கர்மயோகி கல்வி கற்பதிலும், கற்றுக் கொடுப்பதிலும் ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வரவேண்டும் என்று விரும்பினார். மத்திய அரசு புதிய பாட திட்டத்தை கொண்டுவர திட்டமிட்டபோது இந்த கருத்துகளை சேர்க்க பல முயற்சிகள் எடுத்தார். பெரிய பலன் எதுவும் தரவில்லை. ஆனால் அவர் மனதில் நினைத்து இருந்த பல கருத்துகள் அதில் இடம்பெற்றதோடு இல்லாமல் அந்த திட்டத்தின் பெயரே கர்மயோகி திட்டம் என்று வந்தது.
அவர் இருந்த வரை சற்றே வேகம் எடுத்த அந்த திட்ட விவாதங்கள் மற்றும் செயல்படுத்துதல் கடந்த ஒரு வருடமாக அமைதியாக இருக்கிறது.
அதற்கு கவனம் கொடுக்கும் ஒரு முயற்சியாக – கல்வி பற்றிய அவரின் கருத்துகளை அவ்வப்போது எழுதலாம் என்று இருக்கிறேன். DISCUSSION என்னும் TAB இல் இது பதிவேற்றப்படும்.
அன்பர்களில் ஆசிரியர்கள் இருந்தால் இதை சற்றே முயற்சித்து பார்ப்பது அவருக்கான நன்றி அறிதல் ஆகும்.
இதை வாரம் தோறும் எழுத முடியுமா என்று தெரியவில்லை. என்றாலும் தோன்றும் போதெல்லாம் பகிர்ந்து கொள்கிறேன்.
ஆர்வமுள்ள மற்ற ஆசிரியர்களுக்கும் இதை பகிரலாம். சந்தேகங்களை 80144 22222 என்ற எண்ணில் WhatsApp இல் கேட்கலாம்.
TEACHING IS NOT LEARNING. EDUCATION IS NOT TEACHING.
TEACHING – கற்பித்தல் என்பது ஒரு வகையான தகவல் பரிமாற்றம். அதன் பின் உள்ள மனப்பான்மை அதிகாரம் (MENTAL AUTHORITY). அதாவது உன்னை விட நான் அதிகம் தெரிந்தவன். அதனால் நான் கற்றுக் கொடுக்கிறேன் என்னும் மனப்பான்மை அதன் பின்னால் உண்டு. அது ஆசிரியர் என்னும் பதவி தந்தது. அது போல மாணவன் என்னும் பதவி தந்த மனப்பான்மை அதை அப்படியே ஏற்றுக் கொள் (MENTAL SUBMISSION) என்பது. இது உண்மையில் கற்பித்தல் அல்ல. மனப்பான்மையை உருவாக்குவதும் அல்ல. மாணவனது அறிவை ஒரு விஷயத்தை நோக்கி நிலை நிறுத்துதல் – MENTAL CONDITIONING. இந்த பரிமாற்றத்தில் உள்ள அதிகாரமும், அடிபணிதலும் விலகும் போது அது கற்றல் ஆகிறது. அப்படி விலக்கும் போது சமுதாய சூழல், இது வரை இருந்த கல்விக்கான அடிப்படை, அது உருவாக்கிய மனப்பான்மை ஆகியவற்றால் மாணவன் நிச்சயம் எதையும் கற்றுக் கொள்ள மாட்டான். கற்க விருப்பப்பட மாட்டான். ஆர்வம் உள்ளவன் மட்டுமே கற்பான். கற்க விரும்புவான். அவனுக்கு ஆர்வத்தை ஊட்டும் ஒன்று அங்கு இருக்கும் போது தான் அது நடக்கும். அதன் முதல் ஆரம்பமாக மாணவனுக்கு ஆசிரியர் மேல் ஆர்வம் வர வேண்டும். நன்றாகப் பாடம் எடுக்கிறார், நல்ல ஆசிரியர், பிரபலமான ஆசிரியர் என்று ஒரு பள்ளியில் இருப்பவரை கவனித்தால் அவர் ஏதோ ஒரு வகையில் மாணவனின் ஆர்வத்தை தூண்டியவராக இருப்பார். ஒரு பள்ளி தர வேண்டிய அடிப்படையான, குறைந்த பட்ச சூழல் இது. ஆசிரியர் மேல் இருக்கும் ஆர்வம் அவர் எடுக்கும் SUBJECT மேல் ஆர்வமாக மாற வேண்டும். மதிப்பெண் மட்டுமே முக்கியம் என்று கற்றுக் கொடுக்கப்படும் போது அவன் நிலையில் படிப்பு என்பது மனப்பாடம் என்னும் அளவில் மட்டுமே இருக்கும். அவன் பெற நினைக்கும் மதிப்பெண்ணுக்கு போதுமான அளவில் மட்டுமே இருக்கும். சிலருக்கு 40 என்றும் சிலருக்கு 80, 90 என்றும் இருக்கலாம்.
ஏதோ ஒரு ஆர்வம் வரும் போது மட்டுமே அதன் சாரம் புரியும். சில சமயங்களில் அது ஆசிரியரை, சூழலை IMPRESS செய்யும் ஆர்வமாகக் கூட இருக்கலாம். அது VITAL DYNAMISM. அதையும் தாண்டிய ஆர்வம் தரப்படுமானால், அது CURIOSITY என்னும் நிலைக்கு ஆசிரியருக்கும் மாணவனுக்கும் ஒரு இணைப்பை ஏற்படுத்தும். அது சூழ்நிலை பரிமாற்றத்தை தர வல்லது.
