Share on facebook
Share on telegram
Share on whatsapp

மனிதனின் வாழ்க்கை விதி -(தலை விதி)- லைஃப் டிவைன் பார்வையில் – 2

உதாரணமாக உலகத்தின் தலைவனாக ஜகத்குருவாக இந்தியா  வர வேண்டும், வரும் என்பதை கர்மயோகி அவர்கள் பிரம்மத்தின் ஆனந்தமாக எடுத்துக் கொண்டார்.  அதன் தனி மனிதனின் வெளிப்பாடாக தன்னில் செய்யும் போது அமைதியாக கொண்டு வந்தார்.  உலகத்தின் அமைதியாக அது மாற வேண்டும் என்று விரும்பினார்.  அது அவரே எதிர்பாராத அளவு ICPF என்ற Indian Commission  For Peace & Food   என்று ஒரு organisation அமைந்தது. Mother Service Society -யுடன் அப்போதிருந்த ரஷ்யாவின் அதிபர் கோர்பசேவ்., அமெரிக்க அதிபர் ஜெம்மி  கார்ட்டரின் மனைவி ரோஸலின் கார்ட்டர், ஜோர்டன் மஹாராணி நூர் என்று நினைத்தே பார்க்க முடியாதவர்களை சேர்த்து உலக அமைதிக்காகவும் அதன் வெளிப்பாடாக ஆயுத குறைப்பு பேச்சையும் முன்னிருத்தினர்.  September 1989-இல் அதற்கான சர்வதேச மாநாட்டுக்கு கட்டுரை எழுத 8 மாதங்களுக்கு முன்னரே கடிதம் வந்திருந்தாலும் கர்மயோகி அவர்கள் அமைதி காட்டினார். அடுத்த இரண்டு மாதங்களில் அதாவது மாநாடு நடப்பதற்கு ஆறு மாதத்திற்கு முன் Berlin சுவர் உடைத்தெறியப்பட்டு ஜெர்மனி நாடுகளுக்கு இடையே அமைதி வந்தது.  1.2 trillion dollar budget ஆக இருந்த ரஷ்யா மற்றும் அமெரிக்காவின் ராணுவ தளவாட செலவுகள் பாதியாக குறைக்கப்பட்டது . அன்றிலிருந்து இன்று வரை உலகில் பெரிய போர் பயம், அபாயம் இல்லாமல்   உலக மக்கள் அமைதியாக இருக்கின்றார்கள்.

அதே போல அந்த ஸ்தாபனத்தின் பெயரில் உள்ள food -ஐ பற்றி கர்மயோகி அவர்கள் என்ன நினைத்தார்கள் என்றால் அப்படி சேமிக்கப்படும் தொகை, உலக மக்கள் உணவுக்காக உபயோகப்பட வேண்டும் என்று நினைத்தார்.  அது பின்னால் ஸ்வாமிநாதன் மற்றும் C.சுப்ரமணியன் மூலம் விவசாய புரட்சியாக வந்து இன்று வரை இந்தியாவை பெரும்பாலும் சுய சார்பாக இருக்க வைத்திருக்கிறது.  நடந்தவைகளை பார்க்கும்போது இந்த ஆனந்தத்தை பிரம்மம்  விரும்பியதாகவும் அதுவே அதன் வெளிப்பாடாக  ICPF -ஆகவும் தனி மனிதனில் அது அமைதியாகவும் வந்தது எனலாம்.

அப்படி நாமும் பகவானின் வார்த்தையை எடுத்துக்கொண்டால் நம்மால் அமைதி என்பதை, சுமுகம் என்பதை கொண்டு வர முடியாது என்பதால் Prosperity -சுபீட்சம் என்னும் வழியை  எடுத்துக் கொண்டார். ஒவ்வொருவரும் அடையும் சுபீட்சம் நாட்டின் சுபீட்சம்,. நாட்டின் சுபீட்சம் அதை உலகத்தின் தலைவனாக்கும் என்கிறார்.  அவர் நினைக்கும் அளவிற்கும்  ஒவ்வொரு அன்பரும் Bill gates  , Steve Jobs , நூறு கோடி என்று வந்தால் ஒரு டாலர் = 1 ரூபாய் என்று வரும் என்று கூறுகிறார்.

