Share on facebook
Share on telegram
Share on whatsapp

எதை இடைவிடாது உறுதியுடன் விரும்புகிறோமோ அதை சாதிக்க முடியும்-4-Final

சத்  ஒரு உறுதியால் உருவங்கள் அல்லது உலகத்தை படைத்தது அல்லது தானே உலகமாக மாறியது என்று எடுத்துக்கொண்டால், நம்முள்ளேயே அந்த சக்தி இருக்கிறது என்று பொருள். அதனால் எதையும் மாற்ற முடியும். இப்போது இந்த உயர் மனப்பான்மையை எடுத்துக்கொண்டால் நம் மனம், நம்பிக்கைகள், அனுபவங்கள், பாரபட்சம், சுக தேவைகள், முன் முடிவுகள், அபிப்ராயங்கள், தடையாக இருக்கிறது  என்று கூறுகிறோம்.  அதனால் அதை மாற்றினால் முன்னேறலாம் என்று கூறினால் மாற்ற முடியவில்லை என்கிறோம் . அவையெல்லாம் நம் நினைவுகளே. நம் அனுபவங்களே. அதன் வழியாக நம் மைக்கும் எதிர்பார்ப்புகள். அதை ஒட்டிய செயல்களே. அது வெளிப்படுத்தும் ஆற்றலின் உருவகங்களே.

அதாவது நாம் ஒரு செயலில் வெளிப்படுத்தும் அனைத்து சக்தியும் forms of energy என்று புரிந்தால் நாம் அதன் psychological form -ஆக மாறி விட்டோம் , அதையே நம் சுபாவம் என்று நினைக்கிறோம் என்பது புரியும். அப்போது நாம் நம் நாமறிந்த வரையரயுள் செயல் படும் நிலைக்கு நம்மை நாமே உட்படுத்தி கோள்கிறோம்.

ஆனால் அன்னையை நம்பும் நாம் spiritual form -ஆக அவர் நம்முள் இருக்கிறார். form of infinite energy -ஆக இருக்கிறார் என்பதை நாம் நம்ப கடினமாக இருக்கிறது. அவர் சொன்னவை அவர் அனுபவங்கள், இறை உண்மைகள் என்பது நமக்கு தோன்றுவதில்லை. நம் அனுபவங்களின் சாரங்களை வைத்து நாம் வளர்வதாக அல்லது maturity பெற்று விட்டதாக, அல்லது knowledge இருப்பதாக நினைக்கிறோம்.  ஆனால் அதையும் நன்றாக ஆராய்ந்து பார்த்தால் , அது உண்மையில் நாம் கற்றுக் கொண்ட பாடங்களின், பட்ட அடிகளின்  பண்புகளின் சாரமாகவே இருக்கும்.  அந்த சாரத்தின் ஞானமே நம் வாழ்வில் முன்னேற்றமாக இருக்கிறது.  அது போல சித்தத்தில் முன்னேற்றம் நம் personloity -இந்த முன்னேற்றமாக இருக்கும்.  The degree of consciousness is degree of evolution. துணை மனிதன்னக மட்டுமல்ல நாம் சார்ந்த எதிலும் அதை கொணர தயாராக இருக்க வேண்டும்.

அதற்கு பரநலத்தை அடிப்படையாகக் கொண்ட பொது ஸ்தாபனங்கள் (company, institution, society) ஆகியவை அதற்குப் பதிலாக எழ வேண்டும். அவை பண்புகளின் அடிப்படியில் நடந்தால் உலகம் மாறும் என்பது கர்மயோகியின்  விருப்பம்.  அதற்கும் உதாரணமாக அவர் கூறுவது முடியாட்சி குறையத் தொடங்கியபின்  ராஜா விற்கு வேலையில்லை என்பதுபோல் இன்று மாறியவை ஆயிரம். உலகம் ஒரு கிராமம் என்று நெருங்கிய பிறகு  ராணுவத்தின் பலம் நாட்டின் பலம் என்று இருந்தது போய்  ராணுவ செலவை , ஆயுதங்களை குறைப்பது பற்றி பேசுகிறார்கள். பல நாடு பணம் என்பது ஒரே பணமாக credit card ஆக  மாறி  கிரிப்டோ currency யாக மாறுகிறது. உள்ளூர் மார்க்கெட் என்பது உலக மார்க்கெட் ஆகிறது. ஒவ்வொரு புதியது  வரும்போதும் அதன் முந்தய நிலை அழிகிறது. அதுபோல பண்புகள் அதிகரிக்கும்போது அதை நம்மில் மட்டுமே வெளிப்படுத்தாமல் – சற்றே பரந்த இடத்தில , வேளையில், தொழிலில் வெளிப்படுத்தினால்  இறை விருப்பம் திருவுள்ளம்  நிறைவேறுவதை தடுக்கும் அனைத்தும் தானே அழிந்து விடும் என்கிறார்.

