Share on facebook
Share on telegram
Share on whatsapp

வாழ்வில் நிச்சய வெற்றிக்கு இருபது வழிகள்- 18

அடுத்தது பதினாறாவது  வழி. இது வரை சொன்னவை புரிந்த பிறகு அதற்கான வெற்றிக்கு அடித்தளம் இட்ட பிறகு, நாம் இருக்கும் தளத்திற்கான சூழல், ஆட்கள் நடுவில் இருக்கும்படி நம்மை நாம் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். எவ்வளவு சிறந்தவர் ஆனாலும், நம் முன்னேற்றத்திற்கு – வாழ்வில் அல்லது சித்தத்தில் முன்னேற்றம் தர முடியாதவர் என்றால் அவர் உறவை, ஒரு நிலையில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.  அல்லது குறைந்த பட்ச தொடர்பு என்னும் அளவில் தான் இருக்க வேண்டும். காரணம் முன்பு சொன்ன பதினைந்து வழிகளில் நாம் கஷ்டப்பட்டு, திட்டமிட்டு உழைத்து முன்னேறும் போது, அந்த வழியில் நம்முடன் பயணித்தவர்கள், உறவுகள், நண்பர்கள் சிலர் அப்படியே தான் இருப்பார்கள். நம் சித்தம், பண்புகள், நடத்தை, மனப்பான்மை ஆகியவை உயர்ந்த பிறகு அதற்கு ஒத்து வராதவருடன் இருப்பது நம்மை, நம் எனெர்ஜியை, நம் முன்னேற்றத்தை குறைப்படுத்தும் – இவை எல்லாம் ஒரு ரயில் பயணத்தில் உடன் வரும் மக்கள், சக பயணிகள் போன்றே எடுத்துக் கொள்ள வேண்டும். நன்றாக பழகிவிட்டார்கள் என்பதற்காக, அவர்கள் ஊர் வரும் வரை நாம் செல்ல முடியாது என்பது எவ்வளவு உண்மையோ, அவ்வளவு உண்மை வாழ்க்கை பயணத்திற்கும் பொருந்தும்.

உதாரணமாக, என்னை ஒரு அன்பர், ஒரு அன்னை தியான மையத்தை அறிமுகப்படுத்தினார்.  ஆரம்பத்தில் அவருடன் மட்டுமே செல்வேன். அவர் அன்னையைப் பற்றி சொல்வதை மட்டுமே கேட்பேன்.  பின் மையத்தின் முக்கிய புள்ளி பழக்கமான போது அவரிடம் பேச ஆரம்பித்து, தனியாகவும் வர ஆரம்பித்தேன். அது என்னை அறிமுகப்படுத்தியவருக்கு பிடிக்கவில்லை. அதே போல மையத்தலைவருக்கு நான் நெருக்கமான போது அந்த முக்கிய புள்ளிக்கு என்னைப் பிடிக்கவில்லை. அது போல பல மையங்களை நடத்தும் நிறுவனத்தின் காரியதரிசியுடன் நான் நெருக்கமான போது மையத் தலைவருக்கு பிடிக்கவில்லை.  நிறுவனத்தின் துணை தலைவருடன் நெருக்கமான போது காரியதரிசிக்கு பிடிக்கவில்லை. பின் ஸ்தாபகருடன் நெருக்கமான போது துணைத்தலைவருக்கு பிடிக்கவில்லை.  முற்றிலும் எனக்கு எதிரானவராக, நான் ஸ்தாபனத்தில் இருக்கக் கூடாது என்பதற்கான அனைத்து வேலைகளுக்கும் துணை நின்றார்.

