Share on facebook
Share on telegram
Share on whatsapp

வாழ்வில் நான் ஏமாந்த விதங்கள்

சென்ற கூடலில் வாழ்வின் ஆற்றலை பற்றி பேசும்போது – வாழ்வில் நான் ஏமாந்த விதங்கள் பற்றி பேசியது  பலருக்கும்  பிடித்து இருந்தது போலிருக்கிறது. அதை அனுப்ப முடியுமா என்று சிலர் கேட்டு இருந்தார்கள். நான்கைந்துபேர் கேட்டாலே கேட்காதவர் பலர் இருப்பார்கள் என்பது என் அனுமானம். என்னை போல நீங்களும் ஏமாந்து தான், சிலவற்றை இழந்துதான் வாழ்வை , மனிதர்களை புரிந்து கொள்ள வேண்டும் என்னும் நிலையை அடையாமல் – நேரடி முன்னேற்றம் பெற்றால் அதுவே நான் செய்யும் பெரிய சேவையாக நினைக்கிறேன்.

ஒன்று – நம்மைப் பற்றி என்ன நினைப்பார்களோ  என்று சமுதாயத்திற்காக,  உறவிற்காக,  நண்பர்களுக்காக,  ஸ்தாபனத்திற்காக என்று என்னை நானே LIMIT  செய்து கொண்ட, வரையறுத்துக் கொண்ட இடங்கள்.

இரண்டாவது – நல்ல விஷயமோ,  கெட்ட விஷயமோ,  நம்மை போன்றே மற்றவர்களும் நடப்பார்கள்,  சிந்திப்பார்கள்,  செயல்படுவார்கள் என்று நினைத்து அதற்காக என்னை LIMIT  செய்து கொண்ட,  வரையறுத்துக் கொண்ட இடங்கள்.

கர்மயோகி ஒரு முறை என்னிடம்  நீ பத்து வருடங்களுக்கு முன் வந்து இருந்தால் நான் வேறு சில PET PROJECT  களை செய்து இருக்க முடியும் என்றார்.   அவற்றை நான் இழந்ததற்கு காரணம் மேலே சொன்ன இந்த இரண்டு மன நிலைகள்.   உயர்ந்தது எல்லாம் தெரிந்தும் நான் அவற்றுக்கு எப்படி கட்டுப்பட்டேன் என்று பார்த்தால் அல்லது இந்த 15 வருடங்களில் நான் இழந்ததை பார்த்தால் குறிப்பாக ஆறு அல்லது ஏழு வழிகளை STRATEGY  களையே அனைவரும் பயன்படுத்தி இருந்தது தெரிந்தது.

முதலாவது, என் ஒப்புதலுக்கான காரணங்கள் தவறு என்பதை திரும்ப திரும்ப சொல்லி,  அவை தான் அறிவார்ந்த,  பொது புத்திக்கான காரணங்கள் என்று நம்ப வைத்து,  என்னை என்  முடிவில் இருந்து பின்  வாங்க வைத்த  இடங்கள்,  வற்புறுத்தல் என்பார்களே,  அதற்கு அடங்கிப் போன இடங்கள்.

இரண்டாவது,  மூளை சலவை என்பார்களே,  அது போல என்னை சிந்திக்கவே விடாமல் ஒன்றன்பின் ஒன்றாக காரணங்களை அடுக்கி என்னை செய்ய வைத்த இடங்கள்,  பிற்காலத்தில் எப்படி நாம் கொஞ்சம் கூட சிந்திக்காமல் இதை செய்தோம், எப்படி இவ்வளவு முட்டாள் தனமாக நடந்துள்ளோமே   என்று தோன்றும் அளவிற்கு இருக்கும் இடங்கள்.

மூன்றாவது, இவர்களா இப்படி என்னும் அளவிற்கு பல ஆண்டுகளாக  ஒரு முகத்தை காட்டியவர்கள் ஒரு காரியம் என்று வரும் போது காட்டிய முகம் என்னை திகைக்க வைத்து இது நெடுநாள் திட்டமா,  தற்செயலாக நடந்ததா என்று புரியாத அளவிற்கு இவன் நல்லவனா,  கெட்டவனா,  என்று குழப்பத்தில் ஆழ்த்தி என்னை வளைத்த இடங்கள்.

நான்காவதாக, சூழலுக்காக,  அன்பர் என்பதற்காக,  மையம் என்பதற்காக,  ஸ்தாபனம் என்பதற்காக அல்லது குடியிருப்பு , சமுதாயம்  உறவுகள் நண்பர்கள்  என்று SOCIAL CONFORMITY  என்பார்களே அதற்காக,  எனக்கு பிடிக்கவில்லை என்றால் கூட சில செயல்களை செய்து அதனால் துன்பப்பட்ட இடங்கள்.

ஐந்தாவது, நான் கொண்ட,  என் வாழ்வு மாறியதற்கு காரணமானவர்கள் என்று ADORATION, ADMIRATION, அதீத மரியாதை  என்று நான் கொண்ட சிலர் அல்லது இத்தகையோர் REFER செய்தவர்கள் என்பதற்காக அவர்களையும் அதே போல நடத்தியது,  அல்லது இத்தகையோரின் குடும்ப உறுப்பினர்கள்,   உறவுகள் என்று அனைவருக்கும் அந்த  ஸ்தானத்தை கொடுத்தது,  என்று இவை எல்லாம் CULT  ஆக, முட்டாள்தனமான வழிபாடுகளாக, பய பக்தியாக SUPERSITION – மூட நம்பிக்கைகளாக  என்னுள் வளர்ந்து விட்டதை அறியாமல்,  இவர்களுக்கு செய்வதை அன்னைக்கு செய்வது போல நினைத்து செய்தது, என்னை என் இந்த மனநிலையை,  EXPLOIT  செய்கிறார்கள்,   என் காண்டாக்ட்களை, என் RESOURCES  ஐ  அவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்று கூட தெரியாமல் பட்டு புடவைகள்  , நகைகள், சுற்றுலாக்கள் என்று முட்டாள்தனமாக இழந்தவை.

