சென்ற மூன்று வார கட்டுரைகளை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும் போது படைப்பாற்றல் என்பது தனியாக வரவில்லை. இப்போது இருக்கும் இதே மனநிலையில், செயலில், திறமையில், திறனில் ஒரு செம்மை வரும் போது அது நம்மை அடுத்த நிலைக்கு கொண்டு செல்கிறது. இது SATURATING THE PREVIOUS PLANE என்னும் தத்துவத்தை உள்ளடக்கியது. செயல் தன்னைத் தானே பூர்த்தி செய்துக் கொள்ளும் அடுத்த கட்ட பரிணாமத்திற்கு நம்மை கொண்டு செல்லும் நிலை இது. நான் என் சொந்த PRODUCT க்கான COMPOSITION ஐ கண்டுபிடித்த உதாரணத்தை முதல் பாகத்தில் கூறியிருந்தேன். அதை இந்த கண்ணோட்டத்தில் பார்த்தால் இது புரியும்.
இதற்கு அடிப்படை ஒரு படைப்பாற்றலை உருவாக்க கூடிய CREATIVE வாக இருக்க, தேவையானது நாம் செய்யும் வேலையில் நம் கவனம், உணர்வு, அறிவு, உழைப்பு, செயல் அனைத்தும் அதன் உட்சபட்சத்தில் இருப்பது. அது எப்போது இருக்கும் என்றால் அந்த வேலை, அதன் PROCESS அது பூர்த்தி அடையும் விதம், அந்த வேலைக்கான காரணம், அது நமக்கும் பிறருக்கும் தரும் பலன் ஆகியவை செயல்படும் விதம் நமக்குத் புரிய வேண்டும். இது ஏதோ குழப்பமாக, அல்லது தத்துவமாகத் தோன்றலாம். நாம் அறிந்த விஞ்ஞான கண்டு பிடிப்புகள், CREATIVE IDEA க்கள் என்று நாம் நினைப்பதை இந்த கண்ணோட்டத்தில் ஆராய்ந்தால் இதை புரிந்துக் கொள்ள முடியும். அதற்கு தேவையான மனப்பான்மை, தோல்வியில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளுதல், அதன் மூலம் வாழ்வு செயல்புடும் முறை அதன் சட்டங்கள் புரிதல் சூட்சுமத்தின் மற்றும் பண்புகளின் தாக்கம், நம் ஆர்வம் போன்றவை அதில் எந்த பங்கை அளிக்கிறது என்பது புரியும். அப்போதுதான் creativity யும் ஒரு process என்பது புரியும்.
அதற்கு ஒரு பயிற்சியாக கர்மயோகி செய்தது போல செய்து பார்க்கலாம். அவர் P&P, தன் வாழ்க்கை, அன்பர் வாழ்க்கை என்று மூன்று வகையான உதாரணங்களை எடுத்துக் கொண்டு சட்டங்களை விளக்கிப் புரிய வைத்தார். அது போல நாமும் இலக்கியத்தில் இருந்து நமக்குத் தெரிந்த ஒரு நிகழ்வு, நம் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வு, நமக்குத் தெரிந்தவர் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வு என்று மூன்று உதாரணங்களை எடுத்துக் கொண்டு ஒப்பீடு செய்து பார்த்தால் அடுத்த கட்டத்திற்கு செல்லும் முறை புரியும்.
