Share on facebook
Share on telegram
Share on whatsapp

பொதுப்புத்தியும் ஆனந்தமும் – 2

முதல் கட்டுரையின் சாரம், அடிப்படை புரிந்தால் மட்டுமே அடுத்தடுத்த விளக்கங்கள் புரியும். கர்மயோகியின் தத்துவ விளக்கங்களை எளிமைப்படுத்தி தர விரும்பும் என் வரையறை அல்லது இயலாமை அது. என்றாலும் முயல்கிறேன்.

அதன் சுருக்கம் என்னவென்றால் நம்மிடம் நான்கு பகுதிகள் உள்ளது (PARTS OF THE BEING) ஒரு செயலுக்கான வேலைகளை வெளிப்படுத்தும் பகுதி உடல், அதற்கான நோக்கம் மனப்பான்மை, ஆசை, உணர்ச்சிகளைக் கொண்ட உணர்வு பகுதி, அதற்கான அனுபவம், அறிவு, ஞானம், விவேகம், பாகுபாடு ஆகியவற்றை கொண்ட புத்தி என்னும் பகுதி, இவை செயல்படும், செம்மை, உயர்வு, உண்மை, பண்பு, உயர்சித்தம், ஆகியவற்றுக்கு ஏற்றாற்போல பலன் தரும் படைப்பாற்றல் கொண்ட ஒரு சக்தி நான்கும் கொண்டது தான் BEING. அதை எப்போதும் சமநிலையில் வைப்பது காரிய சித்தியை, சாதனையை ஆனந்தத்தை தரும் என்பது தான் பொதுப்புத்தியின் சாரம்.

நாம் தோல்வியில், துன்பத்தில், செய்வது அறியாமல் இறைவனிடம் ஓடிய தருணங்களை நினைத்து பார்த்தால் உடலால் செய்யும் வேலையில் வைத்த பாக்கிகள் திறமைக்குறைவு, நோக்கம், மனப்பான்மையில் தவறுகள், கீழ்நிலைகள், தாழ்ந்த சித்தங்கள், தேவையான அறிவு, அனுபவம், பாகுபாடு இல்லாமை என்று அனைத்தையும் ஆராய்ந்து பார்த்தால் நான்கு பகுதிகளும் சரியாக இருக்கும் போது மட்டுமே நாம் வெற்றி பெற்று இருக்கிறோம், ஆனந்தம்  அடைந்து இருக்கிறோம் என்பது புரியும். இந்த சாரம் இந்த கட்டுரைகளை முழுதும் படிக்கும் வரை நினைவில் இருப்பது அவசியம்.

இங்கு பொதுப்புத்தி என்பதை எல்லோரும் செய்தால் நாமும் செய்யலாம் என்ற மனநிலையோடு அணுகுவதே அதிகம். பெரும்பான்மையினரின் புத்தி பொதுப்புத்தி என்று எடுத்துக் கொள்ளும் அறியாமை அது. ஆனால் அப்படியே எடுத்துக் கொண்டால் கூட எல்லோரும் லஞ்சம் கொடுக்கிறார்கள், வாங்குகிறார்கள், நிறைய பேர் நிறைய தவறு செய்கிறார்கள், நன்றாக இருக்கிறார்கள், தவறே செய்யாதவர்கள் துன்பப்படுகிறார்கள் என்னும் போது எங்கே நம் பொதுபுத்தியை இழந்தோம். நாம் செய்தால் சரி வரவில்லை அல்லது மாட்டிக் கொள்கிறோம். அல்லது செய்ய முடியவில்லை.

