தவறு, தீமை, குறை ஆகியவை பரிணாமத்தின் பல நிலைகள்.
சரி, நன்மை, நிறைவு, முன்னேற்றம் அதன் மேல் நிலைகள். நாம் தவறு, தீமை, குறை ஆகியவற்றின் பகுதியாக இருக்கும் போது , அது வேதனைத் தருகிறது. அதன் அடுத்தப் பகுதியை அதாவது முழுமையை பார்த்தால் அது வளர்ச்சியின் ஒரு நிலை, மாறுதலின் ஒரு நிலை என்று புரியும் போது அதுவே ஆனந்தமாகிறது. மனத்திலிருந்து ஜீவியத்திற்கு உயரும் நிலைக்கேற்ப ஞானம் கிடைக்கிறது. அற்புதங்கள் நடக்கிறது. அகந்தை, மேல் மனதில் தீமை, குறை, என்று அறிவதை consciousness அடிமனதில் நன்மையாக அறியும் என்பது மேலே சொன்ன நான்கு theme களுக்கான தத்துவம். நுணுக்கம் புரியும் பொது தான் தத்துவம் புரியும்.
MSS ஒரு மேனேஜ்மென்ட் இன்ஸ்டிடியூட் உடன் சேர்ந்து Double It என்று company top executive களுக்கு ஒரு நிகழ்ச்சியை நடத்தியது. அதில் என்னையும் ஒரு consultant என்று சேர்த்து ஆரம்ப வேலைகள் செய்தோம் . ஒரு கட்டத்தில் இது IMA- Indian Management Association -உடன் இணைந்து செயல்பட இருக்கிறது என்று கேள்விப்பட்ட போது எனக்கு ஒரு தயக்கம் வந்தது. காரணம் IMA -யின் Chennai Chapter -Office Guest House களில் நான் Waiter ஆக வேலை செய்து இருக்கிறேன். மதுபானங்கள் புழங்கும் இடம் என்பதால் நிறைய தகராறுகளில் ஒரு பகுதியாக இருந்திருக்கிறேன். இன்று MSS அதே இடத்தில் என்னை Consultant என்று சொன்னால் எந்த அளவிற்கு வரவேற்பார்கள், அல்லது MSSன் கெளரவதிற்கு இதனால் குறைவு ஏற்படலாம் என்று நினைத்ததால் அப்பாவிடம் இதை சொல்லி நான் அதில் கலந்துக் கொள்ளவில்லை என்றேன். அப்பா , நீ முடிவெடுத்து விட்டதால் அதை ஏற்றுக்கொள்கிறேன், ஆனால் உன் தவறுகளுக்கு நீ வருந்தத் தேவையில்லை. அவை தான் உன்னை அன்னையிடம் கொண்டு வந்தது என்பதால் அவையும் புனிதமானவையே, அவற்றை தாழ்வாக நினைக்கவும் வேண்டாம். அதன் மேல் பற்றும் வேண்டாம். அந்த தவறுகள் தான் உனக்கு வாழ்வை மனிதர்களை அதிகமாக புரிய வைத்துள்ளது. குறுகிய காலத்தில் அன்னை, பகவான் சட்டங்களை, அவர்களின் கருத்துக்களை சரியாக புரிந்து செயல்படக்கூடிய திறன் வந்தது அதனால்தான் என்றார்.
தவறு, பிழை என்பது நம் சுபாவத்தின் ஒரு பெரிய அங்கம். மிகப் பெரிய தவறு செய்த இடங்களையும், அதிலிருந்து மீண்டு வந்த இடங்களையும் பார்த்தால் நாம் தவறின் மூலம் கற்ற பாடமும் அதன் மூலம் நாம் அடுத்த கட்டத்திற்கு சென்றதும் புரியும். Error is a hope against hope என்கிறார் அப்பா. நாம் நம்பி செய்யும் காரியங்களில் வரும் நம்பிக்கைத் துரோகம், ஏமாற்றம் போன்றவை நம் நம்பிக்கைக்கு எதிரான நம்பிக்கையை வளர்க்க வேண்டும் என்பது அதன் பொருள். நாம் முன்னுக்கு வர பல அம்சங்கள் நம் சுபாவத்தில் இருந்தாலும் நம் சுபாவத்தில் எது அதை தடுக்கிறது என்று சுட்டிக்காட்டும் இடங்கள் அவை. எனக்கு சில திறமைகள் இருந்தாலும் கிட்டத்தட்ட 40 வயது வரை அவை வெளியே தெரியாமல் இருந்த காரணம் நண்பர்களுக்காக என்று எப்போதும் இறங்கி அதன் மூலம் அடிதடி மற்றும் பிரச்சனைகளில் சிக்குவது. அது புரிந்த போது வாழ்வு முழுதும் மாறியது.
தவறுகளுக்கு அடிப்படைக்காரணம் எதை, எப்போது, எதற்காகச் செய்ய வேண்டும் என்று தெரியாதது. உதாரணமாக காதல் திருமணம் பெரும்பாலும் தோல்வியில் முடிகிறது. காரணம் அது ஆரம்பிப்பது emotional goal லுக்காக . ஆனால் அது ஒரு கட்டத்தில் social goal ஆன திருமணத்திற்கு என்று செய்யும் போது, திருமணத்தின் நோக்கமே காதலின் நோக்கம், அதன் வழியே காதலின் வழி என்னும் போது அது தோற்கிறது. காதலில் திருமணம் என்பது ஒரு நிகழ்வு. காதலித்த போது இருந்த அதே மனப்பான்மை எந்த நிகழ்வுகள் வந்தாலும் இருந்தால் அதில் தோல்வி இல்லை.
அதே பொல வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் , பொருட்களை உபயோகப்படுத்துபவர்கள் ஆகியோர் பார்வையில் பாராமல், வியாபாரத்தை பணத்திற்காக மட்டுமே செய்தால் அது தொடர்வதில்லை.
பொதுவாக நாம் பண்புகளைப் பின்பற்றும் அத்தனை இடங்களையும் கவனித்துப் பார்த்தால் ஒரு நிலைக்கு மேல் அதை பின்பற்ற முடிவதில்லை. காரணம் பண்புகள் பின் தங்கி, காரியம் முக்கியம் என்று சென்று விடுவதால், உண்மையில் பண்புகளுக்கான நல்ல energy குறையும் போது , அது எதிரான எனெர்ஜியாக மாறுகிறது. வேலை எளிதாக முடிந்தால் போதும் என்று ஆகிறது. பண்புகள் எல்லாம் தேவையில்லை. காரியம் நடந்தால் போதும் என்று தவறு செய்யத் தூண்டும் நிலை அது. அது தான் evil , falsehood உருவாகும் இடம் என்கிறார் அப்பா.
இதற்கு உதாரணமாக அப்பா சொல்வது எல்லாம் சுமூகமாக ஒழுங்காக செல்லும் போது அது சப்பென்று இருக்கிறது. அதில் பிரச்சினை வரும் பொது தான் நாம் energetic ஆக இருப்போம். சினிமா, டிவி சீரியலில் சோகக் காட்சியில் ஒன்றி அழுவது எளிதாக வருகிறது. ஆனால் சந்தோஷமான விஷயங்களில் அந்த அளவிற்கு ஒன்ற முடிவதில்லை.