Share on facebook
Share on telegram
Share on whatsapp

TOKEN ACT TO THY WILL – 6

பொறுப்பேற்றலின் முதல் அடையாளம் அதில் எந்த  வித குறை கூறுதலும், அதன் எந்த பரிணாமமும் இல்லாது இருக்க வேண்டும். நாம் அன்னை விரும்பும் பண்பு என்பதால், பொறுப்பேற்றலை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அதன் பின்னால், BOSS சரியில்லை, சமுதாயம் சரியில்லை, மனிதர்கள் சரியில்லை, சட்டங்கள் சரியில்லை, SYSTEM சரியில்லை என்ற பல மனப்பான்மைகள் அதனுள் கலந்து இருக்கும். நம் வாழ்வு-நம் கையில், அதன் பிறகு அதை ஆன்மாவின் பிடியில் தருவது THY WILL என்று இருக்கும் போது அத்தகைய கருத்துக்கள் – (PREJUDICE AND OPINIONS) இருக்கக்கூடாது.

நாம் RESPONSIBILITY என்று சொல்வதை நாம் வெளிதாக்கத்திலிருந்து உள்ளே நம்மை நோக்கி, நம்முள் உள்ள இறைவனை நோக்கி செல்லத்தான் என்னும் போது அதில் வெளியே உள்ள எந்த  விஷயத்தின் மீதும், அதன் தாக்கம் மீதும், அதன் வலிமை மீதும் நம்பிக்கை இருக்கக் கூடாது. நாம் ஒரு வேலைக்கான பொறுப்பேற்றல், கடமையை செய்ய நினைக்கும் போது BOSS சரியில்லை என்பது நினைவுக்கு வந்தால், உடனே நினைவுக்கு வர வேண்டியது அவருடனான COMMUNICATIONஐ , ALIGNMENT ஐ  எப்படி சரி செய்வது, அதற்கான மனப்பான்மை, திறமை என்ன என்று பார்ப்பது, வெளியிலிருந்து  உள்ளே செல்வது. SYSTEM சரியில்லை என்று தோன்றினால், இந்த COMPANY  சரியில்லை என்று தோன்றினால், இந்த COMPANY இத்தனை பேருக்கு சம்பளம், வேலை கொடுக்கும் அளவிற்கு வளர்ந்து இருக்கிறது என்று உடனே மனதை மாற்றுவது. சமுதாயம், சட்டம் சரியில்லை என்று தோன்றினால், இந்த சட்டம் சமுதாயம் இவற்றை வைத்துத் தான் கோடிக்கணக்கான பேர் சாதித்துக் கொண்டு இருக்கிறார்கள்,  நம் குறை எங்கே உள்ளது என்று உடனடியாக மனதை மாற்றுவது போன்றவை  பார்வையை  உள்நோக்கி திருப்புவது. இதன் அடிப்படை என்னவென்றால், ஒரு முன்னேற்றம், ஒரு மனமாற்றம், ஒரு திருவுருமாற்றம், ஒரு உயர்சித்ததிற்கு அடுத்த நிலை திறமை, திறன் ஆகியவற்றுக்கான ஒரு சிறு விதையாவது அந்த RESPONSIBILITY யில் இருக்க வேண்டும்.

இது சம்பந்தமாக ஒரு அன்பர் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வு.

பல வருட அன்பர் ஒரு ஸ்தாபனத்தின் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒரு  நபருக்கு நெருக்கமாக இருந்தவர். கடந்த ஒரு வருடம் முன்பு, காணிக்கை, கைமாற்று,  என்று ஏராளமான தொந்திரவுகளை பெற்றதால் விலக நினைத்தார்.  ஆனால் விலகினால் ஸ்தாபனம் தரும் “அருள்” “பாதுகாப்பு” போன்றவற்றிலிருந்து விலக நேரிடுமோ என்ற பயமும் அவருக்கு இருந்தது. பல நாள் யோசித்த பிறகு என்னிடம் கேட்டார். அன்னை தான் அருள். நாம் ஸ்தாபனத்தின் மீதோ வேறொன்றின் மீதோ நாம் நம்பிக்கை வைத்தால், அவர் அதன் மூலம் அவர் பலிக்கிறார். அவ்வளவு தான். அத்தகைய நம்பிக்கையை நாம் எடுத்துவிட்டால், அவருக்கான நேரடியான  பாதை ஒன்றை கொடுத்துவிட்டால், அருள் நேரடியாக வரும். அன்னையை விட எந்த தனி நபரும், எந்த  ஸ்தாபனமும் உயர்ந்தது அல்ல. நாங்கள் பலரும் அப்படி விலகினோம்.  அனைவரும் முன்பை விட நன்றாகவே இருக்கிறோம். அன்னைக்கும் நமக்கும் இடையில் வேறு யாரும் தேவையில்லை என்பதே உண்மை என்றேன்.