காரணம் நல்லவரிடம் இருப்பது பயம், தவறு செய்பவர்களிடம் இருப்பது தைரியம். தைரியம் எதிர்மறையாக பயன்பட்டாலும் அது ஒரு உயர் சித்தத்தின் பண்பு என்பதால் அந்த பயனைக் கொடுக்கிறது. தவறு, தீயது செய்வோரிடம் ஒற்றுமை, சுமுகம் எப்போதும் அதிகமாக இருக்கும். நல்லது செய்வோர் மத்தியில் அத்தகைய ஒற்றுமை, புரிதல், சுமுகம் இருப்பதில்லை.  நாம் அறிந்த ஆன்மீக ஸ்தாபனத்தில் கொள்ளையடிப்போரிடம் இருக்கும் ஒற்றுமை, சுமுகம், ஸ்தாபகருக்கு சேவை செய்ய வேண்டும் என்பவர்கள் இடத்தில் இல்லை என்பது கண்கூடு.  காரணம் தீயதில், ஏதோ ஒரு விதத்தில் உயர்சித்த பண்பு ஒன்று பயன்படுத்தப் படுகிறது. அதாவது அவர்களது உடல், உணர்வு, அறிவு, உயர்சித்தம் ஆகியவற்றில் முரண்பாடு இல்லை. CONFLICT இல்லை. “TRUTH IS THAT WHICH IS WITHOUT CONFLICT” என்னும் தத்துவப்படி உண்மை போல அதுவும் அருளை பெற்று வளர்கிறது. புல்லுக்கு பாய்சும் நீர் -… உதாரணம் போல தேவையில்லாததையும் அது வளர்க்கிறது. அதுவே பொதுப்புத்தியின் அடிப்படை. 

உடல், உணர்வு, அறிவு, ஆன்மா – உயர்சித்தப்பண்புகள் அனைத்தும் ஒரே நேர்கோட்டில் வரும் போது தான் ஒரு விஷயத்தில் சாதனை ஏற்படுகிறது. ஒரு செயல் தன்னைத்தானே பூர்த்தி செய்துக்  கொள்கிறது. அது ஆனந்தம் தருகிறது. அந்த நிலைக்கு மீண்டும் போகத் தேவையில்லாமல் அடுத்த உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்கிறது. இதற்கான உதாரணங்களை – என் PRODUCT கண்டுபிடித்த விதத்தை COMPLETE ACT என்ற கட்டுரையில் விளக்கி உள்ளேன்.

துன்பங்கள் என்பது எல்லாமே நம்மை அந்த நேர்கோட்டில் வரவைக்கும் ஒரு பரிணாம பாதை. அது இறைவன் விரும்பியது. நம்மால் மாற்ற முடியாது. ஆனால் நாமே அதை செய்துவிட்டால் அந்த துன்பங்கள் வராமல் தடுக்க முடியும். வாழ்வில் திரும்ப திரும்ப வந்து தொந்தரவு செய்த சூழல், மனிதர்கள், அல்லது நம்மை மீண்டும் மீண்டும் ஒரே தவறை செய்ய வைத்த மனிதர்கள், விஷயங்கள் போன்றவற்றை இப்போது இந்த கோணத்தில் எடுத்து ஆராய்ந்தால் நாம் எதை பெற வாழ்வு மீண்டும் மீண்டும் நம்மிடம் வந்து உணர்த்த முயல்கிறது என்பது புரியும். அது மாறும் போது அது போன்ற மனிதர்கள், துன்பங்கள் மீண்டும் வருவதில்லை.  அது புரிவது பொதுப்புத்தி. COMMON SENSE – COMMON TO ALL SENSES. COMMON TO BEING.

உதாரணமாக படிப்பை எடுத்துக் கொள்வோம். நமக்கு அதீத இறை பக்தி இருப்பதாக எடுத்துக் கொள்வோம். நம் பிள்ளை நம்மிடம், நான் இறைவனிடம் சொல்லிவிட்டேன். சமர்ப்பணம் செய்து விட்டேன், சரணாகதி அடைந்து விட்டேன். அதனால் படிக்க தேவையில்லை, என்றால் நம்மால் ஏற்றுக் கொள்ள முடியுமா?

பிரார்த்தனை, ஆன்மிகம் என்றால் முதலில் அந்த தேர்வுக்கான அடிப்படை அறிவு, அவன் பெற நினைக்கும், மதிப்பெண்ணுக்கான அறிவு, 40 மதிப்பெண்ணா, 100 மதிப்பெண்ணா என்ற நோக்கத்திற்கான அறிவு. தேர்வு பெறுவதற்கான உணர்வு அதை பெற்றால், தான் பெறப்  போவது என்ன என்னும் உணர்வின் தெளிவு, அதை தேர்வில் வெளிப்படுத்தும் உடல் என்று அனைத்தும் ஒரு நேர்க்கோட்டில் வந்தால் தான் அவன் நினைத்ததை அடைய முடியும்.

