Share on facebook
Share on telegram
Share on whatsapp

வாழ்வில் நிச்சய வெற்றிக்கு இருபது வழிகள் – 20

இன்றைய கட்டுரை 18 மற்றும் 19 – தாவது  வழிக்கானது. இரண்டும் ஒன்றுடன் ஒன்று கலந்து இருப்பதால், அப்படி எழுத வேண்டி இருக்கிறது.

இது வரை சொன்னவற்றை செய்யும் போது, நமக்கு ஒத்து வராத சூழல், மனிதர்களை, தவிர்க்க வேண்டும், விலக்க வேண்டும் என்று பதினேழாவது வழியில் குறிப்பிட்டு இருந்தேன். அதில் சில சமயம் தவிர்க்க முடியாத சூழல், மனிதர்கள் இருப்பார்கள்.  அவர்களை ஏற்றுக் கொண்டே ஆகவேண்டிய கட்டாயம் இருக்கும். குறிப்பாக நம் நோக்கத்திற்கு எதிரான குடும்ப உறுப்பினர்கள் உறவுகள். அந்த நிலையில் நமக்கு அவர்களின் எண்ணம், நோக்கம், நடத்தை பாதிக்காத அளவிற்கு நம் மனநிலை இருக்க வேண்டும். அவர்களுடனான மனத்தொடர்பு, எரிச்சல், கோபம், கெட்ட எண்ணம், இப்படி தடை செய்கிறார்களே என்ற எண்ணம் எதுவும் இருக்கக்கூடாது. இந்த நிலையை பற்றற்ற தன்மை – DETACHMENT என்கிறார். NOT CONTACTING THROUGH MIND என்னும் நிலை. (DETACHMENT – பற்றற்ற தன்மை பற்றி பல விளக்கங்களை கர்மயோகி, பல நோக்கில் பல கட்டுரைகளில் விளக்கி இருக்கிறார். இரண்டு அல்லது மூன்று கட்டுரைகள் அது பற்றி இதே வலைதளத்தில் வெளியிட்டு உள்ளேன். விரும்புவோர் படிக்கலாம்).