உதாரணமாக ராமாயணத்தை எடுத்துக் கொண்டால், ராமன் சீதை சொன்ன மான் கதையை அப்படியே எடுத்துக் கொள்ளாமல், சற்று நிதானமாக இருந்திருந்தால், அல்லது லக்ஷ்மணன் அண்ணன் சொல் தான் எனக்கு முக்கியம் என்று இருந்து இருந்தால் அல்லது சீதை அவர்கள் இருவரையும் விடவா நமக்கு அறிவும் திறமையும் இருக்கிறது என்று கோட்டைத் தாண்டாமல் இருந்து இருந்தால், ராமாயணம் இருந்திருக்குமா என்று தெரியாது. அது போல ராவணன் தன் சித்தம், நிலை, பதவி, பொறுப்பு ஆகியவற்றை நினைத்து அந்த நிலைக்கேற்ற ஆர்வம் மட்டுமே கொண்டிருந்தால், அல்லது சூர்ப்பனகை சொன்ன குற்றச்சாட்டுக்கு EMOTIONAL ஆகாமல் இருந்து இருந்தால் அனைத்தும் வேறு மாதிரி நடந்து இருக்கும். ராவணன் CHARACTER அடிப்படையில் பார்த்தால் அவன் சிவனின் ஒரு அவதாரமாகக் கூட பரிணாம வளர்ச்சி பெற்று இருக்கலாம். நிதானம், NON-REACTION, STEP BACK, என்பது போன்ற பண்புகள் ஒரு கதாபாத்திரத்தில் இருந்தால் கூட ராமாயணத்தின் போக்கே வேறு மாதிரி இருந்து இருக்கும். இப்போது இதை என் வாழ்வில் பொருத்தி பார்த்தால், EMOTIONAL BLACKMAIL க்கு , உறவினர்கள், நண்பர்கள் என்பதற்காக நான் செய்தது. எது சரி என்று நன்றாகத் தெரிந்தாலும் எவர் சரி என்று பார்த்து செய்தது என்று நிதானம் இல்லாமல் பொதுபுத்தி இல்லாமல் செய்து நான் இழந்தவை அதிகம். கர்மயோகி சொன்னார் என்று சொன்னதால், அவர் சொன்னாரா என்று கூட கேட்காமல் செய்து இழந்ததும் உண்டு. சேவை ஸ்தாபனத்தின் பீடாதிபதிகள் என்னை உபயோகப்படுத்தி கொண்டு இருந்ததை, அதைச் சேர்ந்தவர்கள் ஒரு துரும்பு கூட எடுத்து போடாத போது எம் வீட்டு பெண்கள் அவர்களின் கழிவறையை சுத்தம் செய்வது அதை பெருமையாக வேறு கருதுவது என்று இலக்கியத்தில் சொல்லப்பட்ட அத்தனை முட்டாள் தனங்களையும் நானும் செய்தது தெரிய வருகிறது. மூன்றாவதாக சொன்னது போல இதை ஒரு அன்னை அன்பர் வாழ்வில் பொருத்தி பார்க்கும் போது, இந்த சேவை செய்கிறேன் பேர்வழி என்று உள்குத்து அரசியலில் மாட்டாமல், சேவை என்ற பெயரில் ஏமாறாமல், அன்னை முக்கியம், அன்னை மட்டுமே முக்கியம், அவர் சொல்லும் பண்புகள் மட்டுமே முக்கியம் என்று இருப்பவர் இன்று பல கோடிகளுக்கு அதிபதியாக இருக்கிறார். அடுத்த MLA ELECTION னில் நிற்க போவதாகக் கூட கேள்விப்பட்டேன்.
இப்படி இலக்கியம், நம் வாழ்வு, நம்மை சுற்றி உள்ளவர், வெற்றி பெற்றவரின் அடிப்படை பண்புகள் ஆகியவற்றை ஆராயும் போது வாழ்வின் சட்டம், அது இயங்கும் முறை, PROCESS புரிகிறது. தெளிவு கிடைக்கிறது. அந்த தளத்தை, PLANE ஐ நான் SATURATE செய்து விட்டதால் அடுத்த கட்ட பரிணாமத்தில், வளர்ச்சியில் அவற்றை எழுத்துக்களாக வடிக்கும் ஆற்றலைப் பெற்றேன். சுமார் முன்னூறு subscriber களில் 150 பேராவது ஆவலுடன் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் எதிர்பார்க்கும் நிலை வந்தது. ஒரு சிலர் வாழ்வுக்கு நல்வழி, அன்னை வழி காட்டும் பொறுப்பும் வந்தது. இது CREATIVE ELEMENT. இதை ULTIMATE DEFINITION , ULTIMATE REALIZATION, ULTIMATE TRUTH புரியும் நிலை என்கிறார். Mental Development இல் ஒரு முக்கியமான நிலை அது.