அவருக்கு அப்போதைக்கு நம்பிக்கை வந்தது. அடுத்து  அந்த ஸ்தாபனத்தை சேர்ந்த மனிதர் காணிக்கை, கைமாற்று, பிற உதவிகள் கேட்ட போது, இப்போது தரும்  நிலையில் இல்லை, பிறகு பார்க்கலாம் என்று தைரியமாக சொல்லியிருக்கிறார். அவர் இரண்டு, மூன்று TAXI வைத்து TOURIST CAR தொழில் செய்பவர். அதற்காக  ஒரு மேனேஜர் வைத்திருந்தார்.  இப்படி சொன்ன  இரண்டாவது நாள் அவரின் ஒரு கார் விபத்துக்குள்ளானது. அவர் கார் மோதிய அந்த நபர் ஏராளமான நஷ்ட ஈடு கேட்டார்.  அவர் பயந்துவிட்டார்.  ஸ்தாபனத்தை விட்டு விலகியதால் தான் என்ற பயம் வந்து விட்டது. என்ன செய்வது என்று பதறிய படி என்னிடம் கேட்டார்.  நான் என் பதிலில் தெளிவாக இருக்கிறேன். அன்னைக்கும் உங்களுக்கும் இடையில் யாரும் தேவையில்லை என்றவுடன், இது நடந்து உள்ளது. என்னை பொறுத்த வரை அன்னையிடம் சொல்லிய பிறகு எது நடந்தாலும் நன்மைக்கே என்பதை  நான் நம்புகிறேன். ஆனால் ஏன் இப்படி நடந்தது என்று எனக்கு தெரியாது. அன்னை கன்னத்தில் அறைந்து பல்வலியை குணப்படுத்தியதை பற்றி படித்திருக்கிறோம். அதனால், உங்களுக்கு பயமாக இருந்தால் மன்னிப்பு கேட்டு ஸ்தாபனத்தை சேர்ந்த அந்த  மனிதரிடமே  செல்லுங்கள். அல்லது TOKEN ACT  ஆக ஒன்றை செய்யுங்கள். இந்த சம்பவத்திற்கு முழு பொறுப்பேற்று இடையில் யாரும் இல்லாமல் நீங்களே நேரடியாக அந்த விபத்துக்கான நஷ்ட ஈடு கேட்கும் நபரை DEAL செய்யுங்கள். அங்கும் இடைத்தரகர் / மேனேஜர் வேண்டாம், ஏதோ ஒரு உயர்சித்தத்தை கற்பிக்கவே இது வருகிறது என்ற எண்ணத்துடன் செல்லுங்கள் என்றேன். அவர் பெண். RTO மற்றும் நஷ்டஈடு கேட்கும் வக்கீலை சந்திக்க பயந்தார் என்றாலும் என் வார்த்தை மேல் நம்பிக்கை வைத்து சென்றார். அங்கு சென்ற பிறகே அவர் மேனேஜர் செய்த புரட்டுக்கள் தெரிந்தது. அவர் MOBILE லில் இருந்த DASHCAM RECORDINGஐ ஆதாரமாக காட்டியதும், நிலை அவருக்கு சாதகமாக மாறியது. மேனேஜரை விலக்கினார். தொழிலை நேரடியாக நடத்த ஆரம்பித்தார். இது ஒரு வருடத்திற்கு முன் நடந்தது. இன்று மூன்று TAXI ஐந்து TAXI ஆக மாறியது.  சந்தோஷத்தில் எனக்கு காணிக்கை தர வந்தார். இந்த முட்டாள்தனத்தை இனி யாரிடமும் செய்யாதீர்கள்.  அன்னை மேல் நன்றியறிதல் வளர்ந்தால், அன்னையை பரப்பும், பிறருக்கு தரும்  செயலை நேரடியாக செய்யுங்கள். நான் செய்கிறேன், எனக்கு தா என்று சொல்பவர்களை நம்பாதீர்கள் என்றேன். இங்கு அவருக்கு சரியான நேரத்தில் TOKEN ACT மூலம் அவரின்  உயர்சித்தத்திற்கான விதை வேலை செய்ததைக் காணலாம்.