நம் நோக்கத்தைப் பற்றிய, நம் ஆர்வத்தைப் பற்றிய நம் திட்டத்தை நம் மனதில் பார்க்க வேண்டுமென்றால் அதை பாதிப்பவர்கள் அதில் வரக் கூடாது. நம் ஆர்வத்தை பற்றிய  SERIOUSNESS நமக்கு வேண்டும். அதை அடையும் விதம் பற்றிய தெளிவு வேண்டும். அதற்கான அமைதி, திடசித்தம் வேண்டும். அதற்கு நாம்   SERIOUS PERSONALITY ஆக இருக்க வேண்டும்.    SILLY, SHABBY, SHALLOW PERSONALITIES CANNOT ACHIEVE என்கிறார். இதற்கான சரியான தமிழ் வார்த்தைகள் தெரியாததால் அப்படியே தருகிறேன். நம் நோக்கம், அதற்கு நாம் எடுத்த பண்பு ஆகியவற்றை – யாருடைய, எந்த சூழலும், எந்த விஷயமும் பாதிக்காமல் நம்மால் செய்ய முடிவதை இங்கு பற்றற்ற தன்மை என்கிறார். அது அறிவில்  FOCUS  ஆக வெளிப்படும். அதுவே முன் சொன்ன திடசித்தம் DETERMINATION என்னும் நிலையை மனதிற்குத் தரும். இது சம்பந்தமாக நாம் எடுக்கும் முடிவுகளை decision (small ‘d’) Decision (capital ’D’), DECISION (All Capitals) என்று மூன்று விதமாக வரையறுக்கிறார். அது பற்றி எழுதினால் கட்டுரை நீண்டு விடும் என்பதால் அதன் சுருக்கத்தை மட்டும் தருகிறேன். நாம் எடுக்கும் முடிவுகளுக்கும் அதன் தீவிரத்திற்கும் ஏற்றவாறு தான் அந்த DETERMINATION திடசித்தம் ஆற்றலை  தாங்கி வரும். இது ஏறத்தாழ  COSMIC DETERMINANT – DECISION MAKING PROCESS OF CREATION னில் சொல்லப்பட்ட SELF-CONCEPTION OF THE FORM THAT CARRIES FORCE என்னும் தத்துவத்திற்கு உட்பட்டது என்பதால் நாம் உயர்பண்புகளால் பரிணாமத்தில் முன்னேற, வாழ்வில் முன்னேற செய்யும் அனைத்தும் இறைவன் பெரும் ஆனந்தம் என்பதால், நம் வாழ்விலும் ஆனந்தமாக எதிரொலிக்கும். அதற்கான மனநிலை, அதற்கான சக்தி, அதை சரியான வழியில் செலுத்தும் ஆற்றல் அனைத்தும் நாம் எடுக்கும் முடிவில் தான் இருக்கிறது. முடிவு – DECISION என்பது  – நம்முன்  உள்ள அனைத்து வாய்ப்புகளையும் ஆராய்ந்து அதில் சிறந்தது எதுவோ அதை எடுப்பது –  அந்த முடிவுகள் தான் வாழ்வில் செயலாக வெளிப்படுகிறது, அதுவே பலனைத் தருகிறது என்பது நமக்கு புரிய வேண்டும். அதனால் அதை நம் அதிகபட்ச திறன், அதிகபட்ச பொறுப்பேற்றுக் கொள்ளுதல் ஆகியவற்றின் மூலம் முடிவு செய்ய வேண்டும். (DECISIONS CONTROL LIFE THROUGH ACTS.  SO DECIDE WITH YOUR HIGHEST CAPACITY AND COMPREHENSIVE RESPONSIBILITY – NOT CONSIDERING PERSONS OR ATMOSPHERE). அந்த உள்ளார்ந்த திறன் தான்  -(INNER SKILLS) – வெளியே நடப்பதை முடிவு செய்யும். நம் தலைவிதியை, நம் வாழ்வை நாமே நிர்ணயிக்க முடியும். முன்னேற்றத்தில் இது ஒரு முக்கியமான கட்டம் என்கிறார்.

என் மனைவி மற்றும் குடும்பத்தார் தீவிர பெருமாள் பக்தர்கள். அதுவும் கோயில் பட்டர் குடும்பம், ஐயங்கார் வேறு. எப்போதும் வீட்டில் பூஜை, புனஸ்காரம் என்றே இருக்கும். சராசரி குடும்பத்தை விட  அதிகப்பட்ச சம்பிரதாயங்கள் வீட்டில் நடக்கும்.  அன்னைக்கு இது ஒத்து வராது என்று “பல வருட அன்பர்கள்” எனக்கு அறிவுரை கூறியிருக்கிறார்கள். அந்த சூழல் அன்னை அருளுக்கு எதிரானது என்றும்  கூறியிருக்கிறார்கள்.   என்றாலும் என் நம்பிக்கை என்னுடையது அது அவர்களுடையது என்று நான் அதைப்பற்றி நினைக்க கூட செய்யாமல், நான் முன்னேற்றத்திற்காக பின்பற்ற விரும்பிய பண்புகளை பின் பற்றிக் கொண்டு இருந்தேன். என்னை பொறுத்தவரை நான் பெற்றது நல்ல வளர்ச்சியே. பின்னால் இது பற்றி கர்மயோகியிடம் கூறியபோது ஆச்சரியப்பட்டார். நானும் அப்படித் தான் நினைத்தேன். நீ அந்த அளவு மனதில் இருந்து எடுத்து விட்டாய் (DISCARDED FROM MIND ) அதனால் தான் இந்த முன்னேற்றம் வந்துள்ளது. நீ செய்தது பெரிய யோகம் என்றார். இது MENTAL WILL -ன் சக்தி, அது திட சித்தமாக வெளிப்பட்டு என் நோக்கத்திற்கான  செயலாக மட்டுமே வெளிப்பட்டது.  இதை FREEDOM FROM DETERMINISM த்தின் ஒரு வெளிப்பாடு என்கிறார். அதாவது விதி, கர்மம், ஊழ் என்று ஒன்று இருந்தால் அது நம் சுபாவம் மூலம் வெளிப்பட்டு, அது பிற மனிதர்களின் செயலுக்கான, சூழலுக்கான நம் எதிர்செயலாக, REACTION ஆக தான் வெளிப்பட்டு நம் முன்னேற்றத்தை தடுக்கும். அதிலிருந்து நமக்கு கிடைக்கும் விடுதலை இது. அதனால் DETACHMENT AND DECISIVENESS என்பதே பதினெட்டு மற்றும் பத்தொன்பதாவது முன்னேற்றத்திற்கான வழி.