எல்லா IDEA க்களும் வேலை, சூழல், தோல்வி, வெற்றிகளில் இருந்தே வருகின்றன. அது PROCESS ஐ கவனித்தால், புரிந்தால் மட்டுமே வரும். அதாவது வேலை தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. வாழ்வு தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. பிரபஞ்சம் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. அது வெளிப்படுத்துவதை புரிந்து அதை முழுமை பெற செய்வது பரிணாமம். அது படைப்பாற்றல் கொண்டது. இந்த பார்வை, LATERAL THINKING, PERCEPTION தான் நமக்கான உள்ளுணர்வு, உட்பார்வை என்று ஒரு ஒளி, ஒரு பொறி, ஒரு SPARK ஆக வந்து CREATIVITY ஐ த் தரும். அப்போது தான் நம்மால் தடைப்பட்ட, இடைப்பட்ட இடத்தை கண்டுபிடிக்க முடியும் – MISSING LINK ஐ அறியமுடியும்.
எதையும் முயற்சியின் மூலம் பழக்கத்தின் மூலம் – நமக்கில்லாத புலன் உணர்வுகளையும் – மனிதன் ஏற்படுத்திக்கொள்ள முடியும். ஒரு மளிகை கடைக்காரர் பழக்கத்தின் காரணமாக எடுத்து எடை போடும் பொருள் ஏறத்தாழ சரியாக இருப்பது பழக்கத்தினால் பெற்ற தன்னுணர்வினால். கையில் எடுத்த பொருளின் எடையை உடலே அறியும் அளவிற்கு தன்னுணர்வு பெற்று இருக்கிறார். இந்த ஞானத்தை மனிதன் பெற முடியும். அதற்குரிய மனப்பான்மை , அறிவுத்திறன் நம்மிடம் இருக்க வேண்டும். உதாரணமாக நாம் உயிரோடு இருக்கின்றோம் என்று எப்படி நாம் அறிகிறோம். புலன்கள் காட்சிகளையும், சப்தத்தையும், அறிவதைப்போல், உடல் தனக்கு உயிர் இருப்பதை அறிகிறது. அதேபோல் ஆன்மா தானிருப்பதை உணர்த்துகிறது. அது தன்னைத்தான் அறியும் திறன் அதற்கான ஞானம். ஒரு செயலில் அல்லது வாழ்வில் இதன் process புரியும்போதுதான் – creativity , individuality , போன்றவை வருகிறது. அபிப்ராயம் அனுபவம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்ட புலன்களால் கட்டுப்பட்ட மனம் புலன்கள் அளிக்கும் செய்திகளை மட்டுமே உணரமுடியும், புலன்களை விட்டு அகன்ற மனமே தன்னையறிய முடியும். புலன்களின் ஆதிக்கத்தில் இருந்து அதன் அபிப்பிராயம் , எதிர்ப்பார்ப்புகளில் இருந்து விடுபட்ட அறிவுக்கு தன்னை அறிந்ததுபோல் மற்றவர்களையும் , சூழலையும், செயலையும் அது சொல்லும் சூட்சும விஷயங்களையும் அதன் பொருள் சாரம் ஆகியவற்றை கவனிக்க முடிகிறது. அதற்கேற்ற பரிணாமம் நமக்கு வருகிறது.