WHEN NOTHING MOVES, START FROM THE PHYSICAL என்பதை நான் அப்படித்தான் பார்க்கிறேன்.  காரணம், ஒரு விஷயத்தை பொறுப்பேற்றலுக்காக, கடமைக்காக வேண்டா வெறுப்பாக செய்வதாகவே கொள்வோம், என்றாலும் அதில் பொறுப்பேற்றல் என்ற பண்பு அதற்கான பரிமாணத்தோடு (DIMENSIONS) இருக்கும் போது, அது பலன் கொடுக்க ஆரம்பிக்கிறது. அந்த பலனை பார்த்தவுடன் நமக்கு நம்பிக்கை வருகிறது. மேலும் ஆர்வம் (VITAL) வருகிறது.  ஆர்வம் இதை மேலும் சிறப்பாக எப்படி செய்யலாம் என்று நினைக்கிறோம் (MENTAL). அதன் பிறகு அதில் ஒரு செம்மை வருகிறது (SPIRIT) அதாவது அறியாமையில் இருந்து அறிவுக்கு ஆன்மாவிற்கு செல்கிறோம். இறைவன் செய்வதும் இதைத் தான் என்பதால் நம் பொறுப்பேற்றல் என்பது அதற்கான பரிமாணங்களுடன் இருந்தால் அங்கேயே THY WILL ஆரம்பித்து விடுகிறது என்பது என் கருத்து. வாழ்வு – MOVEMENT, செயல் ஆகியவற்றுக்கு தான் முதலில் பலனளிக்கும். பக்திக்கும், அறிவுக்கும் அருளை வெளிப்படுத்த, ஒரு MOVEMENT, PHYSICAL லில் தேவை என்பது இப்போது புரிந்து இருக்கும்.

இன்னும் எளிதாக சொல்ல வேண்டுமானால், நாம் ஒரு கோடி வேண்டுமென்று பிரார்த்தனை செய்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். நாளை காலை கதவை திறந்தால்  கூடையில் ஒரு கோடி இருக்காது. வாழ்க்கை அதற்கான சந்தர்ப்பங்களை கொடுத்துதான், உருவாக்கித்தான் கதவை தட்டும். நாம் நிதானத்தை வளர்த்து கொள்ள வேண்டும் என்று நினைத்தால் – நம் நிதானத்தை கெடுக்கும் சூழலுடன் தான் வாழ்வு வரும். அதை நிதானத்தை வளர்க்கும் அறிவாக எடுத்துக் கொள்வது நம் RESPONSIBILITY.  நல்ல கணவர் வேண்டும் என்ற பிரார்த்தனை செய்த அன்பருக்கு, நல்ல மனிதர்கள் நல்ல  சொத்துக்களுடன், நல்ல வேலை என்று வந்த போது அவர் மனதில் தான் ஜாதி மாறி திருமணம் செய்தால், தன்  சமுதாயம் என்ன நினைக்கும் என்ற காரணத்திற்காக திருமணம் செய்யாமல், காத்திருந்து பிறகு  அன்னை எனக்கு ஒன்றும் செய்யவில்லை என்று சொல்லி விலகிய ஒரு முன்னாள் அன்பரை பற்றி விளக்கமாக முன்பே எழுதியிருக்கிறேன். அன்னை எத்தனை நல்ல PROPOSAL களை கொடுத்தார் என்பதை கண்கூடாக பார்த்தவன் நான்.

