Share on facebook
Share on telegram
Share on whatsapp

மனம் –  இறைவனின் விளையாட்டு கருவியா? – 2

அந்த லட்சியத்தை, வாழ்வில் ஆனந்தத்தை அடைய முடியாததற்க்கு பொதுவாக இரண்டு காரணங்கள் இருக்கிறது.

முதலாவது – நம்மால் முடியாதது, தெரியாதது, புரியாதது என்னும் இடங்களில்  நாம் அதோடு நிறுத்தி விடுகிறோம்.  அந்த இடத்தை Nihil – Zero – where experience of Sachithananda is denied to soul  என்கிறார்.  இந்த zero concept பற்றி சென்ற வாரம்  எழுதி இருந்தேன். அது முதலாவது காரணம்.

இரண்டாவது நமக்கு இந்த கோட்பாடுகள், வாழ்வின் சட்டங்கள் ,  பிரபஞ்சத்தின்  சட்டங்கள் புரிந்தாலும், நாம் இருக்கும் நிலையே நமக்கு பிடித்து இருப்பதால், அதன் மீதுள்ள பிடியை நாம் விட மறுப்பதால், அதை தக்க வைப்பது நம் பொறுப்பே என்று நினைப்பதால், அதுவே நம் பலம், அதை விட்டால் நாம் எதிர்பாராதது நடந்து விடுமோ, அல்லது எதிர்பார்த்தது நடக்காதோ, அல்லது நம்மை  மற்றவர்கள் மீறி விடுவார்களோ, ஜெயித்து விடுவார்களோ என்று நினைத்து, நம் limitation , ignorance , finite -ஐ அடிப்படையாக கொண்டு அதை நினைத்து ஆனந்தப்படுகிறோம்.  இவையெல்லாம் நம் அகந்தை மனதை கருவியாக எடுத்து கொண்டு செய்வது. . அதன் மூலம் வரும் துன்பங்களை விதி என்று நினைக்கிறோம். அதுவே இறைவனின் , கர்மத்தின் விருப்பம் என்று நினைக்கிறோம்.

இந்த இரண்டாவது தான் நாம் கடக்க வேண்டிய முக்கியமான இடம்.  காரணம், உயர்ந்த ஆன்மீக அனுபவங்களை பெற நாம் பயப்படுவதில் ஒரு நியாயம் இருக்கிறது.  காரணம் அது இது வரை அறிந்தவற்றிலிருந்து முழுமையாக வெளியே வர வேண்டி இருக்கிறது. coming out of our cognitive apparatus.  ஆனால் மனதிற்கு தெரிந்த உயர்ந்ததைக் கூட நம்மால் செயல்படுத்த முடியவில்லை என்னும் இடமே அடர்த்தியான இருள் உள்ள இடம். நாம் மாற வேண்டியது அங்கேதான். அதுவே அருளை உற்பத்தி செய்யும் இடம். நாம் செய்வததையெல்லாம் நன்றாக கவனித்து பார்த்தால்,  நமக்கு எவ்வளவோ உயர்ந்த விஷயங்கள் தெரிந்து இருக்கும், சாதாரண விஷயங்களில்  கூட நமக்குத் தெரிந்த உயர்ந்த பண்பை நாம் வெளிப்படுத்த மாட்டோம், உயர்ந்த திறமையை, ஆற்றலை வெளிப்படுத்த மாட்டோம். அதை செய்யும் சந்தர்ப்பங்கள் இருந்தாலும் செய்ய மாட்டோம். அதை வெளிப்படுத்தினால் இன்னும் அதிகம் பெறலாம், ஏற்புத்தன்மையை  அதிகப்படுத்தலாம் என்று தெரிந்தும் கூட அதை செய்வதில்லை என்றால் அது என்ன வங்கியான மனம்.  என்ன வகையான அஞ்ஞானம். அது ஞானம்  இருந்தும் அங்ஞானத்தை ஏற்கும் கயமை. அதை எந்த அளவுக்கு நாம் விரும்புகிறோம் என்பதை பொறுத்து நாம் பெற இருக்கும் முன்னேற்றமும் அது தர இருக்கும் ஆனந்தமும் தடைபடுகிறது.