உதாரணமாக வருமானம் என்ற பார்வையில் நம் செயல்களை கவனித்தால் நம் திறமை, திறன், மனப்பான்மை, ஆர்வம், பண்புகள் புரியும். உடல் உழைப்பின் மூலமே வருமானம் அதிகம் ஆகும் என்னும் வரையறை பெரும்பாலும் வைத்திருப்பது தெரியும். அதில் இருந்து விலகி, உணர்வில், நடத்தையில், மனப்பான்மையில் மாறினால் , BUSINESS RELATIONSHIP ஆக , அல்லது CREDIT LIMIT ஆக வளரும், அடுத்த நிலையில் SOCIAL CONTACTS, TRUST அல்லது ETHICAL ஆக வளர்ந்து UNSECURED LOAN, BANK LOAN ஆக வரும். அல்லது மனதில் MENTAL லில் CREATIVITY, INNOVATION என்ற ஆர்வம் இருந்தால் முதலீடுகளாக நாம் கேட்காமலேயே வரும். இந்த PROCESS புரிந்த பிறகு நேர்மை, நல்லெண்ணம், பரந்த மனப்பான்மை போன்ற பண்புகள் சேரும் போது தேவைப்படும் காலம் சுருங்கும். தானே சேமித்து தொழில் ஆரம்பிப்பதற்கும், தேவைப்படும் முதலீடு தேடி வருவதற்கும் உள்ள கால வித்தியாசம் அதை காட்டும். இதை வரையில்லா ஞானம், தடையில்லா ஆற்றல், அபரிமிதமான சாதனை என்று கூறுகிறார்.
நான் வித்தியாசமாக சிந்திக்கிறேன். என் பார்வை வித்தியாசமாக இருக்கிறது என்று பலரும் என்னிடம் சொல்வார்கள். அந்த CREATIVE உருவான விதம் ஒரு PROCESS தான் . அதை யார் வேண்டுமானாலும் செய்ய முடியும். அதன் பின் உள்ள தத்துவம் RESTORING TO ORIGINAL. நாமே இறைவன் என்றால் இறைவனுக்குரிய அனைத்து அம்சங்களையும் படைப்பாற்றல் உட்பட அனைத்தையும் பெறுவது. அதற்கு உதாரணம் நான் அடிக்கடி சொல்லும் துணி துவைக்கும் உதாரணம். துவைப்பதன் PERFECTION – RESTORING TO ORIGINAL என்பது. துவைக்க ஆரம்பிக்கும் போது பிடித்த நீரும், துணியை கடைசியாக அலசும் போது வெளியேறும் நீரும் ஒரே நிலையில், ஒரே சுத்தத்தில் இருக்க வேண்டும் என்பதே. அது வரை நமக்கு வேலை இருக்கிறது. அதுவரை அந்த துணி துவைக்கும், ப்ரோஸ்ஸ்ஸ் ஐ கவனிக்க நமக்கு வேலை இருக்கிறது. செம்மையின் perfection ன் சாரம் நமக்கு புரியும் போது creativity வருகிறது.
இது LIFE RESPONSE என்று சொல்லப்படுவதற்கு முந்தைய நிலை. வாழ்வை நம் விருப்பப்படி இயக்க, நாம் விரும்பும் பலனைக் கொடுக்க வைக்கும் முன்பு அதை நம்மை நோக்கி திருப்பி சமநிலைப்படுத்தும் நிலை. வாழ்வுக்கு DYNAMIC EQUILIBRIUM கொடுக்கும் நிலை. அது வரை தன் சட்டத்திற்கு உட்பட்டு MECHANICAL ஆக , STATIC ஆக இருந்த வாழ்வை பண்புகளால் அசைத்து, நம்மை நோக்கி நம் விருப்பத்தை நோக்கி திருப்புகிறோம். அப்போது தான் தண்ணீர் தான் இருக்கும் பாத்திரத்தின் வடிவை எடுத்துக் கொள்வது போல நம் சித்தம், நம் CONSCIOUSNESS ன் வடிவை, அதன் பலத்தை வாழ்வு எடுத்துக் கொள்ளும். நம் நோக்கம், மனப்பான்மை, உயர்சித்தம் ஆகியவை முழுமையாக பலன் கொடுக்கும் இடங்கள் அவை. அது வரை நல்லவருக்கு வாழ்வில்லை, கெட்டவரே வெற்றி பெறுகின்றனர் என்று புலம்பிக் கொண்டு இருக்கும் நிலையே இருக்கும். சமர்ப்பணம் செய்தேன் பலிக்கவிலை என்று சொல்பவர்களை கவனித்துப் பார்த்தால், அது தன் வேலையில் இருந்து தப்பிக்க, முழு ஞானம் அடைய விரும்பாமல், திருவுருமாற்றம் அடைய விரும்பாமல் இருக்கும் நிலையே இருக்கும். அது ஆன்மாவில் செய்வதாக நினைத்து அகந்தையால் செய்யும் இடம். முழு ஞானம் பெற வேண்டும், வரும் தடைகள், துன்பங்கள், செம்மை இல்லாதது அடுத்து நிலைக்கான அழைப்பு என்பது புரிந்தால், அங்கு நமக்கான படைப்பாற்றல் வரும். வரும் படைப்பாற்றல் பிழைப்பு, வளர்ச்சி, முன்னேற்றம், பரிணாமம் என்ற அளவில் அடுத்தடுத்த நிலைக்கான படைப்பாற்றல் அபரிமிதமாக வரும். இது பற்றிய ஒரு கட்டுரை இதே வலைதளத்தில் உள்ளது என்றாலும் சுருக்கமாக கூறுகிறேன்.