என் அடுத்த கட்டத்தை பற்றிய தெளிவை சுயநலம் என்று சொல்பவர் உண்டு.  ஆனால் என்னை பொறுத்தவரை என்னை அறிமுகப்படுத்திய நண்பர் சொன்ன அன்னையைப் பற்றிய விவரங்களுக்கும், ஸ்தாபகர் சொன்ன விவரங்களுக்கும்  மலைக்கும் மடுவுக்கும் இருக்கும் வித்தியாசம்.  ஸ்தாபகர் வரை நான் சென்ற அந்த நிலை சாதாரணமாக வரவில்லை.  உழைப்பு, கட்டுப்பாடு, திருவுருமாற்றம், பண்புகள் என்று பல விஷயங்களை நான் கடைபிடித்ததால் வந்தது. அதற்கான தகுதி, திறமை, நடத்தை, மனப்பான்மை ஆகியவற்றை வளர்த்துக் கொண்டதால் வந்தது.  DEGREE படித்த பிறகும் பள்ளிக்கு நன்றி வேண்டுமானால் சொல்லலாம். அங்கேயே இருப்பேன் என்று சொல்வது எவ்வளவு முட்டாள்தனமோ, அந்த அளவு முட்டாள்தனம் நாம் இருக்கும் தளத்திற்கான, அல்லது நாம் செல்ல விரும்பும் தளத்திற்கான சூழலில் இருப்பதை விட்டு விட்டு அதன் முன் நிலைக்கு விருப்பப்படுவது. நாம் போக வேண்டிய தளத்திற்கு கொண்டு சேர்ப்பது முன் சொன்ன வெற்றிக்கான வழிகள். குறைந்த பட்சம் – நம் வருமானத்திற்கு அல்லது சித்த உயர்வுக்கு தேவையானவர் தவிர – பிற எவருடனும் ATTACHMENT அல்லது EMOTIONAL RELATIONSHIP இல்லாமல் இருப்பது அவசியம்.

கர்மயோகி ஒரு அருமையான உதாரணம் சொல்வார். சூரியகாந்தி மிக அழகானது தான். ஆனால் அது வயலில் அறுவடை நேரத்தில் களையாக கருதி பிடுங்கி எறியப்படும். அது போலத் தான் நம் நோக்கத்திற்கு ஒத்து வராத எவரும் நம் சூழலில் இருப்பது நல்லது அல்ல.

வேறு ஒரு உதாரணம் கூறுகிறேன். நான் திருந்தி மது, புகை, புலால் உண்ணுவது போன்றவற்றை விட்ட பிறகு ஒரு கம்பெனியில் சேர்ந்தேன். சுமாரான சம்பளத்தில் தான் என்றாலும் வேறு செலவுகளை கட்டுப்படுத்திவிட்டதால், கையில் எப்போதும் கொஞ்சம் பணம் இருக்கும்.

மாலை அனால் என் “பழைய” நண்பர்கள் அலுவலக வாசலுக்கு வந்து விடுவார்கள். அவர்கள் உடல்மொழியும், பாஷையும் நான் இன்று இருக்கும் நிலைக்கு ஒத்து வராதது. ஆனால் என்னால் அவர்களை தவிர்க்க முடியவில்லை. காரணம், நான் கஷ்டபட்ட காலத்தில், குறிப்பாக கோர்ட், கேஸ் என்று அலைந்த போது தலைமறைவாக இருந்த போது எனக்கு பண உதவி, மற்றும் உணவு தந்து உதவியவர்கள்.  நான் இன்று உயிரோடு இருப்பதே அவர்களால் தான் என்று சொல்லுமளவிற்கு இருந்தவர்கள்.  ஆனால் இன்று என் திருந்திய வாழ்விற்கு எதிரானவர்களாக இருந்தார்கள். அலுவலகத்தில் என் புதிய சூழலில் அதனால் என் பெயர் கெடும் சூழ்நிலை வந்தது. சில நேரம் அவர்களின் வற்புறுத்தலுக்காக மது-பாருக்கு செல்ல வேண்டி வரும்.  சாப்பிடவில்லை என்றாலும் பார்ப்பவர்கள் நான் மீண்டும் குடிக்க ஆரம்பித்து விட்டேன் என்றே நினைப்பார்கள். ஒரு நாள் திட்டவட்டமாக அவர்களை வரக்கூடாது என்று சொல்லிவிட்டேன். நன்றி கெட்டவன், விசுவாசம் இல்லாதவன், துரோகி போன்ற பட்டங்கள் தந்தனர். ஆனால் என் அலுவலத்தில் மற்றும் நான் இருந்த BACHELOR HOSTEL லில், தெருவில் என் மரியாதை உயர்ந்தது.  அனைவரும் தாங்களே நான் முன்னேறுவதற்கு, மாறுவதற்கு தேவையான சூழலை உருவாக்கி கொடுத்தனர்.

