என் வலைத்தளத்திற்கு 322 subscribers சந்தாதாரர்கள் உள்ளனர். சாராசரியாக ஒரு நாளைக்கு 11 பேர் பார்ப்பதாக google analytics சொல்கிறது. சாதாரண விளக்கங்கள் கொண்ட கட்டுரைகள் சராசரியாக 15 நிமிடங்கள் படிக்கப் படுகிறது . சற்றே தத்துவமாக உள்ளவை 3 அல்லது 5 நிமிடமே படிக்க படுகிறது. அதாவது தத்துவமான சில வரிகள் அதன் பிறகு உதாரணம் என்று இருந்தால் கூட அந்த கட்டுரைகளை விரைவில் கடந்து போய் விடுகிறார்கள். அன்னை சக்தி ஒரு செயல் படும் சக்தி , நம்மால் பயன் படுத்தி கொள்ள முடிந்த ஆற்றல் அது – என்ற அளவிலேயே நானே பேசுகிறேன் , எழுதுகிறேன். காரணம் நான் ஒன்றும் யோகம் செய்ய வரவில்லை. எத்தனையோ பித்தலாட்டங்கள் செய்தும் கிடைக்காத சந்தோசம் முன்னேற்றம் – அன்னை முறைகளை – கர்மயோகி சொன்ன வழியில் பின் பற்றியபோது கிடைத்தது. அவை அனைத்தும் பொதுவாக முன்னேறுபவர்கள் , முன்னேறியவர்கள் பின் பற்றியவையே. அதனால் இதை செய்தால் நிச்சய வெற்றி கிடைக்கும் கர்மயோகி – பூலோக சொர்க்கம், ஆத்மசோதனை முதல் பல புத்தகங்களில் சொன்ன ஏறத்தாழ இருநூறு வழிகளில் ( அதன் பின் இருபதாயிரம் சட்டங்கள் உள்ளது என்கிறார் – அவற்றை பற்றி லைப் டிவைன் கூடல்களில் உரையாடும் போது கூறி வருகிறேன்) இருபது வழிகளை – நானும் என் நண்பர்களும் செய்து பயன் பெற்ற இருபது வழிகளை வாரம் ஒன்றை பகிர்ந்து கொள்கிறேன்.
subscriber சந்தாதாரர்கள் களில் பெரும்பாலோர் கர்மயோகி பற்றி தெரிந்த – 40 வயது தாண்டியவர்கள். அன்னையை பற்றி இது வரை கேள்விப்பட்டவற்றை பற்றிய அப்பிராயங்களை – தவறு என்று தெரிந்தால் கூட விடமுடியாதவர்கள். அதை நமக்கு சொன்னவர்கள் அதை அவர்கள் பின்பற்றுவதில்லை என்று தெரிந்தும் கூட, அவர்கள் சேவை செய்வதாக போடும் வேஷங்களை நம்பி, சில பல தத்துவமான ஆன்மீக வார்த்தைகளை போட்டு பேசுதாலேயே, கர்மயோகியுடன் இருந்தார்கள் என்பதாலேயே அவர்களே சிறந்த அன்பர்கள் என்று இருப்பதால் நான் சோதனை செய்து ஆராய்ந்து கூறும் அன்னை முறைகளை அவர்களால் ஏற்று கொள்ள முடியவில்லை. ( நான் யாருக்கோ எதிரி என்று நினைத்து, அல்லது யாருடைய ஆணைப்படியோ unsubscribe செய்தவர்கள் 15 பேர்). ஆனால் 30 வயதிற்கு உட்பட்ட அடுத்த ஜெனரேஷன் 10 அல்லது 15 பேரே இருந்தால் கூட அவர்கள் கேட்கும் கேள்விகள் , காட்டும் ஆர்வம் என்னை அதிகம் ஊக்கப்படுத்துகிறது. குறைந்த காலத்தில் அவர்கள் பெற்ற முன்னேற்றம் ஆச்சரிய படுத்துகிறது.
அதனால் உங்கள் வீட்டில் உள்ள இளம் வயது பிள்ளைகள் (next generation ) – பண்புகள் மேல் நம்பிக்கைக் கொண்டு இருந்தால் அவர்கள் அதிகம் இந்த வலை தளத்திற்கு வந்து interact செய்தால் இன்னும் நன்றாக இருக்கும். அதனால் இந்த இருபது வழிகளில் நான் பெரும்பாலும் அன்னை, ஆன்மிகம் என்றெல்லாம் அதிகம் குறிப்பிட போவதில்லை. பக்தி, ஆன்மீக நம்பிக்கை இல்லாதவர்களும் இதை யார் செய்தலும் அன்னை அருள் தேடிவரும் என்ற நம்பிக்கையுடன் அடுத்த வாரம் முதல் தொடர்கிறேன்.
லைப் டிவைன் கருத்துகளை ஒட்டிய கட்டுரைகளும் – சொற்பொழிவுகள் (discussions ) என்னும் தலைப்பில் PDF பைல்ஸ் ஆக பதிவேற்ற இருக்கிறேன்.
உங்கள் கருத்துகளை விரிவாக rameshposts@gmail.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பினால் என்னை நான் செதுக்கி கொள்ள ஏதுவாக இருக்கும்.