காரணம் நம் சமூகம். சமூகம் எனபது  நம் குடும்பம், உறவுகள் என்பதிலிருந்து நம் ஊர் வரை என்பதையும் தாண்டி ,  நாட்டின் எல்லைவரை விரிவைடைந்து விட்டது.   எதிர்காலச் சமூகம் நாட்டின் எல்லையைக் கடந்து உலகம் முழுவதும் பரவ வேண்டும் என்பது கர்மயோகியின் ஆசை. உலகச் சமுதாயத்திற்கு இன்றைய அடிக்கல் (unit) , குடும்பம்,அதன் முன்னேற்றம் , அதற்கான  வருமான தரும் வேலை உதவாது. தனிமனித சுயநலம் குடும்பத்தின் பரநலமாக மாறியது. அதுவும் ஒரு குடும்பத்தின் சுயநலமே.  அதன் விரிவு கடினம்.

அதைத்தாண்டிய அடிப்படை,  மனிதனுக்கு இப்போது தேவை. அது தான் company , institutions , சொசைட்டி, அதன் கொள்கை அகந்தையை மட்டுமே அடிப்படியாக இருக்க முடியாது. வியாபாரம் சுயநலம் போல தோன்றினாலும் அது ஏதோ ஒரு வகையில் பிறர் நலம் பார்க்கிறது. end user நலம், consumer நலம்,  customer நலம் பறக்காமல் எந்த விபரியலுமிருக்க முடியாது.   அது போன்றவை இன்றெழுந்துள்ள சமூக ஸ்தாபனங்களான கம்பனி, சொசைட்டி போன்றவை. அவற்றுள் அகந்தை வளர சந்தர்ப்பமில்லை. நூறு அல்லது  ஆயிரம் பேர்  கொண்ட இந்நிறுவனங்கள் 8 பேர் 10 பேர் கொண்ட குடும்பத்தை விட 1000 மடங்கு பெரியது. பெரியது என்பதால் பெரிய சமுதாயமான மனித குலத்திற்கு இவை அடிக்கல்லாக அமையும். அகந்தை வளரும் நிலை இவற்றுள் இல்லை என்பதும் முக்கியம். அகந்தை அழிந்த நிலையில் வேலை மட்டுமே இருக்கும். தான் எனும் முனைப்போ, தன் குடும்பம் என்ற மனநிலையோ இல்லாமல், கடமையைச் செய்யும் சூழ்நிலை இருக்கும்.

வேலை பெருகும்போது , வருமானம் பெருகும்போது நம் மன நிலையும்   மாற வேண்டும்,  உயர வேண்டும். நம் உயர்வை காட்ட உயர் மனப்பான்மையை வெளிப்படுத்த  இனிக் குடும்பம் அடிப்படையாக இருக்க முடியாது. அதைவிடப் பெரிய அடிப்படை வேண்டும். அதுவே இனி எதிர்காலத்திற்குரிய இலட்சியமாக இருக்க வேண்டும். நம் ஆன்மா வளர வேண்டும். நாட்டின் ஆன்மா வளர வேண்டும். Universal soul பிரபஞ்சத்தின் ஆன்மா வளர வேண்டும். அதனால் பழைய அடிப்படையான குறுகிய மனாநிலையான – தான், தன் குடும்பம் அதன் முன்னேற்றம் என்று இருப்பது இனிப் பயன்படாது. நாம் வேலை செய்யுமிடம், நம் சும்பனி, அது தறிக்கும் பொருட்கள், அதை உபயோகப்படுத்துபவர்,   குடியிருக்குமிடம் – neighbourhood – கம்யூனியட்ty – சமுதாயம் குடும்பத்திற்குப் பதிலாக நமக்கு முக்கியமாக வேண்டும். அதற்கே எதிர்காலமுண்டு. அந்த மனநிலைக்கே வளர்ச்சி உண்டு.

