நான் முன் சொன்ன Manager உதாரணத்தை எடுத்துக்கொண்டால் objective ஆக ஒரு பிரச்சனை வருகிறது, ஒரு தடை வருகிறது. அதை subjective ஆக பார்த்தால் நம் சந்தேகம், நம் இயலாமை, நம் அறியாமை, நாம் கோட்டை விட்ட இடங்கள் என்று பல தெரியும். இந்த இரண்டையும் எதிரான நிலையில் வைத்து பார்த்தால் நாம் பெற வேண்டிய அறிவு, திறன், நேர்த்தி, ஒழுங்கு, முறை தெரிய வரும். அது evolution கான idea . அதை எடுத்துக்கொண்டு நாம் மாறும் போது ஒரு முடித்துப் போன செயலை க் கூட, அதன் பலனைக்கூட மாற்ற முடியும் என்று நம்பத் தொடங்குகிறோம்.
இதை கர்மயோகி அவர்கள் consciousness என்று பகவான் சொல்வதை Transformation என்று அன்னை சொல்வதாகக் கூறுகிறார். அந்த இணக்கத்தீர்வால் அறியாமை ஞானமாக, அறிவுக்குறைவு விவேகமாக, உணர்வின் குறைகள் ஆர்வமாக, உடலின் சோம்பல் சக்தியாக மாறும்.
என் வாழ்வில் அது மூன்று வகையாக வளருவதை பார்க்கிறேன். ஒன்று personal growth , நம் plus minus , நம்மால் என்ன சாதிக்க முடியும், நம் limitations என்ன, அதிலிருந்து எப்படி வெளியே வருவது, மனப்பான்மையின் பலம், பண்புகளின் பலம், உட்பார்வை என்பவை புரிகிறது.
இரண்டாவது Life Growth – வாழ்க்கை அது இயங்கும் முறைகள், அதன் சட்டங்கள், அதன் மறு மொழி – Life Response – அதன் சூட்ஷமமான சூழல்கள் , அது ஏற்படுத்தும் தடை, அல்லது அது எடுக்கும் initiative போன்றவை புரிகிறது.
மூன்றாவது Spiritual Growth – ஆன்மீக கண்ணோட்டத்தில் மேற்சொன்னவைகளைப் பார்த்து விவேகம், பாகுபாடு கொண்டு யாருக்கும் பயப்படாமல் செய்து பார்க்கும் துணிவு, அது ஒரு நாள் அன்னைக்கான சேவையாக மாறும் என்னும் நம்பிக்கை என்பதை ஆன்மீக வளர்ச்சியாக பார்க்கிறேன்.
இந்த வகை வளர்ச்சி ஒரு self realization . நம்மைப் பற்றிய ஒரு மெய்யுணர்வைத் தருகிறது. பொருள்வாதிக்கு வாழ்வின் எதிர்ப்பாகத் தோன்றுவது ஆன்மீகவாதிக்கு அதை விலக்கும் தீவிரமாகத் தோன்றுகிறது. நாம் இவ்விரண்டிற்கும் ஒரு இணக்கத்தீர்வைத் தேடும்போது, நமக்கு முன்னேறுவதற்கான சந்தர்பங்களாக வாழ்வைப் பற்றி, அதன் சட்டங்களை பற்றி அறியும் ஆர்வமாக மாறுகிறது. வாழ்வு விடுக்கும் சவாலை பொருள்வாதி எதிர்க்க முடியாமல் ஏற்றுக்கொள்கிறான். ஆன்மீகவாதி அதை விலக்க நினைக்கிறான். நாம் அதை ஏற்று விலகச் செய்யலாம். Raising to the challenge என்பது reconciliation னின் ஒரு வடிவமாகப் பார்க்கிறேன்.
அன்னை அன்பர்களுக்கும், நூறு கோடிக்கும் நடுவில் கூட ஜடத்திற்கும் ஆன்மாவிற்கும் செய்யத் தேவைப்படும் அளவிற்கு ஒரு இணக்கத்தீர்வு தேவைப்படுகிறது. அந்த அளவிற்கு பண்புகளை, ஆர்வத்தை நிரப்ப வேண்டியிருக்கிறது. நூறு கோடி, பெரிய காரியம், புத்தகங்களில் அதன் செயல் முறைகள் பல சொல்லப்பட்டிருகிறது. என்னால் எட்டு அல்லது பத்து சதவிகிதம் மட்டுமே செய்ய முடிகிறது. அதைத் தாண்ட சமுதாய சூழலில் ஒரு இணக்கத்தீர்வு தேவைப்படுகிறது. அதைச் செய்த தொழில் அதிபர்கள், அரசியல்வாதிகள் எளிதாக நூறு கோடி சம்பாதித்துவிட்டார்கள். கடந்த ஒரு வார செய்திகளில், சாதித்தவர்கள் முதல் பிடிப்பட்டவர்கள் வரை கவனித்துப் பார்த்தால் இது புரியும்.
இந்தியாவிற்கு வெளிநாட்டிலிருந்து சுற்றுலா வருபவர்களுக்கு மண்ணிலிருந்து பானை உருவாவதை செய்து காட்டுவார்கள். அதை அவர்கள் பார்த்து ஆச்சரியப்படுவார்கள். நமக்கு அது பெரிய விஷயமல்ல. காரணம் நமக்கு ஓரளவு அது தெரியும். ஆனால் நெய்வேலியில் தயாராகும் பீங்கான், ராமகுண்டத்தில் தயாராகும் பீங்கான், கல்கத்தாவில் தயாராகும் பீங்காங்களை நாம் பார்க்கும் போது நம்மால் அப்படி நினைக்க முடியாது. அது நம் அறியாமை. ஆனால் Microscope இல் பார்த்தால் அதன் அடிப்படை ஒன்றாகவே இருக்கும். இன்னும் சரியாகச் சொன்னால் நெய்வேலி மண்ணின் அம்சம் அந்த பீங்கானில் இருக்கும், ராமகுண்டம் மண்ணின் அம்சம் அந்த பீங்கானில் இருக்கும்.
அதே போல ஒரு மரத்திற்கும் அதிலிருந்து உற்பத்தியான காகிதத்திற்கும் உள்ள தொடர்பை நாம் அறிய மாட்டோம். ஆனால் microscope இல் இரண்டுக்கும் பொதுவான அம்சம் பல காணலாம். அதாவது ஒன்றிலிருந்து ஒன்று உருவானால் உருவம் மாறலாம், ஆனால் அதன் அம்சம் அப்படியே இருக்கும். அப்படியென்றால், பிரம்மமே நாமாக இருக்கிறோம் என்றால் அந்த அம்சம் நம்மில் எங்கே உள்ளது என்று தேடுவது நம்மைப் பொறுத்தவரைப் பகுத்தறிவு. அது ஆன்மாவையும் ஜடத்தையம் இணைப்பது. இடைப்பட்ட நிலைகளான – உணர்வில் உயர்வது , மனதில், உயர்வது.
அப்படி நாம் இணைக்க முற்படும் போது எந்த அறிவு ஜடத்தில் முடங்கி முன்னேற்றத்தை எதிர்த்ததோ, அதே அறிவு நம் கட்டுக்கடங்காமல் வீறுகொண்டு எழுந்து ஞானத்தைத் தேடும் என்கிறார் கர்மயோகி அவர்கள்..இதற்கு உதாரணமாக மீண்டும் என்னையே எடுத்துக் கொள்கிறேன்.