இதன் மூலம் நான் புரிந்துக்கொண்டது என்னவென்றால், நன்றி, உண்மை, சின்சியரிட்டி, விசுவாசம், பரந்த மனப்பான்மை, போன்றவற்றை நாம் தாழ்ந்த சித்தம் கொண்டவர்களுக்கு அல்லது விரும்பி அறியாமையை ஏற்றுக் கொண்டு வாழ்பவர்களுக்கு காட்டுவதில் எந்த பயனும் இல்லை. இன்னும் சொன்னால் அவர்கள் நம் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பர் என்பதே உண்மை. இன்று குறை சொல்பவர் அனைவரும் நாளை உங்களை பாராட்டுவர், வணங்குவர் என்பதே உண்மை. இப்படி செய்வதால் – நாம் சுற்றத்தையும் , நட்பையும் இழந்து விடுவோமோ என்ற பயம் இருக்கும். ஆனால் வாழ்வின் சட்டம் அப்படி என்றும் வெற்றிடம் உருவாக்க விடுவதில்லை. நான் என்  உயிர்க்கு உயிரானவர் என்பவரை அன்னைக்கு எதிரானவர் , என்னையும் அப்படி மாற்ற நினைக்கிறார் என்று புரிந்து விலக்கிய போது, அவர் இல்லாமல் எப்படி இருக்க போகிறேன் என்று இருந்த போது , அந்த இடத்தை பிற நல்ல அன்னை அன்பர்கள் முதல் – கர்மயோகி வரை  நிரப்பும் சூழல் அமைந்தது. பாத்திரத்தில்  இருக்கும் அழுக்கு நீரை கொட்டினால் தான் , நல்ல  நீரை நிரப்ப முடியும் என்பது போன்றது அது.

உதாரணமாக எனக்கு யாராவது திருமண பத்திரிக்கை கொடுத்து வரவேண்டும் என்று சொன்னால், திருமணத்திற்கு நான் நிச்சயம் வர வேண்டும் என்று நினைப்பார்கள். செல்லவில்லை என்றால் மனஸ்தாபம் வரும். அதுவே கர்மயோகிக்கு பத்திரிகை கொடுக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவருக்கு பத்திரிகை தருவதையே பெரிய பாக்கியமாக நினைப்பார்கள். திருமணத்திற்கு  வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கவே இருக்காது.  அவரின் ஆசீர்வாதம் பெரிது என்று நினைப்பர். அந்த நிலைக்கு நாம் நம் தகுதியையும், நாம் இருக்கும் சூழலையும் உயர்த்தும் போது இன்று தூற்றுவோர் அனைவரும் போற்றுவர்.