அதற்கான மனநிலைகளை பெறுவது, அதன் மூலம் ஏராளமான சக்தியை சேமிப்பது, அதை ஆற்றலாக சரியான நோக்கில் செலவழிப்பது என்று நம்மை SERIOUS PERSONALITY ஆக மாற்றும். சாதனையாளர்கள் அனைவரும் இந்த மனப்பான்மையை பெற்று இருப்பதை அவர்களின் சுய சரிதைகளைப் படித்தால் புரிந்து கொள்ள முடியும். நம் முடிவுகள் நம் மனதில் உருவாகும் போதே நாம் இந்த பற்றற்றத் தன்மையை கொண்டு வரவேண்டும். இது நம் நோக்கத்தை மட்டுமே கொண்டு எடுக்கப்பட்டதா அல்லது இதில் பிறரின், சூழலின்  தாக்கம் இருக்கிறதா. நம் கொள்கை, பண்பு அடிப்படையில் மட்டுமே எடுக்கப்பட்டு இருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டும். WE HAVE TO DETACH OURSELVES WHEN DECISION TAKES SHAPE IN OUR MIND. அதன் ஆற்றல், அதன் தீவிரம், அதற்கான உணர்வு, உடலின் தாக்கம் (CONTRIBUTION) கவனிக்கப் பட வேண்டும்.  இல்லை என்றால்  நம் நோக்கத்தை பிறர் பார்வையில் தான் நடத்திக் கொண்டு இருப்போம். அல்லது பிறர் சொல்படி நடத்திக் கொண்டு இருப்போம்.

பெரும்பாலான நேரத்தில் அது பற்றி ஒன்றும் தெரியாத, அல்லது தத்துவம் மட்டுமே பேசும், செயல் திறன் இல்லாதவர்களின் வழியில் நடந்துக் கொண்டு இருப்போம். நெடுநாள் அன்னை அன்பர்கள் என்று நினைத்து அவர்களிடம்  கருத்து கேட்டு நடந்து, எந்த பலனும் பெறாத நிலை அனைவர் வாழ்விலும் இருக்கும்.  அதை இங்குப் பொருத்தி பார்த்தால்  இது புரியும். சொன்னவர்கள் அவர்கள்  வாழ்வில் அதை கடைபிடிப்பதில்லை என்பதை நாம் கவனிக்காதது கூட நமக்குத் தெரியாது. அதே போல தோற்றத்தை நம்பி அவர்கள் நல்லெண்ணம் மிக்கவர் என்று நினைத்து அவர்களிடம் அனைத்தையும் சொல்வது, கேட்பது தவறு. அனைவராலும் நல்லெண்ணத்தின் உருவம் என்று நினைக்கப்படுபவர் – எந்த அளவுக்கு தீய எண்ணம் கொண்டவர் என்பதை நான் நேரில் பார்த்திருக்கிறேன்.  பெண்ணின் தலைமுடி வளர்ச்சியை பார்த்து பொறாமைப்பட்ட தாயால், பெண் முடி கொட்டுவது பற்றி கர்மயோகி எழுதி இருப்பார். பெண்ணுக்கு திருமணம் ஆகக் கூடாது என்று நினைக்கும் தந்தையை பற்றி எழுதியிருப்பார். மேல் மண்டத்தில் தாயும் தந்தையும் நல்ல அறிவுரைகளி கூறியவர்களே. அண்ணல் அவர்களின் எண்ணம் அந்த தடையை  கொண்டு வந்தது.

