அடுத்தது இவற்றிலிருந்து விடுபடுவது எப்படி என்று சிந்திப்பது. அப்படி சிந்திக்கும் போதுதான் அது நற்பண்புகளுக்குக் கொண்டு செல்லும். அது Higher Consciousness உயர் சித்தத்தின் பண்புகளாக இருக்கும். அதை வாழ்வில் வெளிப்படுத்துவது expression of consciousness in life. வாழ்வில் ஆன்மீக பண்புகளை வெளிப்படுத்தும் போது வாழ்வே யோகமாக மாறுகிறது. யோகிகளுக்கான ஞானம் நமக்கு கிடைக்கின்றது. குறைந்தபட்சம் அது நல்லெண்ணம், பிறர் நிலை பார்வை, பரநலம், பற்றறுத்தல், எதிர்பார்ப்பு இல்லாமல் இருத்தல் என்ற நிலையில் இருந்தாலே பல்வகை ஞானமும் நமக்குப் பிடிபடும். இப்போது நாம் இந்த ஞானத்தையொட்டி நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்வது என்பது நம் உள்ளே, வெளியே – அகம், புறம் இரண்டுக்கும் ஒரு reconciliation – இணக்கத்தீர்வு ஏற்படுத்துவது. அப்போது நமக்கு புரிவது என்னவென்றால் எந்த தவறையும் அதற்கு எதிரான நல்லதாக மாற்ற முடியும். வெளியில் மட்டுமல்ல, உணர்வில் கூட எந்த தவறான உணர்வையும் அதற்கு எதிரானதாக மாற்ற முடிந்த சக்தி நம்முள் மட்டுமே உள்ளது என்பது புரியும்.
திறமையின்மையை திறமையாக மாற்றுவதோ, அறியாமையை அறிவாக மாற்றுவதோ சோம்பலை, சுறுசுறுப்பாக மாற்றுவதோ, எரிச்சலை அன்பாக மாற்றுவதோ எல்லாமே நம் consciousness – சித்தத்தில் இல் அதன் புரிதலில் மட்டுமே உள்ளது என்று புரிவது எல்லா அறியாமையையும் அறிவாக ஞானமாக மற்றும். அதே போல இதை ஒரு பழக்கமாக மாற்றும் போது எந்த தடையான பழக்கத்தையும் habits , நடத்தை – behavior ஐயும் , நம் புரிதல் சரியாக இருந்தால், தவற்றை நாமே மாற்ற முடியும் என்பது புரியும். நடிப்புக்காக ஒரு நல்லதைச் செய்தாலும் நாளடைவில் நம் மனம் உடல் உணர்வில் அதை ஏற்றுக் கொள்ளும். அதற்கு கர்மயோகி உதாரணமாகச் சொல்வது – நாடகத்தில் சிவாஜி வேடம் அல்லது போலீஸ் வேடம் போடுபவன் சில நாட்களில் நடிக்காத போதுக்கூட அதே விரைப்புடன் இருப்பான் என்கிறார்.
புற நிகழ்ச்சிகள் நம் சுபாவத்தைக் காண நம்மை நிர்பந்தம் செய்கின்றன. நாமே அதைச் செய்யாதபோது வாழ்வு ஒரு பிரச்சினை, துன்பம் மூலம் நம் கவனத்தை ஈர்க்கிறது. துன்பங்களில் இருந்து விடுபட்டு நாம் உண்மையில் ஆனந்தம் அடையும் ஒரு சுபாவத்தை ஏற்கச் செய்கிறது. ஒரு நல்ல மனப்பான்மையை , நல்ல குணத்தை ஏற்கும் போது புற நிகழ்ச்சிகள் மாறுகிறது. நல்ல உயந்த மனப்பான்மை அத்தனையும் இறைவனின் பண்புகள். இறைவன் உள்ளேயிருக்கிறான். நம் சுபாவம் அவன் வெளிப்படுவதை அனுமதிக்கவில்லை. வாழ்வில் நடக்கும் அத்தனை விஷயங்களையும் இறைவன் தன்னை வெளிப்படுத்தும் செயல்களாகப் பார்த்தால் நம் சித்தம், உயர் சித்தம் ஆகியவை புரியும். நம் வாழ்க்கை ஏன் இப்படி இருக்கிறது என்பதும் புரியும்.
இது நம் consciousness -ஐ வளர்க்கும் விதம். இப்படி consciousness வெளியே வரும் process புரிந்தால் நமக்கு அனைத்தை பற்றிய ஞானம் கிடைக்கும். வாழ்வு தெய்வீக வாழ்வாக இருக்கும்.
ஏறத்தாழ A 4 காகிதத்தில் 20 அல்லது 21 பங்கங்கள் வரும் அளவிற்கான கட்டுரை இது. பொதுவாக மொபைல் போன்-இல் ஐந்து நிமிடங்களுக்குள் படிக்கும் அளவிற்கே நான் இதுவரை எழுதி வந்தேன். காரணம் அதற்கு மேல் அன்பர்களுக்கு பொறுமை இருக்காது என்ற எண்ணம். ஆனால் இந்த நீண்ட கட்டுரைக்கு வந்த வரவேற்பு என்னை மேலும் எழுத தூண்டுகிறது.
இது பற்றிய உங்கள் கருத்துகளை – நான் மேலும் பண்பட தேவையான உங்கள் அறிவுரைகளை rameshposts@gmail.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பவும். அல்லது 80144 22222 என்னும் எண்ணுக்கு WhatsApp , Telegram மூலமும் அனுப்பலாம்.