பண்டைய காலங்களில் குருவிடம் சிஷ்யன் பெற்ற அறிவு அப்படி பெறப்பட்டதே. அதுவே குறைந்தபட்சம் ஒரு INDIVIDUALITYஐயும், அடுத்த நிலையில் CREATIVITYயையும் தரும். INDIVIDUALITY – MIND. CREATIVITY – SOUL. அவன் ஆர்வம் இருக்கும் நிலைக்கு ஏற்ப அவன் நிற்கிறான் (LEVELING OFF -SATURATING IN THE SAME LEVEL). இந்த சூழல்களை தரும் இடமாக பள்ளி அமைய வேண்டும். அது வெளிப்படுத்தும் கருவி ஆசிரியர்கள். இது கற்றலோ, கற்பித்தலோ அல்ல. மாணவனுக்கு அனுபவத்தை தரும் நிலை. அவன் ஆர்வம் எதில் வேண்டுமானாலும் இருக்கலாம். பொருள், பெயர், காதல், அந்தஸ்து என்று ஆர்வமும் இலக்கும் எது வேண்டுமானாலும் இருக்கலாம். அதை POSITIVE ஆக அடைய வேண்டும் என்னும் உயர்சித்ததை அந்த சூழல் தருவதாக இருக்க வேண்டும். அது மாணவன், ஆசிரியர் கையில் இல்லை. ஸ்தாபகரின் சித்தமே அதை சாதிக்க வேண்டும். ஆசிரியர்களின் சித்தம் மூலமே அதை சாதிக்க முடியும்.
இதை புரிந்துக் கொண்டு இடைவிடாது முயலும் ஒரு ஸ்தாபகரால், ஆசிரியரால் இதை சாதிக்க முடியும். உள்ளிருந்து தான் நாம் கற்றுக் கொள்ள முடியும் அதுவே ஞானம். வெளியில் நாம் பெறுவது அனைத்தும் SOCIAL CONDITIONING. அது நாம் பெற்ற அறிவு, அனுபவம் ஆகியவற்றில் சிறந்ததை எடுத்துக் கொள்ள தேவையான அறிவை தருமே தவிர, அதன் சாரத்தை புரிந்துக் கொள்ளும் ஞானத்தை தராது. நமக்குத் தேவை SOCIAL CONDITIONING அல்ல. PSYCHOLOGICAL CONDITIONING. அது MANNERS ஆக, ATTITUDE ஆக வெளிப்பட வேண்டியது. அது சூழலில் நிதானத்தையும், பொறுமையையும் கொடுக்கும் போது அது மாணவனிடம் CHEERFULNESS ஆக வெளிப்படும்.
இங்கு கற்றுக் கொடுப்பதானாலும், கற்றுக் கொள்வதானாலும் அதன் பின் வளர வேண்டியது SENSE OF RESPONSIBILITY, AS A MEMBER OF SOCIETY TO UPLIFT THE SOCIETY TO NEXT BETTER GENERATION. இது வரை தரப்பட்ட MORAL EDUCATION, MENTAL EDUCATION – MEMORIZATION என்ற நிலையை தான் தந்தது. நான் யார் என்ற உயர் ஆன்மீக விஷயங்களை விதைத்தால், கற்பித்தால் கூட அது ஏற்கனவே உள்ள MENTAL CONDITIONING BASED ON HIS MEMORIZATION ஐயே கொண்டு செல்கிறது. அப்படி இல்லாமல் நான் எந்த நிலையில் இருந்தாலும் அந்நிலையில் இருந்து பரிணாமத்தில் வளரவே படைக்கப்பட்டவன் என்ற வாழ்வின் சாரம் புரிதலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.
SELF DISCOVERY OF TEACHER SHOULD LEAD TO SELF DISCOVERY OF THE STUDENT.
ஆசிரியரின் கற்பித்தல் மூலம் ஒரு அறிவை தருவதற்கு பதிலாக மாணவனை அவன் வாழ்விற்கான ஞானத்தை பெற வைக்கும் முறை இது. அதுவே அவனை சாதிக்க வைக்கும். அப்போது தான் அவன் ஆர்வம், அவன் AMBITION, அவன் IDEA அவன் விரும்பும் பலனை, அவனுக்கான ஆனந்தத்துடன் கொடுக்கும். காரணம் அதில் தான் ASPIRATION OF THE SOUL, INSPIRATION OF THE SUBCONSCIOUS PERSONALITY, MENTAL CURIOSITY, PHYSICAL PERFECTION வரும். இது ஒரு முழுமை என்பதால் அவன் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டிய சூழலை வாழ்வே உருவாக்கும்.
குறைந்த பட்சம் மாணவனுக்கு புரிய வேண்டியது வாழ்வில் பிரச்சினைகள், முரண்பாடுகள் எங்கிருந்து வேண்டுமானாலும் வரலாம். ஆனால் அதற்கான தீர்வு அவனிடம் இருந்தே வர வேண்டும். அவன் இருக்கும் நிலையில் இருந்து பிரச்சினையை தீர்க்க முடியாது. அதற்கு அடுத்த உயர்ந்த நிலைக்கு சென்றே அதை தீர்க்க முடியும் என்பது புரிய வேண்டும்.. அதாவது வாழ்வில், அதன் சட்டங்களில் பரிணாமம் (EVOLUTION) புதைந்துள்ளது.
உதாரணமாக திறமையில்லாததால் வரும் பிரச்சினைகளை அதற்கு அடுத்த நிலையில் திறமையை பெற்ற பிறகே தீர்க்க முடியும். கோபத்தால் வந்த பிரச்சினையை அதற்கு அடுத்த நிலையில் நிதானம் வந்த பிறகே தீர்க்க முடியும்.
இதை புரிய வைப்பதே கற்றல், மற்றும் கற்பிப்பதின் சாரம்.