Share on facebook
Share on telegram
Share on whatsapp

தவறு முன்னேற்றத்திற்கான வழிகாட்டி -6

முதல் process  – தவறு, முயற்சி ஆகி, அது அனுபவம் ஆகி, அனுபவம் அறிவு ஆகி, இந்த நான்கின் சாரமும் புத்தி என்று ஆக வேண்டும்.

நமக்கு தவறு, குறை, தோல்வி என்று தெரிந்த ஒன்றை மீண்டும் அதே போலவே விடாமுயற்சி என்ற பெயரில் செய்வோம்.  விடாமுயற்சி என்பது முன்பு செய்த தவறுகளை செய்யாமல் அதற்கு எதிரான சரியானவற்றைச் செய்வது. அதுவே முயற்சி. அந்த முயற்சி எது சரி, எது தவறு என்று தெரிந்துக் கொள்ளும் அனுபவமாக மாறுகிறது.  அந்த அனுபவம்,  ஒரு செயலில் ஒரு அனுபவத்தில், ஒரு நிகழ்வில், ஒரு சூழலுக்கான அறிவைத்தருகிறது.  ஆனால் இந்த அனுபவங்கள் சாரமாக புரிந்தால், ஒன்றின் அனுபவம் மற்றொன்றில் உபயோகப் படுத்தினால் அது புத்தி என்றாகிறது. 

ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் வியாபாரத்தில் ஏற்படும் நஷ்டத்தை நஷ்டம் என்று சொல்லாமல் புத்தி கொள்முதல் என்பார்கள்.  இதுவே, தவறு அறிவின் சாரமாக புத்தியாக, விவேகமாக, ஞானமாக மாறும் ஒரு அடிப்படை வழி.  இதை செயலில் மட்டுமல்ல, உணர்விலும் செய்யலாம்.  எரிச்சல் என்பதை தவறு என நினைத்தால் அதிலிருந்து அறிவைப் பெற நினைத்தால் அது எரிச்சல், இதம், இங்கிதம், பதம், பக்குவம் என்று அடுத்து அடுத்து மாறி எரிச்சலைப் பற்றிய முழுமையான ஞானமாக மாறும். இந்த process,  எல்லாமே mind இன் process என்றாலும் consciousness கு தேவையான insight , intuition கு செல்ல இது அடிப்படை. insight க் கு செல்லும்  முறை புரிய sherlock homes ஐ படித்தால் புரியும்,   intuition க் கு செல்லும்  முறை புரிய கணித மேதை ராமானுஜரை  பற்றி  படித்தால் புரியும் என்று கர்மயோகி கூறுகிறார். முடிந்தவர்கள் படித்து பார்க்கலாம்.

அதே போல consciousness எல்லாவற்றையும் தெளிவுப் படுத்தும் என்னும் கருத்து முதல் நிலையில் புரியவில்லை என்றால் அதற்கான process ஐப் பார்த்தால் புரியும்.  அதற்கு முதலில் அறியாததிலிருந்து , அறியாமையில் இருந்து அறிவிற்கு செல்லும் ஆர்வம் வேண்டும்.  வாழ்க்கை அந்த consciousness ன் ஒரு வெளிப்பாடு தான் என்பதை நம்ப வேண்டும்.  அது இருந்தால் தான் consciousness ஐ நாம் பின் தொடர முடியும்.  அது அளிக்கும் ஞானத்தைப் பெற முடியும். அதற்கு முதல் படி consciousness எப்படி செயல்படுகிறது என்று புரிவது.  அதற்கு நமக்கும் வாழ்க்கைக்கும் இருக்கும் தொடர்பு புரிய வேண்டும்.  அது புரிவதற்காக outer -inner – வெளியே, உள்ளே என்று எடுத்துக்கொள்ளலாம்.  இப்படி சொன்னவுடன் inner -outer correspondence என்ற பெயரில் கொரோனா முதல் உக்கிரைன்  போர்  வரை தான்  எப்படி காரணமானோம் என்று விளக்கியவர்கள் உண்டு. அது ஞானிகளுக்கு.

ஆனால் என்னை போல சராசரி மனிதர்கள் – அதன் முதல் நிலையை கூட  பார்ப்பதில்லை என்பதே உண்மை. நாம் வழக்கமாக எடுத்துக்கொள்ளும் முறையில் இல்லாமல் வெளியே என்பதை, மக்கள், வேலை, பொருட்கள், சூழ்நிலைகள் என்று எடுத்துக் கொள்வோம்.  உள்ளே என்பதை நம் அறிவு, அபிப்ராயங்கள் opinion, prejudice , அனுபவங்கள், மனப்பான்மை, ஆகியவற்றை எடுத்துக் கொள்வோம்.  இந்த தெரிந்த விஷயங்களில்  வைத்துப் பார்த்தாலே உள்ளே உள்ள விஷயங்கள் எப்படி வெளியே உள்ளவற்றை பாதிக்கின்றன, அல்லது வெளியே உள்ள விஷயங்கள் உள்ளே எப்படி பாதிக்கின்றன எனப் புரியும். 