அதை எப்படி மாற்றுவது. நம்முள் ஒவ்வொரு முறையும் நாம் அறிந்த ஒரு மெய்,  ஒரு உண்மை  எப்படி பொய்யாக மாறுகிறது என்பதைப் புரிந்துக் கொண்டால், பொய்யை எப்படி மெய்யாக மாற்றுவது என்பதை அறியலாம் –  என்பது  கர்மயோகி அடிக்கடி சொல்வது. Knowing the process of Truth – becoming Falsehood helps change Falsehood into Truth என்பது மெய்ஞானத்திற்கு அவர் தந்த ஒரு விளக்கம். 

உதாரணமாக , நான் சம்பளத்திற்கு வேலை செய்வது வரையறைக்கு உட்பட்டது போல, என்னும் உணர்வு வந்த போது , வரையறைக்கு உட்படாமல் இருக்க விரும்பினேன்.  அதற்கு சொந்த தொழிலே வழி என்று தோன்றியது.  அதை idea என்று கொள்ளலாம். அந்த idea வந்த பிறகு எனக்குத் தெரிந்த அனைத்தையும் ஆராய்ந்தேன்.  எதில் அதிக ஆனந்தம் வரும் என்று பார்த்தேன்.  எனக்கு நிறைய தெரியும்.  எல்லாமும் செய்ய முடியும் . அதை சத் என்று எடுத்துக் கொள்ளலாம். என்னால் நிறைய செய்ய முடியும் என்றாலும் ஒரு விஷயத்தை மட்டும் செய்ய விரும்புகிறேன்.  அதன் மூலம் ஒரு தெளிவான, நான் ஆனந்தம்  என்று நினைக்கும் ஆனந்தம் கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.  அதுவே என் சித்தமாகிறது. எப்படி வேண்டுமானாலும் வியாபாரம் செய்யலாம், எப்படி வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம் என்று இல்லாமல், அதன் அடிப்படை ஞானமாக கர்மயோகி அவர்கள் விரும்பிய பண்புகளை கொண்டே செய்ய வேண்டும் என்று உறுதி எடுக்கிறேன்.  அதுவே அந்த company -யின் vision and mission ஆக மாறுகிறது.  இது Truth -இன் ஒரு definition -க்கு உட்படுவதால் – Truth is that which is without conflict என்னும் அன்னையின் வாக்குக்கு உட்படுவதால்  அதுவே என்னை பொறுத்த வரை Truth  – சத்தியம் – அது 2008-யிலிருந்து 2012 வரை அபரிமிதமான வளர்ச்சியையும் ஆனந்தத்தையும் தருகிறது. இது கர்மயோகி சொல்லும்  where experience of Sachithananda is given to soul என்பதற்கு விளக்கமாக எடுத்து கொள்ளலாம். இந்த நான்கு வருடத்தில் வந்த ஏராளமான பிரச்சனைகளை , தடங்கல்கள்களை  எப்படி ஒரு பண்பை எடுத்துக் கொண்டதன் மூலம் – Token Act ஆக செய்ததன் மூலம் எப்படி மீண்டேன் என்று பல உதாரணங்களை  , பல கட்டுரைகளில் கூறியிருக்கிறேன். 