Prosperity -இல் நம் ஆனந்தம், பிரபஞ்சத்தின் ஆனந்தம், பிரம்மத்தின் ஆனந்தம் மூன்றும் உள்ளது.  இதெல்லாம் எப்போது நடக்கும் என்றால் மேல் மனதில் நம்பிக்கைகள், முறைகள் , அபிப்ராயங்கள், பழக்கங்கள், முன் முடிவுகளிலிருந்து பார்க்காமல் ஆன்மாவின் பார்வையில் ஒரு முழுமையான பார்வையில் பார்த்து அதன் பண்பின் மூலம் வெளிப்படுத்துவது. 

அதாவது என் மனதை ஆன்மாவுடன் தொடர்பு படுத்தி, அதிமனப் பார்வையில்  பார்க்கும் போது நான் பிரம்மத்தின் real idea -விற்கு வருகிறேன்.  இன்னும் எளிமையாக சொல்ல வேண்டுமென்றால் ஒருவர் தன்னால் முடிந்த அளவு ஒரு உயர்சித்ததை, உயர் பண்பை எடுத்துக் கொள்ளும் போது அவர் பிரம்மத்தின் கருவியாகிறார்.  பிரம்மத்தின் real idea -வை நம்மால் கணிக்க முடியாது என்பதால் நாம் பரிணாமத்தில் முன்னேற, வாழ்வில் முன்னேற எந்த idea -வையும் எடுத்துக் கொண்டு அதற்கான பண்புகளோடு இணைத்தால் நாம் பெரும் ஆனந்தம் பிரம்மம் பெரும் ஆனந்தம்.

உதாரணமாக இள வயது முதல்  நான் பல்வேறு தொழில்களில், தொழிலாளியாக வேலை பார்த்ததில், Construction , Catering , Chemical என்ற அனுபவம் உண்டு.  அது ஏராளமான idea-களை உள்ளடக்கியது.  அதை சத் என்று வைத்துக் கொள்ளலாம்.  அதிலிருந்து எது எனக்கு அதிக ஆனந்தம் தரும் என்று நான் நினைத்த போது chemical -ஏ அதிக ஆனந்தம்  தரும் என்று தெரிகிறது.  அது சித் – சித்தம்.  அதனால் அது தரும் ஆனந்தத்தை அனுபவிக்க ஒரு ஸ்தாபனத்தை, company -ஐ  படைத்தேன்.  அதில் என் வேலையைச் செய்ய ஏராளமான பணியாளர்கள்.  எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் அனைவரும் வேலை செய்ய வேண்டியது எனக்கே.  என் சட்டப்படி என் மனப்பான்மைக்கு  ஏற்றபடி அவர்கள் நடக்க வேண்டும்.  என் நோக்கமும்  அவர்கள் நோக்கமும் ஒன்றாக இருக்க வேண்டும்.  அது தான் எனக்கு ஆனந்தம்.  அப்படி செய்பவர்கள் மேல் என் கண் படும்.  நான் அவர்களை அதிகம் முன்னேற்றுவேன்.    Combination of real ideas with values in our unique way is also manifesting என்கிறார். அதாவது நம் idea -க்களும் பண்புகளும் இணையும் போது நாமே படைப்பாற்றல் பெறுகிறோம், பிரம்மமாகிறோம்.   தத்துவமாக பார்க்கும் போது நாம் இந்த மூன்று Roll -ஐ செய்ய முடியும் என்று தெரிந்தாலும் செயல் முறையில் அதை வாழ்வில் செயல்படுத்த மிகுந்த சிரமம் இருக்கிறது. 

அதற்கு கர்மயோகி அவர்கள் சொல்லும் ஒரு வழி – செய்யும் செயல் அனைத்திலும் அது சம்பந்தப்பட்ட அனைவரின் பார்வையில் பார்த்து நல்லெண்ணம், self giving – முழுமையாக  தன்னைத்  தருவது என்ற அளவில் அனைவரும் சந்தோஷ படும்படி ஒன்றை செய்தல் அல்லது அதற்கு அடுத்த நிலையில் அதற்கும் சமுதாயத்திற்கும் , நாடு முன்னேற்றதிற்கும்  ஒரு தொடர்பு ஏற்படுத்த முடிந்தால், அவ்விரண்டின் முன்னேற்றத்திற்கு ஏற்றவாறு செய்ய முடிந்தால் அது இறை நோக்கத்தை வாழ்வில் கொண்டு வருவதாக இருக்கும்.