இவைஅனைத்திலும் முன்னோடி பெற்ற  பலன் அதிகம். அவர்களால் உலகம் பெற்ற  பயன் அதிகம் என்பதால் முதலில் விழிப்பாக இதை பெறுபவர் தனக்கும் உலகத்திற்கும் சேவை செய்பவர்.

மனம் பிரபஞ்சத்தின் அளவு விரிவடையும் போது  சத்திய ஜீவன் பிறக்கிறான். அப்போது பிரபஞ்சத்தின் குரல் எண்ணம் அனைத்தும் கேட்கும் என்கிறார். எங்கிருந்தோ அழைத்த சாதகர்,  மரம், பாம்பு , பேப்பர் , என்று இவற்றின் குரலையும் கேட்டு திரும்பி பார் அன்னை என்று சொல்லப் படுபவை அதற்கு உதாரணம். அதற்கு விளக்கமாக கர்மயோகி  சொல்வது எனக்கு மிகவும் பிடிக்கும். சத்திய ஜீவன் பிறந்தால் அவனுடலில் ஜீரண உறுப்புகள், இதயம், நுரையீரல் போன்றவையிருக்காது . காரணம் எதுவும்  தனி மனிதனுக்கு சேவை செய்யும் நிலையில் இருக்காது. அதற்குப் பதிலாக அவ்வுறுப்புகட்குரிய சூட்சுமச் சக்கரங்கள் – subtle centres – வேலை செய்யும் என்கிறார். அது அளிப்பது உலகின் குறியீடாக இருக்கும் என்கிறார். என்ன மாதிரியான நிலைகளை இவை. நினைக்கவே புல்லரிக்கிறது.  நெஞ்சம் நெகிழ்கிறது. நமக்காக அன்னையும் பகவானும் எத்தகைய தியாகங்களை செய்து இருக்கிறார்கள் என்று புரிகிறது.

இவையெல்லாம் தெரிந்தாலும் நாம் செய்ய முடியாததற்கு காரணம் நம் வாழ்க்கை முறை.  நம் வாழ்வு என்பது உடலின் உணர்ச்சியை மனதின் எண்ணமாக மாற்றி உடலை மனதின் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வருவது.  நம் வாழ்க்கை முறையே உடலுக்கு மனதைப் பெற்றுத் தரும் வாழ்க்கை முறையாகிவிட்டது.  அறிவுக்கு தெரிந்ததெல்லாம் செய்தால் முன்னேறி விடலாம் என்று தெரிந்தால் கூட உணர்வோ, உடலோ, அதைச் செய்வதில்லை . நமக்கு தெரிந்த அதிகபட்ச அறிவிலிருந்துக் கூட நாம் செயல்படுவதில்லை. நமக்கு அதிகபட்ச அறிவு இருக்கிறது என்பது எப்போது தெரிய வரும் என்றால் நம் பிரச்சனை போன்று பிரச்சனை இருப்பவர்கள் நம்மிடம் ஆலோசனை கேட்க வரும் போது அந்த பிரச்சனைக்கு நாம் சொல்லும் தீர்வுகள் நமக்கு எந்த அளவிற்கு தெரியும் ஆனால் செய்வதில்லை என்பது புரியும்.  அதனால் உடலுக்கு மனதைப் பெற்றுத் தரும் வாழ்விலிருந்து, உடல் உணர்வு அறிவு ஆகியவற்றிக்கு ஆன்மாவைப் பெற்றுத் தரும் வாழ்வாக மாறினால் அங்கு இத்தகைய, அகங்காரத்திற்கு, அகந்தைக்கு அறியாமைக்கு வேலை இருக்காது.

