Share on facebook
Share on telegram
Share on whatsapp

Sincerity- அடுத்த கட்டம்-2

அன்னை அன்பர்கள் அடுத்த கட்டம் செல்வது sincerity என்று ஸ்ரீ கர்மயோகி சொல்வதை பெரிய விஷயமாக நினைப்போம். ஸ்ரீ கர்மயோகி சொல்வது அடுத்த கட்ட பண்புகளுக்குச்  செல்வது.

உதாரணமாக பிறர் நிலை பார்வை (other man point of view) என்று எடுத்துக்கொண்டால் நமக்கு ஓரளவு தெரியும். ஆனால் அன்பர்களுக்கான அடுத்த சில உயர்ந்த நிலைகளாக சொல்வது-நான்கு பேர் உட்கார்ந்து இருக்கும் Bench -இல்  காலாட்டாமல் இருப்பது, பிறர் கண்ணை உறுத்தாத உடை (color , vanity)அணிவது, நம்மிடம் பேசுபவரை முழுதும் பேச விடுவது, தனக்கு தெரியாததை தெரிந்தது போல் பேசாதது, கால் தேய்த்து நடக்காதது என்று other man point of view -க்கு ஸ்ரீ கர்மயோகி சொல்லும் சிறு சிறு உத்தரங்களை உதாரணைங்களைச்  சற்று யோசித்தாலே அவர் எந்த அளவிற்கு ஒவ்வொரு செயலிலும் பார்க்க சொல்கிறார்  என்பது புரியும்.

ஒழுக்கம், பண்பாடு, நேர்மை, நாணயம், மெய்மை,நடத்தை, நன்னெறிகள், (Morality, integrity, honesty, ethics, behavior, etiquette) என்று நாம் அறிந்த உயர்ந்த நிலையை எந்த நிலையிலும் வெளிப்படுத்துவது அன்பர்கள் அடுத்த கட்டம் செல்லும் சின்சிரிட்டி.

இதற்கும் உதாரணம் சொல்ல வேண்டும் என்றால் etiquette -ல், five star hotel-இல் நாம் காட்டும் நாகரிகத்தை, சிற்றூரில் ஒரு சாதாரண ஹோட்டலில் காட்டுவோமா. சிங்கப்பூர் சென்றால் இருக்கும் சுத்தத்தைப்  பற்றிய மனப்பான்மை இந்தியாவிலும் காட்ட முடியுமா. தியானமயத்தில் காட்டும் அமைதியை , நடத்தையை எல்லா இடங்களிலும் காட்ட முடியுமா. நாம் அறிந்த உயர்ந்த பண்புகளை கூட நாம் வெளிப்படுத்துவது இல்லை என்பதே உண்மை.

அப்படி நமக்கு தெரிந்த எல்லவற்றையும் conscious -ஆக organize- செய்வது உயர் சித்தத்திற்குச் செல்வது.(higher consciousness) . அது Divine Will ஆன பரிணாம வளர்ச்சிக்கு ஏற்றாற்போல் நாம் செயல் படுவது. அது Mother’s Wil கூட என்பதால் , அது நம் அறிவை , மனதை  ,உணர்வை அன்னையின் ஞானத்திற்கு organize செய்வது. அது ஒரு ஆன்மிக சக்தியாக மாறுவதால் அன்னையின் சக்தியை வரவழைக்கும். அன்னையின் சக்தி வருவது அருள் வருவது..

இப்படி, பேச்சு, நடத்தை, பண்புகள், பழக்கங்கள், இலக்கிய நயம் , நவீன யுக்தி, டெக்னாலஜி, பட்டுத்தான் தெரிந்து கொள்ளவெண்டும் என்று இல்லாமல், பத்து வார்த்தையில் சொல்ல வேண்டியதை இருபது வார்த்தைகளில் சொல்லாமல் இருப்பது, ஒரு நிலம் 10.5 acre என்று தெரிந்தாலும் 10 acre என்றோ 11 acre என்றோ சொல்லாமல் இருப்ப்து -என்று நமக்கு தெரிந்த அனைத்தையும் நடைமுறைக்குக்  கொண்டு வருவது அன்பருக்கு அவசியம். அதுவே அவரது sincerity -ஐக்  காட்டும்.

நடைமுறையில், செயலில் – sincerity இல்  அடுத்த நிலைக்கு செல்வதை ஸ்ரீ கர்மயோகி எப்படி வரையறுக்கிறார் என்றால் -உடலாலும், உணர்வாலும், அறிவாலும் தான் விரும்புவதை, தன்னால் செய்ய முடிந்ததை அன்னைக்கு பிடிக்காது என்பதற்காக செய்யாமல் இருப்பது, அதற்கான இடை விடாத முயற்சி, அடுத்த கட்டத்திற்கு செல்வது என்கிறார். அப்படி முடிவு செய்தவுடன் உடல் துடிக்கும், மனது அடித்துக் கொள்ளும், அறிவு, யாருக்கு வேண்டும் இந்த அன்னை, நான் பக்தனாகவே இருக்கிறேனே என்று சொல்லும். அதை மீறுவது அடுத்தக் கட்டம் செல்லும் sincerity.

அது வாழ்வில் எப்படி வெளிப்பட வேண்டும் ?

குடும்பதிற்கான கடமைகளை ஒரு இழை பாக்கி இல்லாமல் எதிர்பார்ப்பு இல்லாமல் முடிப்பது.

வேலையில் அடுத்த அடுத்த கட்ட திறமை, திறன், ஆளுமை, புதியது படைப்பது, நூதனம், அறிவு, ஞானம், தொழில் முனைவு ( skill, capacity, creativity, innovation, knowledge, entrepreneurship) என்று முயல்வது.

ஆன்மீகத்தில் குருவிற்கு sincerity, அவரின் கொள்கைகள், அறிவுரைகள், நோக்கங்களை  -ஐ அடுத்ததடுத்த  உயர்ந்த பட்சம்  என்ற அளவில் பின்பற்றுவது.

Author Info
Ramesh Kumar

Ramesh Kumar

SHARE
Share on facebook
Share on telegram
Share on whatsapp

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 5

இதுவரை சொன்னவை அனைத்தும்   “உயர்ந்தவை நிர்ணயிக்கின்றன. அவை நிறைவேற தாழ்ந்தவை உதவுகின்றன” – என்னும் லைப் டிவைனின் ஒரு  கருத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு தலைப்பில் இருந்து விலகிச் செல்லாமல் எழுத வேண்டும் என்று

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 4

இதுவரை நாம் பேசியதை Life Divine – கருத்துகளில் பொருத்தி பார்க்கும் போது – முன்னேறும் பாதையின் நன்கு  நிலைகளை.  – மனித வாழ்வு, யோக வாழ்வு, தெய்வீக வாழ்வு என்று மூன்று பகுதிகளாகப்

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை  – 3

அதற்கு பதிலாக ஒரு பண்பை எடுத்துக் கொண்டு, அதன் பார்வையில் நம் முடிவை organise செய்ய முடிந்தால், அது நம் அனைத்து  முடிவுகளுக்குக்  காரணமாக அமைந்தால், அது படைப்பாற்றல் மிக்கதாக இருக்கும்.  உதாரணமாக முன்

Read More »

More Articles