கர்மயோகி அவர்கள் ICPF -இல் செய்தது இது தான். அது அப்படியே வளர்ந்து இன்று ஏறத்தாழ 30 ஆண்டுகள் கழித்து உலகில் உபரி பணம் முழுதும் conscious  capital -என்ற பெயரில் நல்ல விஷயங்களில், நேர்மையான விஷயங்களில், மனிதர்களின் நன்மை பயக்கும் company -களில் மட்டும் முதலீடு செய்யப்பட வேண்டும் என்ற அளவில் வளர்ந்து இருக்கிறது.  அப்படி நாம் நினைக்க நினைக்க , நாம் மற்ற மனிதர்களிலிருந்து வேறு படுவதால் ஒரு individuality ஒரு தனித்தன்மை ஒரு தனிப் பார்வை வருகிறது.  அப்படி வித்தியாசமான முன்னேற்றத்திற்கான நோக்கம் பார்வை இறைவன் தேடும் ஆனந்தமாக இருக்கிறது என்பதால்  அது படைப்புத்  திறன் பெற்று அபரிமிதமாக வளருகிறது.  காரணம் பிரம்மம் லட்ச கணக்கான கோடிக் கணக்கான தனித்துவத்தை ஆனந்தமாக பார்க்கிறது.

வாழ்வு உயர்ந்த பண்புகள் மூலம் பிரம்மத்தை வெளிப்படுத்துகிறது.  வாழ்வு தன்னுள் அதை கண்டுக் கொள்ள பிரம்மத்தை நாடுகிறது.  அதுவே மனிதனுக்கு தேவையான  விழிப்புணர்வு.

அந்த realisation -is progressive comprehension என்கிறார்.  அதாவது அத்தகைய விழிப்புணர்வு  வாழ்விலும், பரிணாமத்திலும் முன்னேற்றத்திற்கான புரிதல் என்கிறார்.

விழிப்புணர்வின் மூன்று நிலைகளை பற்றி அடுத்த வாரம் பார்க்கலாம்.

Author Info
Ramesh Kumar

Ramesh Kumar

SHARE
Share on facebook
Share on telegram
Share on whatsapp

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 5

இதுவரை சொன்னவை அனைத்தும்   “உயர்ந்தவை நிர்ணயிக்கின்றன. அவை நிறைவேற தாழ்ந்தவை உதவுகின்றன” – என்னும் லைப் டிவைனின் ஒரு  கருத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு தலைப்பில் இருந்து விலகிச் செல்லாமல் எழுத வேண்டும் என்று

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 4

இதுவரை நாம் பேசியதை Life Divine – கருத்துகளில் பொருத்தி பார்க்கும் போது – முன்னேறும் பாதையின் நன்கு  நிலைகளை.  – மனித வாழ்வு, யோக வாழ்வு, தெய்வீக வாழ்வு என்று மூன்று பகுதிகளாகப்

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை  – 3

அதற்கு பதிலாக ஒரு பண்பை எடுத்துக் கொண்டு, அதன் பார்வையில் நம் முடிவை organise செய்ய முடிந்தால், அது நம் அனைத்து  முடிவுகளுக்குக்  காரணமாக அமைந்தால், அது படைப்பாற்றல் மிக்கதாக இருக்கும்.  உதாரணமாக முன்

Read More »

More Articles

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 5

இதுவரை சொன்னவை அனைத்தும்   “உயர்ந்தவை நிர்ணயிக்கின்றன. அவை நிறைவேற தாழ்ந்தவை உதவுகின்றன” – என்னும் லைப் டிவைனின் ஒரு  கருத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு தலைப்பில் இருந்து விலகிச் செல்லாமல் எழுத வேண்டும் என்று

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 4

இதுவரை நாம் பேசியதை Life Divine – கருத்துகளில் பொருத்தி பார்க்கும் போது – முன்னேறும் பாதையின் நன்கு  நிலைகளை.  – மனித வாழ்வு, யோக வாழ்வு, தெய்வீக வாழ்வு என்று மூன்று பகுதிகளாகப்

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை  – 3

அதற்கு பதிலாக ஒரு பண்பை எடுத்துக் கொண்டு, அதன் பார்வையில் நம் முடிவை organise செய்ய முடிந்தால், அது நம் அனைத்து  முடிவுகளுக்குக்  காரணமாக அமைந்தால், அது படைப்பாற்றல் மிக்கதாக இருக்கும்.  உதாரணமாக முன்

Read More »