இதே போல நோய்வாய்ப்படுதலை எடுப்போம்.  நான் பிரார்த்தனை செய்து விட்டேன் அதனால் மருந்து சாப்பிட மாட்டேன்  என்று சொல்ல மாட்டோம். அது உடலுக்கானது. என்ன தான் மருந்து சாப்பிட்டாலும் பல நோய்கள் தீருவதில்லை.  காரணம் அனைத்து நோய்க்கும் ஒரு உணர்ச்சி பின்னனியில் உள்ளது. PSYCHOLOGICAL COMPONENT. நோய்க்கு அதுவே காரணம் – எரிச்சல், பொறாமை, கெட்ட எண்ணம் முதல் உணவு, பழக்கம், என்று எது வேண்டுமானாலும் இருக்கலாம். அதை சரி செய்ய பற்றிய தெளிவு, அதற்கான அறிவு, இவற்றோடு பிரார்த்தனை சேரும் போது அது முழுமை பெறுகிறது. அந்த நோய் இருந்த சுவடே தெரியாமல் குணமாகிறது .

வாழ்வில் அருள் செயல்பட்டது என்று நாம் நினைக்கும் இடங்களை இப்போது எடுத்து ஆராய்ந்தால் இந்த நான்கும் ஓரளவு இருக்கும். எது ஒன்றும் குறைந்து இருக்காது.

இது வாழ்வின் சாதனைக்கான முக்கிய சட்டம். இங்கு பிரார்த்தனை என்பது ஆன்மாவின் ஒரு வெளிப்பாடாக உதாரணத்திற்கு குறிப்பிட்டேன். செம்மை, பிறர் நிலை பார்வை, சுமுகம் , மற்றும் அன்னை சிம்பலில் உள்ள எந்த பண்பை எடுத்துக் கொண்டாலும் அந்த செயல் முழுமை பெறும். COMMON SENSE ACHIEVES, SENSATION ACCOMPLISHES என்று இதை கூறுகிறார். நூறு கோடி புத்தகத்தில் அனைத்து முறைகளையும் எழுதிவிட்டு இவற்றை பொதுபுத்தியுடன் செய்யுங்கள் என்று கடைசி பக்கத்தில் கூறுகிறார். இதுவே வாழ்வின், சாதனைக்கான, அபரிமிதத்திற்கான PROCESS என்கிறார்.  அதனால் தான் அடிக்கடி SEE THE PROCESS, UNDERSTAND THE PROCESS என்கிறார். காரணம் செயல்முறை நடைமுறை தெளிவாக புரிந்தால் தவறு செய்வது குறையும். துன்பமும் குறையும். உண்மையில் வாழ்வில் ஞானி ஆகமுடியும் என்பது இந்த யோகம். அதற்கான ஒரு விளக்கமாக கர்மயோகி கொடுப்பது கடந்த கால அனுபவத்தை நிகழ்கால செயல்களில் பொருத்தி பொருத்தி பார்த்து எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை துல்லியமாக சொல்ல முடிபவன் ஞானி என்கிறார். இந்த முறையில் INSIGHT – உட்பார்வை, INTUITION – உள்ளுணர்வு போன்ற யோகிக்கான நிலைகளையும் நாம் பெற முடியும் என்கிறார். அதற்கு ஒரு சட்டம் – ஒரு செயலில் நம் உடல், உணர்வு, அறிவு, ஆன்மா ஆகியவற்றில் எந்த பண்பு குறைகிறது என்று பார்ப்பது தான்.  அப்போது தான் சாதனைக்கான சூழல், எதன், பின் எதை செய்வது, எவ்வளவு செய்வது, எப்போது நிறுத்துவது, எதை பெறுவது, எதை விடுவது என்பது புரியும். நாம் இருக்கும் நிலையில் தான் ஆரம்பிக்க வேண்டும். நம் சுபாவத்தை ஒட்டி தான் ஆரம்பிக்க வேண்டும் என்பது புரியும். 

உதாரணமாக கர்மயோகியின் நிலையில் எடுக்க வேண்டிய ஒரு யோக பண்பை என் நிலையில் எடுத்துக் கொண்டேன். என் சுபாவம் AGGRESSIVENESS .  ஆனால் அதோடு சம்பந்தமில்லாத நிதானத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு யோகப் பண்பை எடுத்துக் கொண்டேன். அதை கர்மயோகி சமாதியடைந்த போதாவது நிறுத்தி என் சுபாவத்தில் கொண்டு வந்து இருக்கலாம். என்றாலும் அடுத்த இரண்டு, இரண்டரை ஆண்டுகளுக்கு தொடர்ந்தேன். ஒரு கோடி ரூபாய் வரை இழந்தேன்.  காரணம் முன் சொன்ன நான்கும் அதற்கான பங்கோடு இல்லை. இதை என் PERSONALITYயின் அனைத்து நிலைகளிலும் பெற மூன்று ஆண்டுகள் ஆயிற்று.