என் அனுபவத்தில் இருந்து எத்தகையோரிடமிருந்து நாம் விலகி இருக்க வேண்டும் என்பதைச் சொல்கிறேன்.

– நம் வெற்றி இவருக்கு பொறாமை தரும் என்பவர்களிடமிருந்து;

– தான் கூறும் அறிவுரையை தானே பின்பற்றாதவர்களிடமிருந்து;

– உங்கள் தன்னம்பிக்கையை  உங்கள் அகந்தையாக பார்ப்பவர்கள்;

முன்னேற்றத்திற்கான நம் கட்டுப்பாட்டால் ( Dicipline) தங்கள் சுதந்திரம் போவதாக சொல்பவர்கள்

– உங்கள் வளர்ச்சி எப்போது வேண்டுமானாலும் விழலாம் என்று எச்சரிப்பவர்கள்;

– உங்கள் தற்சார்பு பிடிக்காதவர்கள், தங்களிடம் உதவி கேட்பதில்லை, ஒரு நாள் வந்து  நிற்பான் என்று நினைப்பவர்கள்;

– உங்கள் நேர்வழி, நேர்மை, சத்தியம், இந்த சமுதாயத்திற்கு ஒத்து வராது என்று சொல்பவர்கள்;

– உங்கள் சிந்தனையோட்டம் தவறு என்றும், இதுவரை செய்தவர்கள் எல்லாம் முட்டாள்களா என்று கூறுபவர்கள்;

– உங்களுக்கு எரிச்சல் வரும் என்று தெரிந்தே, உங்களை UPSET செய்யும் என்று தெரிந்தே, உங்கள் சூழல் கெடும் என்று தெரிந்தே காரியம் செய்பவர்கள்.

– தவறு தன் மேல் இருந்தாலும், அதை ஏற்றுக்கொள்ளாமல், சத்தம் போட்டு பேசியே நம்மை அடக்க நினைப்பவர்கள், அதன் மூலம் நம் நோக்கத்தை, உணர்வை, செயலை, தன் ஆளுமைக்கு உட்படுத்த நினைப்பவர்கள். அடக்கி ஆள  நினைப்பவர்கள்.

– தவறான விஷயத்தை, தவறான வழியை, ஓரிருமுறை, அல்லது சில இடங்களில் செய்வது  தவறில்லை என்று கூறுபவர்கள்.

– CONTENTED வாழ்வு, போதுமென்ற மனமே…. என்று பேசுபவர்கள்

– உங்கள் நோக்கத்தை புரியாதவர்கள், அதற்கான முக்கியத்துவத்தை தராதவர்கள்;

– பாதிப்பை ஏற்படுத்தி விட்டு, தான் பாதிக்கப்பட்டதாக சொல்பவர்கள்;

– நம் உணர்வின் WEAKNESS தெரிந்து, நம் நல்லெண்ணம், நம் பக்தி, நம் சிஷ்ய மனப்பாNமை தெரிந்து அதை EXPLOIT செய்து உதவி, காணிக்கை, இலவச வசதிகள், பரிசுகள், பொருட்கள், TOURS என்று பெறுபவர்கள்.

நான் சொல்லும் இத்தகையோரின் உண்மை தன்மையை , அவர்கள் நாம் முன்னேற்றத்தை கெடுக்கும் விதத்தை கவனிக்க வேண்டுமானால் – நாம் முடியாது என்று சொல்ல நினைத்து , ஏதோ ஒரு காரணத்திற்காக அதை ஒத்துக்கொண்டு அதனால் நாம் துன்பம் அனுபவித்த நிலை அனைவருக்கும் இருக்கும். அதை மேற் சொன்னவற்றில் பொருத்தி பார்த்தால் புரியும்.

