Decent – Ascent – இந்த வார்த்தைகளை ஏராளமானோர் பல பார்வைகளில் விலக்கி இருப்பார்கள். எதையும் அதிக பட்ச யோக முறையாக பார்க்காமல் – நாம் இருக்கும் சாதாரண மனிதன் என்னும் நிலையில் இருந்து பார்க்கும் முறையே என் வழி என்பதால் கர்மயோகி சொல்லும் குறித்த பட்ச விளக்கமான – இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை என்பதை Decent Ascent என்று பார்க்கிறேன்.
லைப் டிவைனில் -மனிதனின் உண்மையான வேலை தெய்வீக வாழ்வை நோக்கிச் செல்வதாகும் என்றே கூற படுகிறது. அதற்கான ஆன்மீக பண்புகளை தரவே வாழ்வில் அனைத்தும் – துன்பம் , இன்பம், முரண்பாடுகள் – வருகிறது. நம் அனுபவங்களின் மூலம் நாம் பெற்ற பாடங்கள், நிதானம், பொறுமை போன்றவற்றை கவனித்தாலே இது புரியும். நம் இயலாமை நமக்கு புரியும். அவற்றின் பின்னல் எதோ ஒரு சக்தி செயல் பட்டது புரியும்.
அதன் சாரமாக புரிய வேண்டியது என்ன வென்றால் ஒரு சக்தி அல்லது இறைவன் வரையரையற்றவனாக வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வுக்குப் பின்னாலும் இருக்கிறான். அதை பார்ப்பதே, அதை நோக்கிப் பயணிப்பதே , அதன் மூலம் இறைவன் நம் வாழ்வில் பலிக்க இடம் கொடுப்பதே வேலை என்று புரிய வேண்டும். மனிதன் உயரும் ஒவ்வொரு நிலையும் – உணர்வில், அறிவில் உயரும் ஒவ்வொரு நிலையும் – இறைவன் இறங்கி வரும் நிலை என்பதை Decent Ascent என்று புரிந்து கொள்ள வேண்டும்.
நாம் வாழ்வில் பண்புகளுக்கு இடம் அளிப்பது என்பது இறைவன் விரும்பிய ஆனந்தத்திற்கு நம் வாழ்வில் இடமளிப்பது. அது படைப்பாற்றல் கொண்டது என்பதால் வாழ்வில் அபரிமிதமாக பலிக்கிறது. சுருக்கமாகச் சொல்வதென்றால் அன்னையின் Symbol -லில் உள்ள 12-ம் படைப்பாற்றல் கொண்டவை. அதன் எந்த நிலையை நாம் எடுத்தாலும், நாம் அவரின் நோக்கத்திற்கு வாழ்வில் இடம் அளிக்கிறோம். உதாரணமாக – சமநிலை – equality என்பது symbol -லில் உள்ள ஒரு படைப்பாற்றல். அதன் ஒரு பகுதியாக, detachment , non -reaction , non -initiative , step back என்று எப்படி கொண்டு வந்தாலும், அது தரும் மாறுதல்களை, முன்னேற்றத்தை நம் வாழ்வில் பார்த்து இருக்கிறோம். சில கட்டுரைகளில் சொன்னது போல நம் வாழ்வில் நடக்கும் அத்தனை முரண்பாடு, பிரச்சனைக்கும் காரணம் – நாம் யாராக இருக்க வேண்டும் என்று நாம் நினைப்பதற்கும், நாம் யாராக இருக்க வேண்டும் என்று இறைவன் நினைப்பதற்கும் இடையே நடக்கும் போராட்டம் தான். இறைவன் நம்மை விட பலம் மிக்கவன் என்று நினைத்தால் அவன் வழிக்கு போய் விடுவதே நல்லது என்பதே பகுத்தறிவு.
இப்போது நம் முன் முடிவுகள், அபிப்ராயங்கள், சுகத் தேர்வுகள், விருப்பங்கள் என்று ஒரு உணர்வு அல்லது அறிவு மையத்தின் தேவைகளை வைத்து, அதற்கு வாழ்வில் இடம் கொடுத்துக் கொண்டு இருக்கிறோம். அதை அகந்தை என்று சொல்லலாம். அதற்கு பதிலாக அதன் அருகிலேயே-இருக்கும் வேறு ஒரு மையத்தை – இறைவன், ஆன்மா, அன்னை, Thy will என்று எப்படி வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம். அதை மையமாக வைத்து செய்தால், நாம் பிரம்மத்தின் நோக்கத்திற்கு இடம் அளிக்கிறோம். அப்படி செய்யும் ஒவ்வொரு முறையும் நாம் சித்தத்தில் உயர்கிறோம். அதன் பொருள், நாம் இறைவனை நெருங்குகிறோம். அல்லது இறைவன் நம்மை நெருங்குகிறான்.