ஆனால்  அதன் பிறகு நான் வளர்கிறேன் என்று பலரும் நினைத்தபோது ,  பலரின், பல அன்பர்களின்   பார்வை என் மேல் படும் போது அதை தக்க வைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் நான் இருப்பதாக நினைத்தேன்.  அது என் கையில் தான் உள்ளது. அன்னையிடம் விட்டால் சரி வராது என்று தோன்றியது.  ஆன்மாவின் பண்புகளின் வழியில் இருந்து falsehood  – அகந்தைக்கு திரும்பிய முதல் படி அது.  அதன் பிறகு என் தகுதி, வளர்ச்சி, அந்தஸ்து, செல்வாக்கை காட்ட நான் எடுத்த முடிவுகள். அவை நல்ல பண்புகளானாலும், சொன்ன சொல் தவறாதவன் , தொழில் முனைவோருக்கு உதவுபவன்  என்னும் நற்பெயரை காப்பாற்ற, நான் எடுத்த முடிவுகள், அது அகந்தையை திருப்தி படுத்தும் முடிவுகள் என்று தெரியாமல் மேலும் மேலும் falsehood -க்குள் செல்ல வைத்த  முடிவுகள்.  அது வரை எதையும் கர்மயோகியை  கேட்டே செய்யும் நான், பிரச்சனையான விஷயங்களை மட்டும் கேட்டு, மற்றவற்றை அவரிடம் எடுத்துச் செல்லாமல் இருப்பது வரை, அதற்காக நான் செய்து கொள்ள ஆரம்பித்த சமாதானங்கள், compromise -க, என்னை சுற்றி உள்ளவர்களிடம் மறைக்க ஆரம்பித்த விஷயங்கள்,   சொல்ல ஆரம்பித்த சிறு சிறு பொய்கள், ஒரு கட்டத்தில் சமுதாயம் ஆற்றல் மிக்கது, அதை மீற முடியாது, அதற்கான அம்சம், வலிமை நமக்கு கிடையாது, அன்னையை நம்பினால் திருவுருமாற்றம் வேண்டுமானால் வரும், செல்வம் வராது என்று சொல்லும் அளவிற்கு மனநிலை இருளுக்கு சென்றது, மேலும் மேலும் faleshood விஷயங்கள், அகந்தையை திருப்திப்படுத்தும் விஷயங்களுக்குச் செல்ல ஆரம்பித்தேன்.

சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் , ஆடம்பரமான கிளை திறப்பு விழாவிலிருந்து , பெரிய அலுவலகம் என்பதிலிருந்து, அதை காப்பாற்ற நான் மாற்றிய கொள்கைகள், அதற்கு வசதியாக நான் எடுத்துக் கொண்ட அன்னையின் சட்டங்கள் என் கயமையை, ஏன் அங்ஞானத்தை  வெளிப்படுத்துவதாக இருந்ததை நான் அறியவில்லை. 

உதாரணமாக, அது வரை ஒரு பொய் சொல்லாத நான் – சிறு சிறு பொய்கள் – call வந்தால், நான் Busy  – என்று சொல்வது, இப்போது தான் மும்பையில் கிளம்பி இருக்கும் லாரியை, பெங்களூர் தாண்டி விட்டதாகச் சொல்வது, மறு நாள் அது Hosur -இல் பஞ்சராகிவிட்டதாக சொல்வது போன்ற, யாருக்கும் பாதிப்பில்லாத பொய்களை சொல்ல ஆரம்பித்தேன்.  அதற்கு முன் customers  தவறான, அவர்களுக்கு  தேவையில்லாத material -ஐ கேட்டால், அது தவறு என்று விளக்கி சரியானதை தந்து இருக்கிறேன்.  அதன் மூலம் பல  வியாபாரத்தை இழந்தும் இருக்கிறேன்.  அப்போதெல்லாம் என் எண்ணம் industry வளர வேண்டும், சரியான standards -க்கு quality -க்கு வர வேண்டும் என்றே இருந்தது. அது நாட்டுக்கு செய்யும் சேவை என்று கர்மயோகி கூறுவதால் அதில் என் கவனம்  அதிகமாக இருந்தது.   வளர்ந்த பிறகு, அந்த வளர்ச்சியை நிலைப்படுத்த வேண்டும் என்னும் எண்ணம் வந்த பிறகு, நமக்கு என்ன , அவர்கள் கேட்பதைக் கொடுப்போம், நாம் ஒன்றும் ஏமாற்றவில்லை. அவர்கள்  செய்முறை அது தான், அவர்கள் விருப்பம் அதுதான்  என்றால் செய்யட்டும் என்று விற்க ஆரம்பித்து விட்டேன். 