இத்தகையோரை நம்மைச் சுற்றி வைத்துக் கொள்ளும் போது, அவர்கள் நம் வாழ்வை, நம் உணர்வை, நம் செயலை நிர்ணயிப்பதை நாம் கவனிப்பதில்லை.  அது மட்டுமல்ல. இத்தகையோரால் நாம் நம்மை சுற்றியுள்ள நல்லவர்கள், நல்ல வழி காட்டுபவர்கள், நல்லெண்ணம் கொண்டவர்களை நாம் கவனிக்க முடிவதில்லை. விலக்க வேண்டியவர்களுக்கு பயந்து ஏற்றுக் கொள்ள வேண்டியவர்களை ஏற்றுக் கொள்ளாமல், பல இடங்களில் நாம் இருந்து இருப்பது கவனித்தால் தெரியும். பய பக்திக்கு, நட்புக்கு, உறவுக்கு  உட்பட்டு நாம் வாழ்வின் பல சந்தோஷங்களை இழந்த போது அவர்கள் தங்கள் பிள்ளைகளுடன் அதை ஆனந்தமாக அனுபவிப்பதை கவனித்தாலும் நாம் ஏற்றுக் கொள்வது இல்லை.

அதனால் நம் நோக்கம், குறிக்கோள், ஆர்வம் என்று வரும் போது நம் முடிவு மட்டுமே இருக்க வேண்டும். அதன் பின் நம் மனப்பான்மை, நம் சக்தி, நம் செயல், நம் உணர்வு, மட்டுமே இருக்க வேண்டும். அது தவறாக கூட இருக்கலாம். ஆனால் நோக்கம் நமது என்பதால், அதில் நம் சித்தம் மட்டுமே  உள்ளதால்  அது நிச்சயம் ஒரு நாள் வெற்றிக்கு கொண்டு செல்லும்.  THEY ARE FORMATIVE ENERGIES THAT TAKES TO RIGHT DIRECTION AND RIGHT DESTINATION .   THIS IS POWERFUL DECISION WITH DECISIVE  POWER FOR ACCOMPLISHMENT என்கிறார். இத்தகைய முடிவு – தன்னை தானே சாதித்துக் கொள்ளும் சக்தியை உள்ளடக்கியது என்கிறார்.  வாழ்க்கை SERIOUS ஆனவர்களுக்கே அதிக பலன் கொடுக்கும். அந்த  SERIOUSNESS திடசித்தம்  DETERMINATION ஆல் வருவது. அதன் பின்னால் இருப்பது அதன் SYSTEMS, RULES , அது செயல்படும் விதம், அது பலன் தரும் விதம் பற்றிய தெளிவு. இது புரிந்தால் அதை பயிற்சியாக நம்மால் செய்ய முடியும். அப்போது தான் சாதிக்க முடியும்.

ஒரு இரு சக்கர வாகன MECHANIC  கிடம் சிறு வயதில் சிலர் சேர்ந்து கற்றுக் கொண்டு பத்து வருடம் கழித்து சொந்த கடை வைப்பர். அது சரி தான் என்றாலும் முறையாக AUTOMOBILE  அல்லது MECHANIC படிப்பு படித்து வந்தவர்களுக்கு இருக்கும் தெளிவு, அதன் பாகங்கள், அது வேலை செய்யும் விதம், ஒவ்வொரு பாகத்திற்கும் மற்ற பாகத்திற்கும் இருக்கும் தொடர்பு, புதிய தொழில் நுட்பங்கள், மாற்றங்கள் என்பது பற்றி எல்லாம் தெரியும் அளவிற்கு அனுபவத்தில் செய்பவர்களுக்கு தெரியாது. அதே போல பெரிய கம்பெனி, AUTHORIZED SERVICE CENTRE களில் வேலை செய்ய வேண்டும் , அல்லது franchise வேண்டும்  என்றால் அத்தகைய தெளிவு, அறிவு, நுட்பம், அனுபவத்தை விட முக்கியம்.