அதன் அடையாளமாக அது வாழ்வில் வெளிப்படும் விதங்களை, பிழைப்பு, வளர்ச்சி, முன்னேற்றம், பரிணாமம் என்று நான்கு வகைகளாக பிரிக்கலாம்.
நாம் வாழ்வில், நம் தேவைகளை பூர்த்தி செய்ததாக நாம் நினைக்கும் இடங்களைக் கவனித்தால் அதை காப்பாற்ற நாம் இன்றும் போரடிக் கொண்டிருப்பது தெரியும். உதாரணம் என் business -ஐ ஒவ்வொரு நாளும் நானே concentrate செய்து, organise செய்து என் மேற்பார்வையில், வாடிக்கையாளருக்கு கட்டுப்பட்டுத் தான் நடக்கிறேன் என்றால் நான் ஏதோ சாதித்து விட்டதாக நினைத்தாலும், இன்னும் பிழைப்புக்காக வாழ்க்கை நடத்துகிறேன் என்றே பொருள்.
அப்படிப்பட்ட வாழ்க்கை வளர்ச்சியை நோக்கி வர வேண்டுமென்றால் அந்த ஒழுங்கும், concentration -ம் தானே வரவேண்டும். அது physical நிலையில் நல்ல office ஆக , system -ஆக , வேலை செய்யும் அனைவருக்கும் நல்ல மனநிலை, சூழலை தருவதாக இருக்க வேண்டும். அது ஜடநிலைக்கான பண்புகளை physical and, materialistic values-களை ஒரு முயற்சி மூலம், முனைந்து கொண்டு வருவது. அது ஓரளவு என் நேரடி ஈடுபாட்டை குறைத்து மற்ற விஷயங்களில் concentrate செய்ய வைக்கிறது. அதாவது என் உலகத்தை வாழ்வில், வரையறைகளை சற்றே அதிகப்படுத்துகிறது.
அடுத்த நிலை என்பது இதில் சம்மந்தப்பட்ட அனைவரும் நம் ஆர்வத்தை, நோக்கத்தை அவர்கள் நோக்கமாக எடுத்துக் கொண்டு செய்யும் போது நாம் இன்னும் சுதந்திரம் பெறுகிறோம். வியாபார சூழல், அரசு சட்டங்கள், சமுதாய சூழல் எல்லாம் நமக்குச் சாதகமாக இருக்கும் நிலை அது. இருக்கும் நிலையைப் பற்றிக் கவலைப்படாமல், அதை காப்பாற்ற வேண்டிய காட்டாயத்தில் இல்லாமல், அடுத்த கட்ட முன்னேற்றத்திற்கு செல்லும் நிலை அது. குறைந்த பட்சம் அது பற்றிய ஆர்வம், சிந்தனை வரும் நேரம் அது.
இந்த மூன்று நிலைகளையும் – அதற்கு நாம் பயன்படுத்திய பண்புகள், எண்ணம், மனநிலை ஆகியவற்றை நாம் நிலையாக பயன்படுத்தும் போது வாழ்வின் தளம் நேரடியாக பிரம்ம நோக்கத்தை பெறுகிறது. அது நாம் இனி அத்தகைய முயற்சியில் ஈடுபட்டே செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லாமல், சமுதாயம், அரசாங்கம், மனிதர்கள் தானே உதவ முன் வந்து விரிவடைய வைக்கும். அதனால் ஆன்மாவே அதை நடத்தும் அல்லது அன்னையே அதை நடத்துவார். உலக சாதனை படித்தவர் சுய சரிதையை படித்தால் இந்த நான்கு நிலைகளை தாண்டியே சாதித்து இருப்பது புரியும்.
இந்த நான்கு நிலைகளில், நாம் எந்த நிலையில் இருக்கிறோம் என்று சிந்தித்துப் பார்ப்பது அடுத்த நிலைக்கு உயர முயல்வது, நம் வேலை. மனிதனின் வேலை.
இதற்கான விளக்கங்களை அடுத்த அடுத்த வாரங்களில் பார்ப்போம்.