நாம் யாருடன் பயணிக்க வேண்டும், நம்மோடு யார் வர வேண்டும், நாம் எங்கு இருக்க வேண்டும் என்பதை நாம் முடிவு செய்யும் நிலையில், அதற்கான பலத்துடன் இருக்க வேண்டும். EMOTIONAL ஆக உறவுகள், நண்பர்கள் என்ற பெயரில் இதில் எந்த இடத்தில COMPROMISE செய்து கொண்டாலும், முன்னேற்றத்தை விட உறவுகள் முக்கியம் என்று முடிவெடுத்தால் – அந்த உறவுகளே தூற்றும் நிலையே ஏற்படும். முன்னேறும் போது அதே உறவுகள் பாராட்டும் என்பதே உண்மை. விலகத்தேவையில்லை. அவர்களுக்கான , நமக்கான எல்லைக் கோடு தெளிவாக இருக்க வேண்டியது முக்கியம். இல்லையென்றால் அவர்களின் அறிவு, அனுபவம், தகுதி, மனப்பான்மை மட்டுமே நம்மைக் கட்டுப்படுத்தும். நாம் நினைக்கும் உயரங்களுக்கு நம்மால் செல்ல முடியாது. EMOTIONAL BLACK MAIL என்னும் நிலையில் மாட்டிக் கொள்வோம். அதன் பின் முன்னேற்றம் என்பதே இருக்காது. அதுவும் முன் சொன்ன பதினைந்து வழிகளையும் SINCERE ஆக பின்பற்றும் போது இந்தத் தெளிவு மிகவும் அவசியம். சரியான நேரத்தில், எல்லாம் கூடி வரும் நேரத்தில், தவறான ஆட்கள், அவர் மனப்பான்மை, வார்த்தைகள், தீய எண்ணங்கள், தாழ்ந்த செயல்கள், எப்படி கெடுக்கும் என்பதை கர்மயோகி பல புத்தங்களில் கூறியிருக்கிறார்.

எனக்கு இப்போது நினைவுக்கு வரும் உதாரணம். கர்மயோகி அன்னைக்கு ஒரு மிகப்பெரிய சேவை செய்ய நினைத்த போது அதற்கான வருமானத்தை தரும் அளவிற்கு அவர் வளர்த்த பயிர் வளர்ந்து இருந்தது. அந்த நேரம் அவர் நண்பருக்கு நிலத்தில் தங்க இடம் கொடுத்த போது, அவர் ஒரு தாழ்ந்த செயல் செய்து அந்த நிலத்தின் தண்ணீர் போரில் குளித்த மறு நாள் போர் REPAIR ஆனது. அதன் பிறகு நீர் வறண்டு பயிர் கருகும் அளவிற்கு வந்தது என்று எழுதியிருப்பார்.

பெரிய வாய்ப்புகள் , பெரிய முன்னேற்றங்கள் எல்லோருக்கும் வருவதில்லை. இறை நம்பிக்கை, அல்லது தன்நம்பிக்கையோடு , வரும் வாய்ப்பை அதற்குரிய மரியாதையுடன்  வரவேற்றால் அது பலிக்கும். அப்படியில்லாமல் நம் பழைய குணங்களை வெளிப் படுத்தினால், பெரிய வாய்ப்புகளைச் சிறிய புத்தியால் , மட்டமான மன நிலையால்    வரவேற்றால் அது மறையும். நாம் முன்னுக்கு வரும்பொழுது அதிகக் கட்டுப்பாடு வேண்டும் என்று தெரியும். அதை அறிவில்,  திறமையில் ஓரளவு பின்பற்றுவோம். ஆனால் மன  நிலையில் அதை விட அதிகம் தேவை. கனிவு, கருணை, சத்தியம், பரந்த மனம், இனிமை, இதம், இங்கிதம்,

சுமூகம் , மகிழ்ச்சி போன்ற மன  நிலைகள் நிரந்தரமாக இருக்க வேண்டும். 

இங்கு அடிப்படியாக புரிந்து கொள்ள  வேண்டிய தத்துவம் ஒன்று உண்டு. தீய  சக்திகள் வரும் போது அவற்றால் நல்லதை  செய்யாதே என்று கூற முடியாது. காரணம்  எல்லா உயர் சித்தத்தின் பரிமாணத்தில் சத்தியத்தின் ஆற்றல் உள்ளதால் தீய சக்தியால் அவற்றை ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் அவற்றால் தாழ்ந்த  சிந்தனைகளை, மட்டமான மன  நிலைகளை , குறுக்கு வழிகளை , NEGATIVE மனப்பான்மைகளை , கயமைகளை, சரி என்றும் அதுவே முன்னேறுவதற்கு வழி என்று நம்மை நம்ப வைக்க முடியும். அது போன்று தோன்றும் இடங்களை நாம் உஷாராக கவனிப்பது, விலக்குவது – அதை அதிகப்படுத்தும், சூழல் மனிதர்களை விட்டு விலகுவது  நல்லது.

