Share on facebook
Share on telegram
Share on whatsapp

சாதனை- Accomplishment

ஸ்ரீ கர்மயோகி MSS -ஐ ஆரம்பித்தபோது -அன்னையிடம் Blessing கேட்டபோது “Service? It is already been done”- என்று சொன்னதாக கேள்விப்பட்டு இருக்கிறேன். அப்படி சூட்சுமத்தில் அன்னை நமக்காக செய்து வைத்துள்ளதை -MSS நமக்கு பெற்றுத் தருவதை- வாங்கிக் கொள்வதற்கு நாமே தடையாக இல்லாமல் இருப்பதே என்னை பொறுத்தவரை (Accomplishment)- சாதனை.

காரணம் அப்படி நாம் நினைக்கும் நினைவிலேயே ஒரு நன்றியறிதலும் (gratitude), ஒரு ஆர்வமும் (aspiration) இருப்பதால் அது தன்னைத்  தானே பூர்த்தி செய்துக்  கொள்ளும். காரணம் aspiration for a higher goal- that is not ambition – fulfills itself- என்கின்ற அறிவு (Knowledge), அதை செய்தேயாக வேண்டும் என்ற உறுதி (“will”) ஸ்ரீ கர்மயோகி அவர்களுக்காக என்னும் மனப்பான்மை (attitude)-மூன்றும் சேரும்போது அது ஒரு “complete act” ஆகிறது. Complete act-வாழ்க்கை ஒரு விஷயத்திற்கு கொடுக்கும் பலனை விட பல மடங்கு கொடுக்கும்.

உதாரணமாக “taking the vision and mission of organization you belong to-will make you prosper and accomplish “என்று ஸ்ரீ கர்மயோகி கூறும் போது அதை “knowledge of the soul” -ஆக எடுத்துக் கொண்டு அதை செய்வேன் என்ற உறுதி  -அப்படி செய்வதே ஸ்ரீ கர்மயோகி அவர்களுக்கு நாம் காட்டும் நன்றியறிதல்   என்கின்ற மனப்பான்மை -மூன்றும் சேரும்பொது  வாழ்க்கை எப்போதும் தரும் பலனை விட பலமடங்கு தருவதை என் வாழ்விலேயே நான் பார்த்துவிட்டேன்.

அப்படி ஒரு முடிவு எடுத்தவுடன் 3000 சம்பளம் 6000 ஆனது பின் ஆறு மாதத்தில் 12000 ஆகி ஒரு வருடத்தில் 100000 ஆனது.ஒரு சாதாரண “proprietor” கம்பெனியின்  “vision and mission”-ஐ என்னுடையதாக எடுத்துக்கொண்டபோது கிடைத்த  பலனே இதுவென்றால் ஸ்ரீ கர்மயோகியின்  “vision and mission”-ஐ நம்முடையதாகக்  கொண்டால் கிடைக்கக்  கூடிய சுபீட்சத்திற்கும் சாதனைக்கும் அளவு ஏது?

இதை பகவான் சொல்லும் “முழுமையின் பகுதி ஆவது” என்னும் தத்துவத்திற்கு  உதாரணம் என்கிறார். தத்துவமாகப்  பார்த்தால் புரியாது. ஆனால், அதையே அறிவிலிருந்து விலகி ஸ்ரீ கர்மயோகி அவர்களை Supermind – இன்  ஒரு பகுதியாக, ஒரு முழுமையின் பொருளை நமக்குத்  தர வந்தவராகப்  பார்க்கும்போது – அதற்காக ஒன்றை செய்யும் போது , அது சுபீட்சத்தையும் சாதனையும் தருகிறது.. இதை ஸ்ரீ கர்மயோகி “mind coming out of identification with the part to dissolve in the vision of the total”-என்கிறார்.

நம் அனைவருக்கும் பக்தி இருக்கிறது. நன்றியறிதல் இருக்கிறது. ஸ்ரீ கர்மயோகிக்காக, ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வம்  இருக்கிறது. அந்த உணர்வுகளை, அந்த உணர்வின் முனைகளை வளர்ப்பது-சாதனை.  ஸ்ரீ கர்மயோகி கொடுக்கும் உதாரணம் -மிகப்  பெரிய மரம் வளர்க்கும் முன்பு -அதன் பகுதியாக பெற்றது துளிர்க்க வேண்டுமானால் , துளிர்க்க வேண்டிய இடத்தில தான் சாணம் வைக்க வேண்டும். கட்டு போட்டு பதியம் போடவேண்டிய இடத்தைத் தான் முதலில் கவனிக்க வேண்டும் . அதன் பின் அது எந்த மரத்தின் பகுதியோ அது போல வளரும்.

அது போல நாம், நம்மில் ஆன்மாவின் பண்புகள் வெளிப்பட்ட இடங்கள், வெளிப்பட்டதாக நாம் நினைக்கும் இடங்கள், நாம் அன்னை அன்பர்கள், ஸ்ரீ கர்மயோகியின் பக்தர்கள், விசுவாசிகள் , சீடர்கள் என்று நினைத்த இடங்களை துளிர் விட வைத்து அதை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வது நாம் ஸ்ரீ கர்மயோகி அவர்களின் vision-இல்  -நம் vision-ஐ பொருத்திப் பார்ப்பதாகும்.