இது நான் சென்ற வாரம் சொன்னது போல ஒரு முன்னேற்றதிற்கான RESPONSIBILITYஐ  நாம் எடுக்கவில்லை என்றால், அதற்கான பாதையை நாம் தேர்ந்து எடுக்கவில்லை என்றால், பிறர் அமைக்கும் பாதையில் தான் நாம் செல்ல வேண்டியிருக்கும். நம்மை யார், எந்த OPINION, வழி நடத்துகிறது என்று கவனித்தால் நாம் நம் முன்னேற்றத்திற்கு போடும் முட்டுக்கட்டைகள் புரியும். நம் முயற்சி என்று எதுவும் இல்லாமல் – எதாவது ஒரு அதிசயம் நடக்காதா என்று இருப்பது தெரியும். இறை நோக்கமான முன்னேற்றம், சித்த முன்னேற்றம், வாழ்வில் முன்னேற்றம் என்பதாக இல்லாமல் பிறர் நோக்கத்திற்கு சேவை செய்து, அதையே பெரும் பாக்கியமாக எடுத்துக் கொண்டு அறியாமையில் இருக்கிறோம் என்பது  புரியும்.

இதை அடுத்த நிலையில் சொல்வதானால், நம் பொறுப்பேற்றலை அடுத்தவர் கையில் கொடுக்கக்கூடாது. DO NOT OUTSOURCE RESPONSIBILITY. இதில் பிறர் கருத்தை  கேட்பது, அறிவுரைகள் கேட்பது, முழுதும் புரியும் வரை படிக்கிறேன் MOTIVATIONAL SPEECH கேட்கிறேன், தினமும் அன்னை அன்பர்களுடன் கலந்துரையாடுகிறேன் என்று அனைத்தும் அடங்கும். இவை அனைத்தும் – நான் எழுதும் கட்டுரைகள் உட்பட அனைத்தும் – பிறர் எப்படி செய்தார்கள், அதை நமக்கு எப்படி பொருத்தி பார்ப்பது என்று தெரிந்து கொள்வதற்கு மட்டுமே, அதுவும் ஒரே முறைகளையே  – புத்தக சேவை செய், காணிக்கை கொடு, சமர்ப்பணம் செய் என்று ஒரே மாதிரி பலருக்கும் சொல்வதும், அதை கேட்பதும், எந்த புத்தகத்திற்கு சேவை செய்ய வேண்டும், யாருக்கு காணிக்கை தரவேண்டும் என்பது பற்றிய தெளிவு கூட இல்லாமல், அருள் விலகிய பிறகு புத்தகத்தின் பெயர் கூட விலகி விட்டது, காணிக்கையின்  உயர்வை பற்றி சொன்னவர், இறுதிக்காலத்தில் காணிக்கை தேவையில்லை, தியானமையங்களும் தேவையில்லை என்று சொன்ன பிறகும், அதை போற்றிக் கொண்டிருக்கும் அறியாமை, SINCERITY, GRATITUDE அல்ல. அதன் ஸ்தாபகர் சொல்லும் சித்தஉயர்வுக்கு HIGHER CONSCIOUSNESSக்கு நம்மை கொண்டு செல்வதே நம் RESPONSIBILITY. அதுவே நாம் அவருக்கு காட்டும் நன்றியறிதல்.

அதே போல நாம் பலரிடமும் அறிவுரை கேட்பது சிறந்ததை  செய்வதற்கு அல்ல.  நாம் நினைப்பதை யார் சொல்கிறார்கள், அதை எடுத்துக் கொள்ளலாம் என்பதற்கு தான்.  அதிலும் குறிப்பாக வியாபாரம் செய்தே அறியாதவர், வியாபார சூழல் என்றால் என்னவென்றே தெரியாதவர், சாதாரண மக்களுடன் பழகி பார்க்காதவர், BUSINESS CONSULTANT என்று சொல்வதும், அதை கேட்பதும், நம் பொறுப்பை வேறு யாராவது எடுத்துக் கொண்டு செய்யமாட்டார்களா என்பதன் வெளிப்பாடே. அதனால் நாம் ஏற்கும் பொறுப்பில் அத்தகைய பரிமாணம் (DIMENSIONS OF CONSCIOUS RESPONSIBILITY) இருக்கக் கூடாது.

