Share on facebook
Share on telegram
Share on whatsapp

பகுத்தறிவும் – வாழ்வில் வளமும்-3

நான் குழுமத்தில் ஒரு உதாரணத்தில் சொன்னது போல என் மேலாளர் என்னை ஏமாற்றி அந்த பணத்தில் சொந்த தொழில் ஆரம்பித்து நான் அது வரை செல்லாத தூத்துக்குடி நாகர்கோயில் என்று தென் மாவட்டங்களில் வேலை எடுத்துச் செய்தார்.  அது தெரிய வர எனக்கு கோபம் வந்தது. அவரை பழி தீர்க்க சந்தர்ப்பம், சக்தி, பலம், எல்லாம் இருந்தது. ஆனால் கர்மயோகி அவர்கள் நீ பார்க்காத ஒரு வியாபார நிறைவை அவர் பார்த்ததினால் தான் பிரிந்து சென்று செய்கிறார், அதை பாராட்டு.  நீ ஏன் அதை  பார்க்கவில்லை என்று பார் அவர் மீதிருக்கும் வஞ்சத்தை எடு என்றார்.  அந்த படபடப்பிலிருந்து வெளியே வர ஏழு எட்டு மாதங்கள் ஆனது. வந்தவுடன் முதலில் எனக்கு கிடைத்தது அவர் எடுத்துச் செய்த வேலைகள். அவர் வேலைகளை சரியாகச் செய்யாததால், அவர் யார், அவர் என்னை எப்படி ஏமாற்றினார், தொழில் சரியாகத் தெரியாது, என்று அனைவருக்கும் தெரிந்து, அதை சரி செய்ய என்னிடமே வந்தது.  அதன் மூலம் அது வரை நான் நினைத்துப் பார்க்காத தென் மாவட்ட market என்னிடம் வந்தது.  அதன் பிறகு அவர் தொழில் செய்ய முடியாததால் வேறு வேலைக்குச் செல்ல விரும்பி ஒரு company க்கு விண்ணப்பித்தார். அந்த company யின் cross verification என்னிடம் வந்த போது , அவர் வாழ்வை கெடுக்க வேண்டாம் என்று நல்லவர், வல்லவர்   என்றே அறிக்கை அளித்தேன்.  அது அவரை நெகிழ வைத்தது.  வெள்ளத்தின் போது நஷ்டம் அடைந்து சென்னையில் ஆறு மாதங்கள் தொழில்கள் செயல்படாதபோது அவர் ஒரு project எடுத்துத் தந்தார். அது மீண்டும் எனக்குப் பணப் புழக்கத்தை ஏற்படுத்தியது. அதே போல இப்போது ஆறு மாத lockdown க்கு பிறகு தொழில் மந்த நிலையில் இருக்கும் போது ஒரு project ஐ refer செய்து உள்ளார்.

இது எதைக் காட்டுகிறது என்றால் பொருள்வாதியின் பார்வையும் உண்மை, ஆன்மீகவாதியின் பார்வையும் உண்மை. இரண்டும் சேரும் இடம் Life Divine – Divine Life – தெய்வீக வாழ்வு . இந்த அனுபவத்தை மலர்ந்த ஜீவியத்தில் பலனை விட முறையை கருதும் தீவிரவாதி என்று என்னை குறிப்பிட்டு கர்மயோகி அவர்கள் எழுதியது என் பரிணாமத்தில் அடுத்தக் கட்டம்.  காரணம் அது தான் இணக்கத்தீர்வுக்கான மையம் என்று புரிந்தது.

நம் பகுத்தறிவின் லட்க்ஷணத்தை புரிந்துக் கொள்ள கர்மயோகி அவர்கள்- ஒரு முறையைச் செயல்படுத்திப் பார்க்கச் சொல்கிறார்.  மாலையில் ஒரு இடத்தில் அமர்ந்து அன்று செய்த வேலைகளை எவ்வளவு இயந்திரத்தனமாக செய்தாய் என்று பார். வெறும் பழக்கம் மட்டுமே அதில் இருப்பது தெரியும்.  அறிவோ உணர்வோ மிகக் குறைவாகவே செயல்பட்டிருக்கும்.  அப்படி இருந்தால் அந்த அறிவையும், உணர்வையும் நீ கற்ற அல்லது பெற்ற முறையை நினைவுக்குக் கொண்டு வந்துப் பார்.அதுவும் இன்னொருவருடைய பழக்கமாகவே இருக்கும். இன்று முழுவதும் உன் personality, character, behaviour, mannerism , வார்த்தைப் பிரயோகங்கள், உடல் அசைவுகள், நடக்கும் பாணி, என்று எதைப்பார்த்தாலும் அத்தனையிலும் ஒரு unconscious habit மட்டுமே இருக்கும். நம்மைப் பற்றிய நினைவே நமக்கு இல்லாத போது, நாம் நம்மை எப்படி பொருள்வாதி, பகுத்தறிவுவாதி என்று எப்படிச் சொல்லிக் கொள்ள முடியும என்று கேட்கிறார்.

