Share on facebook
Share on telegram
Share on whatsapp

சமர்ப்பணம் – பெரிய காரியம்-2

பெரிய காரியம் தரும் energy  என்றும் இதைப் பார்க்கலாம். உதரணமாக தாழ்ந்த  மனப்பான்மை அன்னையை  விலக்கும் . தாழ்ந்த  மனப்பான்மை பெரிய மனப்பான்மையானால் நம் வாழ்வு அன்னை வாழ்வாகும்.  மனம் பெரியதாகி நோக்கம் பெரியதாகி லட்சியம் பெரியதாவது பெரிய காரியம். அதற்கான  சிந்தனைக்கு எனர்ஜி ஐ  கொடுத்து, அகந்தைக்கு எனர்ஜி இல்லாமல் செய்வது -பெரிய காரியம் . அதுவே சமர்ப்பணம்.  அதற்கு பல உதாரணம் சொல்லலாம் என்றாலும், நாம் செய்யும் சமர்பணத்திலும் அது வருகிறது என்பதால் அந்த உதாரணத்தை எடுத்து கொள்கிறேன்.

அன்னைக்கு  பரிணாமத்தில் வளர்வது முக்கியம். மனப்பான்மையை உயர்த்துவது என்பது அதன் குறைந்த  பட்சம். ஆனால்  நாம் ஒரு பிரச்னையில், சமர்ப்பணம் செய்கிறேன் என்று அந்த பிரச்சனை நினைவுக்கு வரும்போதெல்லாம் அன்னையை  நினைக்கிறோம். நம் பக்தியால் சில நேரம் அது நடக்கலாம். நடக்காத போது நம் இயலாமையை ஏதோ ஒரு விதத்தில் ஏற்று கொள்கிறோம். இரண்டிலும் அந்த பிரச்சினை வந்த காரணம் அதற்கான எனெர்ஜி தேக்கமாக (dormant) நின்று விடுகிறது. கர்மயோகி சொல்வது சமர்ப்பணமான பிரச்சினை திரும்ப  வர கூடாது என்பது. ஆனால் பல முறை திரும்ப வருகிறது. மீண்டும் அன்னையிடம் ஓடுகிறோம். நம் முயற்சி எதுவும் இல்லாமல் பிரச்சினை தீர்வது நமக்கு சௌகரியமாக இருக்கிறது.  ஆனால்

அதன் மூலம் ஒரு உண்மையை அறிவதில் இருந்து விலகுகிறோம். 

அன்னையின் வேலை நாம் கேட்பதை எல்லாம் தருவதல்ல. அவருக்கு தேவை திருஉருமாற்றம். ஒரு பிரச்சினையை  அன்னையிடம்  சொன்னபிறகும்,  சமர்ப்பணம் ஆனதாக  சொன்னாலும், ஒரு சிறு இடைவெளியில்  சமர்ப்பணம் தவறும்போது கவனித்தால் அந்த தருணத்தில் நாம் மீண்டும் வலி, துன்பம், கவலை, பதட்டம், எதிர்பார்ப்பு மீண்டும் வருவதை காணலாம்.  அல்லது பொறாமை, பச்சாதாபம், கர்வம் , ஆணவம் என்று எதுவாக வேண்டுமானாலும் வரும்.காரணம் அவற்றுக்கான எனெர்ஜி  அங்கேயே இருக்கிறது. அதை நாம் அன்னை என்ற பெயரில், பெரிய  போர்வை  போட்டு மூடுவது போல மூடுகிறோம்.   

அதற்கு பதிலாக சமர்ப்பணம் செய்தாலும் இந்த பிரச்சினை ஏதோ ஒரு வகையில் நான் காரணமாக இல்லாமல் வந்து இருக்காது என்று சிந்திக்க ஆரம்பித்து அதில் நம் எனெர்ஜி ஐ செலவு செய்து முடிந்த வரை  அதை கண்டு பிடித்து ( அது தவறாக கூட இருக்கலாம் பரவாயில்லை) அதற்கு எதிரான அன்னைக்கு பிடித்த ஒன்றை அறிவில், உணர்வில் -மனநிலை , திறமை, செம்மை – என்று ஏற்றுக்கொண்டால் நம் low consciousness ஆல்  தேங்கிய  , மூடி வைக்கப் பட்ட எனெர்ஜி higher consciousness கு செலவாகும் . அப்போது நம் அகந்தையின் வடிவங்களுக்கு அதைப்பற்றிய சிந்தனைகளுக்கு எனர்ஜி இருக்காது. அந்த பிரச்சினை மீண்டும் வாழ்வில் வராது.

கடந்த கால சமர்ப்பணம் என்பதும் இதை ஒட்டியதே. நாம் எந்த அளவிற்கு  தீவிரத்தோடு அகந்தையின் வடிவங்களைக்கொண்டு தவறு செய்தோமோ அதே தீவிரத்தோடு ஆன்மாவின்  பண்புகளைக் கொண்டு வெளியே வர வேண்டும். அல்லது அதே உணர்வுக்கு  இணையாக அதிலிருந்து வெளியே நம் பிரார்த்தனை  இருக்க வேண்டும். (relive the sensitivity and intensity of the blunder made). அப்போது தான் அருளைப்பெறும் எனெர்ஜி / ரிசெப்ட்டிவிட்டி அதிகமாக இருக்கும்.

Author Info
Ramesh Kumar

Ramesh Kumar

SHARE
Share on facebook
Share on telegram
Share on whatsapp

TOKEN ACT TO THY WILL – 5

இப்போது முதல் TOKEN ACT ஐ  எடுத்துக் கொள்ள அடிப்படையான மனப்பான்மைகளை விளக்க நினைக்கிறேன். இது SPIRITUAL OPULENCE இல் உள்ள PREPARATION TO TOKEN ACT மற்றும் அது தொடர்பான கட்டுரைகள், மற்றும்

Read More »

TOKEN ACT TO THY WILL – 3

கர்மயோகி அவர்கள்  ஒரு  “Daily Message “-இல் Seek life for expressing the Spirit. Do not seek Spirit to enrich our life. என்று கூறி இருப்பார். அதுவே நம்

Read More »

More Articles

TOKEN ACT TO THY WILL – 5

இப்போது முதல் TOKEN ACT ஐ  எடுத்துக் கொள்ள அடிப்படையான மனப்பான்மைகளை விளக்க நினைக்கிறேன். இது SPIRITUAL OPULENCE இல் உள்ள PREPARATION TO TOKEN ACT மற்றும் அது தொடர்பான கட்டுரைகள், மற்றும்

Read More »

TOKEN ACT TO THY WILL – 3

கர்மயோகி அவர்கள்  ஒரு  “Daily Message “-இல் Seek life for expressing the Spirit. Do not seek Spirit to enrich our life. என்று கூறி இருப்பார். அதுவே நம்

Read More »