இத்தகைய மனப்பான்மைகளிலிருந்து வெளியே வருவது என்பது நாம் அறிந்த உயர்ந்த பண்புகளை organise செய்வது. அந்த organisation தருவது ஆன்மீக சக்தி. சூட்சம ஜட புலன்களையும், சூட்சம ஜட மெய்மையையும் கண்டு கொண்டு தட்டி எழுப்பும் சக்தி. supraphysical senses and supra physical realities -ஐ புரியவைக்கும் சக்தி.
உதாரணமாக சுயநலத்திலிருந்து சற்றே பரநலத்திற்கு மாறினால் நம் உலகம், அறிவு, உணர்வு விரிவடையும் விதம் அதை புரியவைக்கும். அது செயல்படுவதற்காக சூட்சம சட்டங்கள், சூட்சம சக்திகள் இருப்பது நமக்குப் புரிய வரும். இறைவன் தன்னைத் தானே சுருக்கிக்கொண்ட form தான் நாம் என்றால் நம் attitude , நம் character எல்லாம் அதன் பிரதிபலிப்பு என்று நினைக்கிறோம். character -ஐ மாற்று, attitude -ஐ மாற்று, motive -ஐ மாற்று என்றால் முடியவில்லை என்கிறோம். ஆனால் நன்றாக யோசித்துப் பார்த்தால் நாமே நம் infinite potential -வரையறை அற்ற ஆற்றலை ஒரு குறிப்பிட்ட மனப்பான்மைக்குள் சுருட்டி வைத்திருக்கிறோம் என்று புரியும், அதிலிருந்து வெளியே வரும் போது அதில் அடைத்து வைக்கப்பட்டிருந்த infinite செயல்படும்போது தான் அதன் சக்தி புரியும். Mother’s consciousness என்று சொல்லும் இடம் அத்தகைய infinite potential, infinite energy இருக்குமிடம். அதனால் தான் மனப்பான்மையை விட்டு, opinion , prejudice , preferences , comfort -ஐ விட்டு அதைத் தொடும் போது அற்புதங்கள் நடக்கிறது. அதன் சாரம் என்னவென்றால் மனம் முடியுமிடத்தில் சித்தம் ஆரம்பிக்கிறது.
பிரம்மம் ஆனந்தத்தை அனுபவிக்க சத்தில் அசைவை ஏற்படுத்தி இரண்டாக பிரியும் போது – ஆன்மா, சத்தியம் என்று இரண்டாகப் பிரிகிறது. அதாவது சத்தியத்திற்கு ஆன்மாவே நெருக்கமானது. அல்லது சத்தியத்தின் வாயில் ஆன்மா. அல்லது பிரம்மத்தின் வாயிலில் தூய ஆன்மா உள்ளது அல்லது ஆதியின் முதல் படைப்பு truth consciousness என்று சொல்லலாம். அந்த இடம் சத்தியத்தை பரிணாமத்தை துரிதப்படுத்தும் இடம் என்பதால் அதற்காக நாம் எடுக்கும் எந்த முயற்சியும் அதிக பலன் தரும். அந்த ஞானம் செயல்படும் சக்தியாக மாறினால் அது பண்பாகிறது. அதை நம் மனம் ஏற்றுக்கொண்டால் அது நம் சுபாவம் ஆகிறது. அன்னைக்கேற்ற சுபாவம் என்பது evolution of consciousness. நாம் எந்த அளவிற்கு அதை ஏற்றுக்கொள்கிறோமோ அந்த அளவிற்கு பரிணாமத்தில் முன்னேறுகிறோம். இவற்றையெல்லாம் பொருள்வாதி மற்றும் ஆன்மீகவாதியின் பகுதியான அறிவால் புரிந்துக்கொள்ள முடியாது. புலன்கள் பெறும் இந்த அறிவு, அதைத் தாண்டிய விஷயங்களை புரிந்துக்கொள்ள முடியாது. வாழ்வு கொடுக்கும் அழுத்தத்தையும், ஆன்மா கொடுக்கும் ஆர்வத்தையும் சூட்சம புலன்களும், சூட்சம மெய்மைகளுமே உணர முடியும்.
அப்போது தான் நம்மைத் தாண்டிய, நம் அறிவைத் தாண்டிய விஷயங்கள் உள்ளது. அதற்கு என ஒரு சட்டம் உள்ளது, அதற்கென்றே ஒரு வரையற்ற ஆற்றல் உள்ளது அது நம் வாழ்வில் செயல்பட்டுக் கொண்டே இருக்கிறது, நம் பரிணாமத்திற்கான செயல்களை செய்துக் கொண்டேயிருக்கிறது, அது நம் அறிவுக்கு, மனதிற்கு ஏற்றதாக இல்லாததால் அது முரண்பாடாக தெரிகிறது என்பதெல்லாம் புரியும். பொருள்வாதி வாழ்வின் எல்லை புரியாமல் மாயை என்றது போல, ஆன்மீகவாதி வாழ்வின் தேவைகளை புரிந்துக் கொள்ளாமல் மாயை என்று சொல்வது போல நாமும் புரியாத நிலையில் வாழ்வைக் கழிப்போம். அப்படி இல்லாமல் இருக்க ஒரே வழி நம் புலன்களை – அனுபவங்களின் சாரமாக இருப்பதை மாற்றி சித்தத்தின் சாரமாக மாற்றுவது. நம் மனம், உணர்வு, உடல் ஆகியவற்றை அந்த சித்தத்தின் கருவிகளாக மாற்றுவது. அதுவே சூட்சம ஜட புலன்கள், சூட்சம ஜட மெய்மைகளை வெளி வர செய்யும். நம் உலகம் நம் சித்தத்தில் மட்டுமே உள்ளது. அதன் ஆற்றலிலேயே எல்லாம் நடக்கிறது என்பது நமக்குத் புரியாவிட்டால் நம் அன்னை பக்தி, வழிபாடு, சமர்ப்பணம், சரணாகதி, திருவுருமாற்றம் என்று சொல்வதெல்லாம் ஒரு unrealistic -ஆக ஒரு மாயையாகத் தோன்றும்.