இவ்வளவு பெரிய விஷயத்தில் தான் என்று இல்லை.  சிறு கம்பெனிகளில் இதை பார்க்கலாம். ஒரு கம்பெனி நஷ்டமடைய ஆரம்பித்துள்ளது என்று வைத்துக் கொள்வோம். ஆட்குறைப்பு என்று வரும் போது முதலில் யாரை விலக்குவார்கள். திறமை குறைந்தவர்களை, திறன் குறைந்தவர்களை.  சில கம்பெனிகளில் TOP MANAGEMENT இல் இது நடக்கும். LABOUR ஐ அப்படியே வைத்துக் கொள்வார்கள். சில இடங்களில் TOP MANAGEMENT அப்படியே இருக்கும். LABOUR ஐ குறைப்பார்கள். இது அனைத்தும் அவர்களுடைய திறமை, PRODUCTIVITY, அனுபவம் ஆகியவற்றை பொறுத்தே நடக்கும். சில இடங்களில், ஜாதி, ஜால்றா, சங்கம் போன்றவை இதற்கு அடிப்படையாக இருக்கும். இது போன்ற திறமை, திறன், சூழல், அதன் தேவைகள், அதன் பலம் ஆகியவை புரிந்து அதை அதிகப் படுத்திக் கொள்பவன் அந்த ஸ்தாபனத்தில் தொடர்கிறான். அதாவது திறமை, திறன் என்று உழைப்பு, சூழலின் தேவைகளை உணர்வது உணர்வு, அது பற்றிய தெளிவு அந்த தகுதியைப் பெறுவது அறிவு, அவற்றுடன் செம்மை, நேர்மை, பொறுமை, அமைதி போன்ற பண்புகளை கொண்டு வரும் போது அந்த ஸ்தாபனம் அவனை விலக்காது. வாழ்விலும் அதுவே சட்டம்.

இந்த நான்கு நிலைகளையும் நம்மால் ஒவ்வொரு செயலிலும் கொண்டு வர முடியும். ஒவ்வொரு குணத்திலும் கொண்டு வரமுடியும்.  அந்த நிலைக்கு செல்ல செல்ல அதற்கான உயர்ந்த பலன் கிடைக்கும்.

உதாரணமாக பொறுமையாக  PATIENCE வுடன் ஒரு விஷயத்தை செய்ய வேண்டி உள்ளது என்று வைத்துக் கொள்வோம். அது உடலுக்கானது. அதுவே மனது அலைபாயாமல், விடாமுயற்சியுடன் செய்தால் PERSEVERANCE ஆகிறது. அடுத்து நிச்சயம் நினைத்த பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன், செம்மைக்கான அறிவுடன் அதை செய்யும் போது அது RESILIENCE ஆகிறது. அதை அடைந்து விடுவேன் என்ற ஆனந்தத்தோடு செய்யும் போது அது BUOYANCE ஆகிறது. நம் ஒவ்வொரு செயலிலும் இந்த நான்கு நிலைகளை நம்மால் ஆராய முடியும். எந்த நிலையில் எது இல்லை என்று பார்த்து அதை கொண்டு வர முடிந்தால், நாம் நம் PERSONALITY யின் பாகங்களை ஒரே நேர்க்கோட்டில் கொண்டு வருகிறோம். நேர் செய்யும் வேலைக்கு வாழ்வின் சக்தி செலவாகாதால் அது தன்னைத்தானே பூர்த்தி செய்து கொள்கிறது என்கிறார்.

அதையும் ஒரு சிறு உதாரணம் மூலம் பார்க்கலாம்.  ஆரம்பித்தில் ஒரு வேலையை கற்றுக் கொள்ளும் போது கவனமாக செய்கிறோம், பதட்டமாக செய்கிறோம், அறிவில் அதற்கான திறமையை சேகரிக்கிறோம்.  ஒரு கட்டத்தில் அதை கற்ற பிறகு நாம் இயல்பாக, சுபாவமாக மாறி அதை செய்கிறோம். அதாவது நம் PERSONALITY அதை கற்றுக் கொள்கிறது.  நம் BEING தன்னைத்தானே பூர்த்திசெய்து கொண்டுவிட்டது. இனி வாழ்வின் சக்தி அடுத்த நிலைக்கு செல்லவே பயன்படும்.