அதனால் என்னளவில் சாதனை (accomplishment) என்பது நம்முடைய உயர் சித்தத்தை வலுப்படுத்துவது.  (developing the structure of our consciousness and strength). எளிதான அன்னை முறைகளை மட்டும் எடுத்துக்கொள்வது, நம் பழைய முறைகளுக்குள் அன்னையை பொருத்தி வைப்பது -அது தரும் சுபீட்சத்திலேயே திருப்தி பட்டு விடுவது என்று உடலுக்கும், உணர்வுக்கும் எளிதான,  -உழைப்பு, உறவு , சமுதாயம்  ஆகியவற்றிக்கு  ஏற்ற எளிதான வழிகளை மட்டுமே  பின்பற்றி திருப்தி பட்டு நின்று விடாமல் -ஸ்ரீ கர்மயோகி எதிர்பார்த்த  அடுத்த கட்டத்திற்கு -ஒரு spiritual individual-ஆவதற்கு முயல வேண்டும்.

வாழ்க்கைச்  சட்டங்களை தாண்டியது அன்னை சட்டங்கள் என்ற நம்பிக்கையில் -taking risk in coming out established norms and taking a real challenge to develop the structure of our consciousness is accomplishment.

அதற்கான முழு முயற்சி, ஆழ்ந்த  உறுதி,  தெளிவான செயல் திட்டம், எதிர்பார்ப்பில்லாத விடா முயற்சி  தான் நாம் ஸ்ரீ கர்மயோகி அவர்களுக்கு காட்டும் நன்றியறிதல்.  -அது ஒன்றே நமக்கான அதிக பட்ச ஏற்புத்தன்மையைப் பெற்றுத் தரும்  என்பதே உண்மை.

அந்த receptivity ஏற்புத்தன்மையே,  அன்னை நமக்காக தர காத்து இருப்பதை, அவரின் விருப்பம் நம்மில் பூர்த்தியாவதை, ஸ்ரீ கர்மயோகி நாம் அனைவரும் பெற வேண்டும் என்கிற சுபிட்சத்தை  நாம் அனைவரும் ஒரு spiritual individual -ஆக வேண்டும் என்கிற அவரின் கனவைப்  பூர்த்திச்  செய்யும்.

ஒரு உயர்ந்ததன் நோக்கத்தை மனம் ஏற்க ஆரம்பித்தாலே , நாம் சத்திய ஜீவியத்தை நோக்கிப்  போகிறோம். சத்திய ஜீவியம் அதிர்ஷ்டம்.

தன் நோக்கம், பிறர் நோக்கம், சமுதாய நோக்கம், உலக நோக்கம், பிரபஞ்ச நோக்கம், பிரம்ம நோக்கம் என்று விரிவடைவது -சாதனை . இன்று நாம் அந்த முடிவை எடுத்தோமானால், அதை ஸ்ரீ கர்மயோகியின் எழுத்துக்களில் சொல்ல வேண்டுமானால், “பெரிய ஆத்மாவிற்கு பெரிய நேரம் வரும்போது தான் பெரிய தீர்மானம் வரும். தீர்மானத்தை முடிவாகக்  கொள்வது அதிருஷ்டம். அதுவே  அருள் வரும் வழி. . அதுதான் நம்மை பொறுத்தவரை சாதனை..

சாதிக்க காத்திருப்பதை, சாதிக்க விடுவதே – நம்மை பொறுத்தவரை  சாதனை  accomplishment.

அதாவது அன்னை நம்மில், நம் செயல்களில் வெளிப்பட செய்ய வேண்டியதை அதிக பட்சம் செய்வதே சாதனை

Author Info
Ramesh Kumar

Ramesh Kumar

SHARE
Share on facebook
Share on telegram
Share on whatsapp

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 5

இதுவரை சொன்னவை அனைத்தும்   “உயர்ந்தவை நிர்ணயிக்கின்றன. அவை நிறைவேற தாழ்ந்தவை உதவுகின்றன” – என்னும் லைப் டிவைனின் ஒரு  கருத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு தலைப்பில் இருந்து விலகிச் செல்லாமல் எழுத வேண்டும் என்று

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 4

இதுவரை நாம் பேசியதை Life Divine – கருத்துகளில் பொருத்தி பார்க்கும் போது – முன்னேறும் பாதையின் நன்கு  நிலைகளை.  – மனித வாழ்வு, யோக வாழ்வு, தெய்வீக வாழ்வு என்று மூன்று பகுதிகளாகப்

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை  – 3

அதற்கு பதிலாக ஒரு பண்பை எடுத்துக் கொண்டு, அதன் பார்வையில் நம் முடிவை organise செய்ய முடிந்தால், அது நம் அனைத்து  முடிவுகளுக்குக்  காரணமாக அமைந்தால், அது படைப்பாற்றல் மிக்கதாக இருக்கும்.  உதாரணமாக முன்

Read More »

More Articles

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 5

இதுவரை சொன்னவை அனைத்தும்   “உயர்ந்தவை நிர்ணயிக்கின்றன. அவை நிறைவேற தாழ்ந்தவை உதவுகின்றன” – என்னும் லைப் டிவைனின் ஒரு  கருத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு தலைப்பில் இருந்து விலகிச் செல்லாமல் எழுத வேண்டும் என்று

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 4

இதுவரை நாம் பேசியதை Life Divine – கருத்துகளில் பொருத்தி பார்க்கும் போது – முன்னேறும் பாதையின் நன்கு  நிலைகளை.  – மனித வாழ்வு, யோக வாழ்வு, தெய்வீக வாழ்வு என்று மூன்று பகுதிகளாகப்

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை  – 3

அதற்கு பதிலாக ஒரு பண்பை எடுத்துக் கொண்டு, அதன் பார்வையில் நம் முடிவை organise செய்ய முடிந்தால், அது நம் அனைத்து  முடிவுகளுக்குக்  காரணமாக அமைந்தால், அது படைப்பாற்றல் மிக்கதாக இருக்கும்.  உதாரணமாக முன்

Read More »