Share on facebook
Share on telegram
Share on whatsapp

தவறு முன்னேற்றத்திற்கான வழிகாட்டி -5

உதாரணமாக இப்போது நீங்கள் நினைக்காத ஒன்றை செய்ய முடியும், நீங்கள் இதுவரை செய்யாததை செய்ய முடியும், சாதிக்கமுடியும் என்று நான் சொன்னால் – உடனே வரும் கேள்வி எப்படி முடியும் என்பது தான்.  காரணம் கடந்த காலத்தில் அதை செய்யாததால். அதையே வேறு விதமாக பார்த்தால், நான் இது வரை செய்ததில்லை, அதனால் செய்ய மாட்டேன் என்றோ, இதுவரை எனக்கு நடக்கவில்லை, அதனால் இனி நடக்காது என்றோ மனம் வரையறை  வைத்து கொண்டு பிடிவாதமாக இருப்பது தெரியும்.  கடந்த காலத்தை அடிப்படையாக வைத்து அத்தனை எதிர்கால விஷயத்திற்கும் ஒரு வரையறை வைத்திருக்கிறோம். எதிர்பார்ப்புகளும் அதை ஒட்டியே இருக்கும்.

தெரியாதது தெரியாததாகவும், அறியாதது அறியாததாகவே போவதும் நாம் அறியாமையை தேர்ந்தெடுக்கும் போது மட்டுமே.  அதை விட்டு வெளியே வந்து பண்புகளின் பார்வையில், பிரபஞ்ச சட்டங்களின் பார்வையில் பார்த்தால் புரியாதது அத்தனையும் புரியும்.  அதைத் தான் consciousness can know என்கிறார்.

குழப்பம், கலக்கம், curiosity  என்று பலவும் வந்து விட்டது என்றே வைத்துக்கொள்வோம். அப்படி என்றால் நமக்கு தெரிந்ததை தாண்டி வர முயல்கிறோம் என்று பொருள் . அதாவது நமது சித்தத்தில், consciousness ல் ஒரு விழிப்புணர்வு awareness வந்து விட்டது.  இப்போது நம்மைப் பற்றி யோசித்தால் நம்முள் இரண்டு பகுதிகள் இருப்பது தெரியும்.  ஒன்று (self preservation – தன்னை பேணிக்காப்பது) அது எல்லாவற்றிலும் உள்ள நம் எல்லைகளை நியாயப்படுத்தி அதை மீறி வரமுடியாது, வரக்கூடாது என்று சொல்லிக்கொண்டிருப்பது புரியும்.  அது physical , emotional , intellectual வரையறையாக இருக்கும்.  இன்னொரு புறம் இந்த எல்லைகளின் மேல் சலிப்பும், இதை தாண்ட வேண்டும், மனரீதியாக, பொருளாதார ரீதியாக அடுத்த நிலைக்குச் செல்ல வேண்டும் என்று இருக்கும். அது நீ யார், உன் திறமை, அறிவு, என்ன என்பதை பற்றி கவலைப்படாது. இந்நிலை மாறவேண்டும் என்றோ , முன்னேற வேண்டும் என்றோ என்பது மட்டுமே எண்ணமாக இருக்கும்.  அதற்கு  physical , emotional , intellectual வரையறை கிடையாது. அதற்கு  பெயர் ஆர்வம். aspiration . அந்த aspiration ஏ தேவையான அனைத்தையும் கொண்டு வரும்.  அதாவது வரையறைகளை விரும்பும், கட்டுப்பாடுகளை விரும்பும் ஒன்றும், வரையறைகளை விரும்பாத சுதந்திரத்தை விரும்பும், ஒன்றும் ஆக இரண்டும் நம்முள்ளேயே இருக்கிறது.  வரையறைகளை விரும்பாதது, இல்லாதது consciousness . அதன் பார்வையில் பார்த்தால் புரியாதது அத்தனையும் புரியும்.

ஆனால் நாமறிந்த தத்துவங்கள் வரையறைக்குள் இருக்க மட்டுமே சொல்லிக்கொடுக்கிறது.  அதிக ஆசை கூடாது, எதுவும் நிரந்தரம் இல்லை, இருப்பதை கொண்டு திருப்தி அடைய வேண்டும்.  விதி வலியது என்று சொல்லி வரையறைக்குள் உங்களை எப்படி வைத்துக்கொள்வது என்பதற்கு தயார் படுத்தியது.  ஆனால் இது வரை அது வெற்றி பெறவில்லை.  இன்று வரை ஆசைகள் அடங்கவில்லை. அதை திருவுருமாற்றி ஆர்வமாக மாற்றும் வழி consciousness க்கு மட்டுமே புரியும். 