இவை அனைத்திலும்  ஏமாற்றுவதோ, கெட்டதோ,  பொய்யோ , துரோகமோ இல்லை.  அது எதையும் நான் செய்யவில்லை.  ஆனால் நானே எனக்கு வைத்து இருந்த உயர்ந்த சித்தத்தை, உயர்ந்த அளவுகோளை விட்டு இறங்கி வர ஆரம்பித்தேன்.  அன்னை முறைகள் எனக்கு அதற்கு முன் அளித்த வளர்ச்சி, சுபிட்சம், தெரிந்தும் – இப்பொது உள்ள  நிலைக்கான  பிடியை விட விருப்பமில்லாமல், என் அகந்தை விரும்புவதை, என்  பெருமையின்,  கௌரவத்தின் ,   அந்தஸ்தின்  பார்வையில் செய்ய ஆரம்பித்தேன்.  இது falsehood -க்கு போகும் வழி என்று தெரியாமல்,அன்னையின் பார்வையில் பார்த்து செய்தவைகளை  எல்லாம் அகந்தையின் பார்வையில் பார்த்து செய்ய ஆரம்பித்தேன். அன்னை வழிக்குச் செல்வது , சத்தியத்திற்கு செல்வது என்று புரிந்தது, அதை புரியவைத்தது வெள்ளத்திற்கு பிறகு கர்மயோகி அவர்கள் எழுதி அனுப்பிய ஒரு திருக்குறள்.

இதன் தொடர்ச்சியை அடுத்த வாரம் பார்க்கலாம்.

Author Info
Ramesh Kumar

Ramesh Kumar

SHARE
Share on facebook
Share on telegram
Share on whatsapp

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 5

இதுவரை சொன்னவை அனைத்தும்   “உயர்ந்தவை நிர்ணயிக்கின்றன. அவை நிறைவேற தாழ்ந்தவை உதவுகின்றன” – என்னும் லைப் டிவைனின் ஒரு  கருத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு தலைப்பில் இருந்து விலகிச் செல்லாமல் எழுத வேண்டும் என்று

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 4

இதுவரை நாம் பேசியதை Life Divine – கருத்துகளில் பொருத்தி பார்க்கும் போது – முன்னேறும் பாதையின் நன்கு  நிலைகளை.  – மனித வாழ்வு, யோக வாழ்வு, தெய்வீக வாழ்வு என்று மூன்று பகுதிகளாகப்

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை  – 3

அதற்கு பதிலாக ஒரு பண்பை எடுத்துக் கொண்டு, அதன் பார்வையில் நம் முடிவை organise செய்ய முடிந்தால், அது நம் அனைத்து  முடிவுகளுக்குக்  காரணமாக அமைந்தால், அது படைப்பாற்றல் மிக்கதாக இருக்கும்.  உதாரணமாக முன்

Read More »

More Articles

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 5

இதுவரை சொன்னவை அனைத்தும்   “உயர்ந்தவை நிர்ணயிக்கின்றன. அவை நிறைவேற தாழ்ந்தவை உதவுகின்றன” – என்னும் லைப் டிவைனின் ஒரு  கருத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு தலைப்பில் இருந்து விலகிச் செல்லாமல் எழுத வேண்டும் என்று

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 4

இதுவரை நாம் பேசியதை Life Divine – கருத்துகளில் பொருத்தி பார்க்கும் போது – முன்னேறும் பாதையின் நன்கு  நிலைகளை.  – மனித வாழ்வு, யோக வாழ்வு, தெய்வீக வாழ்வு என்று மூன்று பகுதிகளாகப்

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை  – 3

அதற்கு பதிலாக ஒரு பண்பை எடுத்துக் கொண்டு, அதன் பார்வையில் நம் முடிவை organise செய்ய முடிந்தால், அது நம் அனைத்து  முடிவுகளுக்குக்  காரணமாக அமைந்தால், அது படைப்பாற்றல் மிக்கதாக இருக்கும்.  உதாரணமாக முன்

Read More »