இந்த CLARITY தெளிவு தான், நம் பொறுப்பேற்றலுக்கு ஒரு பலத்தைக் கொடுக்கும். காரணம் ஒவ்வொரு ஆன்மாவும் பரிணாத்தில் முன்னேறும் விதத்தை முடிவு செய்துகொண்டே வந்து இருக்கிறது.  அதனால் பிறர் சூழல், அறிவு, நம்பிக்கை, திறமை, செயல்கள் வேறாக இருக்கும் போது, அதையே நாம் பின்பற்றுவது  நமக்கு பலன் அளிப்பதாக இருக்காது.

கர்மயோகி நிலையில் எடுக்க வேண்டிய ஒரு பண்பை, செயலை என் நிலையில் எடுத்துக் கொண்டதால் சுமார் ஒரு கோடி நஷ்டப்பட்டதை பற்றி வேறு ஒரு கட்டுரையில் எழுதியிருக்கிறேன்.  அதனால் நமக்கான RESPONSIBILITY க்கு காரணம், அதன் நோக்கம், அதை அடையும் விதம் பற்றிய தெளிவு இல்லையென்றால், நாம் எடுக்கும் RESPONSIBILITY பிறருக்குத் தான் பயன்படும். (செயல்களின் சூட்சுமம் (CAUSAL SUBTLE), காரணகாரிய தளம் (CAUSAL PLANE) பற்றி நான் இந்த வலைதளத்தில் எழுதியதை படித்தால் மேலும் விளக்கம் பெறலாம்).

அதனால் முதலில் நாம் பார்க்க வேண்டியது நம் RESPONSIBILITYக்கான வேலையைத் தான் நாம் செய்துக் கொண்டு இருக்கிறோமா என்பதே. அதை நாமே நம் வழியில் செய்துக் கொண்டு இருக்கிறோமா அல்லது நம் முன்னேற்றத்திற்காக நாமே நமக்குத் தெரிந்த உயர்ந்த பண்புகள் மூலம் செய்துக்கொண்டு இருக்கிறோமா, அல்லது பிறரை கேட்டுக்கொண்டு, பிறர் திருப்திக்காக, அவரிடம் நல்ல பெயர் எடுக்க செய்துக்கொண்டு இருக்கிறோமா என்பதற்கான நேர்மையான பதிலை கண்டுபிடித்தாலே  நாம் பாதி வென்று விடுவோம்.  காரணம் நம் வியாபாரத்தைக் கூட போட்டியாளரின் PRODUCT, STRATEGY, PRICE தான் முடிவு செய்கிறது. HOTELக்கு சென்றால் கூட நமக்கு பிடித்தது பல இருந்தாலும், யாராவது இங்கு அது நன்றாக இருக்கும் சாப்பிடு என்று சொல்பவரையே ஏற்றுக் கொள்கிறோம். நம் உடை முதல் பிள்ளைகளின் கல்வி, திருமண விஷயங்கள் அனைத்திலும் நமக்கானது எது என்ற தெளிவு இல்லாமல் இருப்பதைக் காண முடியும். அதனால் RESPONSIBILITYக்கு பின்னால் காரணம், நோக்கம், அதன் மூலம் நாம் பெற வேண்டிய ஆனந்தம் நமக்கு தெளிவாக இருக்க வேண்டும். அப்போது தான் மற்றவர்களுக்கு ஒரு மடங்கு பலிப்பது நாம் அன்னையின் பண்புகள் துணையுடன் பல மடங்கு பெற முடியும். நம் ஆனந்தத்திற்கான நிலை எது என்று முடிவு செய்வது நம் RESPONSIBILITY.

TOKEN ACT என்பது ஒரு பெரிய படைப்பாற்றல் கொண்ட பண்பை எளிதாக, படிப்படியாக முறையாக செய்து ஒரு செயலில் வெளிப்படுத்தி அதற்கு ஏற்ற பலனை அடைவது. சென்ற வாரம் சொன்ன சமநிலை உதாரணத்தை எடுத்துக் கொண்டால் – இந்த வாரம் முழுதும் குறுக்கே பேசமாட்டேன், இந்த வாரம் முழுதும் எனக்கு பிறர் செய்தால் எது பிடிக்காதோ, அதை நான் பிறருக்கு செய்யமாட்டேன் – போன்று சிறு பிரிவுகளாக சிறு நிலைகளாக எடுத்துக் கொள்வது TOKEN ACT.