ஆனால் நாம் அதை மனதால் கடக்க  நினைக்கிறோம். ஆர்வத்திற்கும் அபிலாஷைக்கும் ( அதாவது aspiration கும் ambition கும்) இருக்கும் வித்தியாசம் புரியாமல்   கடக்க நினைத்தால் என்ன நடக்கும். அது physical இல் கடக்க நினைக்கும் போது அது உடலுக்கான வசதிகள், உணவு, குறிப்பாக sexual expression ஆக மாறுகிறது.  emotional ஐ கடக்க நினைக்கும் போது அது  பாசம், பற்றாக மாறுகிறது.  Mind ஆல் கடக்க நினைக்கும் போது அது பேராசை, பகட்டு, அனைத்தையும் தனக்கு அடிமைப்படுத்தும் மோகமாக மாறுகிறது.  இவையெல்லாவற்றையும் consciousness இல் மாற நினைக்கும் போது தான்  அது உண்மையான தடையற்ற, எதிப்பற்ற முன்னேற்றமாக ஆன்மீக வெளிப்பாடாக இருக்கிறது.  அந்த நிலையில் அத்தனை விஷயங்களும் ஒரு முழுமையுடன் புரிகிறது.  All unknowable becomes knowable with integral knowledge.

Unknowable , அறியாதது, அறிய முடியாதது என்பதை விட்டு வெளியே வருவது என்பது யாருக்கு முடியும். இப்போது இருக்கும் mind , vital , physical  existence இல் திருப்தி அடையாத நிலை வரும் போது , அதை விட்டு வெளியே ஒன்று இருக்கிறதா என்று தேடும் போது  அதில் பரிணாமத்திற்கான சக்தி வருகிறது.  அது நம்முடைய வாழ்வின் நோக்கம் என்ன என்பதைப் புரிய வைக்கிறது.  Unrealized potentiality is changed to  an actual possibility – இதுவரை உபயோகப்படுத்தாத திறனை , இருக்கிறது என்றே அறியாத  திறனை செயல் முறைக்கு கொண்டுவருகிறது என்று பகவான் “Human Cycle ” என்னும் புத்தகத்தில் மனதின் பரிணாம வளர்ச்சியை விளக்கும் போது கூறுகிறார்.

முன்பு சொன்னது போல ஒவ்வொரு தனி மனிதனுக்கும் அவனுடைய consciousnessக்கு ஏற்றாற்போல அறியாமை அறிவாக மாறலாம்.  ஆனால் கர்மயோகி சொல்வது எல்லாவற்றிக்கும் ஒரு சட்டம் உண்டு. அந்த process தெரிந்தால் எதையும் செய்யலாம் என்கிறார்.

அதில் எனக்குப் புரிந்த இரண்டு வழிகளை கூறுகிறேன்.

Author Info
Ramesh Kumar

Ramesh Kumar

SHARE
Share on facebook
Share on telegram
Share on whatsapp

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 5

இதுவரை சொன்னவை அனைத்தும்   “உயர்ந்தவை நிர்ணயிக்கின்றன. அவை நிறைவேற தாழ்ந்தவை உதவுகின்றன” – என்னும் லைப் டிவைனின் ஒரு  கருத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு தலைப்பில் இருந்து விலகிச் செல்லாமல் எழுத வேண்டும் என்று

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 4

இதுவரை நாம் பேசியதை Life Divine – கருத்துகளில் பொருத்தி பார்க்கும் போது – முன்னேறும் பாதையின் நன்கு  நிலைகளை.  – மனித வாழ்வு, யோக வாழ்வு, தெய்வீக வாழ்வு என்று மூன்று பகுதிகளாகப்

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை  – 3

அதற்கு பதிலாக ஒரு பண்பை எடுத்துக் கொண்டு, அதன் பார்வையில் நம் முடிவை organise செய்ய முடிந்தால், அது நம் அனைத்து  முடிவுகளுக்குக்  காரணமாக அமைந்தால், அது படைப்பாற்றல் மிக்கதாக இருக்கும்.  உதாரணமாக முன்

Read More »

More Articles

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 5

இதுவரை சொன்னவை அனைத்தும்   “உயர்ந்தவை நிர்ணயிக்கின்றன. அவை நிறைவேற தாழ்ந்தவை உதவுகின்றன” – என்னும் லைப் டிவைனின் ஒரு  கருத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு தலைப்பில் இருந்து விலகிச் செல்லாமல் எழுத வேண்டும் என்று

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 4

இதுவரை நாம் பேசியதை Life Divine – கருத்துகளில் பொருத்தி பார்க்கும் போது – முன்னேறும் பாதையின் நன்கு  நிலைகளை.  – மனித வாழ்வு, யோக வாழ்வு, தெய்வீக வாழ்வு என்று மூன்று பகுதிகளாகப்

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை  – 3

அதற்கு பதிலாக ஒரு பண்பை எடுத்துக் கொண்டு, அதன் பார்வையில் நம் முடிவை organise செய்ய முடிந்தால், அது நம் அனைத்து  முடிவுகளுக்குக்  காரணமாக அமைந்தால், அது படைப்பாற்றல் மிக்கதாக இருக்கும்.  உதாரணமாக முன்

Read More »