நாம் வளரும் போது, நல்ல சக்திகள் வருவது போல, நமக்கு உதவ, காப்பாற்ற வருவது போல, தீய சக்திகளும் அதற்கு சமமாக விரும்பி நம்மை கெடுக்க வரும். காரணம் வாழ்வு என்பதும் முன்னேற்றம் என்பதும் ஒரு முழுமைக்கானது. அதனால் அந்த நேரத்தில் முழுமையை உணரும் விதமாக, உஷார்தனம் , விழிப்புணர்வு, விவேகம், பாகுபாடு முன்னேற்றத்திற்கு தேவையானது எது, தேவையில்லாதது எது, இறைவனைப் பற்றிய இடையறாத நினைவு போன்றவை இந்த கட்டத்தில் அதிகம் தேவைப்படும் விஷயங்கள்.  அப்போது தான் நாம் நாமாக இருக்க முடியும். நினைத்ததை சாதிக்க முடியும். நாம் பெற நினைக்கும் ஆனந்தத்தை பெற முடியும்.

Author Info
Ramesh Kumar

Ramesh Kumar

SHARE
Share on facebook
Share on telegram
Share on whatsapp

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 5

இதுவரை சொன்னவை அனைத்தும்   “உயர்ந்தவை நிர்ணயிக்கின்றன. அவை நிறைவேற தாழ்ந்தவை உதவுகின்றன” – என்னும் லைப் டிவைனின் ஒரு  கருத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு தலைப்பில் இருந்து விலகிச் செல்லாமல் எழுத வேண்டும் என்று

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 4

இதுவரை நாம் பேசியதை Life Divine – கருத்துகளில் பொருத்தி பார்க்கும் போது – முன்னேறும் பாதையின் நன்கு  நிலைகளை.  – மனித வாழ்வு, யோக வாழ்வு, தெய்வீக வாழ்வு என்று மூன்று பகுதிகளாகப்

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை  – 3

அதற்கு பதிலாக ஒரு பண்பை எடுத்துக் கொண்டு, அதன் பார்வையில் நம் முடிவை organise செய்ய முடிந்தால், அது நம் அனைத்து  முடிவுகளுக்குக்  காரணமாக அமைந்தால், அது படைப்பாற்றல் மிக்கதாக இருக்கும்.  உதாரணமாக முன்

Read More »

More Articles

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 5

இதுவரை சொன்னவை அனைத்தும்   “உயர்ந்தவை நிர்ணயிக்கின்றன. அவை நிறைவேற தாழ்ந்தவை உதவுகின்றன” – என்னும் லைப் டிவைனின் ஒரு  கருத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு தலைப்பில் இருந்து விலகிச் செல்லாமல் எழுத வேண்டும் என்று

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 4

இதுவரை நாம் பேசியதை Life Divine – கருத்துகளில் பொருத்தி பார்க்கும் போது – முன்னேறும் பாதையின் நன்கு  நிலைகளை.  – மனித வாழ்வு, யோக வாழ்வு, தெய்வீக வாழ்வு என்று மூன்று பகுதிகளாகப்

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை  – 3

அதற்கு பதிலாக ஒரு பண்பை எடுத்துக் கொண்டு, அதன் பார்வையில் நம் முடிவை organise செய்ய முடிந்தால், அது நம் அனைத்து  முடிவுகளுக்குக்  காரணமாக அமைந்தால், அது படைப்பாற்றல் மிக்கதாக இருக்கும்.  உதாரணமாக முன்

Read More »