அப்படியென்றால் வெளியே மட்டுமல்ல, உள்ளேயும் தேட வேண்டும் என்பது புரியும் போது தான் இணக்கத்தீர்வுக்கான இடத்திற்கு வருகிறோம்.  அகமும் புறமும் இணையும் போது முழு ஞானம் கிடைக்கிறது என்பது அதன் பொருள்.  பொருள்வாதி வெளியே பார்க்கிறான்.  ஆன்மீகவாதி உள்ளே பார்க்கிறான்.  உள்ளேயும் வெளியேயும் தொடர்புபடுத்தி பார்ப்பது இரண்டிலும் அடுத்த நிலைக்கு முன்னேற முடியுமா என்று பார்ப்பது பரிணாமத்தில் முன்னேற்றம்.

இதை subjective  – objective  என்று புரிந்துக் கொள்ளலாம்.  அதை அக உணர்வு நிலை – புற உணர்வு நிலை என்று தமிழ்ப்படுத்தினாலும் , நிகழ்வுகள் என்ற அளவில் அது சரியான பொருளை த் தரவில்லை என்று நான் நினைப்பதால் subjective  – objective என்றே சொல்கிறேன். ஆரம்பத்தில் இரண்டிலும் ஒரு குழப்பம் எனக்கு வந்ததால், objective என்பதை outer , இரண்டிலும் முதல் எழுத்து ‘o ‘ என்பதை நினைவில் வைத்துக் கொண்டேன். அதற்கு எதிரானது subjective – inner , இதே குழப்பம் உள்ளவர்கள் இதை நினைவில் கொள்ளலாம்.

நான் முன்பு சொன்ன பணம் என்னும் உதாரணத்தை இந்த வழியில் objective method ஆக நம் அறிவு, செயல் நேர்த்தி ஆகியவற்றை வைத்து, அதாவது life யில் mind ஐ வைத்து புரிந்துக் கொள்ளலாம்.  அது நாம் மாற வேண்டிய இடங்களைக் காட்டும்.  அல்லது subjective method ஆக நம் மனப்பான்மை, நோக்கம் ஆகியவற்றை வைத்து வெளியே நடப்பதைப் பார்க்கலாம்.  அதுவும் மாற வேண்டிய இடங்களைக் காட்டும்.  இரண்டும் சந்திக்கும் இடம் பரிணாமம், முன்னேற்றம்.

நம் எண்ணம் என்பது கடந்தக் கால அனுபவங்கள், எதிர்க் கால நினைவுகள், இரண்டையும் இணைக்கும் ஒரு கற்பனையே, அல்லது நம் உணர்வுகள், எதிர்பார்ப்புகள், இரண்டையும் இணைக்கும் ஒரு ஆசையே.

ஆனால் அதை நாம் சிந்திக்கிறோம் என்று நினைத்துக்கொண்டு விவேகம் என்றும் இணக்கத்தீர்வு என்றும் நினைத்துச் செயல்படுகிறோம்.  இப்படி பல விதமாக பல திசைகளில் நாம் சிந்திப்பதை விட்டு இணக்கத்தீர்வுக்கென்று ஒரு விஷயத்தை இரண்டு எதிரான விஷயங்களாக நினைத்துப் பார்க்கலாம்.  அப்பொழுது என்னப் புரியும் என்றால் இது செய்தால் இது நடக்கும் என்பது கிடையாது. நம் அறிவைத் தாண்டிய விஷயங்களும் ஒரு செயல் நடக்கத் தேவை என்று புரியும்.  அது எது என்ற கேள்வி எழும்.  அந்த விதத்தில் நாம் பொருள்வாதியின் பார்வையிலிருந்து வெளியே வருகிறோம்.இரண்டு பெரிய எதிரான விஷயங்களிலிருந்து வெளியே வருவதால் (great opposites ) mind க்கு ஒரு affirmation – பற்றுறுதி கிடைக்கிறது.  அது தான் பின்னாளில் super mind மேல் அன்னை மேல் நம்பிக்கையாக மாறுகிறது.

