெரியாமல் இப்படிதான் இருக்கவேண்டும் என்ற கருத்துகள் (prejudice), சுக தேவைகள் ( comforts) ஆகியவற்றை பார்த்தால் நம் திறமை, திறன் ஆகியவற்றிக்கு நாமே அளவு வைத்து இருப்பது தெரியும்.
ஆனால் நாம் செய்வது… கதவில் நாம் இடித்துக் கொண்டால் கூட அப்போது நம் உடல், மனம், அறிவு சொல்வதைக் கேட்டால் (கதவு இடித்து விட்டது, எத்தனை தரம் சொல்கிறேன் கதவை இப்படி திறந்து வைக்காதே என்று, அல்லது எரிச்சலுடன் எட்டி உதைப்பது). அவன், அதை செய்ததால் நான் இதை செய்தேன், எல்லோரும் செய்கிறார்கள் நானும் செய்கிறேன், இதுதான் வழக்கம், இதுதான் பழக்கம், இந்த வேலைக்கு இது போதும், என் தலை விதி, எனக்கு அம்சம் இல்லை, என்று நினைப்பு வரும் இடங்களை கவனித்தால் நாம் mental plane-ல் அடுத்த கட்டம் செல்ல வேண்டிய organize செய்ய வேண்டிய இடம் தெரியும். அனைத்திலும், தெளிவு (clarity), குறையறியா நிலை (perfection),துல்லியம் (accuracy)- நாம் mental-ல் அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கான அடையாளம்.
Vital plane-ல்:
நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களுடனான உறவுகள், நாம் தொர்பு கொள்ளும், சூழல், சமுதாயம், நிறுவனங்கள், அரசாங்கம், தொழில் நிறுவனங்களுடனான உறவு அல்லது ஈடுபாடு ஆகியவற்றை சுமுகத்தின் பார்வையில் பார்த்தல். நிகழ்வுகளுக்கும் நம் செயல் , மனநிலைக்கும் உள்ள தொடர்பைப் பார்த்தல், (In harmony point of view, seeing correspondence between the events, happenings and our doing in all above). உணர்வும், உணர்ச்சியும் எந்த மாதிரியான சந்தோஷத்தை தேடுகிறது, என்று பார்த்தல் என்று ஒரு சுய பரிசோதனை செய்தால் நாம் அடுத்த கட்டம் செல்ல வேண்டிய, organize செய்ய வேண்டிய இடம் தெரியும்.
கூட்டணி, கூட்டுறவு, தெளிவான திட்டத்துடன், செயல் முறையுடன், எதிலும் ஆர்வத்துடன் செயல் படுவது செயல் படுவது, அதிக பட்ச சக்தி, புதுமை, நவீனம், நூதனம் (co-ordination, team work, systematic functioning, interest in doing anything, everlasting energy, creativity, innovation) -வருவது vital -ல் அடுத்த கட்டத்திற்கு செல்வதற்க்கான அடையாளம்.
Physical Plane-ல்:
பொருட்களை, கருவிகளை கையாளுதல், ஒவ்வொரு பொருளையும் அதிக பட்சம் உபயோகிப்பது, பொருளைச் வீணடிக்காமல் சேமிப்பது , காலத்தைச் சேமிப்பது, உற்பத்தித் திறன், சுத்தம், ஒழுங்கு (no wastages, saving of time, productivity, orderliness, cleanliness) என்பனவற்றை உடல் ஒத்துழைப்பு என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால் நாம் அடுத்த கட்டம் செல்ல வேண்டிய organize செய்ய வேண்டிய இடம் தெரியும். அவை நமக்கு வருவது physical-ல் அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கான அடையாளம்.
இது வரை முன்னேற்றம் இல்லாத இடங்களை இந்த கண்ணோட்டத்தில் பார்த்தால் எந்த அறியாமையின் ருசி நமக்கு பிடிக்கிறது என்பதன் தெளிவு நமக்கு வரும். அதில் இருந்து வெளியே வருவது வாழ்வில் அடுத்த கட்டம் செல்வது.
அவை அத்தனை அறியாமையையும் உணர்ந்து நேரடியாக அன்னை சொல்வதை ஏற்றுக் கொள்வது, ஸ்ரீ கர்மயோகி சொல்வதை ஏற்றுக் கொள்வது, அதன் படி நடப்பது ஆன்மாவிற்கு செல்வது. (it is complete organization of all planes to the psychic center).
அது அன்பரிடம் எப்படி வெளிப்படவேண்டும் என்றால் அன்னை எப்போதும் உடன் இருக்கிறார் என்று உணர்வது, அவருக்காகவே வாழ்வது, அவர் விரும்புபவரையே விரும்புவது, அவர் விரும்பும் பண்புகளையே வெளிப்படுத்துவது, பொய்யையும், பொய்யின் வடிவங்களையும், பொய்யான செயல்களையும், நண்பர்கள், உறவுகள் உருவில், பாசம் என்ற பெயரில் பண்பு என்ற பெயரில் ஏற்றுக் கொள்ளாமல் விலக்குதல், அன்னையை தவிர, வேறு எதற்கும், யாருக்கும், எதுவும் செய்ய சக்தி இல்லாத நிலை என்று வெளிப்பட வேண்டும்.அது அன்பர் சாதகர் ஆவதற்கான முதல் கட்டம்.