அது போல நாம் திறன், மனப்பான்மை, உணர்வு, அறிவு, செயல், பக்தி, இறைவன், சத்தியம், நல்லது, முன்னேற்றம், பரிணாமம் என்பது பற்றியெல்லாம் தெளிவாக தெரிந்து கொண்டு அதை பயிற்சி போல பயின்றால் தான் அதன் நுணுக்கம் புரியும். வாழ்வின் சட்டங்கள், ஒவ்வொன்றிற்கும் இடையிலும் உள்ள தொடர்பு, அது தரும் மறுமொழிகள் புரியும். அது தான் நம் ஞானமாக ORGANISE  ஆகும். அந்த ஞானம் தான் நமக்கு நாமே குருவாக மாற வழிகாட்டும்.

இது வரை நான் சொன்னது எல்லாம் என்னை விட உங்கள் அனைவருக்கும்  அதிகம் தெரியும். ஆனால் அதை செய்யாததற்கு காரணம் அதில் உங்கள் கவனம் இல்லாதது, நம் கவனத்தை சிதறடிக்கும், சூழல், மனிதர்கள் பற்றிய தெளிவு இல்லாதது. . அதனால் தேவையான விழிப்புர்ணவு பெற முடியாதது. நம் வாழ்வை நாம் மட்டுமே மாற்ற முடியும் என்ற உண்மை புரியாதது. இவை புரியும் போது தான் நம் தேவை, நோக்கம் பற்றிய தெளிவு வரும். அதற்கான முடிவு எடுப்போம். அதற்கான உறுதியும், திடசித்தமும் பெறுவோம். அதுவே நம்மை சாதனையாளனாக்கும்.

அடுத்த வாரம் – இருபதாவது வழி மற்றும் முடிவுரை.

Author Info
Ramesh Kumar

Ramesh Kumar

SHARE
Share on facebook
Share on telegram
Share on whatsapp

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 5

இதுவரை சொன்னவை அனைத்தும்   “உயர்ந்தவை நிர்ணயிக்கின்றன. அவை நிறைவேற தாழ்ந்தவை உதவுகின்றன” – என்னும் லைப் டிவைனின் ஒரு  கருத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு தலைப்பில் இருந்து விலகிச் செல்லாமல் எழுத வேண்டும் என்று

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 4

இதுவரை நாம் பேசியதை Life Divine – கருத்துகளில் பொருத்தி பார்க்கும் போது – முன்னேறும் பாதையின் நன்கு  நிலைகளை.  – மனித வாழ்வு, யோக வாழ்வு, தெய்வீக வாழ்வு என்று மூன்று பகுதிகளாகப்

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை  – 3

அதற்கு பதிலாக ஒரு பண்பை எடுத்துக் கொண்டு, அதன் பார்வையில் நம் முடிவை organise செய்ய முடிந்தால், அது நம் அனைத்து  முடிவுகளுக்குக்  காரணமாக அமைந்தால், அது படைப்பாற்றல் மிக்கதாக இருக்கும்.  உதாரணமாக முன்

Read More »

More Articles

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 5

இதுவரை சொன்னவை அனைத்தும்   “உயர்ந்தவை நிர்ணயிக்கின்றன. அவை நிறைவேற தாழ்ந்தவை உதவுகின்றன” – என்னும் லைப் டிவைனின் ஒரு  கருத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு தலைப்பில் இருந்து விலகிச் செல்லாமல் எழுத வேண்டும் என்று

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 4

இதுவரை நாம் பேசியதை Life Divine – கருத்துகளில் பொருத்தி பார்க்கும் போது – முன்னேறும் பாதையின் நன்கு  நிலைகளை.  – மனித வாழ்வு, யோக வாழ்வு, தெய்வீக வாழ்வு என்று மூன்று பகுதிகளாகப்

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை  – 3

அதற்கு பதிலாக ஒரு பண்பை எடுத்துக் கொண்டு, அதன் பார்வையில் நம் முடிவை organise செய்ய முடிந்தால், அது நம் அனைத்து  முடிவுகளுக்குக்  காரணமாக அமைந்தால், அது படைப்பாற்றல் மிக்கதாக இருக்கும்.  உதாரணமாக முன்

Read More »