Supra physical senses ஐ நமக்கு புரிவதற்காக சூட்சம புலன்கள், சூட்சம செவி, சூட்சம ஞானம், சூட்சம பார்வை என்று எடுத்துக்கொள்ளலாம். சித்தம் இதையெல்லாம் கருவிகளாக பரிணாம முன்னேற்றத்திற்கு பயன்படுத்துகிறது. Individual consciousness – Universal consciousness ஆக மாறும் வழி இது. அதற்கு உதாரணமாக பகவான் telepathy -ஐக் கூறுகிறார்.எனக்கு ஒரு நண்பர் இருந்தார். பூஜாரி எனப்படுபவர். .மது அருந்துவார். நான் trans என்னும் நிலைக்கு மது அருந்தினால் செல்வேன் என்பார். இது நடந்தது 2006-இல் . அப்போது இந்த சூட்சம விஷயங்களைப் பற்றி எனக்குத் தெரியாது. என்னால் இங்கிருந்துக்கொண்டே என்னுடன் தொடர்பில் உள்ளவர்கள் செய்வதை என்னால் பார்க்க முடியும் என்பார். அப்போது நாங்கள் Bachelor Mansion -இல் இருந்தோம். ஒரு நாள் கிண்டலிடத்தப்படி பக்கத்து அறையில் என் நண்பர் ஏதோ எழுதிக்கொண்டு இருக்கிறார். என்ன எழுதிக் கொண்டு இருக்கிறார் சொல் என்றேன். கண்களை சுருக்கி சுவற்றை பார்த்தவர், அவன் காதலிக்கு கவிதை எழுதிக் கொண்டிருக்கிறான் என்றார். பக்கத்து அறையில் எட்டிப்பார்த்து கேட்டேன். அவர் ஆம் என்று வழிந்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தாலும், இது ஒரு guess work என்றேன். பூஜாரிக்கு கோபம் வந்தது. சரி, உன் நண்பர் ஒருவர் திருச்சி சென்றான் இல்லையா அவனை பார்த்து சொல்கிறேன் என்று சீலிங்கை பார்த்தார். பின் அவன் சைக்கிளில் வீட்டை நோக்கி வந்து கொண்டு இருக்கிறான். சிவப்பு கலர் கூடை கேரியரில் கட்டி உள்ளது. பச்சை சட்டை போட்டிருக்கிறான் . இன்னும் குறிப்பாக சொல்கிறேன் – அந்த சட்டையில் இரண்டாம் பட்டன் இல்லை என்றார். Phone செய்து கேட்டேன். ஆமாம் எப்படி தெரியும். இப்போது தான் அந்த Button விழுந்தது என்றார் அந்த திருச்சியில் இருந்த நண்பர். இதை supra sensible என்று சொல்லலாம்.
அதற்கு முன் ஒரு முறை என்னிடம் சுத்தமாக பணம் இல்லை. நான் இருந்தது திருவல்லிக்கேணியில். நண்பர் அண்ணாநகரில், கிட்டத்தட்ட 20 km தள்ளி வந்து பணத்தை கைமாற்றாக பெற்றுக் கொள்ள சொன்னார். என் bike -இல் குலுக்கி ஓட்டும் அளவே petrol இருந்தது. அப்போது நான் அன்னையிடம் வந்த புதிது. அன்னை அருள், அன்னையின் தரிசனம் போன்ற புத்தகங்களை படித்து விட்டு அன்னை அற்புதங்கள் செய்வார்கள் என்று நம்பிய நேரம். அதில் அன்னையிடம் சொன்னால் பள்ளத்தில் இருக்கும் நீர் மேட்டை நோக்கி நகரும் என்று எழுதி இருப்பார் . அதனால் Mother இந்த Bike எப்படியாவது அண்ணாநகர் வரை போக வேண்டும் என்று சொல்லிவிட்டு ஓட்டினேன் . அண்ணாநகரில் பணத்தைப் பெற்று கொண்டு பெட்ரோல் போடலாம் என்று பார்த்தால் , 10 km வந்தால் தான் petrol bunk . மீண்டும் அதே போல வேண்டிக்கொண்டு வந்தேன். சரியாக petrol bunk வந்தவுடன் வண்டி off ஆனது. அதாவது கிட்டத்தட்ட petrol இல்லாமல் 20-25 km ஓடியுள்ளது. இந்த நிகழ்ச்சிகள் அது வரை நான் இருந்த பொருள்வாதி மனநிலையை உடைத்தது . அன்னையை வழிபடும் தெய்வமாக இல்லாமல், செயல்படும் சக்தியாக புரிந்துக்கொண்டேன்.
இது எல்லாம் எப்படி நடக்கிறது என்று நம் அறிவுக்கு புரியாது. இதற்கெல்லாம் நாம் நம் consciousness -ஐ மட்டுமல்ல cosmic consciousness -ஐயும் தாண்டி வந்தால் தான் புரியும். பிரம்ம ஜீவியத்திற்குள் வர வேண்டும். அதை நாம் அறிவால் புரிந்துக் கொள்ள முடியாது. இவையெல்லாம் சூட்சம உலகம் என்பதால் சூட்சம, அறிவால் , உணர்வால் மட்டுமே புரிந்துக் கொள்ள முடியும்