ஆறாவதாக, என் எல்லைகள் எது என்று தெரியாமல்,  என் நிலைக்கு மேலான முதலீடுகள்,  கொள்கைகள்,  பண்புகள் என்று எடுத்துக்கொண்டு,   அதை யாரிடம்,  எந்த அளவு,  எப்போது காட்ட வேண்டும் என்பது தெரியாமல் அந்த சூழலின்,  மனிதர்களின்,  தராதரம் புரியாமல்  அத்தகையோர் பேசும் பேச்சை மட்டுமே நம்பி – சொன்னவர்கள் சொல்வதை செய்கிறார்களா அதை பின்பற்றுகிறார்களா என்பதை கூட பார்க்காத  குருடனாக,  அதற்கான விவேகம்,   பாகுபாடு இல்லாமல் என் எல்லைகளை வகுக்க தெரியாமல்,  அல்லது மற்றவர்களை ஒரு எல்லைக்குள்  வரையறைக்குள் நிற்க வைக்க தெரியாமல் நான் இழந்தவை.

ஏழாவதாக, இதையெல்லாம் தாண்டி ஒரு இழப்பை,  உறவு,   பதவி,  புகழ்,  நிலை,  வசதி ஆகியவற்றை இழக்கும் பயத்தை ஏற்படுத்தி செய்யப்படும் என் SENSITIVE ஏரியாக்களை தொடும் EMOTIONAL BLACKMAIL  களால் இழந்தவை.

இது இல்லாமல் தொந்தரவு தாங்காமல்,  விட்டால் போதும் என்று செய்த இடங்கள்,  நீ தான் சொன்னாய்,  நன்றாக யோசித்துப் பார்,  அதனால் தான் செய்தேன் என்று என்னை  குழப்பி,  தன் நஷ்டத்தை,  கஷ்டத்தை,  எதிரியை,  என் தலையில் கட்டியவர்கள் என்று இந்த ஏழு அல்லது எட்டு முறைகளில் தான் எல்லோரும் என்னை ஏமாற்றி இருக்கிறார்கள்.

இதனால் நான் இழந்த முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள்,  இழந்த பணம் ஏராளம்.   வாழ்வு தரும் முன்னேற்றத்திற்கான ஆற்றல்களை பெற்று நாம் முன்னேறிய பிறகு  அவற்றை  நாம் எப்படி வீணடிக்கிறோம் என்பதற்கு இவை உதாரணங்கள்.  இவற்றை உணர்ந்து – நான் அந்த சாரமான ஞானத்தை பெற்ற பிறகு-  மனித சுபாவங்கள் பெருமளவு புரிந்த பிறகு  – பெரும்பாலும் இழந்தவை அனைத்தும் படிப்பு , வருமானம் என்று எல்லாம் மீண்டும்  வந்தது  வந்து கொண்டு இருக்கிறது.

Author Info
Ramesh Kumar

Ramesh Kumar

SHARE
Share on facebook
Share on telegram
Share on whatsapp

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 5

இதுவரை சொன்னவை அனைத்தும்   “உயர்ந்தவை நிர்ணயிக்கின்றன. அவை நிறைவேற தாழ்ந்தவை உதவுகின்றன” – என்னும் லைப் டிவைனின் ஒரு  கருத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு தலைப்பில் இருந்து விலகிச் செல்லாமல் எழுத வேண்டும் என்று

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 4

இதுவரை நாம் பேசியதை Life Divine – கருத்துகளில் பொருத்தி பார்க்கும் போது – முன்னேறும் பாதையின் நன்கு  நிலைகளை.  – மனித வாழ்வு, யோக வாழ்வு, தெய்வீக வாழ்வு என்று மூன்று பகுதிகளாகப்

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை  – 3

அதற்கு பதிலாக ஒரு பண்பை எடுத்துக் கொண்டு, அதன் பார்வையில் நம் முடிவை organise செய்ய முடிந்தால், அது நம் அனைத்து  முடிவுகளுக்குக்  காரணமாக அமைந்தால், அது படைப்பாற்றல் மிக்கதாக இருக்கும்.  உதாரணமாக முன்

Read More »

More Articles

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 5

இதுவரை சொன்னவை அனைத்தும்   “உயர்ந்தவை நிர்ணயிக்கின்றன. அவை நிறைவேற தாழ்ந்தவை உதவுகின்றன” – என்னும் லைப் டிவைனின் ஒரு  கருத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு தலைப்பில் இருந்து விலகிச் செல்லாமல் எழுத வேண்டும் என்று

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 4

இதுவரை நாம் பேசியதை Life Divine – கருத்துகளில் பொருத்தி பார்க்கும் போது – முன்னேறும் பாதையின் நன்கு  நிலைகளை.  – மனித வாழ்வு, யோக வாழ்வு, தெய்வீக வாழ்வு என்று மூன்று பகுதிகளாகப்

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை  – 3

அதற்கு பதிலாக ஒரு பண்பை எடுத்துக் கொண்டு, அதன் பார்வையில் நம் முடிவை organise செய்ய முடிந்தால், அது நம் அனைத்து  முடிவுகளுக்குக்  காரணமாக அமைந்தால், அது படைப்பாற்றல் மிக்கதாக இருக்கும்.  உதாரணமாக முன்

Read More »