உதாரணமாக உள்ளே மனநிலை சரியில்லை என்றால் வெளியே வேலை பாதிகின்றது , வெளியே வேலை சரியாக வரவில்லையென்றால் மனநிலை பாதிக்கிறது. வெளியே லாபம், பொருள், வசதிகள் நம்முள்ளே லட்சியத்தை நிர்ணயிக்கிறது அல்லது நம்முள் உள்ள லட்சியம் வெளியே லாபம், பொருள், வசதிகளை நிர்ணயிக்கிறது . உள்ளே உள்ள பண்பு வெளியே அவற்றை பெரும் முறையை நிர்ணயிக்கிறது. அல்லது வெளியே உள்ளவற்றின் ஈர்ப்பு உள்ளே அதற்கான  பண்பை நிர்ணயிக்கிறது.

இரண்டுக்கும் உள்ள தொடர்பை ஆராயும் போது நம் திறமை குறைவு, அறிவு குறைவு என்பது உள்ளேயும், அது வெளியே, செயல்,  சூழல், பயன், விளைவு ஆகியவற்றில் ஏற்படும் குறை  தவறு புரியும் போது  ஒரு இணக்கத்தீர்வு consciousness க்கு புலப்படும்.  consciousness  இதற்குத் தேவையான ஆர்வம் என்ற சாரத்தைப் புரிய வைக்கும் போது  ஒரு விஷயத்தில் மட்டுமல்ல பல விஷயங்களில் ஞானம் கிடைக்கிறது.

அடுத்து இந்த மாதிரியான ஆராய்ச்சிக்குத்  தடையாக இருக்கும் நம் அகந்தையின் வடிவங்களைக் கண்டு கொள்வது. இயலாமை, பொறாமை, பேராசை, சுயநலம், கெட்ட எண்ணம், போன்றவை இருப்பது, நாம் செய்வதே சரி என்று நினைப்பது. தற்பெருமை ,ஆணவம் போன்றவற்றை கண்டுகொள்வது. இவை அனைத்தும் வெளியே உள்ளவற்றிக்கு காரணம் வெளியே மட்டுமே தேடும்.  தன் அறிவின் குறையை உணர்வின் குறையை ஏற்றுக்கொள்ளாமல், வெளியே, சூழலில், மக்களில், பொருளில், செயலில் மட்டுமே தேடி குறைக்கான தீர்வை பிறர் செய்ய வேண்டும் என்றே எதிர்பார்க்கும்.

Author Info
Ramesh Kumar

Ramesh Kumar

SHARE
Share on facebook
Share on telegram
Share on whatsapp

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 5

இதுவரை சொன்னவை அனைத்தும்   “உயர்ந்தவை நிர்ணயிக்கின்றன. அவை நிறைவேற தாழ்ந்தவை உதவுகின்றன” – என்னும் லைப் டிவைனின் ஒரு  கருத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு தலைப்பில் இருந்து விலகிச் செல்லாமல் எழுத வேண்டும் என்று

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 4

இதுவரை நாம் பேசியதை Life Divine – கருத்துகளில் பொருத்தி பார்க்கும் போது – முன்னேறும் பாதையின் நன்கு  நிலைகளை.  – மனித வாழ்வு, யோக வாழ்வு, தெய்வீக வாழ்வு என்று மூன்று பகுதிகளாகப்

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை  – 3

அதற்கு பதிலாக ஒரு பண்பை எடுத்துக் கொண்டு, அதன் பார்வையில் நம் முடிவை organise செய்ய முடிந்தால், அது நம் அனைத்து  முடிவுகளுக்குக்  காரணமாக அமைந்தால், அது படைப்பாற்றல் மிக்கதாக இருக்கும்.  உதாரணமாக முன்

Read More »

More Articles

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 5

இதுவரை சொன்னவை அனைத்தும்   “உயர்ந்தவை நிர்ணயிக்கின்றன. அவை நிறைவேற தாழ்ந்தவை உதவுகின்றன” – என்னும் லைப் டிவைனின் ஒரு  கருத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு தலைப்பில் இருந்து விலகிச் செல்லாமல் எழுத வேண்டும் என்று

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 4

இதுவரை நாம் பேசியதை Life Divine – கருத்துகளில் பொருத்தி பார்க்கும் போது – முன்னேறும் பாதையின் நன்கு  நிலைகளை.  – மனித வாழ்வு, யோக வாழ்வு, தெய்வீக வாழ்வு என்று மூன்று பகுதிகளாகப்

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை  – 3

அதற்கு பதிலாக ஒரு பண்பை எடுத்துக் கொண்டு, அதன் பார்வையில் நம் முடிவை organise செய்ய முடிந்தால், அது நம் அனைத்து  முடிவுகளுக்குக்  காரணமாக அமைந்தால், அது படைப்பாற்றல் மிக்கதாக இருக்கும்.  உதாரணமாக முன்

Read More »