அதன் பின்னால் உள்ள  தத்துவம், ஒரு விஷயத்தை சிறு விஷயத்தில் செய்ய முடியவில்லையென்றால் பெரிய விஷயத்தில் செய்ய முடியாது. அதே போல ஒரு பெரிய விஷயத்தில் ஒரு பண்பை செயல்படுத்த முடியம் என்றால் அதை ஒரு சிறு விஷயத்திலும் அதைக் கொண்டு வர முடியவேண்டும். இதற்கு கர்மயோகி பல முறை தந்த உதாரணம் OFFICE INSPECTION, PAY REVISION, APPRAISAL போன்ற நேரங்களில் எப்படி இருப்போம். அதே போல ஒவ்வொரு நாட்களும் இருக்க முடியுமா? தரிசன நாட்களில் எப்படி இருக்கிறோம். மனப்பான்மை, நடத்தை, பழக்கம் எப்படி இருக்கிறது அப்படி ஒவ்வொரு நாளும் இருக்க முடியுமா? இருக்க வேண்டும் என்பதே RESPONSIBILITY. அதுவே உயர் சித்தம். குறைந்த பட்சம் உயர்சித்ததிற்கான கவனம்.  அப்படி இல்லாமல் , BOSSக்காக, மையத்தலைவருக்காக, ஸ்தாபனத்தின் முக்கிய உறுப்பினர், குடும்ப உறுப்பினர் என்பதற்காக செய்தால் எவ்வளவு RESPONSIBILITYயோடு சேவை செய்தாலும் அது வாழ்வு தரும் பலனாகத் தான் இருக்குமே தவிர அன்னை தரும் பலனாக இருக்காது.

உதாரணமாக  ஒரு RESPONSIBILITYஐ  TOKEN ACTஆக எடுத்துக்கொண்டு செய்த போது நான் சம்பளத்திற்கு வேலை செய்த அதே கம்பெனிக்கு DIRECTOR ஆனேன்.  சாதாரண அன்பராக TOKEN ACT ஆக ஒரு சேவை செய்ததன் பலனாக சில ஆண்டுகள் கழித்து அந்த சேவை ஸ்தாபனத்தின் DIRECTOR ஆனேன். என்னைவிட அதிகமாக, SINCERE ஆக கஷ்டப்பட்டு பல ஆண்டுகள் செய்தவர்களுக்கு அந்த பலன் கிடைக்கவில்லை.  காரணம் அவர்களது RESPONSIBILITY உயர் சித்தத்தை அடிப்படையாக கொண்டு இருக்கவில்லை.  யாருடைய திருப்திக்கோ, பயந்தோ செய்வதாக இருந்தது. RESPONSIBILITYக்கு அதன் DIMENSIONS முக்கியம்.

இங்கு நாம் செயலை செய்யவில்லை. வேலைக்கான பண்புகளை செயல்படுத்துகிறோம். பண்புகள் நம் PERSONALITYஐ  உயர்த்துகிறது. அது தான் THY WILL என்பதால் வாழ்வும் வளமும் உயர்கிறது. அது நம் எதிர்காலத்தை நிர்ணயம் செய்கிறது.  நாம் பண்புகளை வெளிப்படுத்தும் போது தேவையில்லாத உணர்வுகள் – நல்ல பெயர் எடுப்பது, யாரையோ திருப்திப்படுத்துவது, கவனமாக மனிதர்கள், சூழல் ஆகியவற்றை ஏற்று நடப்பது போன்றவை இல்லாததால் நாம் செய்யும் வேலையின் காலம் சுருங்குகிறது . சேமிக்கும் நேரம் முன்னேற்றத்திற்கு செலவிட வேண்டும் என்பது RESPONSIBILITY. (பணத்தை சேமிக்க நினைக்கும் அளவுக்கு நாம் காலத்தை சேமிக்க நினைப்பதில்லை, என்பது பற்றியும் அன்பருக்கு ஒரு மாதம் என்பது 33 நாட்கள் என்று கர்மயோகி எழுதியதை படிப்பது சுவாரசியமாக இருக்கும்)