அது போலத் தான் வாழ்வில் ஒவ்வொன்றும் பூர்த்தியாகி பரிணாமத்தில் நம்மை செலுத்துகிறது. இங்கு ஆர்வம், ASPIRATION  பற்றி அவர் கொடுக்கும் விளக்கம் அலாதியானது.  ASPIRATION ACHIEVES WITH THE ENERGY OF THE DETACHMENT என்கிறார். அதாவது ஆர்வத்தை தாண்டிய அனைத்திலும் உள்ள விஷயங்களில் பற்றற்று இருந்து, ஆர்வத்திற்கான அனைத்தையும்  ஒரே நேர்கோட்டில் கொண்டு வருவது, ஆர்வத்தை பூர்த்தி செய்யும் என்கிறார்.

இது பற்றிய ஒரு விளக்கத்தை அருள், அன்னை அருள், பேரருள் என்ற கட்டுரையில் இந்த வலைதளத்தில் படிக்கலாம். இவற்றையெல்லாம் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டுமென்றால் நமக்கு இரண்டு விஷயத்தில் தெளிவு இருக்க வேண்டும். வாழ்வின் மறுமொழி நம் செயல்களுக்கு மற்றும் மனப்பான்மைக்கு மட்டுமே உள்ளது. சூழலையும், மனிதர்களையும் தாண்டி அது பலிக்கக்கூடியது. அபரிமிதத்தை தரக் கூடியது என்ற நம்பிக்கை வர வேண்டும். அதன் பிறகு உள்ளே செய்ய வேண்டியது எது, வெளியே செய்ய வேண்டியது எது என்ற தெளிவு வேண்டும். உள்ளே சென்று பண்புகள், நோக்கம், மனப்பான்மை, எண்ணம் ஆகியவற்றில் அதிக பட்சம் நம் உயர்சித்ததை வெளிப்படுத்துவது. அதிலும் முன் சொன்ன சுபாவம், நிலை, எவ்வளவு செய்ய வேண்டும், எப்போது செய்ய வேண்டும் என்ற விவேகம், பாகுபாடு. பின் வெளியில் அதை வெளிப்படுத்துவதில் திறமை, திறன், செம்மை, உயர்ந்தபட்ச அறிவுடன் செயல்படுத்துதல் இந்த இரண்டின் சமநிலையே நமக்கான ஆனந்தத்தை கொடுக்கும்.

இது தான் வாழ்வின் PROCESS. இந்த அடிப்படை புரிய வேண்டும். அதற்கு உதாரணம் பதியம் போடும் முறை. இந்துஸ்தான் போட்டோ STRIKE போன்ற உதாரணங்களைத் தந்து இருப்பார். அதை பலமுறை கூறிவிட்டதால் இங்கே மீண்டும் குறிப்பிடவில்லை. அந்த PROCESS புரிந்தால் அதில் செம்மையை கொண்டு வர வேண்டும். பின் அதற்கான கட்டுப்பாடு, DISCIPLINE ஐ  கொண்டு வர வேண்டும். நாம் எவ்வளவோ ஆசை படுகிறோம். ஆனால் அதற்கான கட்டுப்பாடுகளை ஒரு இழை  விடாமல் எடுக்கிறோமா என்றால் இல்லை என்பதே பதிலாக இருக்கும். நாம் அறிந்த உயர்ந்த நிலையில் ஒரு செயலை – நலத்திற்காக  கூட – செய்ய வேண்டும் என்னும் அடிப்படை பொது புத்தி கூட நம்மிடம்  இல்லை என்பதே உண்மை. முன்பு சொன்ன படிப்பு உதாரணத்தில் உள்ளது போல அனைத்து நிலைகளிலும் நான்கு நிலைகளுக்கான தேவைகளையும் முடிவு செய்த பிறகு அதற்கு தேவையான கட்டுப்பாடுகளை, எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த கட்டுப்பாடுகள் தான் நமக்கு நம்மைப் பற்றிய  தெளிவைத் தரும் நம் வரையரையரைக் காட்டும்.