உதாரணமாக அன்னையை ஒரு பக்கம் ஒரு உருவமாக form ஆக பார்க்கிறோம். அது பழைய கடவுள் என்று நமக்கு சொல்லப்பட்ட ஒரு பழக்கத்திற்கு அடிப்படை. அதை objective என்று எடுத்துக்கொண்டால் பூ வைப்பது, Life Divine ஒரு பக்கம் படிப்பது, Savitri யில் ஒரு வரி எழுதுவது என்று சில தொடர்புகளை subjective என்று நினைக்கிறோம்.  அதை இணக்கத்தீர்வு என்று நினைக்கிறோம். ஒரு விஷயத்தை பற்றி சிந்திக்காமல் இருப்பதை சமர்ப்பணம் என்று சொல்கிறோம். அதையும் இணக்கத்தீர்வு என்று சொல்கிறோம்.  உண்மையில் இதெல்லாம் யாரோ நமக்குத் தந்த அறிவு.  நாம் சிந்தித்து பெற்றதல்ல .  ஆனால் subjective ஆக இப்படி பூ வைக்கும் , பிரார்த்தனை செய்யும், சம்பிரதாயமாக செய்யும் நிலை ஏன் வந்தது என்று அதற்கு எதிரான நிலையில் வைத்து சிந்தித்தால் Physical, Vital , Mental லில்  நாம் பெற வேண்டிய higher consciousness  எது என்பது தெரியும்.

Author Info
Ramesh Kumar

Ramesh Kumar

SHARE
Share on facebook
Share on telegram
Share on whatsapp

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 5

இதுவரை சொன்னவை அனைத்தும்   “உயர்ந்தவை நிர்ணயிக்கின்றன. அவை நிறைவேற தாழ்ந்தவை உதவுகின்றன” – என்னும் லைப் டிவைனின் ஒரு  கருத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு தலைப்பில் இருந்து விலகிச் செல்லாமல் எழுத வேண்டும் என்று

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 4

இதுவரை நாம் பேசியதை Life Divine – கருத்துகளில் பொருத்தி பார்க்கும் போது – முன்னேறும் பாதையின் நன்கு  நிலைகளை.  – மனித வாழ்வு, யோக வாழ்வு, தெய்வீக வாழ்வு என்று மூன்று பகுதிகளாகப்

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை  – 3

அதற்கு பதிலாக ஒரு பண்பை எடுத்துக் கொண்டு, அதன் பார்வையில் நம் முடிவை organise செய்ய முடிந்தால், அது நம் அனைத்து  முடிவுகளுக்குக்  காரணமாக அமைந்தால், அது படைப்பாற்றல் மிக்கதாக இருக்கும்.  உதாரணமாக முன்

Read More »

More Articles

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 5

இதுவரை சொன்னவை அனைத்தும்   “உயர்ந்தவை நிர்ணயிக்கின்றன. அவை நிறைவேற தாழ்ந்தவை உதவுகின்றன” – என்னும் லைப் டிவைனின் ஒரு  கருத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு தலைப்பில் இருந்து விலகிச் செல்லாமல் எழுத வேண்டும் என்று

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 4

இதுவரை நாம் பேசியதை Life Divine – கருத்துகளில் பொருத்தி பார்க்கும் போது – முன்னேறும் பாதையின் நன்கு  நிலைகளை.  – மனித வாழ்வு, யோக வாழ்வு, தெய்வீக வாழ்வு என்று மூன்று பகுதிகளாகப்

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை  – 3

அதற்கு பதிலாக ஒரு பண்பை எடுத்துக் கொண்டு, அதன் பார்வையில் நம் முடிவை organise செய்ய முடிந்தால், அது நம் அனைத்து  முடிவுகளுக்குக்  காரணமாக அமைந்தால், அது படைப்பாற்றல் மிக்கதாக இருக்கும்.  உதாரணமாக முன்

Read More »