எல்லோரும் வாழ்வில் ஒரு கட்டத்தில் உணர்வுகள், புலன்கள், அறிந்தவை அனைத்தும் நிலையற்றவை.  தீர ஆராய்ந்ததே மெய் என்ற நிலைக்கே வருகிறோம்.  அதை முதலிலேயே எடுத்துக்கொள்வது காலத்தை சுறுக்குவது .  Technology முதல் சமுதாயம் வரை அதையே அறிவுறுத்துகிறது.  அகந்தையின் பலம், இயக்கம் குறைந்துக் கொண்டே இருக்கிறது.  மறையப் போகிறது. அதை நாமே பெறுவது அருளைப் பெறுவது.  Mental energy -ஐ பண்புகளிடம் சேர்த்து அகந்தைக்கு energy இல்லாமல் செய்வது அருளைப் பெறும் ஒரு முறை என்று கர்மயோகி  கூறுகிறார்.

இதற்கெல்லாம் அடிப்படை ஒரு உறுதி. நாம்  நம் உயர்ந்த இறை நோக்கமான பரிணாமத்தை, அதன் பண்புகளை மட்டும் ஏற்றுக் கொள்வேன் என்னும் உறுதி, அது தரும் ஆர்வம், அது தரும் energy , இவைகளே சாதிக்கும் எனலாம்.  இதுவே வாழ்வும் ஆன்மீகமும்  இணையும் இடம் என்கிறார்.  அது நம்மை பொறுத்த வரை Life revealing spirit , spirit revealing life என்று நம் மனப்பான்மை உயர்வதைப் பொறுத்தது. 

அன்னை அன்பர்களுக்கு – அன்னை விரும்பும் பண்புகளின் படி வாழ்வதும், அதன் மூலம் வரும்  சுபிட்சத்தை அனுபவிப்பதுமே வாழ்வில் அனைத்தையும் சாதிக்கும். 

Author Info
Ramesh Kumar

Ramesh Kumar

SHARE
Share on facebook
Share on telegram
Share on whatsapp

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 5

இதுவரை சொன்னவை அனைத்தும்   “உயர்ந்தவை நிர்ணயிக்கின்றன. அவை நிறைவேற தாழ்ந்தவை உதவுகின்றன” – என்னும் லைப் டிவைனின் ஒரு  கருத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு தலைப்பில் இருந்து விலகிச் செல்லாமல் எழுத வேண்டும் என்று

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 4

இதுவரை நாம் பேசியதை Life Divine – கருத்துகளில் பொருத்தி பார்க்கும் போது – முன்னேறும் பாதையின் நன்கு  நிலைகளை.  – மனித வாழ்வு, யோக வாழ்வு, தெய்வீக வாழ்வு என்று மூன்று பகுதிகளாகப்

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை  – 3

அதற்கு பதிலாக ஒரு பண்பை எடுத்துக் கொண்டு, அதன் பார்வையில் நம் முடிவை organise செய்ய முடிந்தால், அது நம் அனைத்து  முடிவுகளுக்குக்  காரணமாக அமைந்தால், அது படைப்பாற்றல் மிக்கதாக இருக்கும்.  உதாரணமாக முன்

Read More »

More Articles

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 5

இதுவரை சொன்னவை அனைத்தும்   “உயர்ந்தவை நிர்ணயிக்கின்றன. அவை நிறைவேற தாழ்ந்தவை உதவுகின்றன” – என்னும் லைப் டிவைனின் ஒரு  கருத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு தலைப்பில் இருந்து விலகிச் செல்லாமல் எழுத வேண்டும் என்று

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 4

இதுவரை நாம் பேசியதை Life Divine – கருத்துகளில் பொருத்தி பார்க்கும் போது – முன்னேறும் பாதையின் நன்கு  நிலைகளை.  – மனித வாழ்வு, யோக வாழ்வு, தெய்வீக வாழ்வு என்று மூன்று பகுதிகளாகப்

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை  – 3

அதற்கு பதிலாக ஒரு பண்பை எடுத்துக் கொண்டு, அதன் பார்வையில் நம் முடிவை organise செய்ய முடிந்தால், அது நம் அனைத்து  முடிவுகளுக்குக்  காரணமாக அமைந்தால், அது படைப்பாற்றல் மிக்கதாக இருக்கும்.  உதாரணமாக முன்

Read More »