நம்மால் எந்த கட்டுப்பாடுகளை எடுத்துக் கொள்ள முடியவில்லையோ அதுவே நம் முன்னேற்றத்தில் தடையாக இருக்கிறது என்பது புரியும். பெரும்பாலான நேரங்களில் அவை தான் நம்மை கட்டுப்படுத்துகின்றன என்றும் புரியும். அதனால் அவற்றை AVOID  செய்ய ஆரம்பிப்போம். அது இல்லாமல் செய்ய முடியுமா என்று பார்ப்போம்.  அது பற்றிய அல்லது பலனைப் பற்றிய பயம், அவநம்பிக்கை வரும்.  அது நம் திறமையை, திறனைக் குறைக்கும். இருப்பதே போதும் என்னும் நிலைக்கு வந்து விடுவோம். இதுவும் வாழ்வின் சட்டமே. இந்த சட்டத்தில் மாட்டிக் கொள்ளாத பொதுப்புத்தி நமக்குத் தேவை.

நம் வளர்ச்சியை, நம் நிலையை நாம் நிர்ணயிக்க வேண்டுமென்றால் நம்மை பற்றிய விழிப்புணர்வு நமக்கு வேண்டும். அந்த விழிப்புணர்வு நமக்கு இல்லையென்றால் நமக்கான கட்டுப்பாட்டை நாம் கொண்டு வர முடியாது. கட்டுப்பாடு இல்லையென்றால் நம் வளர்ச்சியை நாம் அளக்க முடியாது. கட்டுப்பட முடியாததை நம்மால் ஒழுங்கு படுத்த முடியாது. நம் அறிவு, அதை நேர்வழியில், முன்னேற்றத்தின் வழியில் செலுத்த முடியாது. முன்னேற்றத்திற்கான வழியில் செல்ல முடியாத போது முன்னேற்றம் எப்படி வரும்.

நாய் துரத்தினாலும் நாம் 10 SECOND இல் 100 METER ஓடுவோம். OLYMPIC இல் ஜெயிப்பதும் 100 METER க்கு 10 SECOND தான்.  இரண்டில் எது வெற்றி. எது நிரந்தர வெற்றி.  இரண்டுக்கும் SYSTEMATIC ஆக செய்ய வேண்டியதை ஒப்புமை படுத்திப் பார்த்தால், நான் சொல்லும் வாழ்வின் சட்டமும் புரியும்.

உள்ளே செய்யவேண்டியது,  வெளியே செய்ய வேண்டியது என்று கூறும் போது, நம்மால் கட்டுப்படுத்த முடிந்தது எது, கட்டுப்படுத்த முடியாதது எது, செய்ய முடிந்தது எது, செய்ய முடியாதது எது என்ற தெளிவு வேண்டும். நம் கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்களுக்கு போராடுவது அர்த்தமற்ற வேலை. நம் அறிவு, அனுபவம், திறமை, திறன், RESOURCES, ATMOSPHERE ஆகியற்றை பற்றிய தெளிவுடன் தான் ஆரம்பிக்க வேண்டும்.  100 கோடிக்கு ஆசைப்படலாம், தவறில்லை ஆனால் முதல் ஒரு கோடிக்கு ஒரு தெளிவான திட்டம் இருப்பது அவசியம். அதுவே பொதுபுத்திக்கு அடிப்படை.

அதே போல வெளியில் ஒரு செயலுக்குத் தேவையான அனைத்தையும் நாம் சார்ந்தே இருக்க வேண்டும். அதற்கான திறமை, திறன், தெளிவு, இருக்க வேண்டும். எதையும் விலக்கி சாதிக்க நினைக்கக் கூடாது. INNER OUTER பற்றிய மேற்சொன்ன இந்த இரண்டு தெளிவும் பொதுப்புத்தி. அதனால் தான் வாழ்வில் நாம் வெற்றி பெற்ற  இடங்களையும், அற்புதம் என்று நடந்த இடங்களையும் தோல்விகளையும் அமைதியாக உட்கார்ந்து பரிணாமத்தின் பார்வையில் ஆராயச் சொல்கிறார். அப்போது தான் நமக்கான வாழ்வின் PROCESS நமக்குத் புரியும். அப்போது தான் அடுத்த முறை PROCESS ஐ நாம் DEFINE செய்ய முடியும்.