இப்படி பெறப்படும் அறிவுரைகள் , தினசரி உரையாடல்களில்  பொதுவான ஒரு கருத்தை ஆன்மீக ரீதியாக சொல்வதாக சொல்லப்படும் அறிவுரைகள். அப்போதைக்கு நாம் ஏதோ பெரிய ஞானம் பெற்றதாக நினைத்தாலும் நடைமுறையில் ஒன்றுக்கும் உதவாமல் அல்லது அதை எப்படி செயல்படுத்த வேண்டும், என்று தெரியாத நிலையிலேயே இருக்கும்.  அதற்கான விளக்கம் கேட்டால் , கேட்பவரை நல்லது மற்றும் சரியானவற்றை சொல்பவரை,  செய்பவரை, விலக்குபவர்களாக இருப்பார்கள். காரணம் அதன் அடுத்த நிலையில்- அறிவுரை கூறும் நிலையில் இருந்து செயலை படும் நிலைக்கு வரும்போது அவர்களது சுயநலம், கயமை, அறியாமை, அவர்களின் LIMITATION OF KNOWLEDGE வெளிப்பட்டு EXPOSE ஆகிவிடுவர் என்பதால்.

நீங்கள் உண்மையாக முன்னேற வேண்டும் என்று விரும்புபவர்கள், உங்களை எந்த விதத்திலும் உங்களை பயமுறுத்தும், சமுதாயத்திலிருந்து விலக்கும், உறவுகள், நண்பர்களிடமிருந்து விலக்கும், அத்தகைய மனப்பான்மையை வளர்க்கும் அறிவுரைகளை வழங்கமாட்டார்கள். ALL LIFE IS YOGA, IN YOGA ALL IS INCLUSIVE  என்னும் LIFE DIVINE அடிப்படையை நாம் எப்போதும் மறக்கக்கூடாது.  இது வரை நாம் பார்த்தது TOKEN ACTன் DIMENSIONS .

TOKEN ACTக்கு தேவையான STRUCTURE பற்றி அடுத்த வாரம் பேசலாம்.

Author Info
Ramesh Kumar

Ramesh Kumar

SHARE
Share on facebook
Share on telegram
Share on whatsapp

TOKEN ACT TO THY WILL – அறிவிப்பு

இடைவிடாத வேலை, உள்நாடு மற்றும் வெளிநாடு தொடர் பயணங்கள் காரணமாக மார்ச் 31 , 2026 வரை அடுத்த மூன்று அல்லது நான்கு வாரங்களுக்கு கட்டுரைகள் எழுத / பதிவேற்ற முடியாது. டோக்கன் ஆக்ட்

Read More »

TOKEN ACT TO THY WILL – 5

இப்போது முதல் TOKEN ACT ஐ  எடுத்துக் கொள்ள அடிப்படையான மனப்பான்மைகளை விளக்க நினைக்கிறேன். இது SPIRITUAL OPULENCE இல் உள்ள PREPARATION TO TOKEN ACT மற்றும் அது தொடர்பான கட்டுரைகள், மற்றும்

Read More »

More Articles

TOKEN ACT TO THY WILL – அறிவிப்பு

இடைவிடாத வேலை, உள்நாடு மற்றும் வெளிநாடு தொடர் பயணங்கள் காரணமாக மார்ச் 31 , 2026 வரை அடுத்த மூன்று அல்லது நான்கு வாரங்களுக்கு கட்டுரைகள் எழுத / பதிவேற்ற முடியாது. டோக்கன் ஆக்ட்

Read More »

TOKEN ACT TO THY WILL – 5

இப்போது முதல் TOKEN ACT ஐ  எடுத்துக் கொள்ள அடிப்படையான மனப்பான்மைகளை விளக்க நினைக்கிறேன். இது SPIRITUAL OPULENCE இல் உள்ள PREPARATION TO TOKEN ACT மற்றும் அது தொடர்பான கட்டுரைகள், மற்றும்

Read More »