வேலையே கிடைக்கவில்லை என்பவனுக்கு வேலை கிடைப்பது பிழைப்பு என்னும் நிலை. அதிலேயே promotion போன்றவை வருவது, ஊதியம் உயர்வது வளர்ச்சி. அது கூட இல்லாமல் பல தடைகள் இருப்பவர்கள் பலர் உண்டு. புதிய திறமை, திறன், உயர் படிப்பு, சிறப்பு அறிவு, அடுத்த கட்ட தேர்வுகள் என்று முயன்று பெற்று உயர்பதவிகளுக்கு இரண்டு அடுக்கு தாண்டி செல்பவர் உண்டு அல்லது பல மடங்கு உயர்ந்த ஊதிய பதவிக்கு செல்பவர் உண்டு. அது முன்னேற்றம். தன் ஸ்தாபனத்தில் அல்லது வேறு ஸ்தாபனத்தில் தலைமை பொறுப்புக்கு வருபவர் அடைவது பரிணாமம். இந்த நிலைகள் தான் இருக்கும் சூழலுக்கு தேவையான process அதன் சட்டங்கள் புரியாமல் வராது.
இதன் இன்னொரு பார்வை, முன்பு சொன்ன இறைவன் விரும்புவதும், நாம் விரும்புவதும் முரண்படும் இடங்கள். அவன் பரிணாமத்தை ஆனந்தம் மூலம், உயர் சித்தம் மூலம் அடைய விரும்பும் போது, அகந்தை – ஆசை, தாழ்ந்த சித்தம் மூலம் அதை அடைய நினைக்கிறது. இந்த இரண்டும் சேரும் இடம் CREATIVE ELEMENT இருக்கும் இடம். MAN’S EXISTENCE HAS A CENTRE, HE ACTS WITH REFERENCE TO THAT. DIVINE EXISTENCE IN HIM HAS A CENTRE, IT ACTS WITH REFERENCE TO UNIVERSAL OR TRANSCENDENCE. முதலாவதை அகந்தை – EGO என்றும் இரண்டாவதை ஆன்மா – SPIRIT என்றும் எடுத்துக் கொள்ளலாம். துன்பம், தோல்வி, தடை, ஏற்படும் இடங்களில் இந்த வித்தியாசத்தை சித்த பூர்வமாக, CONSCIOUS ஆக நாம் பார்த்தால் அதற்கேற்ற உயர் சித்தத்திற்கான பண்புகளை எடுத்துக் கொண்டால், அது அன்னை சிம்பலில் உள்ள பன்னிரண்டு படைப்பாற்றல் கொண்டவைகளுடன் ஒத்து இருந்தால், நமக்கு அந்த இடத்தில் ஒரு படைப்பாற்றல் வரும். அது வாழ்வில், பரிணாமத்தில் முன்னேற்றத்தை தரும்.
அடுத்த வாரம் இன்னொரு தலைப்பில் சந்திப்போம்.