பல நேரங்களில் அடுத்தவர் சொன்ன, அல்லது வெற்றி பெற்ற FORMULA வை நாம் பின்பற்றுவோம். அடுத்தவர் சொல்லும் அறிவுரையை  நாம் பின்பற்றுவோம். ஆனால் பெரும்பாலும் அவர் பெற்ற வெற்றியை நாம் பெற முடிவதில்லை. காரணம், அவர் நோக்கம், மனப்பான்மை, திறமை, அறிவு, பண்பு, சூழல் ஆகியவை வேறு. நமக்கு அமைபவை வேறு. அதனால் பலன்கள் நிச்சயம் வேறுபடும். அதனால் தான் நாம் பெற்ற வெற்றிகளை ஆராய வேண்டும். அதை அடுத்த உயர்ந்த கட்டத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும். இந்த கண்ணோட்டத்தில் நிச்சய வெற்றிக்கு இருபது வழிகள் என்னும் இந்த வலைதளத்தில் உள்ள கட்டுரையை படித்தால் மேலும் புரியும்.

இங்கு முக்கியமாக பொதுப்புத்தியாக கொள்ள வேண்டியது. நானோ, சமர்பணன் போன்றோரோ  தருவது பிரச்சினைகளுக்கான, முன்னேற்றத்திற்கான, அபரிமிதத்திற்கான தீர்வல்ல. உங்களை, உங்கள் சூழலை, உங்கள் மனப்பான்மைகளை, உங்கள் நடத்தையை நீங்களே உங்களுக்கு ஏற்ப கையாளுவதற்கான முதிர்ச்சி – MATURITY TO HANDLE SELF. அதற்கு அடைப்படையாக பொதுப்புத்தி முக்கியம்.

பொதுப்புத்தி இல்லாததால் நமக்கு வரும் துன்பங்களை அதன் மூலம், நாம் இயலாமைக்குள், இருளுக்குள் செல்லும் விதத்தை அடுத்த வாரம் பார்க்கலாம்.

Author Info
Ramesh Kumar

Ramesh Kumar

SHARE
Share on facebook
Share on telegram
Share on whatsapp

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 5

இதுவரை சொன்னவை அனைத்தும்   “உயர்ந்தவை நிர்ணயிக்கின்றன. அவை நிறைவேற தாழ்ந்தவை உதவுகின்றன” – என்னும் லைப் டிவைனின் ஒரு  கருத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு தலைப்பில் இருந்து விலகிச் செல்லாமல் எழுத வேண்டும் என்று

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 4

இதுவரை நாம் பேசியதை Life Divine – கருத்துகளில் பொருத்தி பார்க்கும் போது – முன்னேறும் பாதையின் நன்கு  நிலைகளை.  – மனித வாழ்வு, யோக வாழ்வு, தெய்வீக வாழ்வு என்று மூன்று பகுதிகளாகப்

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை  – 3

அதற்கு பதிலாக ஒரு பண்பை எடுத்துக் கொண்டு, அதன் பார்வையில் நம் முடிவை organise செய்ய முடிந்தால், அது நம் அனைத்து  முடிவுகளுக்குக்  காரணமாக அமைந்தால், அது படைப்பாற்றல் மிக்கதாக இருக்கும்.  உதாரணமாக முன்

Read More »

More Articles

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 5

இதுவரை சொன்னவை அனைத்தும்   “உயர்ந்தவை நிர்ணயிக்கின்றன. அவை நிறைவேற தாழ்ந்தவை உதவுகின்றன” – என்னும் லைப் டிவைனின் ஒரு  கருத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு தலைப்பில் இருந்து விலகிச் செல்லாமல் எழுத வேண்டும் என்று

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 4

இதுவரை நாம் பேசியதை Life Divine – கருத்துகளில் பொருத்தி பார்க்கும் போது – முன்னேறும் பாதையின் நன்கு  நிலைகளை.  – மனித வாழ்வு, யோக வாழ்வு, தெய்வீக வாழ்வு என்று மூன்று பகுதிகளாகப்

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை  – 3

அதற்கு பதிலாக ஒரு பண்பை எடுத்துக் கொண்டு, அதன் பார்வையில் நம் முடிவை organise செய்ய முடிந்தால், அது நம் அனைத்து  முடிவுகளுக்குக்  காரணமாக அமைந்தால், அது படைப்பாற்றல் மிக்கதாக இருக்கும்.  உதாரணமாக முன்

Read More »